Sign in to follow this  
கிருபன்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர்கள் முதலிடம் – இலங்கை வீரர்கள்?

Recommended Posts

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீரர்கள் முதலிடம் – இலங்கை வீரர்கள்?

sports050.jpg

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளனர்.

அதேபோல, தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளரான றபாடா 3 இடங்கள் முன்னேறி 6 ஆவது இடத்தையும், தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 3 இடங்கள் ஏற்றம் கண்டு 7ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

தென்னாபிரிக்கா – சிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் முடிவின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

இதன்படி, துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி (884 புள்ளிகள்), ரோஹித் சர்மா (842 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (818 புள்ளிகள்), அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் (803 புள்ளிகள்), இந்திய அணியின் ஷிகர் தவான் (802 புள்ளிகள்), பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (798 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் ரொஸ் டெய்லர் (785 புள்ளிகள்) ஆகியோர் முறையே மாற்றமின்றி 1 முதல் 7 இடங்களில் நீடிக்கின்றனர்.

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் (778 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 8ஆவது இடத்தையும், தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி கொக் (769 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கியும், இங்கிலாந்து வீரர் ஜோனி பேர்ஸ்டோ (769 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறியும் 9ஆவது இடத்தை பகிர்ந்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் எந்தவொரு இலங்கை வீரரும் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. எனினும், அஞ்செலோ மத்தியூஸ் 26ஆவது இடத்திலும், நிரோஷன் திக்வெல்ல 36ஆவது இடத்திலும், உபுல் தரங்க 41ஆவது இடத்திலும் உள்ளனர்.

 

http://athavannews.com/ஒருநாள்-கிரிக்கெட்-தரவரி/

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this