Jump to content

இந்தோனீசிய தமிழர் உருக்கம்: "நறுமண பொருள்கள், சுற்றுலாவால் வளம் பெற்ற சுலவேசி சுனாமியால் நாசம்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் குவியல் குவியலாக பிணங்கள் கரையில் குவிந்துள்ளன.

சுமார் 1200-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டதாக இந்தோனேசீய அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், பல இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருகிறது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுலவேசி தீவில் உள்ள பல ஹோட்டல்களில் பூட்டப்பட்ட அறைகளில் மக்கள் உயிருடன் இருப்பார்களா என்ற அச்சம் நிலவுகிறது என இந்தோனீசியாவில் வசிக்கும் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த விசாகன் மைலாச்சலம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

வணிகரீதியாக சென்னைக்கும் இந்தோனீசியாவுக்கும் அடிக்கடி பயணம் செய்யும் விசாகன் சுனாமி ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக சென்னைக்கு வந்திருந்தார்.

கடலூரில் இருந்து வேலைக்காக கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனீசியாவுக்கு குடியேறிய விசாகன், சுனாமி பாதிக்கப்பட்ட சுலவேசி தீவில் உள்ள நிலைமை என்ன என பிபிசிதமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

இந்தோனீசியாவின் முக்கியமான ஐந்து பெரிய தீவுகளில் ஒன்று சுலவேசி. ஜாவா, சுமத்ரா, கலிமண்டன், பப்புவா ஆகிய நான்கு தீவுகளைக் காட்டிலும் குறைந்த மக்கள் தொகை இருந்தாலும், சுற்றுலாவாசிகள் அதிகம் வரும் தீவாக இருப்பது சுலவேசி என்கிறார் விசாகன்.

கிராம்பு, முந்திரி, தென்னை, கோகோ என பணப் பயிர்களும், நீண்ட கடற்கரை, அருவிகள் என இயற்கை வளமும் நிறைந்த சுற்றுலாத் தலமான சுலவேசி போர்த்துகீசியர்கள் தொடங்கி ட்ச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலயர்கள் பலரையும் ஈர்த்த தீவு என்கிறார் விசாகன்.

''உழைப்பை மட்டுமே முதலீடாக கொண்டு நம்பிக்கையுடன் வரும் எவருக்கும் வேலைவாய்ப்பை அள்ளிவழங்கிய சுலவேசி தீவு, மோசமான நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவுக்கு நறுமணப்பொருட்கள் மூலமாகவும், சுற்றுலா மூலமாகவும் கணிசமான வருவாயைத்தரும் மாகாணமாக சுலவேசி இருந்தது. தற்போதைய சுனாமி தாக்குதலால் அங்கு இயற்கை வளம், சுற்றுலா என எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன,'' என்கிறார் விசாகன்.

விமான நிலையம், சாலைகள் எல்லாம் இடிபாடுகளை சந்தித்துள்ளன. மின்சார வசதி, குடிநீர், உணவு என அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல், உயிர் பிழைத்தவர்கள், காயம் அடைந்தவர்கள் தற்போதும் அச்சத்தில் உறைந்தவாறு வீதிகளேயே இருக்கின்றனர் என்கிறார் அவர்.

நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சுனாமி அலை எழுந்தபோது, கடலுக்கு இழுத்துச்செல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த காட்சிகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று மேலும் தெரிவிக்கிறார் அவர்.'பாலு தீவில் பின்ஷி திருவிழா என்ற பெயரில் நடக்கும் படகு போட்டி மற்றும் மீன்பிடி போட்டிகள் மிகவும் பிரபலம். செப்டம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் இத்திருவிழா நடைபெறும் என்பதால், உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள், உள்ளுர்வாசிகள் என பெரிய மக்கள் திரள் அங்கு வந்திருந்தது. அமைச்சர்களும் வருவார்கள் என்பதால், கலாசார நிகழ்ச்சிகளுக்காக பல பள்ளிக் குழந்தைகளும் வந்திருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி நினைக்கவே அச்சமாக உள்ளது,'' என்று மிகவும் பாதிக்கப்பட்ட சுலவேசியின் நிலையை விவரித்தார் விசாகன்.

இந்த ஆண்டு தனது உள்ளூர் பயணத்தில் சுலவேசி இடம்பெற்றிருந்ததாகவும், ஆனால் இந்த இயற்கை பேரிடருக்கு பிறகு, அங்கு செல்வது பற்றி தீவிரமாக யோசிப்பதாகவும் அவர் கூறினார்.

சுனாமி தாக்குதலைப் பற்றி அறிந்தபோது, உடனடியாக நண்பர்களிடம் அவர்களின் பாதுகாப்பு குறித்து விசாரித்திருக்கிறார் இவர். ''சுலவேசியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ஜாவா தீவில் லேசான நிலநடுக்கம் இருந்ததாக நண்பர்கள் கூறினார்கள். தமிழ்நாட்டில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்களும், ஆங்கிலேயேர் காலத்தில் இந்தோனேசியாவுக்கு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களின் வம்சாவழிகள் என தமிழ் குடும்பங்கள் வசிக்கும் ஜாவா, சுமத்ரா தீவுகளில் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், அழாகான சுலவேசி தீவு இயற்கைப் பேரிடரை சந்தித்துள்ளது என்ற விஷயம் இந்தோனேசியாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது,'' என்கிறார் விசாகன்.

https://www.bbc.com/tamil/india-45714989

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.