Jump to content

வலையில் சிக்கிய பல்சுவை பதிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலக முட்டாள்கள் தினம் – எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்வோமா?

april.jpg

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசம் இல்லாமல் மற்றவர்களை ஏமாற்றியும், முட்டாள்கள் ஆக்கியும் கொண்டாடும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினம் என்று சொல்கிறோம்.

இந்த நாள் எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்வோமா?

கி.பி. 16-ம் நூற்றாண்டுவரை ஐரோப்பா கண்டத்திலுள்ள பல நாடுகளில் ஏப்ரல் 1-ம் திகதிதான் புத்தாண்டாகக் கடைபிடிக்கப்பட்டது.

இப்போது ஜனவரி முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம் இல்லையா? அதுபோல அப்போது ஏப்ரல் முதல் நாளை கொண்டாடினார்கள். அப்போதைய ஜூலியன் நாட்காட்டியில் அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது.

1582-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் திகதி புதிய காலண்டரை 13-ம் கிரிகோரி என்ற திருத்தந்தை அறிமுகப்படுத்தினார். இதைத்தான் கிரிகோரியன் நாட்காட்டி என சொல்கிறோம்.

இந்தக் நாட்காட்டியில் ஜனவரி 1-ம் திகதி புத்தாண்டு தினமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பல நாட்டு மக்களும் ஏற்க மறுத்தார்கள். அப்படி ஏற்க மறுத்தவர்கள் ஏப்ரல் முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடினார்கள்.

ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக ஏற்று கொண்டவர்கள் இவர்களை ஏமாற்ற நினைத்தார்கள். ஏப்ரல் முதல் நாளில் புத்தாண்டு கொண்டாடுவோர் வீட்டுக்குப் பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தார்கள். ஆனால், பரிசுப் பெட்டியைத் திறந்தால், அதில் ஒன்றும் இருக்காது. ‘நீ ஒரு முட்டாள்’ என்று துண்டுச்சீட்டுதான் இருக்கும்.

அதேபோலச் சட்டையின் பின்னால் ‘நான் ஒரு முட்டாள்’ என்ற துண்டுச்சீட்டை ஒட்டி கேலி பேசினார்கள். பிரான்ஸ் நாட்டில்தான் முதன் முதலில் இப்படி முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடியதாகச் சொல்கிறார்கள்.

பின்னர் படிப்படியாக எல்லா நாடுகளும் புதிய நாட்காட்டியை ஏற்றுக் கொண்டன. தொடக்கத்தில் புதிய நாட்காட்டியை அப்படி ஏற்றுக் கொண்ட நாடுகள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொண்டாடும் புத்தாண்டு தினத்தை, முட்டாள்கள் தினம் என அழைத்தார்கள்.

இப்படித்தான் முட்டாள்கள் தினம் அறிமுகமானது. இன்று உலகம் முழுவதும் கிரிகோரியன் நாட்காட்டியை பின்பற்றினாலும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள் தினமாகக் கொண்டாடுவது மட்டும் மறையவில்லை.

 

http://athavannews.com/உலக-முட்டாள்கள்-தினம்-எப/

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வைரலாகும் கொரில்லா செல்ஃபியும், கொல்லப்படும் வன அதிகாரிகளும்

வைரலாகும் பரவும் கொரில்லாவின் செல்ஃபி புகைப்படமும், கொல்லப்படும் வன அதிகாரிகளும்RANGER MATHIEU SHAMAVU

மனிதர்கள் மட்டும் அல்ல கொரில்லாக்களும் செல்ஃபி புகைப்படங்களுக்கு பழகிவிட்டன. 

இரண்டு கொரிலாக்கள் செல்ஃபி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 

இந்த இரண்டு கொரில்லாக்களும் சிறு வயதில் வேட்டைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டவை. 

மேலுள்ள இந்த கொரில்லாக்களின் புகைப்படமானது, காங்கோவில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது. இந்த கொரில்லாக்களின் பெற்றோர்கள் வேட்டையாடிகளால் கொல்லப்பட்டப் பின், இவை இந்த தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்டன. 

பாதுகாவலர்கள் போல பாவனை

இந்த கொரிலாக்கள் அதன் பாதுகாவலர்கள் போல பாவனை செய்ய தொடங்கிவிட்டன என இந்த பூங்காவின் துணை இயக்குநர் பிபிசியிடம் கூறினார்.

இந்த ரேஞ்சர்தான் தமது பெற்றோர் என இந்த கொரிலாக்கள் நம்ப தொடங்கிவிட்டன என்கிறார் அவர்.

இந்த இரு கொரிலாக்களின் தாய்களும் 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்டன. அந்த சமயத்தில் இந்த கொரிலாக்களின் வயது 2 மற்றும் 4 என்கிறார் பூங்காவின் துணை இயக்குநர் இன்னசெண்ட்.

மேலும் அவர், "இது இயல்பான நிகழ்வு கிடையாது. எனக்கு இதை பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எப்படி ஒரு கொரில்லா மனிதன் போல நிற்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்," என்றார்.

கொல்லப்படும் அதிகாரிகள்

1996ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 130 ரேஞ்சர்கள் இந்த தேசிய பூங்காவில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

காங்கோAFP

கடந்தாண்டு ஏப்ரல் மாதம், ஜனநாயக காங்கோ குடியரசில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் ஐந்து வனத்துறை அதிகாரிகளும் அவர்களது ஓட்டுநர்களும் அங்கு பதுங்கி இருக்கும் சில கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த வனத்தில்தான் அழிந்து வரும் மலை கொரில்லாக்கள் வசிக்கின்றன. சட்டத்துக்கு புறம்பாக இங்கு இயங்கி வரும் ஜனநாயக குடியரசு காங்கோ கிளர்ச்சி குழுவினர், வேட்டையிலும் ஈடுபடுகின்றனர்.

தென் ஆஃப்ரிக்காவில் கடந்த ஏழு ஆண்டுகளில் 2500க்கும் அதிகமான காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டிருக்கின்றன.

காங்கோவில் ஆயுத குழுக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

பல ஆயுத குழுக்கள் இந்த பூங்காவில் இயங்குகின்றன. பலர் வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். 

 

https://www.bbc.com/tamil/global-48027731

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திபெத்தின் உயரமான பகுதிகளில் டெனிசொவன்கள் வசித்தார்கள்….

May 2, 2019

oldmens.png?resize=800%2C453

ஆதிமனிதர்களின் ஒரு வகையை சேர்ந்த டெனிசொவன்கள் என்பவர்கள் உயரமான இடங்களில் வசித்திருக்கலாமென கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக திபெத்தின் உயரமான பகுதிகளில் அவர்கள் வசித்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டெனிசொவன்கள் ஆசியாவில் வாழ்ந்த ஒரு விசித்திரமான மனித இனம் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நவீன மனித இனம் உலகெங்கும் பரவுவதற்கு முன்பு பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் டெனிசொவன்கள் வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

 

http://globaltamilnews.net/2019/120313/

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

நிறம் மாறிய ஏரி

துருக்கியின் கொன்யா (Konya) நகரில் உள்ள மெயில் ஒப்ருக் (Meyil Obruk) ஏரி, குறைந்த நீர்மட்டம் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக இளஞ்சிவப்பு நிறமாக (Pink) மாறியுள்ளது என்று கொன்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கல்வியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக அடர் நீல நிறத்தில் இருக்கும் ஏரியின் வண்ண மாற்றத்துக்கு பாக்டீரியாக்களின் மிகப்பெரிய கட்டமைப்பே காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோமீட்டர் விட்டமும் 40 மீட்டர் ஆழமும் கொண்ட ஏரியின் உப்பு நீரில் பாக்டீரியாக்கள் செழித்து வளர்வதால் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஏரியின் நீர் உப்புத்தன்மை வாய்ந்தது மற்றும் பாக்டீரியாவைத் தவிர வேறு எந்த உயிரினமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியின் நிறம் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளை பார்வையிட அழைக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

5f3f9254d3806c2678e3863a.jpg
 

https://www.virakesari.lk/article/88753

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.