Sign in to follow this  
கிருபன்

நீதி மறுத்து நீள்கின்ற காலமும்- நினைவழியாத சாட்சியங்களும்!! பிரம்படிப் படுகொலை – ஒக்.11

Recommended Posts

நீதி மறுத்து நீள்கின்ற காலமும்- நினைவழியாத சாட்சியங்களும்!! பிரம்படிப் படுகொலை – ஒக்.11

 
பதிவேற்றிய காலம்: Oct 10, 2018
 
 

1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் பத்தாம் திகதி ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட் டத்தில் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த நாளாக அறியப்பட்டது. ‘இந்திய அமைதிப் படை’ எனும் பெயரில் ஈழத்தில் வந்திறங்கி, விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிடுகிறோம் என்ற பெயரில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழ் மக்களைக் கொன்று குவித்து, இங்கு இனப்படுகொலை யைத் திட்டமிட்டு அரங்கேற்றியமை உண ரப்பட்ட நாள் இது.

இந்தியாவின் கபடத்த னத்தைத் தமிழ் மக்கள் வேதனையுடன் அறிந்து கொண்ட நாளாகும். இந்த நாளின் பிற்பகல் வேளை யில் இந்திய அமைதிப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் ஆரம்பித்தி ருந்தமை வரலாறாகப் பதிவாகியது.

 

முதலாவது கரும்புலித் தாக்குதல்
இலங்கை – இந்திய அரச தலைவர்களுக்கு இடையில் ஏற்பட்ட இலங்கை– இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய அரசானது ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வென 25ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய இராணுவச் சிப்பாய்களை அமைதிப்படையாக வடக்குக் கிழக்குக்கு அனுப்பியிருந்தது. வடமராட்சியைக் கைப்பற்றும் நோக்குடன் இலங்கை இராணுவம் ஆரம்பித்த ‘ஒப்பரேசன் லிபரேசன்’ என்ற இராணுவ நடவ டிக்கை யானது இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான முதலாவது போராக மாறியிருந்தது.

வடமராட்சியில் ஆரம்பமாகிய இந்தப் போரானது தமிழர்களை அழிக்கின்ற நட வடிக்கை யாகவே செயல்வடிவம் பெற்றிருந்தது. வடமராட்சியை இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. வடமராட்சியைக் கைப்பற்றிய பின்னர் குடாநாட்டைக் கைப்பற்றுகின்ற நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில், விடுதலைப்புலிகளின் முதலாவது கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இராணுவ நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்தது. அரச தலைவராகவிருந்த ஜே.ஆர். குழம்பிப்போனார்.

இந்தியாவின் சந்தர்ப்பவாதத் தலையீடு
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற கனவுடன் இருந்த ஜே.ஆரின் எண்ணத்தை அறிந்த இந்தியா, இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்து வதற்கு வியூகம் அமைத்தது. மேற்குலக நாடுகளின் பக்கம் சார்ந்து இலங்கை செயற்படுவதை வலுவிழக்கச் செய்வதற்காக இலங்கையுடன் ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடுவதற்கு முன்வந்தது. இதற்காக ஈழத் தமிழர்களின் பிரச்சினையைக் கையிலெடுத்துக் கொண்டது.

 

தமிழர்களைப் பாதுகாப்பதெனக் கூறிக்கொண்டு தலையீட்டைச் செய்திருந்த இந்தியாவானது இலங்கை அரசின் நலன்களிலேயே அக்கறையாயிருந்தது. தமிழ் மக்களின் ஒடுக்குறை களுக்கு எதிரான, பாதிப்புக்குள்ளான குரல்களுக்கு இந்தியா செவிசாய்க்கவில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் படி வலியுறுத்தப்பட்டதால், ஏமாற்றும் கபடத்தனத்தைத் தொடர முடியாமல் போனது. அத்துடன் இது சார்ந்து புலிகளும் கடும் அழுத்தத்தைக் கொடுத்தனர்.

தியாகி திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வீரச் சாவடைந்தார். இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு முரணான விதத்தில் இலங்கைப் படைகளால், கைது செய்யப்பட்டிருந்த புலிகளின் பன்னிரண்டு வேங்கைகளும் சயனைட் அருந்தி வீரச்சாவ டைந்தனர். இந்திய அரசு இவற்றில் கடைப்பிடித்த அலட்சியம் அப்பட்டமாகியது.

இந்தியப் படை கொலைவெறிப் படையாக மாறியது
இந்திய அமைதிப் படையினர் ஆக்கிரமிப்புப் படை யாகவும் கொலை வெறிப்படையாகவும் தமிழர்களை அழித்தொழிக்கின்ற ஈவு இரக்கமற்ற படைகளாகவும் மாறித் தங்களது மூர்க்கத்தனமான நடவடிக்கையை 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 10ஆம் திகதி பிற்பகல் வேளை ஆரம்பித்திருந்தனர். யாழ். கோட்டையை விட்டு வெளியேறிய இந்தியப் படையினர் எறிகணைத் தாக்குதல் மூலம் படை நடவடிக்கையைத் தொடங்கியிருந்தனர்.

விடுதலைப் புலிகளுடான போரை ஆரம்பித்த இந்தியப் படையினர் அன்றிரவு முழுவதும் யாழ். நகரம் மற்றும் அதை அண்மித்த பிர தேசங்களில் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டி ருந்தனர். யாழ். மாநகர மக்கள் இடம் பெயர்ந்து பாடசாலைகள், ஆலயங்கள், பொதுக்கட்டடங்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தஞ்சமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத நிலையில் அன்றிரவு வேளையில் பொதுமக்களில் சிலர் உயிரிழந்தனர்.

படையினர் கொக்குவில் ரயில் நிலையமூடாகக் கொக்குவில் பிரம்படிப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். எங்கும் வெடிச்சத்தம், படையினரின் அடாவடித்தனம், எறிகணைத் தாக்குல்களோடு பிரம்படி மக்கள் இந்தியப் படையினரிடம் சிக்கிக் கொண்டனர். ஒக்ரோபர் 11ஆம் திகதி பிரம்படி முதன்மை வீதியில் நிலை கொண்டிருந்த இந்தியப்படையினர் காலை வேளையில் மக்கள் மீதான தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர். பாதுகாப்புத் தேடி அலைந்த மக்கள் கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்தனர்.

 

பிரம்படியில் கொலைக்களம்
கொலை வெறியோடு காணப்பட்ட இந்தியப் படையினர் பிரம்பிடியிலுள்ள மக்களை வீட்டுக்குள் புகுந்து சுட்டுக் கொன்றனர். அங்கு ஒரு வீட்டுக்குள் இருந்த கணவன் மனைவியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தாயின் இடுப்பிலிருந்த 2வயதுப் பெண் குழந்தையான தனபாலசிங்கம் தர்ணிகா வையும் சுட்டுக் கொன்றனர். அந்தக் குழந்தை மீது எறிகுண்டையும் வீசினர். அந்தக் குழந்தையின் இரண்டு சகோதரர்கள் படுகாயங்களோடு உயிர் தப்பினர்.

காயப்பட்டவர்களையோ, கொல்லப்பட்ட வர்களையோ உறவினர்களைச் சென்றுபார்க்க முடியாதவாறு தடுத்து வைத்திருந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட முடியாத நிலையிலும், குருதிப் போக்காலும் பலர் உயிரிழந்தனர். கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்த மக்களில் 50க்கு மேற்பட்டவர்களும், பிரம்படியில் 50க்கு மேற்பட்டோர்களும் இந்தியப் படையினர் நடத்திய கொலை வெறியாட்டத்தில் கொல்லப்பட்டனர்.

கொடூராமான செயலைச் செய்துவிட்டுப் பிரம்படியிலுள்ள பல குடும்பங்க ளைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி இரண்டு நாள்கள் முழுவதும் வைத்திருந்தது இந்தியப் படை. ஒக்ரோபர் 11ஆம் திகதி கொக்குவில் பிரம்படி யில் 50க்கு மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்றொழித்தது இந்திய தேசத்துப் பெருமை மிக்க அமைதிப் படை. அதுவே அமைதிப் படை யின் முதல் படுகொலையுமாகும்.

கோட்டையிலிருந்து புறப்பட்ட இந்தியப் படையி னரின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் பிரம்படி யிலிருந்து ஆரம்பமாகி கிழக்கு மாகாணத்தின் களுவாஞ்சிக்குடி வரை நீடித்திருந்தது. இந்தியப் படைகள் இங்கு கால் பதித்திருந்த காலத்தில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், போராளிகள் உட்படப் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்றிருக்கிறது.

வல்வைப் படுகொலை, யாழ்ப்பா ணம் மருத்துவமனைப் படுகொலைகள் உட்பட மறக்க இயலாத உதாரணங்கள் பல இருக்கின்றன. இந்தியப் படையினர் நிகழ்த்திய பல படுகொலை களுக்கு 31ஆண்டுகளாகியும் எந்த விசாரணை யுமில்லை. அதற்கான நீதியும் இல்லை என்பது தான் கவலையான விடயமாகும்.

 

https://newuthayan.com/story/09/நீதி-மறுத்து-நீள்கின்ற-காலமும்-நினைவழியாத-சாட்சியங்களும்.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this