Jump to content

கட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும் - அதிரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி மாநாடுகளும் தமிழர் அரசியலும்

2018 ஒக்டோபர் 02 செவ்வாய்க்கிழமை

-அதிரன்

அரசியல் என்பது நாடு, அரசு, சமூகம், குடிமக்கள், ஆட்சிமுறை, சட்டம் போன்ற அமைப்புகள் மற்றும் அவை சார்ந்த வழக்குப் பொருள்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாகும். 

இன்றைய காலத்தில் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாடச் சாப்பாட்டைக்கூட நினைக்க முடியாத அளவுக்கு, அரசியலின் ஆதிக்கம் வியாபித்திருக்கிறது.

திருக்குறளில் பல தலைப்புகளில் அரசியல் விவரிக்கப்பட்டுள்ளது. பொருட்பாலில் அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என ஆறு இயல்களில் இயற்றப்பட்டுள்ள நாற்பத்தைந்து தலைப்புகளில் 450 குறள்கள் கூறுவதும் அரசியல் பற்றியதாகத்தான் இருக்கிறது. 

image_3dc7583ad7.jpg

சாணக்கியர், தொல்காப்பியர் காலம் தொடங்கி, திருக்குறள் காலம் தாண்டி, ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், அரசியல் வளர்ச்சி பெற்றிருக்கிறதே தவிர, அழிந்துவிடவில்லை. 

மேலை நாடுகளின் மொழிகள், கீழைத்தேச மொழிகள் என, அனைத்து மொழிகளிலும் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, எதுவுமே நடைபெற்றுவிடவில்லை என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. அந்த வகையில், அரசியல் தத்துவம் முன்கொண்டு செல்லப்படுவதாகவே இருக்கிறது. இது வரலாறாகும்.

நவீன காலத்தில், அரசியல் கட்சி என்பது, அரசாங்கத்தின்  அதிகாரத்தை அடைவதையோ அல்லது, வெளியில் எதிர்பினைக் காண்பிக்கின்ற அதேவேளை, அரசாங்கத்தை வழி நடத்துகின்ற தரப்பாக இருந்து கொள்ளும்  நோக்கம் கொண்டு உருவாக்கப்படும் அமைப்பாகவே காணப்படுகிறது. 

அரசியல் கட்சிகள் பொதுவாக, ஒரு வெளிப்படையான கொள்கையையோ, ஒரு குறித்த இலக்குடன் கூடிய நோக்கத்தையோ பொதுவில் கொண்டிருக்கின்றன.

அரசியல்க் கட்சிகள், தமது கொள்கைப் பிரகடனங்களை, தேசிய மகாநாடுகளைக் கூட்டி, வௌிப்படுத்திக் கொள்கின்றன. இது  தேர்தல் நோக்கத்திலும், எதிர்கால அரசியல் நோக்கம் சார்ந்தும் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களாகவே இருக்கும். 

இவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டு, அரசியல் பாலம் அமைக்கப்படுவதுடன், அரசாங்கத்துக்கும் ஏனைய கட்சிகளுக்கும் கூட, இவற்றின் அதிர்வு கொண்டு செல்லப்படும். 

கடந்த சனிக்கிழமை (29), ஞாயிற்றுக்கிழமை ஆகிய வாரத்தின் இறுதி இரண்டு நாள்கள், மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 10ஆவது  தேசிய மகாநாடு, இந்த வகையிலமைந்த ஒன்றாகவே பார்க்க முடிகிறது.

இலங்கை சுதந்திரம் பெற்றுக் கொண்டதிலிருந்து, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் எதுவுமே, தீர்வைப்பெற்றுத் தந்து நிறைவடைந்ததில்லை. அதுபோன்று, 1978களிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போராட்டம், 2009இல் முள்ளிவாய்க்காலில் முடிந்து போனது. என்பது, மனத்தைக் கனக்கச் செய்யும் ஒன்றாகவே கொள்ளப்படுகிறது.

இருந்தாலும், தொடர்ந்து கொண்டிருக்கின்ற அரசியல் ரீதியான முயற்சிகளுக்கு, ஊடாகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறிவிட வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொடுப்பதே, இப்போதுள்ள அரசியல் கட்சிகளின், அரசியல்வாதிகளின் சேவையாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும்.

இராஜதந்திர ரீதியாக, சர்வதேசத்தை நம்பிக்கொண்டு, அரசியல் நடத்தும் நிலைமை, இப்போது இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் ஆகியிருக்கிறது.இதன் வெளிப்பாடு, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 10ஆவது தேசிய மகாநாட்டில் வெளிப்பட்டதைக் காணமுடிந்தது. 

இது ஒன்றும் புதிதாகத் தோன்றிய விடயமில்லை. என்றாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் முதல், தொடர்ந்தும் அதில் அங்கம் வகித்துவரும் கட்சி என்ற வகையில், டெலோ அமைப்புக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தில் முக்கிய பங்கு இருக்கிறது. 

அந்தப் பலத்தின் ஊடாகத் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைப்பதற்கும் அரசியல் தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்தும் வகையிலான, புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்குமான நடவடிக்கைககளை முன்னிலைப்படுத்துவதும் முக்கியமானதாக இருக்கிறது.

அதேவேளை, தமிழர்களின் அரசியல் வரலாறானது துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள், கொலைகள், படுகொலைகள் என்று நீண்டு சென்றதற்கு, தமிழ் அரசியல் கட்சிகள் மீதான, அத்து மீறிய அநியாயங்களும் காரணங்களாக இருந்திருக்கின்றன. 

image_9bd6dda77f.jpg

இதன் அடிப்படையில், தமிழ்த் தேசியம் என்றும் தமிழ்த் தேசிய எதிர்ப்பென்றும் உருவாக்கப்பட்ட இரு தரப்புகள் இப்போது இணைந்து கொண்டாக வேண்டிய கட்டாயம் உணர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த விடயத்தை உள்ளடக்கிய தீர்மானம் டெலோவின் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு, மாகாண அரசு ஆகிய நிர்வாகக் கட்டமைப்புகளால் அதிகாரம் பிரயோகிக்கப்படும் வகையில், சமஷ்டிக் கட்டமைப்பை உருவாக்கமுடியாதா என்ற  விடயம், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்த பேசுபொருளாக இருக்கிறது. 

2007இல் யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னரான காலத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது. இக்கால கட்டத்தில் புலம்பெயர்ந்த, துறைசார் தமிழ் உறவுகளும் இவ்விடயத்தில் கைகொடுத்தனர். இப்போதும் அவர்கள் தங்களுடைய முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம்தான் இருக்கின்றனர்.  ஜனாதிபதி நியூயோர்க்கில் பேசிவிட்டு நாடு திரும்பியிருக்கிறார்.

இவையெல்லாம் நடந்து கொண்டிருந்தாலும், புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில், அரசாங்கம் விரைவு காட்டவில்லை என்ற உண்மையை அனைவரும்  உணர்ந்திருக்கின்றனர். இருந்தாலும், இன்னமும் அதற்கான சரியான உந்துதலைக் கொடுப்பதில், தமிழ்த் தரப்பு தவறியிருக்கிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

அரசமைப்புச் சபை உருவாக்கத்தின் பின்னர், நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டது. விரைவில் அரசமைப்புப் பேரவை, இது தொடர்பான அமர்வை ஆரம்பிக்க இருக்கிறது. இந்த அமர்வுகளின் ஊடாக, புதிய அரசமைப்பு உருவானால் நல்லதே. 

இலங்கைத் தமிழ் மக்களுக்கு, சிறப்பான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கக்கூடிய, தற்போதையை நிலைமையில் அடையக் கூடிய அதியுச்ச அடைவாக இருக்கும் என்ற அடிப்படையில் அதனைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது. 

இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வு, சமஷ்டிக் கட்டமைப்பிலான ஒரு தீர்வாக இருக்க வேண்டும் என்ற தொடர் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுமா என்ற கேள்வியை மாத்திரம் கேட்டுக் கொள்ள முடியும்.

தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைக்கப்படுகின்ற ஒவ்வொன்றும் நிறைவேற்றப்படுகிறதா என்றால், இல்லையென்று பதில் கிடைப்பதுபோல், எல்லா விடயங்களுமே இருந்துவிடக்கூடாது என்றுதான் மக்கள் எல்லோரும் நினைக்கிறார்கள். அரசியல்வாதிகள், நிறைவேற்ற முடியாதவற்றைச் சொல்பவர்களாக இருக்கக்கூடாது என்பதுதான், நியாயமான அரசியலாகும்.

‘சுதந்திரமும், இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ‘ஏக்கிய இராச்சிய’ (ஒருமித்த நாடு) என்னும் குடியரசாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் தொடக்கத்துக்கே முடிவு கிடைக்காமல், இலங்கை அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் கேள்வியாகிக் கொண்டிருக்கையில், நடைபெற்றிருக்கின்ற டெலோவின் தேசிய மகாநாடு கொடுத்திருக்கின்ற எதிர்வினைகள், முடிவுகளை எட்டவேண்டும் என்பதே தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பாகும்.

“இலங்கையின் அரசியல் வரலாற்றில் சர்வதேசத்தினுடைய மேற்பார்வை என்பது, இலங்கை அரசாங்கத்தின் கைகளைக் பிடித்து, தமிழர்களுக்கு ஓர் அரசியல் தீர்வை எழுதித் தரும் தன்மையுடையதல்ல; இணக்கப்பாடென்பது நாட்டுக்குள்ளே தான் ஏற்பட வேண்டும். அந்த இணக்கப்பாடு, மிக நுணுக்கமாக, நிதானமாக, எதிர்மறையான சக்திகள் வெளிக்கிளம்பாத வகையிலானதாக அமையக் கூடியதாக இருக்க வேண்டும். அந்தச் செயற்பாடுகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கிறது” என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

சமஷ்டிக் கட்டமைப்பிலான தீர்வை பெற்றுக் கொள்வதுதான் எமது இலக்கு என்று சொல்லிக் கொண்டு,  செய்யப்படும் நடவடிக்கைகளில் மக்கள் எவ்வளவுக்கு உறுதியாக இருக்கிறார்கள் என்பதில்தான் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. புதிய அரசியல் கட்சிகளும், முன்னாள் அரசில்வாதிகளும் தமிழ் மக்களைத் திசை திருப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுவதும், தமிழ்த் தேசியத்திலிருந்தான  விலகல்களும் ‘வெண்ணெய் திரண்டு வரும் சந்தர்ப்பத்தில் தாழியை உடைக்கும்’ செயற்பாடாகவே கொள்ள வேண்டும்.

image_811bb04a3d.jpg

தமிழ் மக்கள் சார்ந்து, தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட அரசியல் தீர்வில், இதுவரை எட்டப்பட்டுள்ள விடயங்களை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு தமிழ் மக்கள்சார் தரப்புகளின் அறிவு, ஆற்றல், செல்வாக்கு எல்லாவற்றையும் முழுமையாகப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்பதே டெலோவின் மாநாட்டின் பின்னரான, செயற்பாட்டு முன்னேற்றமாக இருக்க வேண்டும்.

மக்களாட்சி வழியிலான அரசியலில், அரசியல் கட்சிகளுக்குப் பல்வேறு கடமைகள் இருந்தாலும், இவை மக்களாட்சி முறையை நிலைத்திருக்கச் செய்யவும், அதைச் சிறப்பாக செயற்படுத்தவும் பெரிதும் உறுதுணையானதாக இருக்க வேண்டும். 

கட்சிகளின் நலன்சார்ந்த வேறுபட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைசார் போராட்டத்துக்கான தீர்வொன்றே இலங்கையின் அரசமைப்பை உருவாக்குவதற்கான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற வகையில், ஒற்றுமையுடனான செயற்பாடு முன்கொண்டு செல்லப்படவேண்டும்.

தமிழினத்தின் பேராதரவுடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், தேசியப் பிரச்சினையாக நீடித்துக் கொண்டிருக்கும் தமிழினத்தின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக, இலங்கை ஒரே நாடு என்ற வரையறைக்குள் தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தக் கூடியதும் தமிழ் மக்களின் மரபுகளின் தாயகமான இணைந்த வடக்கு, கிழக்கு மாநிலத்துக்கு பூரண சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வைக் கொண்டு வரவேண்டும் என்பது எதிர்பார்ப்பான விடயமே.

டெலோவின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், பிரகடன அறிவிப்பை மேற்கொள்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக, சமஷ்டி எனப்படும் இணைப்பாட்சி முறையை ஏற்படுத்துவதற்கான, அரசியல் தீர்வுத் திட்டத்தை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்பு முன்வைக்க அரசாங்கம் தவறுமிடத்து, அரசாங்கத்துக்கு, கடந்த மூன்று ஆண்டு காலமாக எமது கட்சியும், அது அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடாளுமன்றத்தில் அளித்துவரும் ஆதரவை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலையில், அரசியல் தீர்வு தொடர்பான, சகல யதார்த்த பூர்வமான விடயங்களையும் கவனமாகவும் ஆழமாகவும் பரிசீலித்து இந்த மாநாடு தீர்மானிக்கின்றது என்றார்.

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பால் அளிக்கப்பட்டு வரும் ஆதரவை முடிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எந்த அளவுக்குச் சாத்தியம் என்று கேட்டுக் கொள்ளலாம்.

அதேபோன்று, தமிழினத்தின் தாயகத்தில் செயற்படும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு, ஒரே அணியாகச் செயற்படுவதன் மூலமே ஒன்றுபட்ட தமிழ்த் தேசிய அரசியல் பலத்தின் ஊடாக, எம்மக்களின் அரசியல் வென்றெடுக்க முடியும். இதை வலியுறுத்தி, தமிழ்த் தேசியத்தை முன்நிறுத்தி நிற்கும் சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் இணையுமாறு இம்மாநாடு அறைகூவல் விடுத்தது. இந்த அழைப்புக்கு முடிவு சாதகமாக இருக்குமா?

நியாயமானதும், யதார்த்த பூர்வமானதுமான கால வரையறைக்குள் அரசியல் தீர்வொன்றை, ஒருமைப்பாட்டுக்குள் வென்றெடுக்க சாத்தியமில்லாதவிடத்து, எமது பிரச்சினையை உலக அரங்கின் முன் சமர்ப்பித்து, சர்வதேச சட்டத்தின் கீழ், தமிழ்த் தனித்தேசிய இனம் என்ற அடிப்படையில், பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில், ஐ.நா சபை ஊடாக சர்வஜன வாக்கெடுப்பை, தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வெளிநாடுகளுக்குச் சென்று, வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் நடத்தபட வேண்டும் என்ற அரசியல் தீர்மானத்தைச் செயற்படுத்த அனைத்துத் தமிழ்த் தேசிய சக்திகளும் முன்வர வேண்டும்.

போர்க்குற்ற விசாரணை விடயத்தில், தமிழினத்தின் தரப்பில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்கோ சமரசத்துக்கோ இடமில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கும் இத்தேசிய மாநாடு, 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாடுகளை எற்றுக் கொண்ட தீர்மானங்களை, அமுல்படுத்தத் தவறுமிடத்து, ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணையை நடத்த முன்வர வேண்டும் என்று, இம்மாநாடு ஐக்கிய நாடுகள் சபையையும் வலியுறுத்துகின்றது என்று டெலோ அமைப்பு கோரியுள்ளது.

‘நியாயமான அரசியல் தீர்வுக்காக’ என்று மாற்றம் பெற்றுள்ள தமிழர்களின் இனப்பிரச்சினைசார் போராட்டங்களின்அல்லது அணுகுமுறைகளின் தொடர்ச்சியில், இன்னும் எத்தனை காலம்தான் முற்றுப்புள்ளிக்காகக் காத்திருப்பது? 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கட்சி-மாநாடுகளும்-தமிழர்-அரசியலும்/91-222867

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.