• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

பிரித்தானிய குடியேற்றவாசிகளுக்கு ஏற்படவுள்ள புதிய பிரச்சினை

Recommended Posts

பிரித்தானிய குடியேற்றவாசிகளுக்கு ஏற்படவுள்ள புதிய பிரச்சினை

sajith-1-720x450.jpg

பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் குடியேற்றவாசிகள் பிரித்தானிய குடியுரிமையைப் பெறுவதற்கு ‘British Value Test ‘ எனப்படும் புதிய பரீட்சை ஒன்றுக்கு முகம்கொடுக்க வேண்டி வருமெனவும் உயர்ந்த ஆங்கில அறிவைக் கொண்டிருக்கவேண்டுமெனவும் பிரித்தானிய உள்துறை அமைச்சர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலில் உள்ள Life in the UK எனப்படும் பரீட்சை பிரித்தானியாவின் வரலாறு மரபு மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளைக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த பரீட்சை குடியுரிமை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்தார்.

வரலாறு பற்றி குடியேற்றவாசிகள் அறிந்து கொள்வது நல்லது தான் ஆனாலும் எங்கள் சமூகத்தை ஒன்றாக இணைக்கும் தாராளவாத, ஜனநாயக மதிப்புகளை அவர்கள் புரிந்து கொள்வதே மிக முக்கியமானதாகும். அது மட்டுமன்றி குடியுரிமை பெறுவதற்குத் தேவையான ஆங்கிலமொழித் திறனின் அளவும் உயர்த்தப்படும் என அவர் கூறினார்.

சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இரட்டை குடியுரிமை பெற்றவர்களாயின் அவர்களது பிரித்தானிய குடியுரிமை உடனடியாகப் பறிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு இத்தகைய தண்டனையே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான குற்றங்களை புரியும் குற்றவாளிகளுக்கு எமது நாட்டில் இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/பிரித்தானிய-குடியேற்றவா/

Share this post


Link to post
Share on other sites

தாங்கள் செய்ய முடியாத இந்த சில்லறை வேலைகளை.... யாரை வைத்து செய்கிறார்கள் இந்த வெள்ளையள்... பார்த்தியலே..🤢

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, Nathamuni said:

தாங்கள் செய்ய முடியாத இந்த சில்லறை வேலைகளை.... யாரை வைத்து செய்கிறார்கள் இந்த வெள்ளையள்... பார்த்தியலே..🤢

முந்தி வெள்ளையள் கோம் ஒபீசில் இருந்தப்போ.. எங்கட ஆக்கள்.. பாக்கிஸ்தானி.. இந்தியன் ஆக்களின் சுத்து மாத்து விளங்கிறதில்லை. இப்ப உவையிட வாரிசுகளை வைச்சே வெள்ளை அவைட சுத்து மாத்தைக் கண்டுபிடிச்சு.. சட்டங்களை மாத்துது.. இல்ல திருத்துது.

லண்டனில் அதிகம் பிரித்தானிய பிரஜா உரிமை பெறுவதில்.. சும்மா வீட்டில் இருக்கும் பாகிஸ்தான் பெண்களும்.. இந்தியர்களுமே அதிகம்.. இன்னும். 😊

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this