Jump to content

முத்தம் கொடுப்பது பாலியல் துன்புறுத்தலா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் கொடுப்பது பாலியல் துன்புறுத்தலா?

சமூக ஊடகங்களில் #MeToo என்ற ஹேஷ்டேகில் இந்திய பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றி எழுதி வருகின்றனர். உண்மையில் பாலியல் துன்புறுத்தல் என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

#MeToo- 'நானும் கூட' என்ற சர்வதேச இயக்கத்தில் இந்தியப் பெண்களும் இணைந்திருக்கின்றனர். பாலியல் வன்முறைகள் என்பது எவ்வளவு பரவலாக இருக்கிறது என்பதை பதிவு செய்யும் இயக்கம் இது.

இதில் பாலியல் உறுப்புகளின் புகைப்படங்களை அனுப்புவது, வார்த்தைகளால் பாலியல் தொந்தரவு செய்வது, பாலியல் தொடர்பான விஷயங்களை நகைச்சுவை என்ற பெயரில் பேசுவது, தேவையில்லாமல் நெருக்கமாக வருவது, தொடுவது என பலவிதமான பாலியல் ரீதியான சீண்டல்கள் பகிரப்படுகின்றன.

இருந்தாலும், இன்னும் பல பெண்கள் தங்கள் அனுபவங்களையும், வலிகளையும் பதிவு செய்யவில்லை. பாலியல் வன்முறைகளை அதிகபட்சம் தங்கள் தோழிகளிடம் மட்டும் பகிர்ந்துக் கொண்டு அத்துடனே முடித்துக் கொள்கிறார்கள்.

#MeToo போன்ற இயக்கங்கள் தொடங்கப்பட்டாலும், அதில் கருத்துகளை பதிவிடும் பெண்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருக்கும். இந்த கனமான மெளனத்திற்கு காரணம் பெண்களின் அச்சமே.

ஆண்களிடம் இதுபற்றி ஒருவித சங்கடமான நிலை நிலவுகிறது. ஊடகங்களில் சரியான மற்றும் தவறான நடத்தைகள் பற்றிய விவாதங்களும் தொடர்கின்றன.

பணியிடங்களில் ஒன்றாக வேலை செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரஸ்பரம் ஏற்படும் உறவு நட்பாக இருந்தாலும், 'பாலியல்' உறவாக மாறியிருந்தாலும் அது துன்புறுத்தல் இல்லை என்பதுதான் இந்த முழு விவாதத்தின் மையம்.

இங்கு முக்கியத்துவம் பெறுவது விருப்பம் அல்லது ஒப்புதல் என்பதன் அடிப்படையில் உள்ளது. பெண்களின் விருப்பத்தையும், ஆசையையும் சொல்லும் சுதந்திரம் பெண்ணுக்கு நமது இருக்கிறதா என்பது வேறு விஷயம். இதைப் பற்றி பிறகு பேசுவோம்.

எவற்றை பாலியல் துன்புறுத்தல் என்று சொல்லலாம்?

பெண்ணின் சம்மதத்துடன் சொல்லப்படும் நகைச்சுவையோ, பாராட்டுகளோ, அதில் பயன்படுத்தப்படும் பாலியல் பொருள் தொனிக்கும் வார்த்தைகளோ பிரச்சனையாக கருதப்படாது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஒருவருடன் நெருக்கமாக நின்று கைகளை குலுக்குவது, தோளில் கை வைத்து பேசுவது, வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக லேசாக கட்டியணைப்பது, அலுவலகத்திற்கு வெளியில் தேநீர், காபி அல்லது மது அருந்துவது எல்லாம் பரஸ்பர ஒப்புதலுடன் நடந்தால் அதில் தவறு இல்லை.

பணியிடத்தில் ஒரு ஆண், பெண் ஒருவரால் ஈர்க்கப்படுவது இயல்பானது. அப்படி ஈர்க்கப்பட்டால், அந்த ஆண், தன்னுடைய சக பணியாளருக்கு அதை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிப்பார்.

அந்த பெண்ணுக்கு அது பிடிக்கவில்லை என்றால், 'பாலியல்' ரீதியாக தொடுவது பிடிக்கவில்லை என்பதை நேரிடையாகவோ, நாசூக்காகவோ தெரிவித்த பிறகும் அந்த ஆணின் நடத்தை மாற்றாவிட்டால், அது பாலியல் துன்புறுத்தல் என்று வகைப்படுத்தலாம்.

ஆனால், அந்த பெண், குறிப்பிட்ட அந்த ஆணின் செய்கைகளை விரும்பினாலும், அதற்கு ஏற்றாற்போல் நடந்துக் கொண்டலும், முத்தம் அல்லது உடலுறவை விரும்பினாலும், அது வயதுவந்த இருவர்களிடைலான உறவு என்பதால் அதை பாலியல் துன்புறுத்தலாக கருதமுடியாது.

அந்த பெண்மணியின் அனுமதியின்றியோ, அவர் நிராகரித்தாலும், ஆண் தனது முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்தால், அது பாலியல் துன்புறுத்தலாகும்.

மறுக்கும் உரிமை எப்போதும் உண்டா?

சமூக ஊடகங்களில் #MeToo மூலமாக பெண்கள் எழுதும் சம்பவங்களைப் பார்க்கும்போது, பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆணை தடுக்கவோ அல்லது அவருக்கு எதிராக புகார் கொடுக்கவோ உரிமை இல்லாத நிலையோதான் தென்படுகிறது.

உதாரணமாக, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் ஆண், பாதிக்கப்படும் பெண்ணின் உயரதிகாரியாக இருக்கும்போது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வேறு விதங்களில் தொல்லை கொடுக்கலாம். அது தனது வேலைக்கே உலை வைக்கலாம் என்றோ, தனது முன்னேற்றம் பாதிக்கப்படும் அல்லது குடும்பத்தில் தெரிந்தால் பிரச்சனை வரும் என்பதாலோ சகித்துக் கொண்டு போக வேண்டிய சூழல் ஏற்படலாம்.

உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டாலும், அனுமதி கொடுக்கும் உரிமையை அந்தப் பெண் இழக்கிறாள்.

ஒப்புதல் கொடுப்பது என்பது, வாய்மொழியாகவோ அல்லது சைகைகளாலோ தெரிவிக்க வேண்டும். இதற்கான பொறுப்பு அந்த பெண்ணுக்கு எந்த அளவுக்கு உண்டோ அதே அளவுக்கு ஆணுக்கும் உண்டு.

அளவுக்கு மீறிய மது போதையில் இருந்தால், ஆணுக்கு அனுமதி கேட்க தோன்றாது, பெண்ணும் எதையும் சொல்லும் நிலையில் இருக்கமாட்டார்.

பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்காக நம்மிடம் இரண்டு சட்டங்கள் உள்ளன. அதில் ஒன்று 2013ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.

முந்தைய சட்டத்தின் கீழ், 'மறுப்பு தெரிவித்தபோதும், ஒருவரை தொடுவது, தொட முயற்சிப்பது, பாலியல் உறவுக்கு அழைப்பு விடுப்பது, பாலியல் ரீதியாக தூண்டும் வார்த்தைகளை பேசுவது, ஆபாசப் படங்களை காண்பிப்பது அல்லது சம்மதம் இல்லாமல் பாலியல் ரீதியாக வல்லுறவு செய்வது ஆகியவை பாலியல் துன்புறுத்தல் என்று கருதப்படும்'.

இரண்டாவது சட்டம், பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம். இது 2013ல் நிறைவேற்றப்பட்டது.

1997-ம் ஆண்டில் விசாகா வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றமானது பணியிடத்தில் பாலியல் வன்முறை என்பது மனித உரிமைமீறல் நடவடிக்கையாகும் என்பதனை முதல் முறையாக ஏற்றுக் கொண்டது.

முத்தம் கொடுப்பது பாலியல் துன்புறுத்தலா?படத்தின் காப்புரிமை iStock

இவ்வழக்கில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

பாலியல் துன்புறுத்தலுக்கான வரையறை ஒரேமாதிரியாக இருக்கிறது, ஆனால் அது நடைபெற்ற இடமும் சூழலும் வேலையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

அதாவது, சம்பவம் அலுவலகத்தில் நடந்ததாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அலுவலக வேலைக்காக வெளியில் செல்லும்போது, பயணம் செல்லும் வழியில், கூட்டத்தில் கலந்துக் கொள்ள செல்லும்போது அல்லது வீட்டில் ஒன்றாக அமர்ந்து வேலை செய்யும் சந்தர்பம் ஏற்பட்டால் அப்போது ஆகிய சூழ்நிலைகளும் இதில் அடங்கும். அரசு, தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.

இரண்டாவது வித்தியாசம் என்னவென்றால், பெண்கள் தாங்கள் அந்த இடத்தில் பணி புரிந்துக் கொண்டே, புகார் அளித்து, தவறு செய்தவருக்கு தண்டனை வழங்கலாம்.

அதாவது, சிறை மற்றும் காவல்துறை போன்ற கடுமையான நடைமுறைகளில் இருந்து விலகி, பணிச்சூழலையும், உண்மையான நிலையையும் அறிந்தவர்கள் இடையே விவகாரம் அலசப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைவில் நியாயம் வழங்கும் ஒரு சுலபமான வழி இது.

பாலியல் துன்புறுத்தல் நடந்தது என்பதை முடிவு செய்வது யார்?

பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிப்பதற்காக ஒரு பெண்ணின் தலைமையில் குழு ஒன்றை நிறுவனங்கள் அமைக்க வேண்டும் என்று இந்த சட்டம் அறிவுறுத்துகிறது.

குழுவின் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கவேண்டும். பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறை தொடர்பாக பணியாற்றும் அரசு சாரா அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவரும் அந்தக் குழுவில் இடம்பெறவேண்டும்.

முத்தம் கொடுப்பது பாலியல் துன்புறுத்தலா?படத்தின் காப்புரிமை iStock

பத்து பேருக்கு குறைவானவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் அல்லது உரிமையாளருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டால், அது மாவட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ள 'உள்ளூர் புகார்கள் குழு' வால் விசாரிக்கப்படும்.

எந்தக் குழுவிடம் புகார் சென்றாலும், அது இரு தரப்பினரின் வாதத்தையும் கேட்டு, புகாரில் உள்ள உண்மைத் தன்மை பற்றி முடிவெடுக்கும்.

புகார் உண்மையானது என்று முடிவு செய்யப்பட்டால், புகாருக்கு உள்ளானவர் வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதுடன், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடும் வழங்கவேண்டும்.

புகாரை காவல்துறைக்கு கொண்டு செல்லலாம் என்று புகாரளித்தவருக்கு தோன்றினால் அது குறித்து அவர் முன்னெடுக்கலாம்.

ஆனால், புகார் தவறானது என்று முடிவு செய்ய்யப்பட்டால், நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, புகாரளித்தவருக்கு பொருத்தமான தண்டனை வழங்கப்படும்.

p06c66y3.jpg

பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா இடம்பெற்றதேன்?

https://www.bbc.com/tamil/india-45790172

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கு மேல் அடிஅடித்தால்த் தான் அம்மியும் நகரும ; என்கிறார்கள் அதைத் தான் சிலர் மேற்கொள்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்குத் தேவையான தகவல் பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுப.சோமசுந்தரம் said:

மக்களுக்குத் தேவையான தகவல் பதிவு.

சுப. சோமசுந்தரம் ஐயா பகிடியாக சொன்னாலும், 
இப்படியான செய்திகளை,  வாசிக்க என்றே... யாழ். களத்தில்  ஒரு கூட்டம்   இருக்கிறார்கள். :grin:
அந்தக்  கூட்டத்தில் நான் இல்லை,  ஐயா. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுப.சோமசுந்தரம் said:

மக்களுக்குத் தேவையான தகவல் பதிவு.

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் அகப்பட்ட்து போல் 
அல்லது அதிலும் விட மோசமான நிலையில் சிரியாவின் 
எல்லைகளில் வாழ்ந்த குர்திஸ் மக்கள் ஆக்கப்பட்டார்கள் 
ஐஸ்ஸ் தீவரவாதிகள் பெண்களை பிடித்து பாலியல் அடிமைகள் ஆக்கி 
மிக கொடூர சித்திரவதைகளை செய்தார்கள் ....
இதெல்லாம் நடக்கும்போது எத்தனை தமிழர்கள் ஆக கூடி 
அங்கே என்ன நடக்கிறது என்றாவது தெரிய முயர்ச்சித்தார்கள் ??

பக்கத்து  வீடு எரியும்போது கூட தனது வேலையை பார்க்கும் 
ஒரு ஜடமாக இந்த இயந்திர உலகு மனிதர்களை மாற்றிக்கொண்டு 
இருக்கிறது. எல்லாம் தனக்கு தனக்கு என்று வரும்போது மட்டுமே முழிக்கிறது 
அப்போது இவர்களைப்போல ... இவர்களையும் பார்க்கவோ என்ன என்று கேட்கவோ 
யாரும் இருக்க போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் காலமாக இவை நடப்பது. அதேபோல் பெண்களும் இவ்வாறு நடப்பதற்கு தாமே காரணமாகின்றார்கள்.

நாகரீகம் என்னும் பெயரில் கிம் கடார்சியன் போல உடையணிவது, அங்கங்களை ஆண்களின் பாலியல் உணர்ச்சியை தூண்டுமாறு வெளிக்காட்டுவது போன்றன தவிர்க்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

காலம் காலமாக இவை நடப்பது. அதேபோல் பெண்களும் இவ்வாறு நடப்பதற்கு தாமே காரணமாகின்றார்கள்.

நாகரீகம் என்னும் பெயரில் கிம் கடார்சியன் போல உடையணிவது, அங்கங்களை ஆண்களின் பாலியல் உணர்ச்சியை தூண்டுமாறு வெளிக்காட்டுவது போன்றன தவிர்க்கப்பட வேண்டும்.

ஆண்கள் மட்டும் இடுப்பில் ஒரு துணி தவிர நிர்வாணமாக கோவிலுக்கு போய் பெண்களின் பாலியல் உணர்ச்சியை தூண்டிவிட்டு பெண்கள் அதற்கு பதில் அளிப்பது போல உடை அணிந்தவுடன் எங்களுக்கு பாலியல் உணர்ச்சி வந்துவிட்டது என்று வன்முறை செய்யலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது ஒருத்தர் பல்வலியுடன் இருக்கும்போது பலாத்காரமாக முத்தமிடுவதும் கூட பாலியல் துன்புறுத்தல்தான்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

ஆண்கள் மட்டும் இடுப்பில் ஒரு துணி தவிர நிர்வாணமாக கோவிலுக்கு போய் பெண்களின் பாலியல் உணர்ச்சியை தூண்டிவிட்டு பெண்கள் அதற்கு பதில் அளிப்பது போல உடை அணிந்தவுடன் எங்களுக்கு பாலியல் உணர்ச்சி வந்துவிட்டது என்று வன்முறை செய்யலாமா?

அதுக்கென்ன செய்யட்டன் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

யாராவது ஒருத்தர் பல்வலியுடன் இருக்கும்போது பலாத்காரமாக முத்தமிடுவதும் கூட பாலியல் துன்புறுத்தல்தான்....!  tw_blush:

கடிச்சி வைக்கமாட்டாங்களா ஒரு சின்ன டவுட்டு பாருங்க :90_wave:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

ஆண்கள் மட்டும் இடுப்பில் ஒரு துணி தவிர நிர்வாணமாக கோவிலுக்கு போய் பெண்களின் பாலியல் உணர்ச்சியை தூண்டிவிட்டு பெண்கள் அதற்கு பதில் அளிப்பது போல உடை அணிந்தவுடன் எங்களுக்கு பாலியல் உணர்ச்சி வந்துவிட்டது என்று வன்முறை செய்யலாமா?

உங்களின் கருத்து தவறானது என்று பொருள் இல்லை ...........
இருந்தும் இயற்கையாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்ச்சி தூண்டுதல் 
என்பது வேறுபட்டு இருக்கிறது ... அதில் செயற்கையும் சேர்ந்து சினிமா ... இலக்கிய கதைகள் ..
கவிதைகள் ...... கோவில் சிற்பங்கள் என்று. ஒரு பெண்ணின் அழகை ரசிப்பதும் 
ஆதலால் உணர்வு தூண்ட படுவதும் ..... அதனாலேயே பெண்கள் அழகை ஆயுதமாக்கி 
மணிக்கணக்கில் செலவு செய்து தம்மை அழகு படுத்தி ... ஆண்களை தாக்குவதும் 
காலம் காலமாக நடந்து வருகிறது. 

பெண்கள் பொதுவாகவே உரசலில்லும்  தீண்டலிலுமே உணர்ச்சி தூண்டலுக்கு ஆளாகிறார்கள் 
அவர்கள் உணர்ச்சி தூண்டுதல் என்பது இயற்கையாகவே அப்படி ஆகியிருக்கிறது 

இது மனிதர்களில் மட்டுமல்ல பறவைகள் .... விலங்குகள் என்று அங்கும் 
தனது துணையை தேர்ந்தெடுக்கும் முடிவு பெண்ணிடமும் ... அழகு கவர்ச்சிக்கு 
மயங்கி பின்னால் திரிவது ஆணுக்கும் என்று இருக்கிறது. இதில் ஒரு நன்மை யாதெனில் 
பெண் விலங்குகள் ... பெண் பறவைகள்  வீரியமான ஆணை தேர்வு செய்துகொள்கின்றன 
ஆதலால் அவர்கள் இனப்பெருக்கம் என்பது ஆரோக்கியமானதாக இருக்கிறது.

பெண்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்து அவர்கள் சுதந்திரமாக செக்ஸ் பற்றி பேசி 
குறித்தே எழுதிவிடுகிறேன் ..... உன்னால் எவ்ளவு நேரம் நீடிக்க முடியும்? போன்ற கேள்விகளை 
நேரிடையாகவே கேட்டு உறவு கொள்ள வசதி இருந்தால் ..... ஆண்கள் தமது ஆண்மையை பேணுவதிலும் 
பெண்களை கவர்ந்துகொள்ள உடலமைப்பை காப்பதிலும் கொஞ்சம் அக்கறை கொள்ளவார்கள் 

திருமணத்தை விபச்சரம் ஆக்கிய எமது மூதையார்கள் மேல் நிறைய குற்றம் உண்டு அவர்கள் 
உடல் பலத்தை உபோயோகித்து தந்திரமாக தலைவர் அரசர் ஆட்ச்சியாளர்கள்  கோவில் குருக்கள் 
என்று ஆண்களே சமூகத்தை கட்டமைக்கும் முடிவுகளை எடுத்து ... யாரை கை காட்டுகிறார்களோ 
அவர்களுக்கு கழுத்தை நீட்டுவது பெண்கள் கடமை எனும் தோரணையை உண்டு பண்ணி விட்டார்கள்.

பிற்காலத்தில் சமூக பொருளாதார நெருக்கடி வந்ததால் அதாவது பொது என்பது இல்லாமல் 
போய் தனியார் நிலங்களை சொந்தமாக்குவதும் அரசுகள் மிகுதியை சொந்தமாக்குவதும் என்று ஆனபின் 
விபச்சார திருமணத்தில் பெண்கள் பக்கம் பொருள் இழப்பை சந்திக்க நேர்ந்ததால் 
பெண் சிசுவை  கருக்கலைப்பு இறந்த பின் கொலை என்று இந்தியாவை பொறுத்தவரை ஆண்கள் 
தொகையை பெண்ணிலும் கூடுதலாக ஆக்கிவிட்டார்கள். 

இதன் பிரதி பலனைத்தான் இப்போ இந்தியாவில் அனுபவிக்கிறார்கள் இந்தியாவிலும் சீனாவிலும் 
எல்லா ஆண்களுக்கும் பெண்கள் இல்லை .......... எப்படியோ 15-20 % ஆண்கள் எல்லா மட்டத்திலும் 
பள்ளியிலும் சரி ...... வேலை காலத்திலும் சரி ... திருமண காலத்திலும் சரி பெண் வாசனை இல்லாமல் 
போகும் அதே நேரம் ............ உலகமயமாதல் ...... இன்டெர்நெட் ...... நுகர்வு சந்தையின் சூழ்ச்சிகள் 
என்பன பெண்களை மேலும் கவர்ச்சி பொம்பமைகளாக ஆக்கி வீதிகளில் நடமாட விட்டிருக்கிறது 
இதனால் ...... எல்லாவற்றையும் அடக்கி வைத்திருந்து வீட்டில் கொண்டுபோய் மனைவி காதலியிடம் 
கொட்டி விடுகிறார்கள் பலர் ........ முடியாதவர்கள் வீதியிலும் பஸ்களிலும் கையை பிடித்து இழுக்கிறார்கள். 

எங்களை போல ஒரு சிலர் சைவ சிர்த்தாந்தம் போன்றவற்றை படித்து 
ஓம் நமச்சிவாய!
என்று ஓதி சிவபெருமானின் துணையுடன் வீதிகளை கடந்து செல்கிறோம். 

Link to comment
Share on other sites

9 hours ago, colomban said:

காலம் காலமாக இவை நடப்பது. அதேபோல் பெண்களும் இவ்வாறு நடப்பதற்கு தாமே காரணமாகின்றார்கள்.

நாகரீகம் என்னும் பெயரில் கிம் கடார்சியன் போல உடையணிவது, அங்கங்களை ஆண்களின் பாலியல் உணர்ச்சியை தூண்டுமாறு வெளிக்காட்டுவது போன்றன தவிர்க்கப்பட வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான நாகரீக உடைகளை அணிகிறார்கள்.  அவர்கள் நள்ளிரவு நேரங்களில்  கூட பாதுகாப்பாக நடமாடுவதை பார்திருக்கிறேன் . ஆனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இவாறான  உடைகளை பெண்கள் அணியும் போது மட்டும் அங்குள்ள ஆண்களால் உணர்சியை கட்டுப்படுத்த முடிவதில்லை. பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பெண்களின் உடைகள் மீது பழி போடுகிறார்களே ஏன்? அங்குள்ள ஆண்களில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? 

பொதுவாக பெண்களை தாயாக பார்கிறோம், தெய்வமாக பார்கிறோம் என்று மேடைகளில் மைக் முன்னால் பீலா விடும் நாடுகளில் தான் பாலியல் துன்புறுத்தல் அதிகமாக உள்ளது. பெண்களை தாயாகவோ, தெய்வமாகவோ பாரக்க வேண்டாம் சக தோழியாக. சிறந்த நண்பியாக பார்ததால் பாலியல் துன்புறுத்தல் நடக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

பொதுவாக பெண்களை தாயாக பார்கிறோம், தெய்வமாக பார்கிறோம் என்று மேடைகளில் மைக் முன்னால் பீலா விடும் நாடுகளில் தான் பாலியல் துன்புறுத்தல் அதிகமாக உள்ளது. 

உண்மையில் ஆண்களில் பிரச்சனை இருக்கிறது 
இது சுற்றம் சூலால் உருவாகும் பிரச்சனை 

எனது சொந்த அனுபவமே வித்தியாசமானது 
ஊரில் வாழும்போது காதல் உணர்வு கொஞ்சம் இருந்தாலும் 
சொந்த உறவுகள் ..... தெரிந்த முகம்கள் ...... கோவில் பக்தி என்பன 
காமம் சம்மந்தமான எந்த தூண்டுதலையும் செய்ததில்லை 

வெளிப்படையாகவே எழுதிவிடுகிறேன் சுய இன்பம் என்ற ஒன்று இருக்கும் என்ற 
எண்ணமே இருக்கவில்லை பகிடியாக பேசுகிறோம் என்றுதான் எண்ணி இருந்தேன் 
இளைஞர்கள் எங்களுக்குள் அதை இதை பேசுவது உண்டு ஆனாலும் யாரும் அவ்வாறு 
நடந்துகொள்ளவார்கள் என்று கூட எண்ணுவதில்லை. மாதத்தில் ஒருமுறையாவது ஒரு கெட்ட 
கனவு வரும் .... அப்பவெல்லாம் நதியா ராதா அம்பிகா யாராவது வருவார்கள் உறக்கத்திலேயே 
சாரம் ஈரம் ஆகிவிடும் அவளவுதான்.

கொழும்புக்கு வந்து வெள்ளவத்தை கடற்கரையோரம் போகும்போது 
கட்டி பிடித்து கொண்டு இருப்பார்கள்  .... ஒரே கச மூஸா வாகவே இருக்கும் 
இது உடல் உணர்ச்சி ரீதியாக எனக்கு பாரிய மாற்றத்தினை உன்டுபண்ணியது 
காமம் என்பது தலை தூக்குவதும் ... அதனோடு போராடுவதும் 
கொழும்பில் உள்ள கோவில் எல்லாம் போவதும் என்று ஆகியது. 
சின்ன வயதிலேயே எமது சமூகம் எம்மை நல் ஒழுக்கத்தோடு வளர்த்ததால் 
கேடான விடயங்களை ஒருபோதும் நாடுவதில்லை ........ பொதுவாக யாழில் 
இருந்து புதுசாக கொழும்பு வரும் எல்லா பதின்ம வயது இளைஞர்களுக்கும் 
உண்டாகி இருக்க கூடிய ஒரு உணர்வு மாற்றம் என்றுதான் அறிந்து இருக்கிறேன். 

எமது ஊரில் ஒரு பெண் திடீரென லெக்கின்ஸ் அணிந்தால் 
அங்கிருக்கும் இளைஞர்கள் மட்டத்தில் ஒரு பாரிய தூண்டுதலை 
உண்டுபண்ணும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
இதை இல்லை என்று வாதிடுவது ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருக்கும் என்றும் நான் எண்ணவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

See the source image

See the source image

aunty1448.jpg

இவைகள் சாதாரணமாகி போகலாம் ........
ஆனால் கால அவகாசம் தேவை என்பதும் 

எல்லா வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பதையும் 
மறுப்பதில் என்ன உண்மை இருக்க போகிறது?

Link to comment
Share on other sites

2 minutes ago, Maruthankerny said:

உண்மையில் ஆண்களில் பிரச்சனை இருக்கிறது 
இது சுற்றம் சூலால் உருவாகும் பிரச்சனை 

எனது சொந்த அனுபவமே வித்தியாசமானது 
ஊரில் வாழும்போது காதல் உணர்வு கொஞ்சம் இருந்தாலும் 
சொந்த உறவுகள் ..... தெரிந்த முகம்கள் ...... கோவில் பக்தி என்பன 
காமம் சம்மந்தமான எந்த தூண்டுதலையும் செய்ததில்லை 

வெளிப்படையாகவே எழுதிவிடுகிறேன் சுய இன்பம் என்ற ஒன்று இருக்கும் என்ற 
எண்ணமே இருக்கவில்லை பகிடியாக பேசுகிறோம் என்றுதான் எண்ணி இருந்தேன் 
இளைஞர்கள் எங்களுக்குள் அதை இதை பேசுவது உண்டு ஆனாலும் யாரும் அவ்வாறு 
நடந்துகொள்ளவார்கள் என்று கூட எண்ணுவதில்லை. மாதத்தில் ஒருமுறையாவது ஒரு கெட்ட 
கனவு வரும் .... அப்பவெல்லாம் நதியா ராதா அம்பிகா யாராவது வருவார்கள் உறக்கத்திலேயே 
சாரம் ஈரம் ஆகிவிடும் அவளவுதான்.

கொழும்புக்கு வந்து வெள்ளவத்தை கடற்கரையோரம் போகும்போது 
கட்டி பிடித்து கொண்டு இருப்பார்கள்  .... ஒரே கச மூஸா வாகவே இருக்கும் 
இது உடல் உணர்ச்சி ரீதியாக எனக்கு பாரிய மாற்றத்தினை உன்டுபண்ணியது 
காமம் என்பது தலை தூக்குவதும் ... அதனோடு போராடுவதும் 
கொழும்பில் உள்ள கோவில் எல்லாம் போவதும் என்று ஆகியது. 
சின்ன வயதிலேயே எமது சமூகம் எம்மை நல் ஒழுக்கத்தோடு வளர்த்ததால் 
கேடான விடயங்களை ஒருபோதும் நாடுவதில்லை ........ பொதுவாக யாழில் 
இருந்து புதுசாக கொழும்பு வரும் எல்லா பதின்ம வயது இளைஞர்களுக்கும் 
உண்டாகி இருக்க கூடிய ஒரு உணர்வு மாற்றம் என்றுதான் அறிந்து இருக்கிறேன். 

எனது பார்வை வேறானது. சிறு வயதில் இருந்தே ஆண்பிள்ளைகளையும். பெண்பிள்ளைகளையும் சகஜமாக பழக விட வேண்டும். கடுமையான  பத்தாம்பசலி கலாச்சார கட்டுப்பாடுகள் தளர்ததப பட வேண்டும். அப்படியே அவரகளுக்குள் காதல் ஏற்பட்டால் அதை சகஜமாக அங்கீகரிக்க வேண்டும்.

  இங்கு ஐரோப்பாவில் வாழும் எனது  பெண்பிள்ளைகள் தமது சக வகுப்பு தோழனை கண்டால்  கட்டியணைத்து தமது நட்பை பகிர்தது கொள்கிறார்கள். அது எந்த தப்பான எண்ணத்திலும் இல்லை எனபதை நாமே பார்ககிறோம். இவ்வாறாக  இயலபாக பழும் பென் ஆண்பிள்ளைகள் பரஸபரம் ஒருவரை ஒருவர் மதிக்க கற்றுக் கொள்ளைகிறார்கள் 

ஆனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வயதுவந்த பிள்ளைகளை இயல்பாக பழக விடாத தன்மை இன்றும் தொடரவதை அங்கு சென்றபோது அவதானிக்க முடிந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, tulpen said:

ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான நாகரீக உடைகளை அணிகிறார்கள்.  அவர்கள் நள்ளிரவு நேரங்களில்  கூட பாதுகாப்பாக நடமாடுவதை பார்திருக்கிறேன் . ஆனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இவாறான  உடைகளை பெண்கள் அணியும் போது மட்டும் அங்குள்ள ஆண்களால் உணர்சியை கட்டுப்படுத்த முடிவதில்லை. பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பெண்களின் உடைகள் மீது பழி போடுகிறார்களே ஏன்? அங்குள்ள ஆண்களில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? 

பொதுவாக பெண்களை தாயாக பார்கிறோம், தெய்வமாக பார்கிறோம் என்று மேடைகளில் மைக் முன்னால் பீலா விடும் நாடுகளில் தான் பாலியல் துன்புறுத்தல் அதிகமாக உள்ளது. 

 பெண்கள் தாயாகவும் .... தெய்வமாகவும் இருந்ததால் 
அப்படி ஒரு உணர்வு எமக்கும் இருந்துதானே?

திடிரென காமாட்ச்சி ஆகவும் கிம் கார்டாஸ்யன் ஆகவும் ஆனால் 
நாம் என்ன செய்யமுடியும்?

அவர்களையும் வணங்குகிறோம் 
பூஜைகளை அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்ய விரும்புகிறோம். 
அதனால் அர்ஜனை தட்டுகளில் எண்ணெய் ....தேன்.... ஆணுறை என்று 
கொஞ்ச பொருட்களை கூடுதலாக சேர்க்க வேண்டி வந்துவிட்ட்து. 

Link to comment
Share on other sites

5 minutes ago, Maruthankerny said:

See the source image

See the source image

aunty1448.jpg

இவைகள் சாதாரணமாகி போகலாம் ........
ஆனால் கால அவகாசம் தேவை என்பதும் 

எல்லா வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பதையும் 
மறுப்பதில் என்ன உண்மை இருக்க போகிறது?

இங்கு வளரும் எமது பெண்பிள்ளைகள் இவ்வாறான உடைகளுடன் தான் வெளியில. செலகிறார்கள். அவர்களுக்கு இங்கு அவர்களுடன் ஒன்றாக வளரும் ஆண்பிள்ளைகளால் பிரச்சனை எதுவும் வரவல்லை என்பது ஜதார்த்தம். அதற்கு காரணம் அவர்கள் சகஜமாக பழகி ஓருவரை ஒருவர் மதித்து வாழ்வதே(சில விதிவிலக்குகள. இருக்கலாம்) அதே போல் எமது நாடுகளிலும் இயல்பாக பழக அனுமதிக்க வேண்டும். ஜ போன் x மட்டும் ஐரோப்பாவில வெளியான உடனே வேண்டும். இவ்வாறான நல்ல பழக்கங்களை கற்று கொள்வதற்கு மட்டும் பணபாடு விழுமியம் என்ற போலி வாழ்க்கை முறையால் ஏற்படும் தயக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

எனது பார்வை வேறானது. சிறு வயதில் இருந்தே ஆண்பிள்ளைகளையும். பெண்பிள்ளைகளையும் சகஜமாக பழக விட வேண்டும். கடுமையான  பத்தாம்பசலி கலாச்சார கட்டுப்பாடுகள் தளர்ததப பட வேண்டும். அப்படியே அவரகளுக்குள் காதல் ஏற்பட்டால் அதை சகஜமாக அங்கீகரிக்க வேண்டும்.

  இங்கு ஐரோப்பாவில் வாழும் எனது  பெண்பிள்ளைகள் தமது சக வகுப்பு தோழனை கண்டால்  கட்டியணைத்து தமது நட்பை பகிர்தது கொள்கிறார்கள். அது எந்த தப்பான எண்ணத்திலும் இல்லை எனபதை நாமே பார்ககிறோம். இவ்வாறாக  இயலபாக பழும் பென் ஆண்பிள்ளைகள் பரஸபரம் ஒருவரை ஒருவர் மதிக்க கற்றுக் கொள்ளைகிறார்கள் 

ஆனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வயதுவந்த பிள்ளைகளை இயல்பாக பழக விடாத தன்மை இன்றும் தொடரவதை அங்கு சென்றபோது அவதானிக்க முடிந்தது. 

இதுதான் என்னுடைய கருத்தும் 
மாறும் ........ கொஞ்ச காலம் எடுக்கும் 
இந்த இடைவெளியில் புரிந்துணர்வு என்பது இரு பால்லினர் 
இடையேயும் வேண்டும் என்பதே எனது கருத்து. 

நான் இப்படித்தான் இருப்பேன் என்று கூறும் பெண்கள் 
எப்படி ஆண்கள் அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

எதிர்பால் ஈர்ப்பு என்பது இயற்கையானது 
ஈர்ப்பு சக்தி என்பது அங்கு மாறும்போது இங்கும் மாறித்தானே ஆகும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, tulpen said:

ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான நாகரீக உடைகளை அணிகிறார்கள்.  அவர்கள் நள்ளிரவு நேரங்களில்  கூட பாதுகாப்பாக நடமாடுவதை பார்திருக்கிறேன் . ஆனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இவாறான  உடைகளை பெண்கள் அணியும் போது மட்டும் அங்குள்ள ஆண்களால் உணர்சியை கட்டுப்படுத்த முடிவதில்லை. பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பெண்களின் உடைகள் மீது பழி போடுகிறார்களே ஏன்? அங்குள்ள ஆண்களில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? 

பொதுவாக பெண்களை தாயாக பார்கிறோம், தெய்வமாக பார்கிறோம் என்று மேடைகளில் மைக் முன்னால் பீலா விடும் நாடுகளில் தான் பாலியல் துன்புறுத்தல் அதிகமாக உள்ளது. பெண்களை தாயாகவோ, தெய்வமாகவோ பாரக்க வேண்டாம் சக தோழியாக. சிறந்த நண்பியாக பார்ததால் பாலியல் துன்புறுத்தல் நடக்காது. 

ஐரோப்பிய நாடுகளிலும் பாலியல் துன்புறுத்தல்கள் ஏராளம். பெரிய நகரங்களில் பெண்கள் தனியாக நடமாட பயப்பிடுவார்கள். ரயில் நிலையங்கள் பேரூந்து நிலையங்கள் என ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு பின் பெண்களை காண்பது அரிது.
ஆனால் ஒன்று மேற்கத்திய நாடுகளில் சட்டம் வலிமையானது. சட்டம் தண்டனைகளிலிருந்து தப்ப முடியாது.

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய நாடுகளிலும் பாலியல் துன்புறுத்தல்கள் ஏராளம். பெரிய நகரங்களில் பெண்கள் தனியாக நடமாட பயப்பிடுவார்கள். ரயில் நிலையங்கள் பேரூந்து நிலையங்கள் என ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு பின் பெண்களை காண்பது அரிது.
ஆனால் ஒன்று மேற்கத்திய நாடுகளில் சட்டம் வலிமையானது. சட்டம் தண்டனைகளிலிருந்து தப்ப முடியாது.

நான் வாழும் நகரம் நான் பிறந்த யாழ்பாணத்தை விடவோ இந்திய நகரங்களை விடவோ பெரியது. ஆனால் இங்கு எனது பெண்பிள்ளைகள் இரவு 12 மணிக்கு ரயில் எடுத்து வீட்டுக்கு பாதுகாப்பாக ஒரு முறை அல்ல பல முறை வந்திருக்கிறார்கள். நான் பிறந்து வளர்ந்த சிறிய யாழ் நகரத்திலோ அல்லது இந்திய நகரங்களிலோ  இவ்வாறு எனது பிள்ளைகளை தனியாக விட மாட்டேன்.   அது தான் ஜதார்த்தம்.  இனப்பற்று நாட்டு பற்றுக்காக உண்மைகளை மறைக்க கூடாது.  பாலியல் துன்புறுத்தல்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. நான் கூறியது ஒப்பீட்டு ரீதியில் மட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

24 மணிநேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் நகரங்களில் அவ்வாறு நடக்க சந்தர்ப்பமில்லைத்தான். ஆனால் ஏனைய சிறிய நகரங்கள்/கிராமங்கள் பற்றிய தகவல்கள் உங்களைப்போன்றோர் அறிய வாய்ப்பில்லை என நினைக்கின்றேன்.. நகரத்திலே பிறந்து நகரத்திலே வாழ்பவர்கள்.

இங்கு சட்டமும் பாதுகாப்பும் வலிமையானது. அதை நீங்கள் கவனத்திலெடுக்க வேண்டும்.அங்கு அது இல்லை.

விடுதலைப்புலிகள் காலத்திலும் பெண்கள் தைரியமாக எல்லா இடங்களிலும்  எல்லா நேரங்களிலும் நடமாடினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, tulpen said:

எனக்கு பிடித்த கவிதையில் இதுவும் ஒன்று .......
எனது கருத்துக்கு நேர் எதிரானது. எனது கருத்து சுற்றம் சூழல் சார்ந்தது. 

DpH-SXEWsAEL46H.jpg

போராட்ட காலம் முன்போ 
போராட்ட காலத்திலேயோ 
தனியாக பெண்கள் சென்றால் பாலியல் தொல்லை உண்டு என்ற 
நிலை யாழில் இருக்கவில்லை 
களவு ஒரு காரணமாக இருந்து இருக்கலாம் 

இனவழிப்பு இராணுவ கட்டுப்பாட்டுக்குள்தான் 
இவை கட்டவிழ்த்து விட படுகின்றன.

எதை எங்கு உரசினால் எங்கு சொறியும் என்று தெரிந்துதான் 
செய்கிறார்கள் 
நுகர்வு சந்தையின் பலிக்கடாவாகவே பெண்கள் உலகு எங்கும் மாறிவருகிறார்கள் 
"சுதந்திரம்" என்பது வெறும் வெட்டி பேச்சு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து முத்தம் கொடுத்தால் அது பாலியல் துன்புறுத்தல்தானே. 

முத்தம் என்றபோது சின்ன வயதில் பார்த்த ஜனகராஜின் கொமடிதான் நினைவுக்கு வந்தது.

13 வது நிமிடத்தில் வருகின்றது விளக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.cnn.com/2018/10/10/asia/india-metoo-intl/index.html

India's #MeToo moment? Media and entertainment industry shaken by allegations

By Manveena Suri, CNN

Updated 5:03 AM ET, Wed October 10, 2018

Indian actress Tanushree Dutta is seen at an event in Mumbai in 2012. She is one of a number of women who have recently come forward with accusations of assault and harassment at the hands of prominent Indian men in the entertainment and media industries.
 
New Delhi (CNN)A year after the fall of US movie mogul Harvey Weinstein, a flurry of allegations of sexual misconduct and inappropriate behavior has shaken the Indian media and entertainment industries, prompting many to ask if the #MeToo movement has finally arrived in the world's largest democracy.

In one high profile case, a Bollywood production house has been dissolved following sexual harassment allegations against one of its co-founders.
A leading comedy outfit popular with Indian millennials was also shaken when a comedian it worked with faced harassment allegations, while in the media industry, allegations of inappropriate behavior saw a prominent Delhi-based political journalist lose his position pending an internal investigation, according to reports.
Allegations have also been leveled against a minister in Prime Minister Narendra Modi's government.
 
Indian Bollywood actor Nana Patekar is mobbed by the media as he leaves after making a statement outside his home in Mumbai on October 8, 2018.
 
Indian Bollywood actor Nana Patekar is mobbed by the media as he leaves after making a statement outside his home in Mumbai on October 8, 2018.
The movement appears to have been prompted by allegations late last month by former Bollywood actress Tanushree Dutta, who spoke publicly about being a victim of assault allegedly at the hands of a former co-star in 2008.
04689bd42cc610f75d46ce395c1785e0.png
Receive Fareed Zakaria's Global Analysis
including insights and must-reads of world news
Activate Fareed's Briefing
By subscribing you agree to our
 
"He was grabbing me by the arms, pushing me around, then he would ask the choreographers to move and teach me how to dance and the next thing I know he wanted to do an intimate sequence with me. It was ridiculous," Dutta told CNN affiliate News18 about her experience when she worked with veteran actor Nana Patekar.
Speaking to reporters at a hastily arranged news conference on Monday in Mumbai, Patekar dismissed questions, saying, "My lawyers have told me not to speak to the media so I can't say anything. Otherwise, I would have said something in the past four days. This case is ten years old, what was true then is true today."
CNN has reached out to Patekar's legal team but has yet to receive a response.
Dutta's allegations prompted support from numerous leading industry figures, including "Quantico" star Priyanka Chopra, who tweeted agreeing with another actor that "the world needs to #BelieveSurvivors."
In the days since, numerous women from all walks of life have taken to social media to narrate their experiences of assault or inappropriate behavior at the hands of prominent Indian men.
"The stories are there so people can be safe," said Sheena Dabholkar, a writer and journalist who has been curating a feed of incidents on Twitter and naming those involved through messages that women have sent her directly.
"People worldwide have issues with boundaries and consent. Even recognizing discomfort in people and unwelcome behavior. I want to create an understanding of what people find acceptable and to create a conversation," Dabholkar told CNN.
Bollywood filmmaker Anurag Kashyap seen at his office in Oshiwara on May 22, 2016 in Mumbai, India.
 
Bollywood filmmaker Anurag Kashyap seen at his office in Oshiwara on May 22, 2016 in Mumbai, India.

Time's up for Bollywood?

Many of the allegations have resulted in immediate consequences.
On Saturday, news broke that Phantom Films, the Bollywood studio responsible for Netflix's first original series from India, was to fold.
The announcement, made on Twitter by one of the studio's co-founders and prominent Bollywood director Anurag Kashyap, came after HuffPost India published a story in which a former female employee accused Vikas Bahl, another co-founder and director, of harassment.
"Phantom was a dream, a glorious one and all dreams come to an end. We did our best and we succeeded and we failed. But I know for sure we will come out of this stronger, wiser and will continue to pursue our dreams our own individual ways. We wish each other the best," Kashyap wrote on Twitter on October 6.
 
Phantom was a dream, a glorious one and all dreams come to an end . We did our best and we succeeded and we failed. But i know for sure we will come out of this stronger, wiser and will continue to pursue our dreams our own individual ways. We wish each other the best.

In the HuffPost piece, the former female employee accused Bahl of masturbating on her without consent after pretending to pass out on her bed.
The alleged incident took place in May 2015. In October that year, she said she shared her experience with Kashyap but nothing was done and she resigned.
Kashyap later issued a detailed statement on Twitter, saying: "While at Phantom, I did everything I could, within what I was told by my partner and his lawyers. For legal and financial decisions, I was fully dependent on my partner and his team. They took care of those things so I could focus on what I did better, creatives. His word and his team's word on any matter used to be the final word for us."
View image on TwitterView image on Twitter
 
My statement in light of the recent HuffPost article and breaking up of Phantom . There are two pages..

"According to legal advice provided to me then, I was told that we had very limited options. Now in hindsight and after taking stock of things myself, I can quite see how I was ill-advised," he added.
On Tuesday, Bahl's lawyers hit back forcefully at Kashyap, sending him a legal notice denying the allegations, and hitting back at his statement on Twitter and his interview to Huffpost.
Bahl's lawyers said the accusations were made "as a result of professional jealousy and with the sole intent to defame our client, malign his image and destroy his career." They sent a similar letter to Vikramaditya Motwane, another of Phantom Films' co-founders, who had also weighed in on the allegations on Twitter. Both letters were shared with CNN by Bahl's legal counsel.
Indian film director, producer and screenwriter Vikas Bahl seen at an event on October 27, 2015 in Gurgaon, India.
 
Indian film director, producer and screenwriter Vikas Bahl seen at an event on October 27, 2015 in Gurgaon, India.

Indian media under scrutiny

Away from Bollywood, the country's political and media industries have also come under scrutiny, with female journalists sharing incidents of sexual harassment.
The most prominent person to be named so far is MJ Akbar, a former journalist and currently a junior foreign minister in Modi's government.
In an article written for Vogue India in 2017, journalist Priya Ramani described an experience of workplace harassment that happened while during a job interview in a Mumbai hotel room.
Ramani did not name the individual in the original account. However, on Monday, taking to Twitter, she identified the man as Akbar.
 
I began this piece with my MJ Akbar story. Never named him because he didn’t “do” anything. Lots of women have worse stories about this predator—maybe they’ll share. #ulti https://www.vogue.in/content/harvey-weinsteins-open-letter-sexual-harassment/amp/#click=https://t.co/A2uHiJt9zd 

"Turns out you were as talented a predator as you were a writer. It was more date, less interview," Ramani said of the encounter in her piece, which she claims took place when "I was 23, you were 43."
"Come sit here, you said at one point, gesturing to a tiny space near you. I'm fine, I replied with a strained smile. I escaped that night, you hired me, I worked for you for many months even though I swore I would never be in a room alone with you again," wrote Ramani in her 2017 piece.
On Tuesday, the Indian newspaper, The Telegraph, ran a story on the allegations against Akbar, its founding editor, under the headline "#MeToo finger at Union minister."
India's Ministry of External Affairs has declined to comment on the matter.
Meanwhile, on Monday, Prashant Jha, political editor of the leading Hindustan Times daily, stepped down from his post after accusations of sexual harassment surfaced on Twitter, CNN affiliate News18 reported. Avantika Mehta, a former co-worker, said Jha had pursued her even though she turned down his advances.
 
I’m the ex-lawyer HT correspondent mentioned in @MasalaBai’s story. This thread includes photos of my conversation with prashant jha. you will notice I do everything and beyond to not piss him off while he says he wants to hit on me

CNN reached out to both Jha and the Hindustan Times' legal counsel but has not yet received a response.

Going public

The ongoing public naming and shaming have revolved around incidents ranging from lewd behavior, suggestive text messages and, in some cases, clear instances of sexual abuse.
On October 4, the writer and performer Mahima Kukreja accused comedian Utsav Chakraborty of sending her pictures of his genitals. Her revelation has led to a wave of other women reporting similar incidents.
 
I want everyone to know @Wootsaw is a piece of shit. He sent me a dick pic, was creepy, then cried saying I’ll ruin his career if I tell others. I told two of the most influential men in comedy in India. Nothing happened. Let me tell you what else he has done with others.

"It's a little too late now but I am sorry. I really am. The past 24 hours were a crucible," Chakraborty tweeted a day later.
Citing previous mental health conditions that he claimed impacted his decisions, he said, "I faced a very scary personal truth. I can't think of myself as a victim anymore. Please tell me what to do now. How to make things right? I don't want anyone to be hurt anymore."
 
It's a little too late now but I am sorry. I really am. The past 24 hours were a crucible. I faced a very scary personal truth. I can't think of myself as a victim anymore. Please tell me what to do now. How to make things right? I don't want anyone to be hurt anymore.

Chakraborty had previously collaborated with AIB, a popular comedy group with a large following among young, urban Indians.
In an online statement, they apologized for not acting sooner.
"We messed up. Since yesterday we've been trying to introspect and process what we did wrong, and everything that came up during our conversations all feel like excuses in hindsight and fact of the matter is that we messed up," AIB said.
The weeks ahead will indicate whether India's Me Too movement can maintain its momentum and what kind of action will be taken, especially against those in significant positions of power.
Dabholkar is hopeful, saying, "This is probably the biggest people-led one. India will have many Me Too movements."

  • PAID CONTENT
Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:

24 மணிநேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் நகரங்களில் அவ்வாறு நடக்க சந்தர்ப்பமில்லைத்தான். ஆனால் ஏனைய சிறிய நகரங்கள்/கிராமங்கள் பற்றிய தகவல்கள் உங்களைப்போன்றோர் அறிய வாய்ப்பில்லை என நினைக்கின்றேன்.. நகரத்திலே பிறந்து நகரத்திலே வாழ்பவர்கள்.

இங்கு சட்டமும் பாதுகாப்பும் வலிமையானது. அதை நீங்கள் கவனத்திலெடுக்க வேண்டும்.அங்கு அது இல்லை.

விடுதலைப்புலிகள் காலத்திலும் பெண்கள் தைரியமாக எல்லா இடங்களிலும்  எல்லா நேரங்களிலும் நடமாடினார்கள்.

முதலில் பெரு நகரங்களை குறிப்பிட்டீர்கள். இப்போது சிறு நகரங்கள் கிராமங்கள் என்று கூறுகிறீர்கள். ஆனால்  இவ்வாறான பிரச்சனைகள் உலகம் முழுவதும் உண்டு எனபதை மறுக்க முடியாது. அதே வேளை தமக்குள் கலாச்சார பெருமை கொள்ளும் நாடுகளில் மிக அமிகமாக உள்ளதை மறுக்க முடியாது. 

எமது கலாச்சாரம் உன்னதமானது என்று எங்களுக்குள் கூறுவதில் நானும் நீங்களும் பெருமை கொள்ளலாம். ஆனால் ஜதார்த்தம் அவ்வாறு இல்லை. ஒரு ரெஸ்ரராண்டில்  மது அருந்திக்கொண்டிருக்கும் நபர்களின் பக்கத து மேசையில்  குடும்பத்துடன் பிள்ளைகளுடன்  அமர்நது  கெளரவமாக இரவு உணவை அருந்தக் கூடியதாக இருந்தால் அதுவே உயர்ந்த கலாச்சாரம். இலங்கை இந்தியாவில் சாராயக்கடைக்கு பக்கதிலே மட்டும் அல்ல அந்த தெருவிலேயே குடியிருக்க முடியாத அளவுக்கு தொந்தவுகள் இருப்பதை  சிறந்த கலாச்சாரமாக கருத முடியாது.

ஆகவே  எம்து பண்பாடு பழக்கவழக்களில் உள்ள  எதிர்மறை சீர்கேடான விடயங்களையும் வெளிப்படையாக பேசுவதன் மூலமே எம்து அடுத்த அடுத்த தலைமுறையாவது உண்மையில் கலாச்சார மேம்பாடு உடைய மக்களாக வாழ  உதவும் . (இந்த தலைமுறை too late என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.