Jump to content

சூறாவளி மைக்கேல்: 'மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடியது' - அச்சத்தில் புளோரிடா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சில மணி நேரங்களில் கரையை கடக்கவுள்ள மைக்கேல் சூறாவளி மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மணிக்கு 130 மைல்கள் வேகத்தில் வீசும் இந்த புயல் இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்கவுள்ளது.

புளோரிடாவில் 3,70,000 பேருக்கும் அதிகமான மக்கள் அவர்களை இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மைக்கேல் சூறாவளியானது மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளியாக மாறியுள்ளதாக தனது அண்மைய அறிக்கையில் மியாமியை மையமாக கொண்ட தேசிய சூறாவளி மையம் (என்ஹெச்சி) தெரிவித்துள்ளது.

மிகவும் வேகமாக காற்று வீசும் என்றும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சூறாவளியாக உருவாகி இருப்பதாகவும் அந்த மையம் எச்சரித்துள்ளது.

கரையை கடக்கும்முன்பு இந்த சூறாவளி மேலும் வலுப்பெறும் என்று என்ஹெச்சி மையம் தெரிவித்துள்ளது.

சூறாவளி தொடர்பாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை மீறி, குறைந்த அளவு மக்களே தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிராந்தியத்தில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இந்த வாரம் மூடப்பட்டு உள்ளன.

இதே போல் அலபாமா மாகாணத்திலும் சூறாவளியை சமாளிக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ''வரவிருக்கும் சூறாவளியை சமாளிக்க நாங்கள் முழு அளவில் தயாராக உள்ளோம்'' என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-45808185

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளோரிடாவை நெருங்கும் மைக்கேல் புயல் – அவசர நிலை பிரகடனம்!

florida.jpg

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை நெருங்கும் மைக்கேல் புயல், மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய 4 ஆம் நிலைப் புயலாக வலுப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லாண்டிக்கில் உருவான இந்தப் புயல் புளோரிடாவில் இன்று (புதன்கிழமை) இன்னும் சில மணி நேரங்களில் கரையைக் கடக்கவுள்ளது.

வலு குறையாமல் கரையைக் கடக்கும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், 13 அடி வரை கடலில் அலைகள் எழுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதிக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

http://athavannews.com/புளோரிடாவை-நெருங்கும்-ம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத பலமே எமது பலம் என நினைக்கும் அமெரிக்காவிற்கு.......
இயற்கையின் அழிவு மிகப்பெரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளோரிடா மாகாணத்தில் மைக்கேல் சூறாவளியின் தாக்கம் – பல நகரங்கள் வெள்ளத்தில்– 13 பேர் பலி -நூற்றுக்கணக்கானோர் காயம்

October 11, 2018

1 Min Read

florida-2.jpg?resize=800%2C451

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இதுவரை வீசிய சூறாவளிகளில் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படும்; மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் அம்மாகாணத்தில் உள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கியதில் அதிசக்தி வாய்ந்ததாக தெரிவிக்கப்படும் இந்த சூறாவளியினால் ஏறிப்பட்ட மழை மற்றும் புயலில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 125 மைல்கள் வேகத்தில் வீசிய மைக்கேல் சூறாவளி நேற்று புதன்கிழமை; நகர்ந்து அலபாமா மற்றும் ஜோர்ஜியா மாகாணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் சேதத்தை உருவாக்கியுள்ள மைக்கேல் சூறாவளியால் ஏறக்குறைய 3 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பல இடங்களிலும் அதிகமான மரங்கள் வீதிகளில் தொடர்ச்சியாக விழுந்துவருவதால் மின்சார இணைப்புகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புளோரிடாவில் வசித்துவந்த 3,70,000 பேருக்கும் அதிகமான மக்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் குறைந்த அளவு மக்களே தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிஸிஸிப்பி மாகாணத்தில் 1969-ஆம் ஆண்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய கேமில் சூறாவளி மற்றும் புளோரிடாவில் 1935-ஆம் ஆண்டில் கரையை கடந்த லேபர் டே சூறாவளி ஆகியவை அமெரிக்க பெருநிலப்பரப்பில் பாதிப்பை ஏற்படுத்திய சக்திவாய்ந்த சூறாவளிகளாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

florida-3.jpg?zoom=3&resize=335%2C206florida.jpg?resize=800%2C451florida5.png?zoom=3&resize=335%2C263

 

http://globaltamilnews.net/2018/99038/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளோரிடாவில் மைக்கேல் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

04THSTATUEPAGE6-1.jpg

அமெரிக்காவின் புளோரிடா மாகாணனத்தில் ஏற்பட்ட மைக்கேல் புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த புதன்கிழமை மணிக்கு 250 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய 4 ஆம் வகை புயலான மைக்கேல், கரையோரத்தில் இருந்த பெரும்பாலான வீடுகள், கடைகளை தரைமட்டம் ஆக்கியது.

இந்நிலையில், மோப்ப நாய் உதவியுடன் சடலங்களைத் தேடும் பணிகள் நடைபெறும் நிலையில், 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் தங்கள் உறவுகளையும், வீடுகளையும், சேமிப்புக்களையும் இழந்து தவித்து வருகின்றனர்.

இடிபாடுகளை அகற்றி சடலங்களைத் தேடும் பணிகள் நடைபெறுகின்றன. பலரைக் காணவில்லை என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மீட்பு, நிவாரணப் பணிகளை பென்டகன் இராணுவ உலங்கு வானூர்திகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அடுத்த வரம் சென்று பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

http://athavannews.com/புளோரிடாவில்-மைக்கேல்-பு/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.