Jump to content

விரிவுரையாளரின் இறுதி ஊர்வலத்தில்- பெண்கள் அமைப்பு கவனவீர்ப்பு!!


Recommended Posts

விரிவுரையாளரின் இறுதி ஊர்வலத்தில்- பெண்கள் அமைப்பு கவனவீர்ப்பு!!

 

 

காணாமல் போயிருந்த நிலையில் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் வவுனியா கற்குளத்தில் இன்று நடைபெற்றது.

இறுதி ஊர்வலத்தில், கிராமப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனவீர்ப்பும் இடம்பெற்றது.

இதில் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் , திருகோணமலை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் , ஊழியர்கள், மாணவர்கள் , தமிழ் விருட்சம் அமைப்பினர் , வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் , அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

received_321609305281000-750x430.jpegreceived_302498427216906-750x430.jpegreceived_237405850273251-750x430.jpegreceived_2112827068934852-750x430.jpegreceived_1918548798452959-750x430.jpegreceived_1157996984368409-750x430.jpegreceived_924175687780045-750x430.jpegreceived_592828361134147-750x430.jpeg

https://newuthayan.com/story/16/விரிவுரையாளரின்-இறுதி-ஊர்வலத்தில்-பெண்கள்-அமைப்பு-கவனவீர்ப்பு.html

Link to comment
Share on other sites

துரோகத்தால் தொலைக்கப்பட்டாய்

 பெண் விரிவுரையாளரின் மரணவீட்டில் குடும்பத்தினர் ஏந்தியிருந்த பதாகைகள்

03.jpeg?resize=800%2C453

 

திருகோணமலையில் கடந்த 22.09.2018 அன்று உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகியின் இறுதிச்சடங்கு இன்று வவுனியா கற்குளத்தில் உள்ள அவரது பெற்றோரின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் பதாகைகளை ஏந்தி, நீதி கோரிய போராட்டம். ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இவரது தந்தை தும்புமிட்டாயும் மாங்காயும் விற்று தனது மகளை கற்பித்து ஒரு சிறந்த கல்வியாளராக உருவாக்கிய பெற்றோர் தமது மகள் தனது பெயர் புகழ் பணம் அனைத்தையும் இழந்து கடன்காரியாகவும் சடலமாகவும் மீண்டிருப்பதாகவும் இதன்போது தமது ஆதங்களை வெளிப்படுத்தினர். மரணச்சடங்கில் கலந்துகொண்ட அனைவரும் போதநாயகியின் குடும்பத்தின் மனக்குமுறலை கேட்டு கண்ணீர் விட்டனர்.

படங்கள் – இணையம்

01.jpeg?resize=800%2C45002.jpeg?resize=800%2C450  04.jpeg?resize=800%2C45005.jpeg?resize=800%2C45006.jpeg?resize=800%2C450

http://globaltamilnews.net/2018/96924/

Link to comment
Share on other sites

பெறுமதிமிக்க போதநாயகிகளின் மரணங்களை தற்கொலையாகவே கடந்து போவதா?

Pothanayaki-last.jpg?resize=800%2C600

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராசாவின் தற்கொலை வடக்கு கிழக்கில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. இன்று வவுனியாவில் இடம்பெற்ற அவரது இறுதிக் கிரியைகள் நீதிக்கான ஒரு போராட்டமாகவே அமைந்திருந்தது.

 

மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் போதநாயகி. அவருடைய தந்தையார் தும்புமுட்டாஸ் விற்றே பிள்ளைகளை வளர்த்துள்ளார். வறுமையும் போராட்டமும் நிறைந்த வாழ்வில் ஒரு விரிவுரையாளராகபோதநாயகி வளர்ந்திருப்பது அவரது சாதனையையும் ஓர்மத்தையும் காட்டுகிறது.

எனினும் தற்கொலை என்ற முடிவுக்கு போதநாயகி தள்ளப்பட்டிருப்பது எமது சமூகத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு. இதனை வெறுமனே தற் கொலையாக கடந்து செல்லுவது எதிர்காலத்தில் மேலும் பல போதநாயகிகளை உருவாக்கும் என்ற அபாயத்தினையும் நாம் உணர வேண்டும்.

இவர் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாகவும் இவரது கணவரால் ஏற்பட்ட மனவுளைச்சல் காரணமாகவும் கணவரின் புரிதலும் அன்பும் கிடைக்காமை காரணமாகவும் தற்கொலை செய்து கொள்வதற்கான வாக்குமூலமாக இறுதியாக கவிதை ஒன்றை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

துரோகத்தனத்தால் போதநாயகி தொலைக்கப்பட்டார் என்றும் அவர் கல்விச் சாதனைகளை இழந்து கடன்காரியாகவும் சடலமாகவும் எஞ்சியுள்ளதாக இன்று அவரது வீட்டில் இடம்பெற்ற இறுதிக் கிரியைகளின்போது குடும்பத்தினரும், மக்களும் ஏந்தியிருந்த பதாகைகளில் எழுதப்பட்டுள்ளன.

பல்வேறு நெருக்கடிகளை கடந்து சாதித்த போதநாயகியின் குடும்ப வாழ்வு எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்திருப்பதை அவர் இறுதியாக எழுதிய கவிதை வெளிப்படுத்துகிறது. திருமணமாகி ஐந்து மாதங்களில், வயிற்றில் மூன்று மாதக் குழந்தையுடன் தன்னை மாய்க்க அவர் எண்ணியிருப்பது என்பது சாதாரணமான விரக்தியல்ல.

இவரது மரணத்தையும் இவரது இறுதிக் கவிதையையும் இன்று போதநாயகியின் வீட்டில் ஏந்தப்பட்டிருந்த பதாகைகளையும் அவ்வளவு எளிதாக நாம் கடந்து சென்றால், இத்தகைய சமூக அவலங்களுக்கு தொடர்ந்தும் வழி சமைப்பதாகவே அமையும்.

எனவே போதநாயகியின் தற்கொலைக்கு என்ன காரணம்,? அவர் தற்கொலை செய்ய எது? யார் துண்டுதலாய் இருந்தனர் என்பது தொடர்பில் உண்மைகள் வெளி வரவேண்டும். தமிழ் தேசிய முகத்தையும் கொண்டும், கலைஞர் என்ற புகழைக் கொண்டும் இவைகளை முடி மறைப்பதை அனுமதிப்பது பெரும் ஆபத்தை கொண்டது.

செய்தியாக்கம்- வவுனியாவிலிருந்து குளோபல் தமிழ் செய்தியாளர்

http://globaltamilnews.net/2018/96935/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.