Jump to content

வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கின்றார் பாபி சிம்ஹா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கின்றார் பாபி சிம்ஹா!

prabhakaran-Bobby-Simha-1.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படவுள்ளது.

வெங்கடேஷ்குமார் இயக்கும் இந்த படத்துக்கு ‘சீறும் புலிகள்’ என்று பெயரிட்டுள்ளனர். ஸ்டுடியோ 18 பட நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பட வெளியீடு தொடர்பாக உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பிரபாகரனின் இளம் வயது வாழ்க்கை, குடும்பம், போராளியாக அவர் மாறிய சூழ்நிலை, சிங்கள இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போர் என்று அனைத்தையும் இந்த படத்தில் காட்சிப்படுத்துகின்றனர். பெரும்பகுதி படப்பிடிப்பை காட்டுப்பகுதிகளில் நடத்துகின்றனர்.

இந்த படத்தில் நடிகர் பாபி சிம்ஹா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனாக நடிக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

http://athavannews.com/வேலுப்பிள்ளை-பிரபாகரனின/

 

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகள் தலைவர் வேடத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா

தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாக்களாக எடுக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படங்களாக எடுக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் 3 இயக்குனர்கள் படமாக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர்.

தலைவர்கள் வரிசையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாக இருக்கிறது. ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.

இவர் ஜிகர்தண்டா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். சமீபத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தில் இலங்கையில் இருந்து வருபவராக வில்லன் வேடத்தில் நடித்து இருந்தார்.

சீறும் புலிகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே உனக்குள் நான், லைட்மேன் ஆகிய படங்களையும் இலங்கையில் நடந்த கடைசிகட்ட போரை மையமாக வைத்து நீலம் என்ற படத்தையும் இயக்கியவர். நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை.

http://kisukisu.lk/?p=29526

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக சினிமாக்காரர்கள் எதற்காக இப்படியான அரைவேக்காட்டு வேலைகளில் இறங்குகிறார்கள் ஒரு இனத்தின் தேசியத்தலைவர் அவர் அவரைப்பற்றிய முழுமையான புரிதல் இல்லாது மிகவும் துல்லியமான ஆராய்வு இல்லாது தங்களைப் பிரபல்யப்படுத்துவதற்காக கண்டமேனிக்கு சினிமா எடுப்பதற்கு இவர்களுக்கு யார் துணிச்சலும் பண உதவியும் செய்கிறார்கள் ஈழத்தமிழர்களுக்கு ஒரு சரியான அரசியல் தலைமை இல்லாததாலேயே இவர்கள் எங்களை எடுப்பார் கைப்பிள்ளையாக நினைக்கிறார்கள்.

இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.