Jump to content

எம் ஜி ஆருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விபரங்களை கோரியது ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம் ஜி ஆருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விபரங்களை கோரியது ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம்

முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த விபரத்தை அப்பலோ மருத்துவமனை வெளியிடவேண்டும் என  ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில்  திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவரை அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகள் ஏன் இடம்பெறவில்லை என பலர் கேள்வி எழுப்பி வந்துள்ளனர்.

இந்த விவகாரமே தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

1984 இல் எம்ஜிஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டவேளை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்  

பின்னர்  அவர் அமெரிக்காவிற்கு சிசிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

எம்ஜிஆர் அமெரிக்காவிற்கு மருத்துவசிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கான நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

எம்ஜிஆரை அமெரிக்காவிற்கு அழைத்துச்செல்ல எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? இது தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவை யார் மருத்துவமனைக்கு தெரிவித்தது போன்ற விபரங்களையும் ஆணையகம் கோரியுள்ளது.

mgr__jayala.jpg

எம்ஜிஆரை அழைத்துச்சென்றது போன்று ஜெயலலிதாவை ஏன் அழைத்துச்செல்ல முயலவில்லை என்பதை கண்டறிவதற்காகவே ஆறுமுகசாமி ஆணையம் இந்த விபரங்களை கோரியுள்ளது.

 

http://www.virakesari.lk/article/42250

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவை..ஏன் அமெரிக்காவுக்கு அனுப்பவில்லை என்று விசாரிப்பதிலும் பார்க்க....வருங்கால வல்லரசுக் கனவு காணும் இந்தியா மருந்து குடிச்சுச் சாகலாம்!

இரண்டு காரணங்கள்!

முதலாவது.....ஜெயலலிதாவின் உயிர்....சாதாரண இந்தியக் குடிமகனின் உயிரை விடவும் மிகவும் பெறுமதி மிக்கது!

 

இரண்டாவது...இந்திய மருத்துவர்கள் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது....கீழ் நிலையிலேயே உள்ளனர்!

 

வெட்கப் பட வேண்டிய விஷயம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.