Jump to content

சபரிமலை ஐயப்பன் சர்ச்சை: பெண்ணுரிமைக்கு வேட்டுவைத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலை ஐயப்பன் சர்ச்சை: பெண்ணுரிமைக்கு வேட்டுவைத்தல்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 ஒக்டோபர் 11 வியாழக்கிழமை, மு.ப. 02:25Comments - 0

  கடந்த மாதம் 28ஆம் திகதி, இந்திய உயர் நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், பெண்கள் நுழைவதற்கு இருந்த தடையை நீக்கி, தீர்ப்பு வழங்கியது.   

இத்தீர்ப்பு, ஆண், பெண் சமத்துவ அடிப்படையை, மதித்து வழங்கிய தீர்ப்பு என்ற வகையில், முக்கியமாகக் கொள்ளப்படுகிறது. இத்தீர்ப்புக்கு எதிராகக் கண்டனப் போராட்டம் ஒன்றை, சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியம், கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.   

image_f8859e11f3.jpg

இப்போது, இவ்விடயம் இலங்கையிலும் பேசுபொருளாக்கப்படுவதால், அது குறித்து எழுதுவது அவசியமாகிறது.  

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், 10 வயது முதல் 50 வயது வரையான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மாதவிடாயிலுள்ள பெண்கள், கோவிலை அசுத்தமாக்குவர் என்று சொல்லி, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.   

அதை எதிர்த்து, 1991ஆம் ஆண்டு தொடுத்த வழக்குக்கு இப்போதுதான், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   

‘பெண்களின் மத வழிபாட்டு உரிமையின் மீது, ஆணாதிக்கத்தை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், அனைத்துப் பெண்களும் வயது வித்தியாசம் இன்றி, சபரிமலைக் கோவிலுக்குள் செல்லலாம்; ஆணாதிக்க விதிகள் மாற்றப்பட வேண்டும்; மதத்தில், ஆணாதிக்கம் அனுமதிக்கப்படலாகாது; உயிரியல்த் தன்மையை அடிப்படையாகக் கொண்ட எந்த விதியும், அரசமைப்பு சோதனையைத் தாண்டி, நிலை பெற்றிருக்க முடியாது. அதேபோல, திருவனந்தபுரம், தேவசம் குழுமம் குறிப்பிட்டிருப்பது போல, ஐயப்ப பக்தர்களை, மதத்தின் தனிப் பிரிவினராகக் கருதமுடியாது’ என்றும் உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.   

 இத்தீர்ப்பை எதிர்த்து, பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. நீதிமன்றம், மத அலுவல்களில் தலையிடக்கூடாது என்பது, அவற்றில் பிரதமானமானது. இந்து மக்கள் கட்சியினரோ, இத் தீர்ப்பு மாற்றப்படாவிட்டால், பிரதமர் நரேந்திர மோடியால் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு, இத்தீர்ப்பு எப்படியும் மாற்றி அமைக்கப்படும் என்று நீதித்துறைக்கு சவால் விடுகிறார்கள்.   

பேச்சாளர் சுகி சிவம், நீதிமன்றம் எப்போதும் சரியான தீர்ப்புகளை வழங்குவதில்லை. எவ்வாறு, இயேசு கிறிஸ்துவுக்குத் தண்டனை தவறான தீர்ப்பானதோ, அதைப் போலவே, இத் தீர்ப்பும் என்று வாதிடுகிறார்.   

இனி, இப்பிரச்சனையின் மய்யத்துக்கு வருவோம். பெண்கள் ஏன் கோவிலுக்குப் போகக்கூடாது? போவது, இந்து மதத்துக்கு மட்டுமல்லாது, எல்லா மதங்களுக்கும் பொதுவாக மத நம்பிக்கையுள்ளவர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு, எவ்வித வேறுபாடுமின்றி அனுமதிக்கப்பட வேண்டும். பாலோ, வயதோ, சாதியோ, இனமோ அதைத் தடுக்கக் காரணமாகக்கூடாது.   

இந்து மதத்தை எடுத்துக் கொண்டால், பெண்கள் அனைத்துக் கோவில்களுக்கும் செல்ல முடியும். பெண்கள் தான் கோவிலுக்குச் செல்பவர்களில் பெரும்பான்மையினர். எனின், ஏன் சபரிமலைக்கு மட்டும் போகக்கூடாது. அதற்காகச் சொல்லப்படும் புராணக் கதைகள் எதுவுமே, நம்பத்தகுந்தாக இல்லை.   

உலகமே, இறைவனின் படைப்பு என்றால், மனிதர்களில் பாதிக்கும் மேலாக இருக்கின்ற பெண்கள், தன்னைப் படைத்த இறைவனையே வழிபட அனுமதிக்க முடியாது என்பது, கடவுளுக்குச் செய்யும் துரோகம் எனப் பொருள் கொள்ளலாம்.   

பெண்கள், ஆண்களுக்குச் சமமானவர்கள் என்ற உண்மையை, இந்தச் சமூகம், ஏற்க வேண்டும். அதை ஏற்க மறுக்கின்ற சமூகத்தின் பிரதிநிதிகளும் குழுக்களுமே, இத்தீர்ப்பைக் கேள்விக்குட்படுத்துவது மட்டுமன்றி, பெண்களை அனுமதிக்க முடியாது என்றும் அடம்பிடிக்கிறார்கள்.   

சபரிமலையும் சுத்தமும்   

பெண்களைக் கோவிலுக்கு அனுமதிக்கக்கூடாது என்று முன்வைக்கப்படும் வாதத்துக்குச் சுத்தமும் பெண்களின் மாதவிடாயும் அடிப்படையான காரணமாகச் சொல்லப்படுகிறது. 

பெண்கள் தீட்டானவர்கள் என்று சொல்வதன் மூலம், பெண்கள் அனைவரையும் நாம் கொச்சைப்படுத்துகிறோம். அவர்களை மாண்பிறக்கம் செய்கிறோம்.   

பருவமாறுதல்கள், பெண்களுக்கு மட்டும் நிலவுவது மாதிரியும் ஆண்களுக்கு அம்மாறுதல்கள் நிகழாதது போலவும் ஒரு தவறான விம்பம் ஆக்கப்பட்டுள்ளது.   

உட‌ல், தூய்மையும் அசுத்தமும் கலந்த ஒன்றுதான். நூற்றுக்கு நூறு தூய உடல் எதுவுமே கிடையாது. அறிவியலின்படி, அவ்வாறு ஒன்று இருக்க முடியாது. எனவே மாதவிடாயை, அசுத்தம் என்பதே அடிப்படையில் பிழை. இனவிருத்தியின் ஆதாரமே, மாதவிலக்குடன் தொடர்புடையது என்பதை, மறுக்க முடியாது. எனவே, அதைக் காரணமாக்கிப் பெண்களைத் தள்ளிவைப்பதும் ஒதுக்குவதும் தவறு.   

சபரிமலைக்குச் செல்பவர்கள், சுத்தமாக இருக்க வேண்டும் என்ற விடயத்துக்கு வருவோம். சபரிமலையின் 18 படிகளை ஏறுபவர்கள், பம்பை நதியில் குளித்துவிட்டுத்தான் ஏறவேண்டும். அதையே, ஐயப்ப பக்தர்கள் செய்கிறார்கள்.   

கேரள மாநிலத்தின் மூன்றாவது பெரிய நதி பம்பை. ஆனால், அம் மாநிலத்தின் அசுத்தமான ஒரே நதியும் அதுதான். மத்திய அரசின், தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தூய்மைப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ள ஒரே கேரள நதி இதுதான்.  

image_3a91416947.jpg

நீரின் தூய்மையை அளக்கும் பல்வேறு அலகுகளில் Fecal coliform எனும் மலஞ்சார் பற்றிரியமும் ஒன்று. 100 மில்லிலீற்றர் தண்ணீரில், அது அதிகபட்சம் 500 இருக்கலாம். பம்பை நதி நீரில், 120-140 மடங்கு அதிகமாக 60,000 முதல் 70,000 வரை Fecal coliform உள்ளது.   

மனிதக் கழிவுகள், விலங்குக் கழிவுகள், பறவை எச்சம், செயற்கை உரம் கலந்த விவசாயக் கழிவுகள் ஆகியவற்றின் ஏதேனும் ஒன்று, ஆறுகளில் கலப்பதால் Fecal coliform அளவு கூடும். பம்பை நதியில் அதன் அளவு மிகுவதற்கு, மனிதக் கழிவுகள் அதிகம் கலப்பதுதான் காரணம் என்று, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   

 பம்பை நதியைத் தூய்மைப்படுத்தலை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் மூத்த ஆராய்ச்சியாளர் ஒருவர், “எத்தனை பொதுக் கழிப்பிடங்கள் இருந்தாலும், பக்தர்கள் பொதுவெளியில் மலம் கழிப்பதைத்தான் விரும்புகின்றனர். இது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்து, நடைமுறைப்படுத்தினால் ஒழிய, இப்பழக்கத்தை மாற்ற முடியாது. கோவில் வருவாயை முக்கியமாகக் கருதி, பக்தர்களின் மீது நடவடிக்கை எடுக்க, அரசாங்கம் தயங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.  

ஆண்டுதோறும், சுமார் மூன்று கோடி பேர், சபரிமலைக்குச் செல்கிறார்கள். உற்சவ நாளையண்டிய ஜனவரி நடுப்பகுதியில், ஒரு நாளில் மட்டும் ஐம்பது இலட்சத்துக்கும் அதிகமானோர் ஐயப்பனைத் தரிசிக்கிறார்கள். அவ்வளவுபேரும், அங்கு குளிக்கிறார்கள். அதன் சுத்தத்தை என்னவென்பது?   

ஐயப்ப பக்தர்களுடன் பயணித்த பத்திரிகையாளர் ஒருவர், தனது அனுபவங்களைப் பின்வருமாறு பகர்கிறார். “தினம் ஒரு துணி உடுத்துமளவுக்கு, உடைகளை அதிகம் கொண்டுவர முடியாது. 

ஏனெனில், எல்லாவற்றையும் காவ முடியாது. இருமுடிக் கட்டு, அதனுடன் இரண்டு கறுப்பு உடைகள், ஒரு துண்டு அடங்கிய தோள் பை இவற்றுடன்தான் வருவார்கள்.  

பயணச் செலவைக் குறைக்க, போகிற இடங்களில் அறை எடுத்துத் தங்க மாட்டார்கள். ஒன்றில் பயணப்படும் வண்டியில் தூங்குவார்கள்; அல்லது வண்டி நிற்கும்போது, கிடைக்கிற இடங்களில் துண்டு விரித்துப் படுத்துக் கொள்வார்கள். அறை எடுக்காததால், துணிகளைச் சரியாகத் துவைத்து, உலர்த்த முடியாது.

ஊர் திரும்பும் வரை, இரண்டு கூட்டம் துணிகளையே, மாற்றி மாற்றி உடுப்பதால், பெரும்பாலும் அவை அழுக்கேறிக் காணப்படும். 48 நாள்கள், 60 நாள்கள் முடி வெட்டாமல், ஷவரம் செய்யாமல், தலை புதர் மண்டிக் காணப்படும். அறை வசதி இல்லாததால், காலைக் கடன் கழிப்பதற்கு, தண்ணீர் கிடைக்கிற இடங்களை எல்லாம் பயன்படுத்துகிறார்கள்.’  

ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால் பெண்களுக்கு அனுமதியில்லை  

பொதுவெளியில் வைக்கப்படும் இன்னொரு வாதம், ஐயப்பன் பிரம்மசாரி என்பதால், பெண்களைக் கோவிலுக்கு அனுமதிப்பதில்லை என்பதாகும். மூன்று விடயங்களை, இவ்விடத்தில் சொல்ல வேண்டும்.   

முதலாவது, “கடவுளாக இருந்தாலும் அவருக்கு, மனக் கட்டுப்பாடு குறைவு. எனவே, பெண்களே வராதீர்கள்” என்று, ஐயப்பனையே அவமதிக்கிறீர்கள்.   

 இரண்டாவதாக, ஐயப்பன் பிரம்மசாரியல்ல. அவர், இரண்டு திருமணம் செய்தவர். அவருக்குப் பூர்ணா, புஷ்கலா தேவி என இரு மனைவியர் உள்ளனர். அவர், தன் மனைவியருடன் கோவில்களில் அமர்ந்திருக்கிறார். பாலகனாகக் குளத்துப்புழையிலும் இளைஞராக புஷ்கலா தேவியுடன் ஆரியங்காவிலும், பூர்ணா, புஷ்கலா தேவியருடன் அச்சன் கோவிலிலும், துறவியாக சபரிமலையிலும் காட்சி தருகிறார்.   

எல்லோரையும் போல பாலகன், இளைஞன், நடுத்தர வயது முதலான பருவங்கள் ஐயப்பனுக்கும் இருந்திருக்கிறது. மனைவியருடன் வாழ்ந்துவிட்டு துறவறம் பூண்டிருக்கிறார்.   

இப்படி வீட்டை விட்டுக் காட்டுக்குப் போய்த் துறவறம் பூண்டவர்கள், துறவிகள் எனப்படுவார்களே ஒழிய, பிரம்மாசாரிகள் என்றல்ல. திருமணமே செய்து கொள்ளாமல், கடைசிவரை தனியாக இருப்பவர்களுக்குத் தான் பிரம்மசாரி என்று பெயர். 

எனவே, பெண்களை உள்ளே அனுமதிக்க மறுக்க, ஒரு காரணமாக மட்டுமே, ஐயப்பன் பிரம்மசாரி எனப்படுகிறது என்று கொள்ளலாமா?   

மூன்றாவதாக, இந்து மதத்தில் எல்லோரும் அறிந்த பிரம்மசாரி ஆஞ்சநேயர். அவருடைய கோவில்களில் பெண்கள் நிரம்பி வழிகிறார்கள். அவருக்குப் பக்தர்களை விடப் பக்தைகளே கூட. பிரம்மசாரியான ஆஞ்சநேயர் கோவிலுக்குப் பெண்களை அனுமதிக்கும் போது, ஏன் பிரம்மசாரி எனப்படும் ஐயப்பன் கோவிலுக்கு மட்டும், பெண்கள் போகக் கூடாது?   

மகரஜோதி 

சபரிமலை ஐயப்பன் கோவிலின் விசேடமே மகர சந்கராந்தியாகும். அன்று வானில் தோன்றும் ஒளிப்பிழம்பே, மகர ஜோதி எனப்படுகிறது. இது ஒவ்வோர் ஆண்டும், ஜனவரி 14ஆம் திகதி இரவு 6.30 மணியளவில் தோன்றுகிறது. ஐயப்பனே ஒளிப்பிளம்பாகக் காட்சி தருகிறார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக, ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு போகிறார்கள்.   

பொன்னம்பல மேட்டில் தோற்றும் ஒளிப்பிழம்பைப் பார்ப்பதற்காகக் கூடும் கூட்டத்தில், விபத்துகள் வழமையாகின. 2011ஆம் ஆண்டு மகரஜோதியைப் பார்ப்பதற்காகக் கூடிய, கூட்ட நெரிசலில் 105 பேர் உயிரிழந்தனர்.   

 இதைத் தொடர்ந்து, இவ்விடயம் பற்றி ஆராய, தமிழ்நாட்டின் ‘நக்கீரன்’ பத்திரிகையின் புலனாய்வுக் குழு, பொன்னம்பல மேட்டுக்குச் சென்றது. மகரஜோதியை, மனிதர்களே ஏற்றுகிறார்கள் என்பதை, கேரள பகுத்தறிவாளர் சங்க உறுப்பினர் பலமுறை சொல்லியும் அது கவனம் பெறவில்லை.   

அவ்வமைப்பின் செயற்பாட்டாளர் சுகுமாரன், அதை ஏற்றுபவர்களைப் பிடித்து பொலிஸாரிடம் கையளித்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று 1990களிலேயே சொல்லியிருக்கிறார். 

நக்கீரன் குழு, சுகுமாரனையும் அழைத்துக் கொண்டு, பொன்னம்பல மேட்டின் அடிவாரத்துக்குச் செல்கிறது. அங்கு வாழும் மலைவாழ் மக்களுடன் இது பற்றி உரையாட முனைந்தபோது, அவர்கள், அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்கள்.   

ஊடகவியலாளர்களுடன் தொடர்பு கொண்டால், பொலிஸ் தமக்குத் தர்ம அடி அடிக்கும் என, அவர்கள் அஞ்சுகிறார்கள். இவ்வாறு, நக்கீரன் குழு விக்கித்து நிற்கிறது.   

தற்செயலாக, அங்கு ஒரு முதியவரைச் சந்திக்கிறார்கள். அவருடைய பெயர் சிவலிங்கம். இலங்கையில் இருந்து அகதியாய் வந்து, நீண்டகாலமாக அப் பகுதியில் வசிப்பவர். அவர், துணிந்து உண்மையைச் சொல்லியிருக்கிறார். அவர் விவரித்தது பின்வருமாறு:   

“ஜனவரி 14ஆம் திகதி காலையில், பெரிய பெரிய அலுமினியப் பாத்திரங்களோடு, நாலஞ்சு ஜீப்ல, ஆளுக போவாங்க. பொன்னம்பல மேட்டு உச்சிக்குப் போய் தங்கிக்குவாங்க. மாலையில் அந்தப் பாத்திரங்கள்ல, கற்பூரக் கட்டிகளைப் போட்டு, நாலஞ்சு பேர் சேர்ந்து, கற்பூர ஒளி தெரியற அந்த அலுமினியப் பாத்திரத்தைத் தூக்கிப் பிடிப்பாங்க; அதுதான் மகர ஜோதி”.  

இதை நக்கீரன் குழு, நேரில் பார்த்தது. மேலதிக தகவல்களுக்கு, 2011 ஜனவரி 26-28 நக்கீரன் இதழைக் காண்க. 

அதேவேளை, 105 பேர் பலியான வழக்கில், “மகரஜோதி இயற்கையாகத் தோன்றுவதா, மனிதர்களால் ஏற்றப்படுவதா” என்று நீதிமன்றால் வினவப்பட்டது.   

இதற்குப் பதிலளித்த கோவிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, “வனத்துறை அதிகாரிகளும் கோவிலுக்குப் பொறுப்பாக இருக்கும் அறநெறித்துறை அதிகாரிகளும், பொலிஸும் கூட்டாகச் சேர்ந்து, கொளுத்தும் தீப்பந்தம் தான் மகரஜோதி” என்ற உண்மையை ஒப்புக் கொண்டார். ஆனால், சோகம் யாதெனில், இன்றும் மகரஜோதியாக, ஐயப்பன் தோன்றுகிறார் என்று சொல்லப்படுகிறது. மக்கள் அதை நம்புகிறார்கள்.   

பெண்களின் உரிமைக்கான போராட்டம்   

பெண்களின் சமவுரிமையை மதித்து, ஆண்-பெண் சமத்துவத்தை நிலைநிறுத்தப் பெரும் தடைகளாகப் பொருளாதார ஏற்றத்தாழ்வும் பண்பாட்டு வாழ்வியல் நடைமுறைகளும் உள்ளன. இத் தடைகள் நிலவுடைமை வழிவந்த, கருத்தியல் சிந்தனை நடைமுறைகளின் நீடிப்புகளாகும்.   

பெண்கள், பல்வேறு நிலைகளில், வெளிப்படையாகத் தெரியாத ஒடுக்குதல்களால் பிணைக்கப்பட்டுள்ளனர். அது, பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. 

அவ்வாறு வெளிப்படும் ஒன்றுதான், இப்போது சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பின் மீதான எதிர்வினையாகும்.  

 எனவே, பெண்கள் தங்கள் உரிமைகளுக்குத் தொடர்ந்தும் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதைத்தான், இத்தீர்ப்பைத் தொடர்ந்துள்ள செய்திகள் சொல்கின்றன.   

எமது சமூகத்தைச் சமத்துவத்தின் திசையிலும் ஜனநாயகத்தின் திசையிலும் நகர்த்தியாக வேண்டும். அதற்காகக் குரல்கொடுப்பதும் ஒன்றுபடுவதும் போராடுவதும் தவிர்க்கவியலாதது.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சபரிமலை-ஐயப்பன்-சர்ச்சை-பெண்ணுரிமைக்கு-வேட்டுவைத்தல்/91-223460

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் கோவில்களில் முக்கியமாக நல்லூர் முருகன் கோவிலுக்கு ஆண்கள் மேலாடை அணிந்து செல்லக்கூடாது என்பது ஐதீகம். 

இந்த நடைமுறை எப்போது வந்து என்று தெரியாது. சிலர் ஆறுமுக நாவலர் காலத்தியது என்பார்கள். அறுமுகத்தார் வாழ்ந்தது பிரிட்டிஷ் காலம்.

எனினும் இது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் புகையிலை பயிர் செய்கைக்காக, கேரளாவில் இருந்து குடியேற்றப்படட மலையாளிகள் மூலமாக வந்திருக்க வேண்டும்.

ஏனெனில் இந்த வழக்கம் கேரளத்தில் உண்டு. தமிழகத்தில் இல்லை. 

சட்டம் எதுவும் இல்லாவிடினும், தெய்வ பயமும், ஏனைய பக்தர்களினால், மேலாடை   நீக்குமாறு கோரப்படுவதனாலும் இந்த பழக்கம் இன்னும் உள்ளது.

ஐயப்பன் கோவிலில் உச்ச நீதிமன்றம் இந்த 10 - 50 வரை வயதான பெண்கள் போக தடை இல்லை என்று சட்ட தடை இல்லை என்று கூறினாலும், தெய்வ பயமும், ஏனைய பக்தர்களினால் விடுக்கக் கூடிய எச்சரிக்கையும் இது தொடர வழி வகுக்கும். 

ஆனாலும், வெளி நாட்டு பெண்கள், முக்கியமாக வெள்ளை,  இனி போகலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.