Jump to content

அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம்- சட்­டமா அதி­ப­ரு­டன் இன்று பேச்சு!!


Recommended Posts

அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம்- சட்­டமா அதி­ப­ரு­டன் இன்று பேச்சு!!

 

தமிழ் அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் தொடர்­பில் சட்­டமா அதி­பர், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆகியோருக்கிடை­யி­லான மிக முக்­கிய சந்­திப்பு இன்று மாலை 3 மணிக்கு அலரி மாளி­கை­யில் நடை­பெ­ற­வுள்­ளது.

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் குறு­கிய கால மறு­வாழ்வு வழங்கி விடு­விக்க வேண்­டும் என்று கோரி கடந்த 14ஆம் திகதி முதல் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ள­னர். 10 பேர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

அவர்­க­ளில் இரு­வர் நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள். அநு­ரா­த­பு­ரம் பொது மருத்­து­வ­ம­னை­யில் அவர்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்­கள். ஏனை­யோர் அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­றார்­கள். அவர்­க­ளுக்கு காலை­யும் மாலை­யும் சேலைன் ஏற்­றப்­ப­டு­கின்­றது. உடல் நிலை மோச­டைந்­தும் வரு­கின்­றது.

அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் தொடர்­பில் கடந்த 18ஆம் திகதி தலைமை அமைச்­ச­ரு­டன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் பேச்சு நடத்­தி­யி­ருந்­தார். சட்­டமா அதி­ப­ரு­டன் பேசியே முடிவு செய்­ய­லாம் என்று தலைமை அமைச்­சர் குறிப்­பிட்­டி­ருந்­தார். அந்­தச் சம­யத்­தில் சட்­டமா அதி­பர் நாட்­டில் இருக்­க­வில்லை. அவர் நேற்று நாடு திரும்­பி­னார்.

இந்த நிலை­யில் இன்று மாலை 3 மணிக்கு அல­ரி­மா­ளி­கை­யில் சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தச் சந்­திப்பு நீதி அமைச்­ச­ரும் அழைக்­கப்­ப­ட­லாம் என்று தெரி­கின்­றது.

https://newuthayan.com/story/09/அர­சி­யல்-கைதி­கள்-விவ­கா­ரம்-சட்­டமா-அதி­ப­ரு­டன்-இன்று-பேச்சு.html

Link to comment
Share on other sites

உண்ணாவிரதக் கைதிகளின் கோரிக்கை நியாயமானதே! – விரைவில் சாதகமான தீர்வு என்கிறார் பிரதி நீதி அமைச்சர்

0d2d9cd01683688bc91c063ca422a320?s=48&d=

unnamed-13-300x300.jpg“அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை நியாயமானதே. எனவே, அவர்களின் பிரச்சினைக்கு விரைவில் சாதகமான தீர்வு கிடைக்கும்.”

– இவ்வாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் துஷ்மந்த மித்திரபால தெரிவித்தார்.

வழக்குத் தொடுக்கப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர்களின் விவரங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தம்மை குறுகிய கால புனர்வாழ்வு வழங்கியாவது விடுவிக்குமாறு கோரி கடந்த 14ஆம் திகதியிலிருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 4 பேர் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்குமா என்று பிரதி அமைச்சர் துஷ்மந்தவிடம் வினவியபோது அவர் அளித்த பதில் வருமாறு:-

“வழக்குத் தொடுக்கப்பட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களையே சிறைகளில் தடுத்துவைக்க முடியும். எனினும், சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு எதிராக இன்னும் வழக்குத் தொடுக்கப்படவில்லை. அவ்வாறு வழக்குத் தொடுத்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறே கைதிகள் கோருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானது.

உண்ணாவிரதப் போராட்டத்தில்; ஈடுபட்டுள்ள கைதிகளின் விவரங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. வழக்குத் தொடுத்து விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்” – என்றார்.

அதேவேளை, கைதிகளின் தற்போதைய உடல் நிலை குறித்து சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உபுல் தெனியவிடம் வினவியபோது, “கைதிகளின் போராட்டம் தொடர்கின்றது. அவர்கள் உண்ண மறுக்கின்றனர்” என்று கூறினார்.

http://www.newsuthanthiran.com/2018/09/26/உண்ணாவிரதக்-கைதிகளின்-கோ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.