Jump to content

இந்திய நாளிதழ்களில் இன்று......ஜெயலலிதா வீட்டில் 2016 செப்டம்பர் 22-ந்தேதி நடந்தது என்ன?


Recommended Posts

ஜெயலலிதா வீட்டில் 2016 செப்டம்பர் 22-ந்தேதி நடந்தது என்ன?

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'ஜெயலலிதா வீட்டில் 2016 செப்டம்பர் 22ஆம் தேதி நடந்தது என்ன?'

'ஜெயலலிதா வீட்டில் 2016 செப்டம்பர் 22-ந்தேதி நடந்தது என்ன?'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி நடந்தது என்ன? என்ற மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"ஆணையத்தில் நான் ஏற்கனவே அளித்த சாட்சியத்தின் தொடர்ச்சியாக சில சந்தேகங்களை எழுப்பினேன். போயஸ் கார்டனில் ஜெயலலிதா கீழே விழுந்தார் என்பது சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபணமாகி இருக்கிறது. போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதாவை ஆம்புலன்சில் கொண்டு சென்றது யார்? ஆம்புலன்சுக்கு போன் செய்தது யார்? என்ற மர்மம் நீங்கவில்லை.

போயஸ் கார்டனில் ஜெயலலிதா கீழே விழுந்த போது, வீட்டின் உள்ளே சசிகலாவுடன் 2 பணிப்பெண்கள் இருந்துள்ளனர். அந்த பணிப்பெண்கள் எங்கே? அவர்கள் ஏன் விசாரிக்கப்படவில்லை. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் யாரையும் அனுமதிக்கவில்லை என்பதை எடுத்துரைத்துள்ளேன்.

ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆம்புலன்சில் சென்றபோது, ஜெயலலிதா மயங்கிய நிலையில் எடுத்து சென்றதாக சாட்சியங்கள் கூறி உள்ளனர். இது சசிகலா சொன்ன வாக்குமூலத்துக்கு எதிராக உள்ளது. சசிகலாவின் பிரமாண பத்திரத்தில், ஆம்புலன்சில் சென்றபோது, ஜெயலலிதா "நான் எங்கே போகிறேன்" என்று கேட்டதாக குறிப்பிட்டு உள்ளார். மயக்க நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி வரை கொண்டு செல்லப்பட்டதாக மற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்." என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகிய பின் செய்தியாளர்களிடம் மனோஜ் பாண்டியன் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line

'பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை'

பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட்டு பணிஇடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்கிறது மற்றொரு செய்தி.

கோப்புப் படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"சத்தியமங்கலம் கோர்ட்டில் திருமணம் ஆன இளம்பெண் ஒருவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். அந்த பெண்ணுக்கு மாஜிஸ்திரேட்டு ராஜவேலு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஒருநாள் ராஜவேலு செல்போனில் பாலியல் ரீதியாக பேசியதை பெண் வக்கீல் பதிவு செய்துகொண்டார். அதன்பின்னர் அந்த பேச்சு பதிவையும், நடந்தவைகளையும் மனுவாக எழுதி சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் புகார் அளித்தார். இதுபற்றி ராஜவேலுவிடம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர். அதன்பின்னர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line

இந்து தமிழ் - 'கருணாஸின் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து'

கருணாஸின் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து இருப்பதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

'கருணாஸின் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து'படத்தின் காப்புரிமைYOUTUBE

"சட்டத்தின் முன் அனைவரும் சமம். கருணாஸைப் பொறுத்தவரை ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் அவரது பேச்சு இருந் தது. இதை ஆரம்ப நிலையிலேயே களையெடுக்க வேண்டும். சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மொழி, ஜாதி, மதப் பிரச்சினை இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர் பொறுப்பு மிகப்பெரியது. அரசியலமைப்பு சட்டப்படி பதவி யேற்றவர்கள் அதை மதிக்க வேண் டும். பதவியேற்கும்போது ஜாதி மதத் துக்கு அப்பாற்பட்டவனாக இருப்பேன் என்றுதான் பதவி ஏற்கின்றனர். அதை அவர் கடைபிடிக்கவில்லை.

இந்த போக்கால் அவரது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியே கேள்விக்குறியாகி உள்ளது. அவர் ஏன் சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்க வேண்டும் என்று மற்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பால்தாக்கரே ஒருமுறை இதுபோன்ற கருத்தை கூறியபோது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பால்தாக்கரேவின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டது." என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey linePresentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'குட்கா ஊழல்: தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கைது'

குட்கா வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் திங்கட்கிழமை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி இ சிவக்குமாரை கைது செய்துள்ளனர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. இந்த வழக்கில் இது ஆறாவது கைதாகும். சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவகுமாருக்கு அக்டோபர் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line Presentational grey line Riverபடத்தின் காப்புரிமைஇந்து தமிழ் Presentational grey line

தினமணி: 'மூச்சுத் திணறுகிறது!'

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு பெண் உட்பட 10 துப்புரவுத் தொழிலாளிகள் கழிவுநீர் தொட்டிகளையும், கழிவுநீர் வடிகால்களையும் துப்புரவு செய்யும்போது விஷவாயு தாக்கி இறந்திருக்கிறார்கள். எந்தவிதப் பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கியதால்தான் அவர்கள் மரணமடைய நேரிட்டது என்கிறது தினமணி நாளிதழ் தலையங்கம்.

"நம்மால் செவ்வாய் கிரகத்துக்கும் சந்திரனுக்கும் விண்வெளிக்கலங்களை செலுத்தும் அளவுக்குத் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைய முடிந்திருக்கிறது என்பது பெருமைக்குரிய சாதனைதான். ஆனால், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு விஷவாயு தாக்காமல் இருப்பதற்கான அடிப்படைப் பாதுகாப்புக் கவசங்களைக்கூட வழங்க முடியாத நிலைமை காணப்படுவது எத்தகைய நகைமுரண்? எந்தவித பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் தொடரும் வரை, தூய்மை இந்தியா திட்டமும், கழிப்பறைகள் கட்டும் திட்டமும் நடைமுறைப்படுவதில் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது? இந்தியா எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னை துப்புரவுத் தொழிலாளர்களின் மரணம்தான். இது தொடரும் வரை மானுட சமுதாயத்தின் முன்னால் நமக்குத் தலைகுனிவுதான்." என்கிறது அந்த தலையங்கம்.

https://www.bbc.com/tamil/india-45648484

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.