Sign in to follow this  
பிழம்பு

உறக்கம் ஏன் மாணவர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்?

Recommended Posts

ஜாக் தம்மினெனுக்கு ஏராளமான மாணவர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், "மாணவர்கள்" செய்வது போன்றே, தேர்வுக்கு முன் தினம் இரவெல்லாம் விழித்து படித்து, இயன்ற அளவு மனப்பாடம் செய்ய முயற்சிப்பார்கள்.

ஆனால் "இதுதான் மிகவும் மோசமான ஒன்று" என எச்சரிக்கிறார், இங்கிலாந்தின் ராயல் ஹோலோவே பல்கலைக்கழகத்தின் உளவியல் விரிவுரையாளர்.

அவருக்கு தெரியவேண்டும். உறக்கம் எப்படி நினைவாற்றலை பாதிக்கிறது, குறிப்பாக மொழிக்காக உறக்கம் எவ்வளவு அவசியம் என்பதில் தம்மினென் நிபுணர் ஆவார்.

உறக்கத்தில் கற்றல் என்பது புதிய யோசனை. மாணவர்களால் பெரிதும் நேசிக்கப்படும் இந்த யோசனை, உறக்கத்தில் ஒரு மொழியை கற்கும் ஒலிநாடாவை ஒலிக்கச் செய்வதன் மூலம்- லத்தீன் மொழியை கற்றுக் கொடுத்து, மூளை அனிச்சையாக இருக்கும் போதே மூளைக்குள் மொழியை பதிவு செய்வதன் மூலம் உறக்கத்தில் இருந்து விழிக்கும் போது லத்தீன் மொழியை பேசிக்கொண்டே விழிப்பார்கள்- என்பது கட்டுக்கதையாகும்.

ஆனால் மூளையில் அறிவை பதிவு செய்வதற்கு உறக்கம் இன்றியமையாதது. தம்மினென் ஆராய்ச்சி மற்றும் பிறரின் ஆராய்ச்சிகள் உறக்கம் ஏன் இன்றியமையாதது என்பதை நமக்கு காட்டுகின்றன.

sleepபடத்தின் காப்புரிமை Getty Images

தம்மினெனின் தொடரும் ஆராய்ச்சியில், பங்கேற்றவர்கள் புதிய சொற்களை கற்றுக் கொள்கிறார்கள். பின்னர் இரவெல்லாம் விழித்திருக்கிறார்கள். தம்மினென் சில இரவுகள் கழித்து அவர்கள் நினைவாற்றலை அந்த சொற்களைக் கொண்டு ஒப்பிடுகிறார். பின்னர் ஒரு வாரம் கழித்து ஒப்பிடுகிறார்.

இந்த உறக்கத்தை மீட்க பல இரவுகள் அவர்கள் உறங்கிய பின்னரும், அந்த வார்த்தைகளை நினைவில் கொண்டு வருவதற்கு அவர்கள் சிரமப்படுகிறார்கள். ஆனால் ஆராய்ச்சியில் பங்கேற்ற, உறக்கம் மறுக்கப்படாதவர்கள் இப்படி எந்த பாதிப்பிற்கும் உள்ளாவதில்லை.

"கற்றலுக்கு நடுநாயகமாக திகழ்வது உறக்கம்" என்கிறார் அவர். "நீங்கள் உறங்கும் போது ஏதும் கற்கவில்லையென்றாலும், உங்கள் மூளை இன்னும் படித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஏறக்குறைய உங்களுக்காக அது வேலை செய்கிறது. நீங்கள் உறங்காத வரையில் உங்களால் கல்வியின் முழுத் தாக்கத்தையும் உங்களால் உண்மையில் பெற இயலாது."

உறங்குபவரின் மூளைக்கு உள்ளே

தம்மினெனின் உறங்கும் ஆய்வகத்தின் ஆய்வக அறை ஒன்றில் நாம் இப்போது நிற்கிறோம், வண்ணமயமான தரைவிரிப்பு, பிரேம் செய்யப்பட்ட காகித பட்டாம்பூச்சிகள் மட்டுமே கொண்டு சாதாரணமாக அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறை. படுக்கைக்கு மேலே சிறிய அளவிலான மூளை மின்னலை வரவு (ஈ.ஈ.ஜி) கருவி, உறக்கத்தை கண்காணிக்க உதவும் கண்காணிப்பு கருவி ஆகியவை ஆய்வில் பங்கேற்பவர்களின் உறக்கத்தை அவர்கள் தலையில் பொருத்தப்பட்டுள்ள மின்முனைகள் மூலம் கண்காணிக்கவும் மூளை செயல்பாடுகளை கண்காணிக்கவும் உதவும்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

இந்த அளவீடுகள், மூளையின் பல்வேறு பகுதிகள் (முன்பக்கம், நெற்றிப்பொட்டு, மற்றும் மூளையின் சுற்றுப்பகுதி) ஆகியவற்றையும் கண்காணிப்பதுடன் மட்டுமின்றி அவர்கள் தலையில் வைக்கப்படுவதைப் பொறுத்து, தசைகளின்தொனியையும் கண்காணிக்க உதவும் (கீழ்த்தாடையில் பொருத்தப்படும் மின்முனை மூலம்) மற்றும் கண்களின் இயக்கம் (ஒவ்வொரு கண்ணின் அருகிலும் பொருத்தப்படும் மின்

முனை மூலம்) கண்காணிக்க உதவும்.

நடைகூடத்தின் உள்ளே கட்டுப்பாட்டு அறை உள்ளது. அங்கே ஆராய்ச்சியாளர்கள், உறங்குபவர்களின் மூளையில் தற்போது எந்த வகையான நடவடிக்கை நிலவுகிறது , எவ்வளவு நேரம் மற்றும் எந்த வகையில் இயங்குகிறது என்பதை கண்காணிக்க உதவுகிறது.

இதைத் தவிர ஆராய்ச்சியில் பங்கேற்கும் தன்னார்வலர் உறக்கத்தின் போது வேகக் கண்ணசைவு உறக்கத்தில் ஈடுபடுவது எப்போது என்பது குறித்தும், அவரது கண்களின் (கண் 1 மற்றும் கண் 2 ) இயக்கத்தின் அடிப்படையில் கண்காணிக்க முடியும்.

ஆனால் தம்மினெனின் தற்போதைய ஆராய்ச்சியான- மொழியை உறக்கத்தின் போது கற்பிக்க முடியும் என்பதில்- வேகக் கண்ணசைவு உறக்கமற்ற நிலையில் தான் ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும். இந்த உறக்கத்தை மெதுவலை உறக்கம் (ஸ்லோ வேவ் ஸ்லீப்) என்பார்கள்.

இந்த மெதுவலை உறக்கம் நினைவுகளை உருவாக்கவும், நினைவுகளை நினைவில் கொள்ளவும் முக்கியமானதாகும், அது சொற்கள், இலக்கணம் அல்லது பிற அறிவு என அனைத்திற்கும் உதவும்.

மூளையின் பல்வேறு பகுதிகளின் கலந்துரையாடல் மிகவும் முக்கியமானதாகும். மெதுவலை உறக்கத்தின் போது மூளையின் பின்மேட்டுப்பகுதி (ஹிப்போகேம்பஸ்), விரைவாக கற்றுக்கொள்ள உதவும் பகுதி, நியோகார்ட்டெக்ஸ் எனப்படும் மூளையின் மேற்பட்டைப்பகுதியுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. அப்போது தான் நீண்டகால அடிப்படையில் நினைவாற்றலை மேம்படுத்த முடியும்.

எனவே இந்த ஹிப்போகேம்பஸ் தொடக்கத்தில் புதிய வார்த்தைகளை இனங்கண்டு அவற்றை தரம்பிரித்து ஒருங்கிணைக்கிறது. ஆனால் அவற்றை நிரந்தரமாக நினைவில் வைத்திருக்க மூளையின் மேற்பட்டைப்பிரிவின் பங்கேற்பு அவசியமாகிறது.

ஹிப்போகேம்பஸ் மற்றும் நியோகார்ட்டெக்ஸ் இடையேயான இந்த தகவல் அதிவிரைவுப்பாதை உறக்கக்கதிர் மூலம் பரப்புகிறது. இவை 3 விநாடிகளுக்கு மிகையாகாத மூளைச் செயல்பாட்டுத் துடிப்புடன் இயங்க வைக்கிறது.

sleepபடத்தின் காப்புரிமை Christine Ro

"உறக்கக்கதிர்கள் ஏதோ வகையில் ஏற்கனவே உள்ள தகவல்களுடன் புதிய தகவல்களை தொடர்புபடுத்த உதவுகிறது." என்கிறார் தம்மிமென்.

தனது ஆராய்ச்சியின் மூலம் கிடைத்த தரவுகளைக் கொண்டு பார்க்கும் போது, அதிக அளவு உறக்கக் கதிர்களைக் கொண்டவர்கள், தாங்கள் கற்றுக் கொண்ட புதிய வார்த்தைகளை தொகுத்துக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

தம்மிமென் மெதுவலை உறக்கத்தின் மீது கவனம் செலுத்திவரும் நிலையில், வேகக் கண்ணசைவு உறக்கம் மொழி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது என்ற கோட்பாடும் உள்ளது. ஒட்டாவாவில் உள்ள கனடா பல்கலைக்கழகத்தில் உள்ள உறக்கம் மற்றும் கனவு ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் பிரெஞ்சுமொழியில் கனவு காணும் இளநிலை பட்டதாரிகள் தாங்கள் கற்றுக்கொள்ளும் மொழியுடன் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.

கனவுகள் சொல்லப்போனால், பகலில் ஏற்பட்ட நிகழ்வுகளின் எளிய வகையிலான மறு இயக்கத்தை விட சற்று பெரிது. ஆராய்ச்சிகள், மூளையின் பல்வேறு பகுதிகளின் செயல்பாடுகளை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கின்றன. மூளையின் முன் மடல் பகுதி அறிவுபூர்வமான தகவல்களை நிர்வகிக்கிறது. கனவின் போது வெளிப்படும் உணர்ச்சிகளை (அமிக்டாலா) மூளையின் வாதுமை வடிவிலான பகுதி நிர்வகிக்கிறது.

sleepபடத்தின் காப்புரிமை Getty Images

இவை மொழியை கற்பவர்கள் புதிய தொடர்புகளை உருவகப்படுத்த அனுமதிக்கிறது. இரண்டாம் மொழியை தீவிரமாக படிக்கும் மாணவர்கள் அதிக அளவு வேகக் கண்ணசைவு உறக்கத்தை கொண்டிருந்தார்கள் என்று தெரியவருகிறது. இதன் மூலம் அவர்கள் தாங்கள் உறக்கத்தின்போது படித்தவற்றை ஒருங்கிணைக்க கூடுதல் நேரத்தை வழங்கியது. அதன் மூலம் பகல் நேரத்தில் நல்ல விளைவுகளை வழங்கியது.

இரவு தாளங்கள்

நமக்கு எவ்வளவு உறக்கக் கதிர்கள் உள்ளன என்பதை மரபணுக்கள் தீர்மானிக்கின்றன. நம்முடைய உள் கடிகாரங்கள் நாம் எப்போது உறங்க வேண்டும் எப்போது விழிக்க வேண்டும் என்று சொல்லும் கடிகாரத்திற்கும் மரபணு அடிப்படைகள் உள்ளன. இந்த மரபணு கோட்பாடுகளை பின்பற்றுவதன் மூலம் நமது உணர்வறிவு செயல்பாடுகளின் உச்சத்தை எட்ட முடியும்.

இது தொடர்பாக சிலருக்கு அதிக விவரங்கள் தெரியும். உடலியல் மருந்து பிரிவில் 2017 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற மைக்கேல் டபிள்யூ யங் கடிகார மரபணு குறித்த அவரது ஆராய்ச்சிகாக மேலும் இரண்டு ஆராய்ச்சியாளர்களுடன் நோபல் பரிசை வென்றார். சிறப்பான செயல்பாட்டிற்கு, அது பள்ளியோ, வேலையோ அல்லது வாழ்க்கையின் வேறு பகுதியிலோ, "நீங்கள் செய்ய விரும்புவது எல்லாம் சீரான சூழலை உருவாக்க வேண்டும் என்பதுதான்."

 

தனது வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் அல்லது வம்சாவளியாக உறக்க குறைபாடு கொண்டவர்களுக்கு பாதிக்கப்பட்ட உறக்க முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "செலவில்லா எளிய தீர்வு" இரவு போல் இருளாக்கும் கருப்பு திரைச்சீலைகளை பயன்படுத்துவது அல்லது பகல்போன்ற உணர்வினை ஏற்படுத்தும் வெளிச்சத்தை கொண்டு வருவது தான். இயற்கையான வெளிச்சம் அல்லது இருள் போன்ற சூழலை ஏற்படுத்துவது தீர்வாக முடியும்.

குட்டி உறக்கங்கள்

பெரியவர்கள் கல்வி கற்கும் போது பருவ ஒழுங்கியல்புகளின் பங்களிப்பு மறுக்கப்படாத ஒன்று. ஆனால் சிறுவயதில் இதை கொண்டு வந்திருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பெரியவர்களை விட அதிக அளவில் மெதுவலை உறக்கம் ஏற்படும். இதுவும் குழந்தைகள் மொழிகளையும் பிற கலைகளையும் வேகமாக கற்றுக்கொள்வதற்கு காரணமாகலாம். ஜெர்மனியின் டியூபின்கென் பல்கலைக்கழகத்தின் குழந்தைகள் உறக்க ஆய்வகத்தில், குழந்தைகளின் நினைவாற்றலை ஒருங்கிணைப்பதில் உறக்கத்தின் பங்கு என்பதை ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வகம், குழந்தைகள் உறக்கத்தின் போது அவர்கள் மூளைக்கு என்ன ஆகிறது என்பதை கண்காணிக்கிறது.

உறக்கம்படத்தின் காப்புரிமை Getty Images

உறக்கத்திற்கு முன்னும் பின்னும் எவ்வளவு தகவல்களை அவர்கள் நினைவில் தக்க வைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள உதவுகிறது. உள்ளுறை நினைவாற்றலை அணுகி அவற்றை பட்டவர்த்தமான நினைவாற்றலாக்குவதற்கு உறக்கம் உதவுகிறது என்பதை இந்த ஆய்வகம் கண்டறிந்துள்ளது.

பெரியவர்களும் இந்த வகையில் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் குழந்தைகள் தான் உறக்கத்தின் மூலம் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள் என்கிறார் ஆராய்ச்சியாளர் கத்தரீனா ஜின்கே.

குழந்தைகள் பகலிலும் உறங்க வேண்டும்

"குழந்தை பருவத்தின் தொடக்கத்தில் இந்த விளைவுகள் வலுவாக இருக்கிறது. இதற்கு காரணம் மூளை வளர்ந்து வருவது தான்" என்கிறார் கனடாவின் உறக்கம் மற்றும் பருவ ஒழுங்கியல்பு வலையத்தின் ஒருங்கிணைப்பாளர் டொமினிக் பெட்டிட். இவர் குழந்தைகளின் பருவ ஒழுங்கியல்பு முறை குறித்து ஆராய்ச்சி செய்தவர். அவர் சொல்கிறார், "குழந்தைகள் தாங்கள் கற்றுக்கொண்டது அனைத்தையும் நினைவில் கொள்வதற்கு பகலில் உறங்க வேண்டும்".

 

குழந்தைகள் பகல் நேரத்தில் உறங்குவது சொற்களஞ்சிய வளர்ச்சிக்கு உதவுகிறது, சொற்களின் பொருளை பொதுப்படுத்துவதற்கும், மொழியை கற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது என்கிறார். " இருப்பினும் வாழ்நாள் முழுவதும் நினைவாற்றலுக்கும் கற்றலுக்கும் உறக்கம் மிகவும் இன்றியமையாத ஒன்றாக தொடர்கிறது" என்கிறார் அவர்.

உறக்கம் தகவல்களை திரட்ட உதவுவது மட்டுமின்றி, தகவல்களை அணுகும் முறையையும் மாற்றி விடுகிறது. இதன் மூலம் மூளை தகவல்களை அணுகுவதில் இணக்கமாக இருக்கிறது. (அல்லது தகவல்களை மேலும் பல்வேறு வழிகளில் அணுக வழிவகுக்கிறது). அதேபோல் தகவலின் மிக முக்கிய அம்சங்களை பெறுவதற்கும் வழிவகுக்கிறது.

உறக்கம், நினைவாற்றலை பலப்படுத்தவும், நினைவாற்றலை மாற்றவும் முக்கியமாக வழிவகுக்கிறது" என்கிறார் ஜின்கே. "தகவலின் தொகுப்பு நினைவில் கொள்ளப்படும் விதமாக நினைவாற்றல் மாற்றப்படுகிறது" .

sleepபடத்தின் காப்புரிமை Getty Images

மொழியை கற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நீண்ட உறக்கம் சோம்பலுக்கான குறியீடு அல்ல. உறக்கம் நமது மூளைக்கும் நமது உடம்பின் சீரசைவிற்கும் இடையேயான தொடர்பிற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

எனவே, அடுத்த முறை உங்கள் மொழி வகுப்பு நடக்கும் போது, அதுபற்றிய நினைவுகளுடன் உறங்குவது நல்லது. அப்போது தான் நீங்கள் காலையில் விழிக்கும் போது உங்களுக்க அதிக அளவு நினைவில் கொண்டிருப்பதை அறிந்து வியப்பீர்கள்.

https://www.bbc.com/tamil/science-45814275

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this