Jump to content

முதல் பார்வை: 96


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
IMG0299jpgjpg
Published : 04 Oct 2018 19:08 IST
Updated : 04 Oct 2018 19:31 IST

 

1994-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தால், அதில் நாயகன் தன் காதலியைத் தேடினால் அதுவே '96'.

டிராவல் போட்டோகிராபர் கே.ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி) இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புகைப்படக் கலையைக் கற்றுத் தருகிறார். தன் மாணவியுடன் காரில் பயணிக்கும்போது பிறந்து, வளர்ந்து, படித்த ஊரைக் கடந்து செல்ல முடியாமல் நினைவுகளில் மூழ்குகிறார். 10-ம் வகுப்பு படித்த ஞாபகங்கள் அவரைக் கிளற, தன் நண்பன் பகவதி பெருமாளிடம் போனில் பேசுகிறார். வாட்ஸ் அப் மூலம் தன்னுடன் படித்த அனைத்து மாணவர்களுடனும் சாட் செய்ய ஒரு நன்னாளில் சந்தித்து மகிழ்கிறார்கள். சிரிக்கிறார்கள். விஜய் சேதுபதி மட்டும் தன் காதலி ஜானு (த்ரிஷா) வருகையை எதிர்பார்க்கிறார். அவரும் கொஞ்சம் தாமதமாக வருகிறார். 22 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் காதலர்கள் ஓர் இரவு முழுக்க எங்கெல்லாம் செல்கிறார்கள், எதுவெல்லாம் பேசிப் பகிர்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார்.

தவறவிடாதீர்

காவியக் காதல், கமர்ஷியல் காதல், யதார்த்த காதல், உன்னதக் காதல், ஒருதலைக் காதல், சேர்ந்த காதல், சேராத காதல், பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல் என்று காதலை மையமாகக் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம். 'தேவதாஸ்' காலத்திலிருந்து 'பிரேமம்' வரை காதல் படங்களுக்கான மரியாதை தொடர்ந்து கொடுக்கப்பட்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக '96' படத்தைச் சொல்லலாம்.

விஜய் சேதுபதியின் டீன் ஏஜ் கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யன் அழகாய்ப் பொருந்துகிறார். பார்வை, உடல் மொழியில் அப்படியே விஜய் சேதுபதியைப் பிரதி எடுத்திருக்கிறார்.

த்ரிஷாவின் டீன் ஏஜ் கேரக்டரில் கவுரி அற்புதமான புதுவரவு. கள்ளம் கபடமில்லாத அன்பின் ஊற்றை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

விஜய் சேதுபதி தீராக் காதலனாய் படம் முழுக்க வசீகரிக்கிறார். அவரின் மென்மையான நுண்ணிய உணர்வுகள் ரசிக்க வைக்கின்றன. ரவுடி, போலீஸ், பயந்து பின் வாங்கும் கதாபாத்திரங்களிலேயே விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றும், எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் விஜய் சேதுபதியே தெரிகிறார் என்றும் சொல்லப்படுவதுண்டு. அந்த விமர்சனத்தை இதில் சேது தகர்த்தெறிந்திருக்கிறார். படபடப்பு, தவிப்பு, காத்திருப்பு, ஏக்கம் என எல்லாவற்றையும் சுமந்து திரியும் பெருங்காதலனைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். வெட்கப்படும் தருணங்களிலும், காதலியின் பாராட்டில் பெருமிதம் மிளிரப் பார்க்கும் போதும் விஜய் சேதுபதி திரை முழுக்க ஆக்கிரமித்துக் கொள்கிறார்.

'கொடி', 'மோகினி' போன்ற படங்களில் நடித்த த்ரிஷாவா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு நடிப்பில் ஆளுமை செலுத்தி இருக்கிறார் த்ரிஷா. விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸியை விட இதில் நடிப்பில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு த்ரிஷாவுக்குக் கிட்டி இருக்கிறது. அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு ஜானு கதாபாத்திரத்தின் ஆழ அகலத்துக்குள் சென்று அழுகையும், ஆற்றாமையும், இயலாமையுமாக கரைந்து போகிறார். அத்தகைய தருணங்களில் த்ரிஷாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் கண்களில் நீர் திரள்கிறது. விஜய் சேதுபதியைத் தேடும் அந்த ஒற்றைப் பார்வையில் காதல் மொழியை உணர்த்திவிடுகிறார்.

தேவதர்ஷினி, பகவதி பெருமாள், முருகதாஸ் ஆகியோர் நகைச்சுவைக்குப் பலம் சேர்க்கிறார்கள். கவிதாலயா கிருஷ்ணன் ஒரே காட்சியில் வந்தாலும் ஸ்கோர் செய்கிறார். ஜனகராஜின் மறுவருகை புன்னகையை மலர வைக்கிறது.

மகேந்திரன் ஜெயராஜு, சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கவிதை ஆக்கியிருக்கிறது. கோவிந்த் மேனன் அக்கவிதைகளுக்கு தன் இசையால் உயிரூட்டி இருக்கிறார். அதுவும் காதலே காதலே பாடல் மிகப் பொருத்தமான காட்சியில் வந்து பார்வையாளர்கள பரவசப்படுத்துகிறது.

சொல்லில் தீராத காதலை காட்சியில் தீரும் அளவுக்கு மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார். பள்ளிப் பருவக் காதலின் நினைவுகளை ப் பசுமையாக நினைவு கூர்கிறார். சேர முடியாத காதலின் கனத்தை, பிரிவை அழுகையின் ஊடே பதிவு செய்த விதம் பாராட்டுக்குரியது. கொஞ்சமும் கதையிலிருந்து விலகாமல் கதாபாத்திரங்களின் இயல்பு மீறாமல் நெறியாள்கை செய்திருக்கிறார். இரண்டாம் பாதி முழுக்க விஜய் சேதுபதி, த்ரிஷா என்ற இருவரை மட்டுமே நம்பி திரைக்கதையை நகர்த்தி இருக்கும் விதம் வியக்க வைக்கிறது. சின்னச்சின்ன சினிமாத்தனங்கள் ஆங்காங்கே எட்டிப்பார்த்தாலும் அது நெருடலாகவோ, தவறாகவோ, துருத்திக்கொண்டோ தெரியவில்லை.

இந்தக் காதல் ஏன் சேரக்கூடாது, சேர்ந்தால் நன்றாக இருக்குமே போன்ற கேள்விகள் எழலாம். எல்லாவற்றையும் தாண்டி சினிமாவுக்கே உரிய கிளைமாக்ஸ் வைக்காமல் யதார்த்தமாய் அமைத்திருந்த விதம் உண்மையின் பக்கம் நின்று பேசுவதாக உள்ளது. காதலித்தவர்களும், காதலிப்பவர்களும், காதலை ஆராதிப்பவர்களும் '96' படத்தை ரசிக்கலாம்.

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25123931.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

முகநூலில் நிரம்பி வழியும் 96 விமர்சனங்களை  கண்கள் கலங்க பார்த்துகொண்டிருக்கிறேன் ஒவ்வொருதருக்கும் ஒரு காதல் ❤️ இருந்து இருக்கும் அதனை 96 ன் வழி மீட்டிபார்க்கிறார்கள்..

 

ஒரு ஆணின் வெட்கம் அத்தனை அழகா? அழகாய் தானிருக்கிறது விஜய் சேதுபதி வெட்கப்படும் தருணங்களில் எல்லாம்.
பள்ளிக்கூடத்தில் அரும்பும் காதல் ,சொல்லிக்கொள்வதற்குள் சந்தர்ப்ப சூழ்நிலையால்   பிரிந்த காதலர் இருபது வருடம்கழித்து சந்தித்தால் எப்படி எதிர் கொள்வர்   என்ன செய்வர் ..? எவ்வளவோ செய்யலாமே

..ஒரு சொட்டு விரசமின்றி முழுக்க முழுக்க அழகியலால் அத்தருணங்களை நிரப்பினால் வருவது தான் "96" 
தாடியும் மீசையுமாக திரிபவனை  சலூனுக்கு அழைத்து சென்று பள்ளிக்கூட பையனை போல முடி வெட்டி அழகு பார்க்கிறாள்..
ஒரு மழை நேரத்தில் பல்கனியில் மனசுக்கு பிடித்தவனுடன் ஒரு தேநீர்.
 அவன் பசிக்குது எனும்போது அவனுக்காக சமையல்செய்கிறாள்.
 சாப்பிட்டுகொண்டிருக்கும் போது சாப்பாடு எப்படி இருக்கிறது என கேட்பவளிடம் அம்மாவின் சமையல் போல் என்கிறான்..
திடீரென கரண்ட் கட் லைட் தேடி அவன் ஓடுகிறான்..அப்போது பாடசாலைக்காலங்களில் அவன் மற்றவர்கள்மூலம் கேட்டும் தான் பாடாத அவனுக்கு பிடித்த பாடலை அவள் பாடுகிறாள்.

நீ சந்தோசமாக இருக்கிறாயா ஜானு? சந்தோசம் என்டு சொல்ல முடியா ,நிம்மதியாக இருக்கிறேன்  என்று வேண்டுமானால் சொல்லலாம் ராம் என்பாள் 

 பொக்கிஷமாக அவன் சேர்த்து வைத்தருக்கும் அவளின் துப்பட்டா,இறுதி விடுமுறையில் அவள் மை தெளித்து மறந்துவிடாதே என்று சொன்ன வெள்ளை சேட் எல்லாவற்றையும் காட்டுகிறான்,அவளுக்காக தான் எழுதிய கவிதையை அவன் வாசிக்கிறான் அவள்அப்படியே உறங்கிபோகிறாள்.இப்படி
இன்னும் பல கவிதை தருணங்கள்  .பிரியும் நேரம் கண்ணீருடன் அவள் அவன் முகத்தை கைகளால் தழுவிவிட்டு  நடந்து செல்வாள்..சில காதல்களை தான் பிரியக்கூடாது என நினைப்போம்.. ஜானுவும் ராமும் இன்னும் கொஞ்சநாள்களிற்கு என்கூடவே நினைவுகளால் நிரம்பி இருப்பார்கள்...

 

#96Movie

#########################

ஒரு ஆணோட வெக்கம் எவ்வளவு அழகானது ❤️  உருகி உருகி ஒரு பொண்ண ரசிக்கும்போதும் அவ பக்கத்துல இல்லன்னாலும் நல்லா இருக்கனும்னு நினைக்கும்போதும் ஆண் இன்னும் அழகு!  தான் காதலிச்ச பையன் எப்படி போனா எனக்கென்னனு இருக்குற பெண்கள் மத்தியில, அவன் சந்தோஷமா இருக்கனும்னு ஒரு பெண் நினைச்சிட்டாலே போதும். அந்த நினைப்பே போதும்.. That very thought from ur girl gives u Infinite peace & solace. மீதி வாழ்க்கைய வாழ்ந்துடலாம் :)

ராம் & ஜானு இரண்டு பேரும் நமக்கு ரொம்ப பழக்கபட்டவங்களா தெரியலாம். இல்ல நீங்களே ராம் அல்லது ஜானுவா உங்கள உணரலாம் ❤️ மனசு விட்டு அழ தயாரா இருந்தா மட்டும் படத்துக்கு போங்க.. கண் கலங்காம பாக்குறது கொஞ்சம் கஷ்டம்தான்! Personally, அந்த முதல் பாடல் காட்சியில இயற்கையோட சேர்ந்து ராம் வாழுறத பாக்குறப்போ என்னையே அறியாம கண் கலங்கிருச்சு.. Bcoz, something i miss right now is Travel & Nature!! ஜானு, ஒரு கற்பனை கதைய ராமோட மாணவர்கள் கிட்ட சொல்லி முடிக்கிற அந்த நொடி... அது த்ரிஷாவே இல்ல ஜானு தான் ❤️ :( சேதுபதி வாழ்ந்துருக்காப்ல.. வேற என்ன சொல்ல? அவரோட வழக்கமான தெனாவட்டு Body Language  & Attitude-அ எல்லாம் மாத்தி ஜானு முன்னால ராம்-ஆ வெக்கப்பட்டு நிக்கிறதெல்லாம் அருமையான ChangeOver ☺ சிறு வயது ராம் & ஜானு அட்டகாசம் ❤️  Watchman ஜனகராஜ்.. Saloon கவிதாலயா கிருஷ்ணன்.. ஆரம்ப காட்சிகள்ல வரும் Alumni Meet... அந்த நண்பர்கள் கூட்டம்னு ஒவ்வொரு கதாபாத்திரமும் காட்சிகளும் வசனங்களும் அவ்வளவு அழகு அவ்வளவு யதார்த்தம் ! இயக்குனர் ப்ரேம் அனுபவிச்சு செதுக்கிருக்காரு :) கோவிந்த் வசந்தாவின் இசை படத்தோட உயிர்நாடி ❤️

இப்போ இந்த Generation இளைஞர்கள் தவறவிட்ட பல அழகிய நினைவுகளின் தொகுப்புதான் 96 ? ராம் நெஞ்சுல ஜானு கைய வெக்குறப்போ அந்த Heart Beat Rise... அந்த காதல எல்லாம் இப்போ நாம தவறவிட்டுட்டோமோ !? என்பதுகளில் பிறந்தவர்களோட இந்த கதைய பாக்குறப்போதான் 90s Kids -ல ஒரு பகுதியும் 2K kids-ல ஒரு பெரும் பகுதியும் காதலையே தவற விட்டுட்டாங்களோனு தோனுது!? பள்ளி பருவத்துல கூட நம்ம நல்லாதான் இருந்தோம் ஆனா After the entry of social media நிறைய மாறிடுச்சு!! "My Lyf My Rulezz".. "Single Rockzzz".. "Relationship ruined me" னு எல்லாம் சும்மா வாய்ல சொல்லுறதுக்கும் வெளிய சீன் போடுறதுக்கு வேணும்னா நல்லா இருக்கலாம்.. ஆனா இன்னொரு உயிர் மேல எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வெக்குற அன்புக்கு இதெல்லாம் ஈடகுமா?  சில உணர்ச்சிகள் ரொம்ப தனிப்பட்டவை..! சாகுற வரைக்கும் உன்ன வாழ வைக்க போறது அந்த நினைவுகளும் காதலும்தான் ❤️

Celebrate Love _/\_  Celebrate 96

-  Sathya Kumaran G முகநூல் 

######################

••••••••••••••••   96   •••••••••••••••••••
(No Spoilers)

முதலில் இந்த படம் , ஒரு personal movie.. ஒரு கவிஞரின் வலி சொல்லும் கவிதை போல... கூட்டத்தில்  நம்மை பார்த்து சிரிக்கும் ஒரு குழந்தை போல..தூரத்தில் ஒளிக்கும் ஒரு  பாடல் நமக்கு தரும் புன்னகை போல...கண்ணை மூடி மனமுருகி வேண்டும் ஒரு  பிராத்தனை போல....
Very very personal movie..touching personal emotions..

கதையில் twist turns U-turn இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்...புரியாத வரிகளில் இருக்கும் டான்ஸ் பாடல் , சீட் முனையில் உட்கார வைக்கும் ஆக்ஷன் ப்ளாக் வேண்டும் என்று நினைப்பவர்கள்...அவசர அவசரமாக எப்போதும் ஓடி கொண்டு இருப்பவர்கள்... கடந்த காலம் எனக்கு ஒரு மண்ணும் நினைவில் இல்லை, இன்னோருவரின் உணர்வு எனக்கு ஏன் புரிய வேண்டும்.. அதை பற்றி நான் ஏன் நினைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்... you are right to your own..But  இப்படியாக நினைப்பவர்கள் இப்படிப்பட்ட யாருமே தயவு செய்து இந்த படத்துக்கு போகாதீர்கள்.... உங்களுக்கும் சிரமம், உடன் உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் கடுப்பு...and yes, இந்த விமர்சனமும் இதுக்கு மேல் படிக்க வேண்டாம்.

இந்த படத்தை ரசிக்க முதலில் அழகான நேரம் ஒதுக்க வேண்டும்... ஒரு ஓவியம் வரையும் கலைஞனின் ரசனை பொறுமை வேண்டும்.. சீட்டில் உட்கார்ந்தவுடன் அது time machineல் உங்களை உங்களின் கடந்த காலத்துக்கு கொண்டு செல்லும்..உங்களை அசை போட வைக்கும், மெலிதாக புன்னகைக்க வைக்கும், லேசாக அழ வைக்கும்.... கொஞ்சம் வருத்த பட வைக்கும், கொஞ்சம் சந்தோஷ பட வைக்கும் , கொஞ்சம் ஏக்கம் கொள்ள வைக்கும்... வெளியே வரும்போது மனதில் ஏதோ பெரிய கல் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக உணர்வீர்கள்... இளையராஜா பாடல் ஒன்றை ஒளிக்கவிட்டு எண்ண ஓட்டங்கள் தாவி தாவி பறக்க, அப்படியே வீடு வந்து சேருவீர்கள்.

இதான், 96!

கிரேசி மோகன் , ஒரு படத்தில் எழுதிய வசனம்..."வெட்டியானுக்கு தெரியுமா, சுடுகாட்டில் அழுபவன் வலி"... இந்த படமும் அது சொல்லும் உணர்வும் வலியும் அனைவருக்கும் புரிய வாய்ப்பில்லை... புரிபவர்கள் க்கு இந்த 96 , மிகவும் முக்கியமான ஒரு காதல் படம்.

இயக்குனர் ப்ரேம், முதல் படமாக எதை வேண்டுமானாலும் எடுத்து இருக்கலாம்... ஆனால் இந்த படத்தை இயக்குவதற்கே பெரும் துணிவு இருக்க வேண்டும் ..அதுக்கே ஸ்பெஷல் பாராட்டு.. இப்படிப்பட்ட வெறும் உணர்வு குவியல்கள் வைத்து  தமிழ் சினிமா வில் படங்கள் அரிது.. ப்ரேம் மிக முக்கியமான படைப்பாளி.

விஜய் சேதுபதி நன்றாக நடித்துள்ளார் என்பது விராட் கோலி செஞ்சுரி போல.. பெரிய ஆச்சரியம் இல்லை, ஆனாலும் நடிப்பு ராட்சசன் க்கு இது செம தீனி..

படத்தில் ஒரு மிக முக்கிய அங்கம் 'யமுனை ஆற்றிலே' பாடல்..அது வரும் ஒரு இடத்தில், இந்த மனிதரின் நடிப்பை பார்க்க வேண்டும்... என்ன மனுசன் ய்யா நீ...

த்ரிஷா...தமிழ் சினிமா இவரை இப்படி இவ்வளவு நாள் உபயோகிக்கிகாமல் இருந்ததற்கே வெட்க பட வேண்டும்.. it's her life time role.. அந்த பாத்ரூம் காட்சியில் மனதை வருடி எடுக்கிறார்...do more such roles madam.

பக்ஸ், தேவதர்ஷினி , ஆடுகளம் முருகதாஸ் கச்சிதம்

படத்தின் பெரிய ப்ளஸ், பள்ளி மாணவர்களாக வரும் நடிகர் நடிகைகள்.. 
ஆதித்யா - கௌரி.. what a casting...உடம்பு முடியாமல் அந்த பெண் பள்ளி க்கு வரும் அந்த காட்சி.. நான் வாசித்த கவிதைகளில் சிறந்தது..
மற்ற மாணவர்கள் தேர்வும் அட ரகம்.

ஜனகராஜ் க்கு அழகிய கம் பேக்.

படத்தில் இன்னோரு முக்கிய கதாப்பாத்திரத்தில் இசைஞானி இளையராஜா.. படத்தை பார்க்கும்போது புரியும்.

இசை- கோவிந்த் வசந்தா... எங்க சார் இருந்தீங்க இத்தனை நாள்... One of the most beautiful score of late.

கேமரா,  ஷண்முக சுந்தரம், இயக்குனர் புதிய நினைத்த உணர்வுகளுக்கு உயிரூட்டி இருக்கிறார்

படத்தின் சிறப்பம்சே அது சொல்லும் காட்சிகள் உணர்வுகள் நம்மில் பார்க்காதவர்கள் குறைவு...அதை அழகான சிற்பங்களாக செதுக்கி இருக்கிறார், துளி விரசமோ முக சுழிவோ ஏற்படுத்தாமல் ‌.

படம் ஒரு பதினைந்து நிமிடம் குறைவாக இருந்து இருந்தால் இன்னும் மின்னி இருக்கும்.. nevertheless, it's a poetry on screen.

இரட்டை பின்னல் பூ , மிதமான சைக்கிள் பயணம், விலாசம் தேடி அலைவது, விடுமுறை தினங்களில் காண முடியாத பேச முடியாத தவிப்புகள்.. சைக்கிள் நிறுத்தும் இட நினைவுகள்...நாம் நினைத்த நேரத்தில் கேட்க முடியாத பாடல்கள் , கேட்கும் போது ஏற்படுத்தும் உணர்வுகள்‌.., இனி பார்க்க முடியாத ஏக்கங்கள்.... இதெல்லாம் anytime in touch எந்நேர வாட்சப் முகநூல் காலத்துக்கு புரிவது சிரமம்..

படத்தில் முதல் முறையாக,
" காதலே காதலே தனிப்பெரும் துணையே " பாடல் வரி, வயலின் வருடிய பின்பு , ஒரு இடத்தில் வரும்..
அந்த இடத்தில் வார்த்தைகளில் சொல்ல முடியா உணர்வு உங்களுக்கு ஏற்ப்பட்டால், நீங்களும் அதிர்ஷ்டசாலி... உங்களுக்குள்ளும் ஒரு மிக அழகான அழியாத கவிதை இருக்கிறது..

சமீபகாலமாக தமிழ் சினிமா வில் நிறைய கொலை, வன்மம், வன்முறை, பார்த்தாயிற்று..
அவற்றுக்கு மத்தியில், இந்த ரோஜா மாலை யும் இருந்துட்டு போகட்டும்... actually இப்படியான பூ மாலைகள் அவ்வப்போது வர வேண்டும்...

#96 - கவிதை

4.25 /5.0

#96TheMovie

- இரா. இராஜகோபாலன்

#######################

96 - என்னா படம்யா!

தமிழ்சினிமா பொதுவாகவே புறநோக்கு தன்மை கொண்டது. மனதில் நிகழும் நுண்ணுணர்வுகளைப் பதியும் அகநோக்கு சில காட்சிகளில் மட்டும் அரிதாக நிகழும். எதையும் செயல்களாகக் காட்டினால் தான் திருப்தி. மலையாளப் படங்கள் நம்மை முந்துவது இந்த விஷயத்தில் தான். அந்தவகையில்  96 படம், தமிழ் சினிமாவில் முக்கியமானதாக ஆகிறது.

படத்தில் வரும் முக்கிய சம்பவங்கள் எல்லாம் சினிமாத்தனம் இல்லாமல் இயல்பாக இருப்பதாலேயே நம்மால் படத்துடன் ஒட்டிக்கொள்ள முடிகிறது. காதல் மலர்வதற்கு சாகச காட்சிகள் ஏதுமில்லை.நான்குநாட்கள் பார்க்க முடியாத ஜானு, காய்ச்சலுடன் ஸ்கூலுக்குத் திரும்பி வருகிறாள். பின்னால் அமர்ந்திருக்கும் ராமை மெதுவாகத் திரும்பிப் பார்க்கிறாள். பூ மலர்வதை படம் பிடிக்கமுடியாது என்பார்கள். இந்தக் காட்சியில் அதை இயக்குநர் செய்துகாட்டியிருக்கிறார். 

வாழ்க்கையில் நம்மைப் புரட்டிப் போட்ட விஷயங்களுக்கு காரணம் தேடினால், சாதாரணமாக இருக்கும். படத்தில் ராம் ஊரைவிட்டுப் போவது, ஜானுவைப் பார்க்க காலேஜிற்கு வருவது, ஜானுவின் கல்யாணத்தன்று ராம் என மிக இயல்பான விஷயங்களே அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக ஆக்கியிருக்கின்றன.

படத்தின் இரண்டாம்பாதி பெரும்பாலும் ராம்-ஜானு இருவர் மட்டும் பேசிக்கொள்ளும் காட்சிகள் தான். வலுவான கதையும் வசனங்களும் மட்டும் இதற்குப் போதாது. அதைவிட வலுவான நடிகர்கள் இதற்கு வேண்டும். விஜய் சேதுபதி - த்ரிஷா ஜோடி அதை சாத்தியமாக்கியிருக்கிறார்கள். 

விஜய் சேதுபதி நடிப்பில் 96 உச்சம் என்பேன். மிக மெல்லிய உணர்வுகளைக்கூட மனிதர் எளிதாக கொண்டுவந்துவிடுகிறார். அவரது எல்லாப் படங்களைப் போல இதிலும் படத்தை தாங்கும் தூணாக நிற்கிறார். பல வருடங்கள் கழித்து ஜானுவை சந்திக்கும் பதட்டம், ஜானுவின் கல்யாணநாள் பற்றிப் பேசும் சீன், வெர்ஜின் வெட்கம் என்று கிடைக்கிற வாய்ப்பில் எல்லாம் சிக்ஸர் அடிக்கிறார்.

விஜய் சேதுபதியை இயக்குநர் நம்பியதில் ஆச்சரியம் இல்லை. த்ரிஷாவை நம்பி, இந்த கேரக்டரை கொடுத்தது தான் ஆச்சரியம். விண்ணைத் தாண்டி வருவாயா தவிர்த்து எந்தப் படத்திலும் நடிக்காதவர் அவர். கொடி போன்று கிடைத்த நல்ல வாய்ப்புகளையும் சொதப்பியவர். நுணுக்கமான நடிப்பைக் கோரும் இந்த கேரக்டருக்கு அவரை தேர்ந்தெடுத்ததே பெரிய ரிஸ்க் தான்.

ஆனால் இயக்குநரின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார் த்ரிஷா. இத்தனை வருடங்களுக்கும் சேர்த்து, ஆர்ப்பாட்டமே இல்லாமல் நடித்து, தானும் ஒரு நல்ல நடிகை தான் என்று நிரூபித்திருக்கிறார். கல்யாண நாள் பற்றிப் பேசுவது, ராம் ஒதுங்குவது கண்டு கோபப்படுவது, உரிமையுடன் அவனை கலாய்ப்பது என்று ஜானுவாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஆண்களை விட பெண்கள் வாழ்க்கையை (வேறு வழியின்றியும்) எப்படி பிராக்டிகலாக எதிர்கொள்கிறார்கள் என்பதை த்ரிஷா கண்முன் கொண்டுவருகிறார்.

‘நான் உன்னைப் பார்க்கலைடா’ எனும் சீனும் கிளைமாக்ஸ் சீனும் த்ரிஷா நடிப்பில் உச்சம். நம்மை உலுக்கிவிடும் நடிப்பு. எல்லாவற்றுக்கும் மேல் தேவதையாக ஜொலிக்கிறார். இதுவரை கமலா காமேஷாகவே இருந்தவர், இந்த படத்தில் தான் த்ரிஷா ஆகியிருக்கிறார்!

இளம் வயது கேரக்டராக வரும் எல்லோருமே நடிப்பிலும் அசத்துவது ஆச்சரியம். முதல்பாதியில் அவர்களின் காட்சிகள் போடும் அஸ்திவாரம் தான், உணர்வுப்பூர்வமான இரண்டாம்பாதியை வலுவாக தாங்குகின்றன. 

இதுவொரு ஃபீல் குட் மூவி. எனவே பரபரப்பான திருப்பங்கள் என்று ஏதும் கிடையாது. இரண்டாம்பாதி முழுக்க, 22 வருடப் பிரிவை ராம் & ஜானு ஒரு இரவில் பேசித்தீர்க்கிறார்கள். எனவே சற்று நீளமான படமாக தோன்றலாம். ஆனாலும் ஜானு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கட்டுமே என்று ராமிற்காக நாமும் ஃபீல் பண்ணுவது தான் படத்தின் வெற்றி. 

இயக்குநர் பிரேம்குமார் முக்கியமான படைப்பாளியாக ஆவார் எனும் நம்பிக்கையை படத்தின் பல காட்சிகள் உறுதிசெய்கின்றன. படத்தில் பல அற்புதமான ஷாட்ஸ் இருக்கின்றன. கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறது சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு. ஜானுவின் கல்யாணம் பற்றி ராம் பேசும் காட்சியில் வரும் பிண்ணனி இசை, அந்த காட்சியின் உணர்வுகளை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்கிறது. ’காதலே..காதலே’பாடல் தவிர மற்ற பாடல்கள் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பிண்ணனி இசையில் கோவிந்த் பிரமாதப்படுத்தியிருக்கிறார். இளையராஜாவிற்கும் நன்றி சொல்ல வேண்டும்.

’ஒரு பள்ளிப்பருவக் காதல்..பிரிவு..மீண்டும் சந்திப்பு ‘ எனும் அழகி-ஆட்டோகிராஃப் பாணியிலான கதை தான். ஆனால் அந்தப் படங்கள் ஆணின் உணர்வுகளை மட்டுமே பதிவு செய்தவை. அந்த காதலை பெண் எப்படி உணர்ந்தாள், அந்த பிரிவை பெண் எப்படிக் கடந்தாள் என்று சொல்வதில்லை. அதை எதிர்கொள்ளும் அளவிற்கு அன்றைய ஆடியன்ஸிற்கு முதிர்ச்சி இருந்ததா என்பதும் கேள்விக்குறி தான். இந்தப் படம், இருவரின் உணர்வுகளையும் துல்லியமாகப் பதிவு செய்கிறது....அது, இன்றைய ஆடியன்ஸிற்கு இயக்குநர் செய்யும் மரியாதை.

செங்கோவி -முகநூல் 

***********************

'96
===

மிகச் சிறப்பான காதல் கதை. இதற்கு முன் அலைபாயுதே பார்த்த போது இப்படி இருந்தது. அதற்கு முன் எப்போது? மெளனராகம் என முந்தைய தலைமுறை சொல்லக்கூடும். சி. பிரேம் குமார் தான் இத்தலைமுறையின் மணி ரத்னம்.

ஒரு காதல் கதையை இன்றைய தேதி அவசரதி ரசனைக்கு எப்படி இவ்வளவு அழகாய், எங்குமே சமரசமின்றி, கவித்துவம் குன்றாமல் கடத்த முடிந்தது இத்திரைக்கதையால்! நினைத்து நினைத்து வியக்க வேண்டியிருக்கிறது.

ஆட்டோகிராஃப் எனக்குப் பிடித்த காதல் படம். ஆனால் அதற்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அது ஓர் ஆணின் வாழ்க்கையில் வெவ்வேறு வயதில் எதிர்ப்படும் வெவ்வேறு காதல்கள் / பெண்கள் பற்றியது; இது ஒரே காதலை, வெவ்வேறு வயதில் அதன் மாற்றங்களை ஆண், பெண் இருவரின் கோணத்திலிருந்தும் சொல்கிறது. இரண்டிலுமே பார்வையாளர் தன் வாழ்வுடன் பொருத்திப் பார்க்கும் சாத்தியமுண்டு என்றாலும் இரண்டாவதில் கூடுதலாய் காதலில் மனோவியல் இருக்கிறது. அதனால் இதை இன்னும் நெருக்கமாய் உணர முடிகிறது.

அவ்வகையில் இது வெறும் காதலைப் பேசும் படமல்ல; காதல் மனதைப் பேசும் படம். 

விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்நாள் படங்களில் ஒன்றாக இது மிளிரும். சிறுவயது ராமாக வரும் ஆதித்யாவும் (எம்எஸ் பாஸ்கர் மகன்) ஓக்கே. ஆனால் அந்தப் பெண் கெளரி கிஷன் - சிறுவயது ஜானு - எவ்வளவு பேராளுமை! முகம், உடல்மொழி எனக் கண்ணிற்குள்ளாகவே நிற்கிறாள். (நட்சத்திரங்களை அள்ளி வானில் தெளித்த கையோடு கடவுள் அவள் முகபாவங்களை வடிவமைத்திருக்க வேண்டும்.)

கேரக்டர் ஸ்கெட்ச் எனப்படும் கதாபாத்திர வார்ப்பு துல்லியம். ராம், ஜானு என்ற முதன்மைப் பாத்திரங்கள் மட்டுமின்றி முரளி, சுபாஷினி, வாட்ச்மேன் வரை அழகான ஓவியங்கள்.

இளையராஜாவின் பாடல்களைச் சூழலுக்கேற்ப ஜானு பாடிக் கொண்டே இருக்கிறாள். ராமுக்கு அது உறைப்பதே இல்லை. அவன் விருப்பப் பாடலை அவள் பாட 22 ஆண்டுகள் பிடிக்கிறது. அது பிரிவுத் துயர் பற்றிய பாடல் என்பதால் அது வேண்டாம் என்று உள்ளுணர்வு சொல்லித்தான் அவள் தவிர்த்து வந்தாளோ! அந்த இழை முழுக்க காவியத்தன்மை பூண்டு நம் நெஞ்சிலுறைகிறது.

நல்ல இசை; அழகான ஒளிப்பதிவு. அதை விட இசையும் ஒளிப்பதிவும் படத்துக்குப் பொருத்தமாய் இயங்குகின்றன. மணி ரத்னம் என்று பிரேமைச் சொல்ல அதுவும் ஒரு காரணம். வாட்ஸாப் உரையாடல் காட்சிகள் அவர் திறனுக்கு இன்னொரு உதாரணம். இரவில் முடி வெட்டப் போகும் காட்சி மற்றொன்று.

குறைகளும் உண்டு தான். அவர்களின் பிரிவுச்சூழலும் பிரிவு தொடர்வதும் வலுவாக இல்லை, (எனக்கு தர்க்கரீதியாய் கன்வின்சிங்காக இல்லை.) சுபாஷினியும், முரளியும் பிற்பாடு கதையில் வந்திணையவில்லை எனச் சிற்சில.

படம் நிச்சய வெற்றி. தமிழ் சினிமா காதல் படங்களில் ஒரு மைல்கல் '96 என க்ளீஷேக்கள் வரும். ஆனால் அது உண்மை தான். (இனி இதை ஒட்டிப் புற்றீசலாய் வரப் போகும் படங்களை நினைத்தால் தான் கலக்கமாய் இருக்கிறது.)

த்ரிஷா அந்த மாணவிகளிடம் ராம் தன்னைக் காண வந்த கல்லூரி நாளை தன் விருப்பத்திற்கேற்ப வேறு மாதிரி மீட்டுருவாக்கம் செய்து சொல்வாள். இந்தப் படமே நம்மில் பலருக்கு அப்படித்தான்!

நீங்கள் முடிவு செய்ய வேண்டியது படத்தைப் பார்ப்பதா இல்லையா என்றல்ல; எத்தனை முறை பார்க்கப் போகிறீர்கள் என்று தான். காதலுக்கும் உங்களுக்கும் வாழ்வில் எங்கேனும் சின்னதாய்த் தொடர்பு இருந்திருந்தாலும் இப்படம் உங்களுக்குப் புரியும்; பிடிக்கும்.

சரவணகார்த்திகேயன் -முகநூல்

Link to comment
Share on other sites

 

###########################

மனித குலத்தின் ஆதார உணர்வுகளில் ஒன்று காதல். அப்படிப்பட்ட ஓர் உணர்வை மனதின் ஆழங்களில் அடைகாத்து, அதன் இளஞ்சூட்டில் தங்களுக்கான கதகதப்பைத் தேடும் அத்தனை ஜீவன்களுக்குமான அழகான இளைப்பாறல்தான் படம்.

படம் துவங்கியதில் இருந்து சில காட்சிகளுக்கான பிண்ணனி இசையும், காட்சிப்படுத்தப்பட்ட விதமும் கண்டிப்பாக ஒரு ஐரோப்பிய நாட்டுத் திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத்தான் எனக்கு ஏற்படுத்தியது.

மொத்தப் படத்தையும் தாங்குவது த்ரிஷாவும், விஜய் சேதுபதியும்தான். அவர்களிருவரின் அழகான ஹைக்கூ போன்ற ரியாக்‌ஷன்களும் அதற்கான மனதை இளக வைக்கும் கவிதை தருணங்களும் கொள்ளை அழகு.

ஒரு இலக்கிய வாசகனாக கூறுவதென்றால், நல்லதொரு சிறுகதையை, நாவலை அல்லது கவிதையை வாசித்து முடித்தவுடன் உங்களுக்குள் உண்டாகும் ஆத்ம திருப்தியை ஒத்ததொரு படைப்புதான் 96.

இறுதியாக..நான் ருசித்த ஓர் அரிய வகை கொம்புத் தேன் எத்தனை ருசி மிக்கது என்பதை எவ்வளவு முயன்று விளக்கினாலும் எழுதினாலும், அது உங்கள் நாவில் விழும் அந்த முதல் தேன் சொட்டின் ருசிக்கு ஈடாகாது..ஏனெனில் அது உங்கள் ருசி..உங்கள் சுவை..! அருந்துங்கள். 
#மூவி96 #த்ரிஷா #விஜய்சேதுபதி #காண்பதெல்லாம்_காதலடி #தனிப்பெருந்துணை

கார்த்திகேயன் -முகநூல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

################################################################

நேற்றிரவு ஒரு பத்து நிமிடங்கள் இந்தப் படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்..

திடீரென விழித்துப் பார்த்தால் காலை விடிந்துவிட்டிருந்தது.. அருமையான தூக்கம்..!

 

ராசவன்னியன் - படம் பார்த்த அனுபவம்

Link to comment
Share on other sites

 
நீண்ட தூரம் நடந்த பின் சல சலத்து ஓடும் நதியில் இரண்டு கால்களையும் நனைத்துக் கொண்டு இருக்கும் போது வரும் சுகமும் மென்னுணர்வும் அருமையாக இருக்கும்.
 
அந்த மென்னுணர்வையும் சுகத்தையும் பரவசத்தையயும் பருக தீராக் காதலை கொண்டு தருகின்றது 96
 
காதல் காதல் காதல்... எல்லா மொழிகளிலும் அழகானதாயும் எல்லா காலங்களிலும் அற்புதமாயும் இருக்கும் காதலை சொட்ட சொட்ட நனையும் மழையாய் தந்து செல்கின்றது 96
 
படத்தில் ஆரம்பத்தில் இருந்து கவிதையாய் கசியும் அழகியலும் அதை ஆன்மாவுக்குள் கடத்தும் இசையுமாய் ஒரு சிறந்த காதல் படத்தை பார்த்த திருப்தியை கொடுக்கின்றது 96.
 
புல்லாங்குழல் இசையும் மழைச்சாரலின் சத்தமும் மெளனமும் தொடர்ந்து வர விஜய் சேதுபதியும் திரிஷாவும் எமக்குள் எங்கோ தொலைவில் இன்னும் உறங்காது இருக்கும் பழைய நினைவுகளை மீட்டி மீட்டி செல்கின்றனர்.  96 வரும் ஒரு காட்சியாயினும் எம் வாழ்வில் கண்டிப்பாக கடந்து சென்று இருக்கும். அந்த உணர்வு தொற்றல் தான் இறுதிக் கட்டத்திலாயினும் இருவரும் ஒரு முறையாயின் ஆரத் தழுவ மாட்டார்களா, ஒரு முத்தமாயினும் பரிமாற மாட்டார்களா என்ற ஏக்கத்தையும் தவிப்பையும் தருகின்றன.
 
காதலை கொண்டாடுகின்றவர்களும் அழகியலை உணர்வு ரீதியாக உள்வாங்க கூடியவர்களுக்கும் இசையை ஆராதிப்பவர்களுக்கும் மழையை ரசிப்பவர்களுக்கும்  மட்டுமே 96 இனிமையான அனுபவத்தை தரும்.
 
எந்தவொரு விரசமான காட்சியோ அல்லது 3 ஆம் தரமான சொல்லாடல்களோ ஒரு சிறு துளி ஆபாசமோ இல்லாமல் இன்றைய காலத்திலும் காதலை அழகான ஓவியமாக காட்ட முடியும் என்பதை 96 இல் காட்டியுள்ளனர்
 
முடிந்தவர்கள் 96 இனை தியேட்டர் சென்று பாருங்கள். வெறும் டிவிடியோ அல்லது இணையம் மூலமோ பார்க்கும் போது பின்னனி இசையையும் அதையோடிணைந்த அற்புதமாக ஒளித்தொகுப்பையும் தவற விட்டு விடுவீர்கள்
 
-நிழலி
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, அபராஜிதன் said:

இன்று இரண்டாம் முறை செல்கிறேன் நண்பனுடன் 

Résultat de recherche d'images pour "kadupethurar my lord gif"

கடுப்பேத்துறார் மை லார்ட் ........!  tw_blush:

Link to comment
Share on other sites

நண்பன் ஒருவன் "96" பார்ப்பதற்கு அழைத்திருந்தான்..காதலித்து கல்யாணம் செய்த நீ காதலியுடன் பார்ப்பதை விட்டு விட்டு முரட்டு சிங்கிளான என்கூட பார்க்கிறது உனக்கென்ன தலைவிதியோ என நக்கலடித்தவாறே சென்றிருந்தேன்..

படம் முடிய விட்டு உணர்ச்சிகளுடன் விளையாடி இருக்கார்கள் தாங்கமுடியாது இப்படியான படம்கள் நான் யாருக்குமே பார்க்கும்படி சஜெஸ்ட் பண்ணமாட்டன் என்றவாறே விடைபெற்றான்..

"96" ஐ கொண்டாட நீங்கள் காதலித்தோ காதலிக்கப்பட்டோ இருக்கத்தேவை இல்லை காதலை கொண்டாடுபவனாகவும்   வாழ்க்கையை ரசிக்க தெரிந்தவனாகவும் இருந்தால் போதும் 

நன்றி நண்பா இரண்டாம் முறையும் அந்த சாரலில் நனைய வைத்ததற்கு ❤️ ❤️ ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை மயிலிறகால் வருடிய  96
அங்கும் இங்கும் கண்ணீரால் என்னை நனைத்த 96
சம்பிரதாயங்களை உடைத்து; ராம் , ஜானு இருவரும் ஒரு பொழுது, 
ஒரு கணம் சேர்ந்தால் தான் என்ன என்று ஏங்க வைத்த 96..
திரையில் படத்தை காட்டி ...மனசில் படத்தை ஓட வைத்த 96..

த்ரிஷா , சேதுபதி இருவரின் இயல்பான நடிப்பு... (திரையில் வாழ்ந்திருக்கிறார்கள்)

அதிசயம் ஆனால் உண்மை ...மொத்த படம் முழுவதுமே திரிஷாவுக்கான காஸ்ட்யூம் வெறும் ஒரே ஒரு ப்ளூ ஜீன்ஸ் மஞ்சள் நிற சுடிதார் தான் 
எனக்கு மிகவும் கவர்ந்த பல காட்சிகளில் ஒன்று... ஜானு  ஓங் கல்யாணதிற்கு நானும் வந்திருந்தேன் ஜானு...தூர நின்னு பாத்துட்டு தாலி காட்டும் நேரம் நிக்க முடியாம வேகா வேகமா ஓடி போய்ட்டேன்னு சொல்வார்...அப்போது பின்னணி இசையில் கெட்டிமேளம் பெருத்த சோகத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இசைக்கப்பட்டு இருக்கும்... அப்போது இருவரின் முகங்களிலும் காட்டப்படும் .expressions ...... சொல்ல வார்த்தைகள் இல்லை...

மௌன ராகம், அழகி போல இதுவும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்...


தியேட்டரை விட்டு வரும் பொழுது நான் கவனித்த ஒன்று நிறைய பெண்கள் சற்றே கண்கலங்கித்தான் வெளியே வந்தார்கள்...
ஆகா மொத்தத்தில இந்த படத்துக்கு நூத்துக்கு 96 குடுக்கலாம்.

சரி...இப்போ ஒரு கேள்வியை வைக்கிறேன்...
இதுவே நீங்கள் கதாநாயகனாக இருந்து, உங்கள் முன்னை நாள் காதலி ஒரு முழு இரவுப் பொழுதையும் தனியாக உங்களுடன் மட்டுமே கழித்தால் ...?
படத்தில் கவிதையாக, தடம் புரளாது ஓடிய காதல் ...
நிஜ வாழ்க்கையில் காதலால் சிக்குண்ட (குறைந்த பட்ச) கலவின்பதில் முடியுமா ? :100_pray:

Link to comment
Share on other sites

. மென் உணர்வுகளின் பரிதவிப்பு ஏக்கம் சோகம் என அனைத்தும் கலந்த ஒரு கவிதை. இசையும் மிக அருமை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ இருக்குப் போல படம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுகிறேன்

Link to comment
Share on other sites

12 hours ago, Sasi_varnam said:

மனதை மயிலிறகால் வருடிய  96
அங்கும் இங்கும் கண்ணீரால் என்னை நனைத்த 96
சம்பிரதாயங்களை உடைத்து; ராம் , ஜானு இருவரும் ஒரு பொழுது, 
ஒரு கணம் சேர்ந்தால் தான் என்ன என்று ஏங்க வைத்த 96..
திரையில் படத்தை காட்டி ...மனசில் படத்தை ஓட வைத்த 96..

 

லயித்து பார்த்த கட்டங்களில் இதுவும் ஒன்று. கெட்டி மேளம் விஜய் சேதுபதியின் வசன வேகத்துக்கு ஏற்ப நிறுத்தி நிதானித்து நகரும். அது முடிகையில் மனசுக்குள் எங்கோ ஒன்று உடைந்தது போலிருக்கும்.

12 hours ago, Sasi_varnam said:

சரி...இப்போ ஒரு கேள்வியை வைக்கிறேன்...
இதுவே நீங்கள் கதாநாயகனாக இருந்து, உங்கள் முன்னை நாள் காதலி ஒரு முழு இரவுப் பொழுதையும் தனியாக உங்களுடன் மட்டுமே கழித்தால் ...?
படத்தில் கவிதையாக, தடம் புரளாது ஓடிய காதல் ...
நிஜ வாழ்க்கையில் காதலால் சிக்குண்ட (குறைந்த பட்ச) கலவின்பதில் முடியுமா ? :100_pray:

ஊகித்து பதில் சொல்லக் கூடிய வினா அல்ல இது. சில விடயங்களை ஊகிக்காது விடுதலே நல்லம்.
ஆனால் முதல் காதலியை மீண்டும் பார்க்கையில் கண்டிப்பாக காம உணர்வு எழ மாட்டாது. இது நான் அனுபவ வாயிலாக கண்ட உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படங்கள் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது. ஏனைய வலைத்தளங்களிலும் இந்த திரைப்படத்தைபடத்தை பிரமாதம் என புகழ்கின்றார்கள். நேரம் ஒதுக்கி பார்க்கத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

தமிழ் படங்கள் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது. ஏனைய வலைத்தளங்களிலும் இந்த திரைப்படத்தைபடத்தை பிரமாதம் என புகழ்கின்றார்கள். நேரம் ஒதுக்கி பார்க்கத்தான் வேண்டும்.

 

அகத்தின் மென் உணர்வை பேசும் இந்த படம் புறத்தில் எவ்வகையான வன்ம உணர்வுள்ள சமூகத்தில் இருந்து வருகின்றது என்பதை பரியேறும் பெருமாள் என்ற படத்தைப்  பார்த்தால் புரியும். இரண்டும் சம காலத்தில் வெளியாகியுள்ளது. இரண்டையும் பார்த்தால் சிறப்பு.. கல்விகற்கும் இடத்தின் வன்மமும் ஆணவக்கொலைக்குள் அகப்படும் காதலும் என்ற யதார்த்தநிலையை பேசும் படம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, சண்டமாருதன் said:

 

அகத்தின் மென் உணர்வை பேசும் இந்த படம் புறத்தில் எவ்வகையான வன்ம உணர்வுள்ள சமூகத்தில் இருந்து வருகின்றது என்பதை பரியேறும் பெருமாள் என்ற படத்தைப்  பார்த்தால் புரியும். இரண்டும் சம காலத்தில் வெளியாகியுள்ளது. இரண்டையும் பார்த்தால் சிறப்பு.. கல்விகற்கும் இடத்தின் வன்மமும் ஆணவக்கொலைக்குள் அகப்படும் காதலும் என்ற யதார்த்தநிலையை பேசும் படம். 

 தகவல்களுக்கு நன்றி. :91_thumbsup:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தில் அப்படி என்ன இருக்குது என்று புரியவில்லை....காதலில் ஏமாந்த ஆண்கள் யாழிலும் கண பேர் இருக்கினம் போல.?


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இந்த படத்தில் அப்படி என்ன இருக்குது என்று புரியவில்லை....காதலில் ஏமாந்த ஆண்கள் யாழிலும் கண பேர் இருக்கினம் போல.?


 

நீங்கள் வேற .....நாங்களே எரிமலைபோல உள்ளே குமுறிக்கொண்டு வெளியே புகை விட்டுக் கொண்டு இருக்கிறம்......!  ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2018 at 9:35 PM, குமாரசாமி said:

தமிழ் படங்கள் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது. ஏனைய வலைத்தளங்களிலும் இந்த திரைப்படத்தைபடத்தை பிரமாதம் என புகழ்கின்றார்கள். நேரம் ஒதுக்கி பார்க்கத்தான் வேண்டும்.

விமர்சனத்தை கேட்டு கல்லடி சாந்தி தியட்டரில் போய் குந்தியிருந்து மெனகெட்டதுதான் மிச்சம் கூட்டம் அறவே இல்ல 

 எனக்கு 1999 தான் பத்தாம் வகுப்பு பள்ளிய  எப்ப விடுவாங்க  அந்த சேட்டை கழஞ்சிபோட்டு அந்த கிரவுண்ட்ல புரளலாம் என்ற நினைப்பு மட்டும் தான் காதல் கத்தரிக்காயெல்லாம் வரல 

உங்களுக்கு உங்க பரிமளத்தை விரட்டினது ஞாபகம் வரலாம் 

15 hours ago, ரதி said:

இந்த படத்தில் அப்படி என்ன இருக்குது என்று புரியவில்லை....காதலில் ஏமாந்த ஆண்கள் யாழிலும் கண பேர் இருக்கினம் போல.?

 

ம்ம் இருக்கால் அந்த பெயர் லிஸ்ட்ட தயார் பண்ணுங்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.