Jump to content

குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி


Recommended Posts

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி

பள்ளிக்கூடம் செல்ல
ஓர் தெருவைக் காட்டவில்லை
காவலரணற்ற
ஓர் நகரைக் காட்டவில்லை

துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ
ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை

பூர்வீக நிலத்தையும்
மூதாதையரின் வீட்டையும்
காட்ட முடியவில்லை

சிறு அமைதியையோ
அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை

காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை

அலைகடலையும்
எழும் சூரியனையும்
காயங்களற்ற ஒரு பொம்மையையும்
கிழியாத பூக்களையும் 
பறவைகள் நிறைந்த வானத்தையும்
காட்ட முடியவில்லை

எல்லா உறுப்புக்களையும் புணர்பவர்களை
சூழ நிறுத்திவிட்டு 
காட்ட முடியாதிருந்தோம் 
ஒளியிருக்கும் திசையை

ஈற்றில் வழங்கியிருக்கிறோம் 
ஆண்குறிகளை அடையாளம்
காட்டுமொரு காலத்தை.
2014

தீபச்செல்வன்

(எமது குழந்தைகள் சுதந்திரமாக வாழ்ந்த காலத்தை காட்டும் புகைப்படம். எமது குழந்தைகள் சிங்களப் படைகளின் கீழ் சபிக்கப்பட்ட காலத்தில் வாழ்வது குறித்த கவிதை)

Image may contain: 2 people, people standing and outdoor
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுகு சிறிது காரம் பெரிது..... இந்தக் கவிதையும்......!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடு , ஆடுகள் இறைச்சியாக்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர்.   இதிலை எந்த இனம் ..ஊர் பேர் இல்லை...இதை யாரு செய்திருப்பினம்...கன்பியூசா இருக்கே...
    • அதிகாரங்களற்ற வெற்று மாவட்ட சபைகளை தீர்வாக முன்வைத்த அரசாங்கமும் அதிருப்தியடைந்த தமிழர் தரப்பும்   பேச்சுவார்த்தையின் இரண்டாம் நாளின் முதற்பாதி இரு அடிப்படை விடயங்கள் தொடர்பாக விவாதிப்பதில் செலவிடப்பட்டது. தமிழர் தரப்பு முன்வைத்த கேள்வியான பேச்சுக்களில் அரசு கொண்டிருக்கும் ஆர்வம், அரச தரப்பு முன்வைத்த தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வ அங்கீகாரம் தொடர்பான கேள்வி, இருதரப்பும் ஒருவர் மீது மற்றையவர் முன்வைத்த யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஆகியவை விவாதிக்கப்பட்டன.  அன்று பிற்பகலில் அரசியல் தீர்வு தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்தின் தீர்வை "புதிய தீர்வு" எனும் பெயரில் ஹெக்டர் ஜெயவர்த்தன முன்வைத்தார். அரசின் தீர்வினை முன்வைத்துப் பேசிய ஹெக்டர், இறுதித் தீர்வு 1978 ஆம் ஆண்டின் ஒற்றையாட்சிக் கோட்பாட்டினையும், சர்வ அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி முறைமையினையும் முற்றாக ஏற்றுக்கொண்டதாக அமைதல் அவசியம் என்று கூறினார்.  மேலும், தான் முன்வைக்கும் தீர்வு 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டு பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட "அதிகாரப் பகிர்வின் அடிப்படையில்" அமைந்திருக்கும் என்றும் கூறினார்.சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரு ஆவணங்களை சபையில் சமர்ப்பித்த ஹெக்டர், தமிழ்த் தரப்பினர் அவற்றைக் கவனமாக படித்து, அரசாங்கத்துடன் சேர்ந்து அத்தீர்வினை அமுல்ப்படுத்த உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், அரசு தரப்பு "புதிய தீர்வு" எனும் பெயரில் முன்வைத்த தீர்வு உண்மையிலேயே 1984 ஆம் ஆண்டு மார்கழி 4 ஆம் திகதி ஜெயவர்த்தன முன்வைத்த தீர்வேயன்றி வேறில்லை என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டார். ஜெயாரினால் முன்வைக்கப்பட்ட அத்தீர்வு மாவட்ட / பிராந்திய சபைகளுக்கான அதிகாரங்களை எப்படிப் பரவலாக்குவது என்பது குறித்து அரசியலமைப்பில் செய்யப்படக்கூடிய பத்தாவது திருத்தம் குறித்தே பேசியிருந்தது. ஆகவே, இத்தீர்வினை ஜெயார் முன்வைத்தபோதே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அதனை நிராகரித்திருந்ததுடன் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்க அவை எவ்விதத்திலும் போதுமானவை அல்லவென்றும் விமர்சித்திருந்தது என்றும் அமிர்தலிங்கம் கூறினார்.  திம்பு பேச்சுவார்த்தை மேசை, தமிழர் தரப்பு இடதுபுறத்தில். வலது புறத்தில் சிங்களத் தரப்பு   இலங்கை முன்வைத்த தீர்வு நகல் குறித்து மூன்றாம் நாளான ஆடி 10 ஆம் திகதி ஆராய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அன்றைய நாள் முடிவடையும்போது பேச்சுக்களில் ஈடுபட்ட இரு தரப்பும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிடுவதென்று முடிவானது. அதன்படி 8 பேர் அடங்கிய கூட்டு பேச்சுவார்த்தைக்குழுவில் ஐந்து அரச தரப்புப் பிரதிநிதிகளும், மூன்று தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர். மேலும், பூட்டான் அரசாங்கத்தினூடாகவே இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடலாம் என்று இக்கூட்டுக் குழு முடிவெடுத்தது.   இப்பேச்சுவார்த்தைகளுக்கு கொழும்பு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் மூன்றாம் நாள் பேச்சுவார்த்தைகளின்போது சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியது. கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகங்களில் அரச தரப்பினை ஆதரித்தும், நியாயப்படுத்தியுமே செய்திகள் வெளிவந்தமையினால், தமிழர் தரப்பு இதுகுறித்து தனது ஆட்சேபணையினை தெரிவித்தது. குறிப்பாக, தமிழ்ப்பிரதிநிதிகள் தொடர்பாக விளித்தபோது அவர்களைப் பயங்கரவாதிகள் என்றே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக அழைத்து வந்தது. இதனையடுத்து, இதுகுறித்து தாம் நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பு தெரிவித்தது. மூன்றாம் நாளின் பெரும்பாலான பகுதி அரசுதரப்பு முன்வைத்த தீர்வு தமிழர்களின்  அபிலாஷைகளைத் தீர்க்கப் போதுமானவை அல்லவென்று தமிழர் தரப்பு அதன் மீது தனது விமர்சனங்களையும், ஆட்சேபணைகளையும் முன்வைப்பதிலேயே கழிந்தது. அரசு முன்வைத்த தீர்வு மாவட்ட சபைகள் மற்றும் பிராந்திய சபைகளையே அதியுச்ச அதிகாரப் பரவலாக்க அலகுகள் என்று குறிப்பிட்டிருந்ததுடன், கிராம மட்டத்திலான கிராமாதோய சபைகள் தொடங்கி ஐந்து அடுக்கு சபைகள்  குறித்தும், இரண்டாம் சபை குறித்தும் அது பேசியது. அரசாங்கத்தின் மிகக் கீழ்மட்ட நிர்வாக அலகுகளாக கிராம சபைகளே இருக்கும். நாடு முழுவதுமாக 4500 கிராம சபைகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் கிராம சபைகளில் உறுப்பினராக இணைந்துகொள்ளலாம். அரசியலிலிருந்து விலகி நிர்வகிக்கப்படும் இச்சபைகள் அந்தந்தக் கிராமங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தும்.  பிரதேச சபைகள் இரண்டாம் நிலைச் சபைகளாக இருக்கும். உள்ளூர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை இச்சபைகள் மேற்கொள்ளும். தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்படும் இச்சபைகள் நாடுமுழுவதும் உள்ள 250  பிரதேசச் சபைச் செயலகத் தொகுதிகளிலும் இருக்கும்.  மாவட்ட சபைகள் அரசாங்கத்தின் மூன்றாம் நிலை நிர்வாக அலகுகளாக இருக்கும். நாட்டிலிருக்கும் 25 மாவட்டங்களுக்கு தலா ஒவ்வொரு மாவட்ட சபை காணப்படும். மாவட்டத்தில் நடத்தப்படும் தேர்தல்கள் மூலம் இச்சபைகளுக்கான நிர்வாகிகள் தெரிவுசெய்யப்படுவார்கள். இச்சபைகளின் தலைவரும், பிரதித் தலைவரும் வாக்களர்களால் நேரடியாகவே தெரிவுசெய்யப்படலாம். தலைவரின் கீழ் அவருக்கு உதவவென அமைச்சர்கள் குழுவொன்று உருவாக்கப்படும். ஆனால், இந்த அமைச்சர்களை ஜனாதிபதியே நியமிப்பார். மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும் இச்சபைகளின் அமைச்சர்களுக்கான அதிகாரம் கொழும்பிலிருக்கும் தேசிய அமைச்சர்களிடமிருந்து வழங்கப்பட்டதாக இருக்கும். அரசாங்கத்தின் நான்காம் மட்ட அதிகாரப் பரவலாக்கல் அலகுகளாக மாகாணசபைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்றிற்கு மேற்பட்ட மாவட்ட சபைகளைக் கொண்டு மாகாண சபை அமைக்கப்படும். ஓரிரு மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் விருப்பு தேர்தல் மூலமாகவோ அல்லது சர்வஜன வாக்கெடுப்பு மூலமாகவோ அறியப்பட்டு மாவட்டசபைகள் இணைக்கப்படலாம். இந்த மாவட்ட சபைகளில் முன்னர் பணியாற்றிய ஊழியர்கள் இணைக்கப்பட்ட மாகாணசபைகளில் பணியாற்றலாம். மாவட்ட சபைகளுக்கு இருக்கும் அதே அதிகாரங்களே மாகாண சபைகளுக்கும் இருக்கும்.   தேசிய சபைகளே நாட்டின் அதியுயர் அதிகாரப் பரவலாக்கல் சபையாகக் காணப்படும். பாராளுமன்றத்திற்கு அடுத்தநிலையில் இச்சபை காணப்படும் ஆதலால் இது இரண்டாவது சபை என்று அழைக்கப்படும். 75 உறுப்பினர்கள் கொண்ட இந்தச் சபையில் மாவட்ட சபையின் தலைவர்களும் உபதலைவர்களும் 50 இடங்களை நிரப்ப, மீதி 25 இடங்கள் ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். 9 மாவகாணங்களைச் சேர்ந்த சேர்ந்த தலா இருவரும், இன்னும் 7 பேரும் ஜனாதிபதியினால் தெரிவுசெய்ப்படுவர். இச்சபைகள் பாராளுமன்றத்தில் ஆலோசனைகளைப் பரிந்துரை செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்படும். புதிதாக சட்டங்களை நிறைவேற்றவோ அல்லது பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படும் சட்டங்களைத் தடுக்கும் அதிகாரமோ இவற்றிற்குக் கிடையாது. மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்கள் வெகு சொற்பமானவை. பாராளுமன்றத்தில் அமைச்சர்களினால் பகிரப்படும் பலமிழக்கப்பட்ட அதிகாரங்களை இவர்கள் பயன்படுத்தலாமேயன்றி, இவர்களால் பாராளுமன்றத்தை மீறிச் செயற்பட முடியாது. சொந்தமாக சட்டமியற்றும் அதிகாரமற்ற இச்சபைகள் பாராளுமன்றத்திடம் தமது தேவைகளைப் பரிந்துரை செய்யலாம். ஆனால், அவை நிராகரிக்கப்படுவதும், அங்கீகரிக்கப்படுவதும் பாராளுமன்றத்தின் கைகளிலேயே இருக்கும்.  ஹெக்டர் முன்வைத்த ஆவணங்களைத் தான் மேலோட்டமாகப் பார்த்ததாகக் கூறிய சித்தார்த்தன், மாவட்ட சபைகளுக்கென்று அரசாங்கம் வழங்கவிருந்த அதிகாரங்கள் எந்தவித முக்கியத்துவமும் அற்றவையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், அந்த அதிகாரங்களைக் கூட தேவையான போது விலக்கிக்கொள்ளும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கும், ஜனாதிபதிக்கும் கொடுக்கப்பட்டிருந்தது என்றும் கூறுகிறார். "நாம் அவர்கள் முன்வைத்த பட்டியலைப் பார்வையிட்டோம். எமக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. மிகையாகப் புகழப்பட்ட, சோடிக்கப்பட்ட நகர சபைகளையே அரசாங்கம் மாவட்ட சபை அடிப்படையிலான தீர்வு என்று முன்வைத்திருந்தது. நீங்களும் வேண்டுமானால் அதனைப் படித்துப் பார்த்து உங்களின் கருத்தைச் சொல்லுங்கள்" என்று என்னிடம் அந்த நகலைக் கொடுத்தார். ஹெக்டர் முன்வைத்த அரச பரிந்துரைக்கு மிகுந்த அதிருப்தியுடன் பதிலளித்த அமிர்தலிங்கம், "தமிழர்களை இனிமேலும் ஏமாற்ற முயலவேண்டாம்" என்று கூறினார். "மொழிப்பிரச்சினை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்பாக மிக விரிவாக சர்வகட்சி மாநாட்டிலேயே நாம் விவாதித்திருக்கிறோம். நாம் இப்போது செய்யவேண்டிய அதிகாரத்தைப் பரவலாக்குவது குறித்து முடிவெடுப்பதுதான். சர்வகட்சி மாநாட்டில் அரசு முன்வைத்த பரிந்துரைகள் தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற சிறிதளவிலும் போதுமானவை அல்லவென்பதை நாம் உறுதியாகக் கூறியிருந்தோம். ஆகவே, உங்கள் தீர்வை நீங்கள் மேம்படுத்டுவது அவசியம். ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் தமிழர்கள் அதனை பரிசீலித்துப் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள்" என்றும் கூறினார். அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் அமிர்தலிங்கத்தின் பதிலினையடுத்து, "அப்படியானால், உங்களின் தீர்வினை முன்வைய்யுங்கள் பார்க்கலாம்?" என்று ஹெக்டர் அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் கூறினார். இக்கோரிக்கையினை தமிழ்த் தரப்பு ஒருமித்து நிராகரித்தது. "தமிழரின் கோரிக்கையான தனிநாட்டிற்கு நிகரான தீர்வினை முன்வைப்பது அரசாங்கத்தின் கடமை. தமிழ் மக்கள் 1977 ஆம் ஆண்டு எமக்கு வழங்கிய ஆணையான தனிநாட்டில் நாம் இன்னமும் உறுதியாகவே நிற்கிறோம். ஆனால், தமிழ் மக்கள் கெளரவத்துடனும், சுதந்திரத்துடனும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழக்கூடிய வகையில் தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனைப் பரிசீலிக்கத் தயாராகவே இருக்கிறோம்" என்று அவர்கள் கூறினார்கள். இலங்கையரச பிரதிநிதிகள் முன்வைத்த தீர்விற்கான பரிந்துரைகளையடுத்து விரக்தியடைந்த தமிழ்த் தரப்பு சந்திரசேகரனிடம் தாம் பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளிநடப்புச் செய்யப்போவதாகக் கூறியது. அரசாங்கம் தரமான தீர்வொன்றினை முன்வைக்கும் என்கிற நம்பிக்கையிலேயே திம்புப் பேச்சுவார்த்தைக்கு நாம் வந்தோம். ஆனால், தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வினால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முற்றாக ஏமாற்றமடைந்திருக்கிறது என்று சந்திரசேகரனைப் பார்த்து அமிர்தலிங்கம் கூறினார். தில்லியுடன் இதுகுறித்துக் கலந்துரையாடிய சந்திரசேகரன், இந்தியாவும் இலங்கை முன்வைத்திருக்கும் தீர்வு குறித்து திருப்தியடையவில்லையென்று கூறியதுடன், பேச்சுக்களிலிருந்து வெளிநடப்புச் செய்யவேண்டாம் என்றும் தமிழ்த் தரப்பைக் கேட்டுக்கொண்டார்.
    • இரவல் தந்தவன் கேட்கின்றான், அதை இல்லை என்றால் அவன் விடுவானா🤣.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • 05 MAY, 2024 | 05:27 AM (நெவில் அன்தனி) லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா புட்போல் கப் (இலங்கை கால்பந்தாட்ட கிண்ணம்) நொக் அவுட் போட்டி மூலம் தேசிய மற்றும் முன்னாள் தேசிய வீரர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்களை இலங்கையில் சுமார் இரண்டரை வருடங்களின் பின்னர்  உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டியில்  காணக்கிடைத்தது. லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப்பின் ஸதாபகரும் எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான சய்வ் யூசுப்பின் தனி முயற்சியாலும் சொந்த அனுசரணையாலும் இலங்கையில்   உள்ளூர்  கால்பந்தாட்டம் மீண்டும் மலர்ந்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். எட்டு அணிகள் பங்குபற்றும் இந்த நொக் அவுட் கால்பந்தாட்டத்தின் முதல் இரண்டு கால் இறுதிப் போட்டிகளில் களுத்தற, நிகம்போ அணிகளை வீழ்த்திய ஜெவ்னா, கண்டி அணிகள் முதலாவது அரை இறுதியில் மோதவுள்ளன. சிட்டி புட்போல் திடலில் சனிக்கிழமை (05) நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் களுத்தற எவ்.சி. அணியிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட ஜெவ்னா எவ்.சி. அணி கடைசிக் கட்டத்தில் அன்தனி டிலக்சன் போட்ட கோலின் உதவியுடன் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. போட்டியின் 11ஆவது நிமிடத்தில் மொஹமத் ஹஸ்மீர் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு களுத்தற எவ்.சி.யை முன்னிலையில் இட்டார். சற்று நேரத்திற்குப் பின்னர் களுத்தற வீரர் மோஹமத் ரஹுமான் கோல் போட எடுத்த முயற்சி வீண்போனது. இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஹஸ்மீரின் மற்றொரு முயற்சி கைகூடாமல் போனதுடன் அடுத்த நிமிடமே மறுபுறத்தில் அன்தனி டிலக்சன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி. சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார். இடைவேளை முடிந்த பின்னர் போட்டியின் 68ஆவது நிமிடத்தில் முன்னாள் தேசிய வீரர் செபமாலைநாயகம் ஞானரூபன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி.யை முன்னிலையில் இட்டார். போட்டியின் 68ஆவது நிமிடத்தில் ஜெவ்னா எவ்.சி. கோல்காப்பாளரின் கவனக்குறைவைப் பயன்படுத்தி மொஹமத் அஸ்மீர் கோல் நிலையை 2 - 2 என களுத்தற சார்பாக சமப்படுத்தினார். எவ்வாறாயினும் முழு நேரத்திற்கு ஒரு நிமிடம் இருந்தபோது அன்தனி டிலக்சன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி.யின் வெற்றியை உறுதிசெய்தார். வெற்றிபெற்ற ஜெவ்னா எவ்.சி. அணியில் செபமாலைநாயகம் ஜூட் சுபன் (தலைவர்), அவரது மூத்த சகோதரர் செபமாலைநாயகம் ஞானரூபன்,  அன்தனி   ஜெரின்சன், அன்தனி டிலக்சன், தர்மகுலநாதன் கஜகோபன், தியாகமூர்த்தி ஆர்த்திகன், பரமேஸ்வரன் பகலவன், விக்ணேஸ்வரராஜா கஜநாதன், நேசராசா அன்தனி ரமேஷ், சிவநேசன் மதிவதனன், ஜெயராசா தில்லைக்காந்தன், செலஸ்டீன் சிந்துஜன், அமலேஸ்வரன் அருள் ஜோசப், விஜயகுமார் விக்னேஷ், செபமாலைராசா ஜெயராஜ், வின்சன் கீதன் ஆகியோர் இடம்பெற்றனர்.  பயிற்றுநர்: ரட்னம் ஜஸ்மின். கண்டி  எவ்.சி. கோல் மழை பொழிந்து நிகம்போ எவ்.சி.யை வீழ்த்தியது கிட்டத்தட்ட தேசிய அணியாகக் காட்சி கொடுத்த கண்டி எவ்.சி. இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் கோல் மழை பொழிந்து 9 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நிகம்போ எவ்.சி.யை துவம்சம் செய்தது. அசிக்கூர் ரஹ்மானை தலைவராகக் கொண்ட கண்டி எவ்.சி. அணியில் மூவரைத் தவிர மற்றைய அனைவரும் தேசிய வீரர்களாவர். கண்டி எவ்.சி. அணியின் பலத்திற்கு ஈடுகொடுப்பதில் நிகம்போ எவ்.சி. சிரமத்தை எதிர்கொண்டது. போதாக்குறைக்கு 32ஆவது நிமிடத்திலிருந்து நிகம்போ எவ்.சி. 10 வீரர்களுடன் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டது, இப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கண்டி எவ்.சி. போட்டியின் 5ஆவது நிமிடத்தில் இப்ராஹிம் ஜிமோ போட்ட கோல் மூலம் முன்னிலை அடைந்தது. போட்டியின் 32ஆவது நிமிடத்தில் 2ஆவது மஞ்சள் அட்டைக்கு இலக்கான என்.ஜே. பெர்னாண்டோ சிவப்பு அட்டையுடன் களம் விட்டகன்றார். அவர் ஒரு பெனல்டியை வழங்கிவிட்டே வேளியேறினார். அந்தப் பெனல்டியை மொஹமத் ஆக்கிப் பைஸர் கோல் ஆக்கினார். இடைவேளையின்போது கண்டி எவ்.சி. 2 - 0 என முன்னிலை வகித்தது. இடைவேளைக்குப் பின்னர் சீரான இடைவெளியில் கண்டி எவ்.சி. கோல்களைப் போட்ட வண்ணம் இருந்தது. மொஹமத் பஸால் (52 நி.), ஷெனால் சந்தேஷ் (59 நி.), ஆக்கிப் பைஸர் (64 நி.), இப்ராஹிம் ஜிமோ (81 நி.), அசிக்கூர் ரஹுமான் (82 நி., 90+6 நி.), மொஹமத் ரினாஸ் (90 நி.) ஆகியோர் கோல் மழை பொழிந்தனர். https://www.virakesari.lk/article/182705
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.