Jump to content

உரிமைகளைக் கேட்டால் -பயங்கரவாதிகள் என்கின்றனர்- வடக்கு முதல்வர்!!


Recommended Posts

உரிமைகளைக் கேட்டால் -பயங்கரவாதிகள் என்கின்றனர்- வடக்கு முதல்வர்!!

 

 

தமிழ் மக்­கள் தமது உரி­மை­க­ளைக் கேட்­டால் பயங்­க­ர­வாதி, தீவி­ர­வாதி, புலி என்று நாமஞ் சூட்டி அவர்­கள் வாய்­களை அடைத்து விடு­கின்­றார்­கள். இத­னால்த்­தான் எம் தலை­வர்­கள் எமக்­கேன் இந்த வம்பு? என்று ஆற்­றுப்­ப­டுத்­த­லுக்­குள் அகப்­பட்டு நிற்­கின்­றார்கள்.

இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

சிப்­பிக்­குள் முத்து நூல் வெளி­யீட்டு விழா கொழும்­பில் நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இரண்டு நாள்­க­ளுக்கு முன்­னர் ஒரு பத்­தி­ரி­கைச் செய்தி வாசித்­தேன். ‘இன்று வடக்­கில் செயற்­ப­டும் ஆவாக்­குழு உறுப்­பி­னர்­கள் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரின் முன்­னாள் புலி உறுப்­பி­னர்­களே. விடு­த­லைப்­பு­லி­க­ளின் சிந்­தனை, இன­வா­தம் மற்­றும் ஈழப் பிரி­வினை வாதத்தை அவர் அங்­குள்ள இளை­யோர் மத்­தி­யில் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார், என்று பொது எதி­ரணி உறுப்­பி­னர் ஒரு­வர் கூறி­ய­தா­கச் செய்­தி­யைக் கண்­டேன். இதன் தாற்­ப­ரி­யம் என்ன?

தமிழ் மக்­கள் தமது உரி­மை­களை, உரித்­துக்­களை, தன்­மா­னத்தை எப்­பொ­ழுது வலி­யு­றுத்­தப் பார்க்­கின்­றார்­களோ அப்­போது அவ்­வா­றான காரி­யங்­க­ளில் ஈடு­ப­டு­வோர்­க­ளைத் தீவி­ர­வா­தி­கள் என்றோ, பயங்­க­ர­வா­தி­கள் என்றோ, புலி­கள் என்றோ, வன்­மு­றை­யைத் தூண்டி விடு­ப­வர்­கள் என்றோ, நாட்­டைப் பிரிப்­ப­வர்­கள் என்றோ அவர்­களை அடை­யா­ளப்­ப­டுத்தி அவர்­க­ளைப் பின்­வாங்க வைத்­து­வி­டு­வார்­கள். இதற்­குப் பயந்தே எமது தமிழ்த் தலை­வர்­கள் பெரும்­பான்­மை­யி­னர் தரு­வ­தா­கக் கூறும் அர­சி­யல் தீர்­வு­க­ளுக்­குச் சம்­ம­தம் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

பிரச்சினை எமது, பாதிக்­கப்­பட்­டோர் நாங்­கள், எமது வருங்­கா­லமே எமது கரி­சனை ஆனால் தீர்­வா­னது தம்­மால்த்­தான் தரப்­பட வேண்­டும் என்ற மனோ­நி­லை­யில் பெரும்­பான்­மை­யி­னர் இருக்­கின்­றார்­கள்.

சிறு­பான்­மை­யி­னரை அடக்கி ஆள வேண்­டும் என்ற எண்­ணங்­க­ளி­லி­ருந்து இன்­றும் மாற­வில்லை. தம்மை மாற்­றவோ, உண்­மையை உண­ரவோ, உலக நாடு­க­ளின் மனித உரி­மைக் கோட்­பா­டு­களை மதிக்­கவோ அவர்­கள் இப்­பொ­ழு­தும் தயா­ரில்லை. மனி­தப் படு­கொலை செய்த இரா­ணு­வத்­தி­னரை தண்­டிக்­கப்­ப­டாது என்­பதே எமது அரச தலை­வ­ரின் திட­மான எதிர்­பார்ப்பு.

அதா­வது இந்த நாடு எங்­க­ளு­டை­யது. சிறு­பான்­மை­யி­னர் வந்­தேறு குடி­கள். மரத்­தைச் சுற்றி வள­ரும் கொடி­கள் போன்று எமக்கு அனு­ச­ர­ணை­யாக சிறு­பான்­மை­யி­னர் இந்த நாட்­டில் வாழ வேண்­டுமே ஒளிய தமக்­கென உரித்­துக்­கள் எவற்­றை­யும் பெற எத்­த­னிக்­கப்­ப­டாது என்­பதே அவர்­கள் கருத்து – என்­றார்.

https://newuthayan.com/story/09/உரிமைகளைக்-கேட்டால்-பயங்கரவாதிகள்-என்கின்றனர்-வடக்கு-முதல்வர்.html

 

 

இரா­ணுவம் தண்­டிக்­கப்­ப­டக்­கூ­டாது என்­பதே ஜனா­தி­ப­தியின் திட­மான எதிர்­பார்ப்பு

City-Page-01-ColorGMGPage1Image0015-2bb65beed38710242037e62f838477cf424b965d.jpg

 

(எம்.சி.நஜி­முதீன்)

இந்த நிலையில் உரி­மை­யினைக் கேட்டால் தீவி­ர­வாதி என்­கின்­றனர்; சி.வி. விசனம்

மனிதப் படு­கொலை செய்த இரா­ணு­வத்­தி­னரை தண்­டிக்­கக்­கூ­டாது என்­பதே எமது ஜனா­தி­ப­தியின் திட­மான எதிர்­பார்ப்பு. இப்­பேர்ப்­பட்ட சூழ்­நி­லை­யில்தான் தமிழ் மக்கள் தமது உரி­மை­களைக் கேட்டால் பயங்­க­ர­வாதி, தீவி­ர­வாதி,

 புலி என்று நாமஞ் சூட்டி அவர்­களின் வாய்­களை அடைத்து விடு­கின்­றார்கள். பிரச்­சினை எங்­க­ளு­டை­யது, பாதிக்­கப்­பட்­டோரும் நாம்தான். நமது வருங்­கா­லமே எமது கரி­ச­னைதான். ஆனால் தீர்­வா­னது தம்­மால்தான் தரப்­பட வேண்டும் என்ற மனோ­நி­லையில் பெரும்­பான்­மை­யினர் உள்­ளனர்.

அத்­துடன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றச்­சாட்­டுக்­காக தன்னைக் குற்­ற­வாளிக் கூண்டில் ஏற்ற பிர­யத்­த­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

இந்து சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் வெளி­யீ­டாக வந்­துள்ள அமரர் கி.லக்ஷ்­மணன் எழு­திய கட்­டு­ரை­களின் தொகுப்பு “சிப்­பிக்குள் முத்து” நூல் வெளி­யீட்டு விழா நேற்று மாலை பம்­ப­லப்­பிட்டி சரஸ்­வதி மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு சிறப்­புரை நிகழ்த்­தும்­போதே இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

சரித்­தி­ரத்தைத் திரி­வு­ப­டுத்தி பிழை­யான வர­லா­று­களைப் பரவ விட்டு பெரும்­பான்மை இனக்­க­லா­சா­ரத்தை உட்­பு­குத்தத் துடிக்கும் பெரும்­பான்­மை­யின அர­சி­யல்­வா­தி­க­ளிடம் உண்­மையைக் கூற விழைந்தால் தாராக்­களின் உடல் மேல் தண்ணீர் ஊற்­றி­யது போல் சறுக்கிப் போய்­வி­டு­கி­றது. அது மாத்­தி­ர­மல்­லாது உண்­மையை அவர்­க­ளுக்குப் புரிய வைக்க எத்­த­னிப்­பதை ஒரு பார­தூ­ர­மான குற்­ற­மென அவர்கள் கூக்­குரல் இடு­வதை எம்மால் தடுக்க முடி­யாது போய்­வி­டு­கி­றது.

நாம் ஒற்­றுமை பற்றி இப்­பொ­ழுதும் கூறிக்­கொண்­டுதான் இருக்­கின்றோம். ஆனால் ஒற்­றுமை வந்­த­பா­டில்லை. எமது மனோ­பா­வங்­களும், மனங்­களும், நோக்­கு­களும் மாற­வில்லை. ஏனென்றால் இருக்கும் எமது சிந்­த­னை­களை மாற்றக் கார­ணங்கள் ஏதும் எழ­வில்லை. சில தரு­ணங்­களில் ஒரு பாரிய விபத்து அல்­லது பேரா­பத்து எங்கள் மனங்­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­துண்டு.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமிப் பேரலை ஏற்­பட்­ட­போது சுமார் மூன்று நாட்கள் புலி­களும் அரச படை­க­ளைளும் சேர்ந்து மக்­க­ளுக்கு உதவி புரிந்­தனர். தம்முள் வேறு­பா­டின்றி பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவி புரிந்­தார்கள். ஆனால் அதன் பின் நிலை­மைகள் மாறி­விட்­டன.

அர­சியல் களத்தில் முன்னர் நடந்து கொண்ட விதத்தைப் பின்­பற்­றியே இன்றும் காய்கள் நகர்த்­தப்­பட்டு வரு­கின்­றன. “ஆவாக்­குழு உறுப்­பி­னர்கள் வட­மா­காண முத­ல­மைச்­சரின் முன்னாள் புலி உறுப்­பி­னர்­களே. விடு­த­லைப்­பு­லி­களின் சிந்­தனை, இன­வாதம் மற்றும் ஈழப் பிரி­வி­னை­வா­தத்தை அவர் அங்­குள்ள இளைஞர், யுவ­திகள் மத்­தியில் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கின்றார்” என கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்­ததை ஊடகம் மூலம் அறிந்து கொண்டேன்.

தமிழ் மக்கள் தமது உரி­மை­களை, உரித்­துக்­களை, தன்­மா­னத்தை எப்­பொ­ழுது வலி­யு­றுத்தப் பார்க்­கின்­றார்­களோ அப்­போது அவ்­வா­றான காரி­யங்­களில் ஈடு­ப­டு­வோர்­களைத் தீவி­ர­வா­திகள் என்றோ, பயங்­க­ர­வா­திகள் என்றோ, புலிகள் என்றோ, வன்­மு­றையைத் துண்டி விடு­ப­வர்கள் என்றோ, நாட்டைப் பிரிப்­ப­வர்கள் என்றோ அடை­யா­ளப்­ப­டுத்தி அவர்­களைப் பின்­வாங்க வைத்­து­வி­டு­வார்கள். இதற்குப் பயந்தே எமது தமிழ்த் தலை­வர்கள் பெரும்­பான்­மை­யினர் தரு­வ­தாகக் கூறும் அர­சியல் தீர்­வு­க­ளுக்குச் சம்­மதம் தெரி­வித்து வரு­கின்­றனர்.

பிரச்­சினை எங்­க­ளு­டை­யது, பாதிக்­கப்­பட்­டோரும் நாம்தான். எமது வருங்­கா­லமே எமது கரி­ச­னைதான். ஆனால் தீர்­வா­னது தம்­மால்தான் தரப்­பட வேண்டும் என்ற மனோ­நி­லையில் பெரும்­பான்­மை­யினர் இருக்­கின்­றார்கள்.

1919ஆம் ஆண்டில் சேர் பொன்­னம்­பலம் அரு­ணா­சலம், அப்­போ­தைய பெரும்­பான்­மை­யினத் தலை­வர்­களால் ஏமாற்­றப்­பட்ட காலத்தில் இருந்து அரச அதி­கா­ரத்தைப் பெரும்­பான்­மை­யினர் தம்­கை­வசம் ஆக்கிக் கொண்­டார்கள்.

சிறு­பான்­மை­யி­னரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்­ணங்கள் அவர்­க­ளி­டையே வலுப்­பெற்­றன. அந்த நிலை இன்றும் மாற­வில்லை. தம்மை மாற்­றவோ, உண்­மையை உண­ரவோ, உலக நாடு­களின் மனித உரிமைக் கோட்­பா­டு­களை மதிக்­கவோ அவர்கள் இப்­பொ­ழுதும் தயா­ரில்லை. மனிதப் படு­கொலை செய்த இரா­ணு­வத்­தி­னரை தண்­டிக்­கப்­ப­டாது என்­பதே எமது ஜனா­தி­ப­தியின் திட­மான எதிர்­பார்ப்பு. இப்­பேர்ப்­பட்ட சூழ்­நி­லை­யில்தான் தமிழ் மக்கள் தமது உரி­மை­களைக் கேட்டால் பயங்­க­ர­வாதி, தீவி­ர­வாதி, புலி என்று நாமஞ் சூட்டி அவர்கள் வாய்­களை அடைத்து விடு­கின்­றார்கள்.

இந்த நாடு எங்­க­ளு­டை­யது. சிறு­பான்­மை­யினர் வந்­தேறு குடிகள். மரத்தைச் சுற்றி வளரும் கொடிகள் போன்று எமக்கு அனு­ச­ர­ணை­யாக சிறு­பான்­மை­யினர் இந்த நாட்டில் வாழ வேண்­டுமே ஒளிய தமக்­கென உரித்­துக்கள் எவற்­றையும் பெற எத்­த­னிக்­கக்­கூ­டாது என்­பதே பெரும்­பான்­மை­யி­னரின் கருத்­தாகும்.

நாட்­டுக்குள் வரும் வெளி­நாட்டுப் பய­ணி­க­ளிடம் “உல­கி­லுள்ள சிறப்­ப­னைத்­துக்கும் நாமே உறை­விடம். எமது பாரம்­ப­ரியம் 2500 வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்­டது. தமி­ழர்கள் 10 ஆம் நூற்­றாண்டில் சோழர் காலத்­திலே வந்­தே­றிய குடிகள்” என்று கூறப்­ப­டு­கி­றது.

எனினும் உண்­மை­யென்ன? சிங்­கள மொழி பிறந்­ததே கி.பி 6 ஆம் அல்­லது 7ஆம் நூற்­றாண்­டி­லே­யேதான். அதற்கு முன்னர் சிங்­கள மொழி பேசுவோர் இந் நாட்டில் இருக்­க­வில்லை. மகா­வம்சம் கூட பாளி­மொ­ழி­யி­லேயே எழுதப்பட்டது. கி.பி 6 ஆம், 7ஆம் நூற்றாண்டிலேயே அம் மொழி பேசும் மக்கள் கூட்டம் அடையாளப்படுத்தப்பட்டது என்றால் சிங்களப் பாரம்பரியம் 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று எவ்வாறு கூறுவது?

இவற்றை கேட்க விடாமல் பண்ணவே எங்கள் வாய்கள் அடைக்கப்படுகின்றன. வன்முறைகள் ஏவப்படுகின்றன. ஆகவே ஒற்றுமைக்கு வழியைப் பெரும்பான்மை மக்களே தமது சிந்தனை மாற்றத்தால் உண்டுபண்ண வேண்டும். மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக என்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-24#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

நேர்மைக்கு காலமில்லை. சம்பந்தர் போல சுத்த  தெரிய வேண்டும்.

அந்தாள் இவ்வளவுகாலம் அரசியலில் இருந்தது அரசியல் மூலம் எப்படி தமிழ்மக்களை சுத்தி மடையர்கள் ஆக்குவது என்பது மட்டுமே மற்றபடி சிங்கள பக்கம் போனால் நாலுகால் ஜீவன் போல் திரிஞ்சு பதவியை காப்பாற்றி கொண்டு நிக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒன்றினைந்து ஏகமனதாக கேட்டிருக்கா வேண்டும். நிச்சயமாக கிடத்திருக்கும்.

குழுக்களாக பிரிந்து ஆயுதம் தூக்கி ஒற்ருமையின்றி போனால் இப்படித்தான் இப்படித்தானே உலகம் கூறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

எல்லாம் ஒன்றினைந்து ஏகமனதாக கேட்டிருக்கா வேண்டும். நிச்சயமாக கிடத்திருக்கும்.

குழுக்களாக பிரிந்து ஆயுதம் தூக்கி ஒற்ருமையின்றி போனால் இப்படித்தான் இப்படித்தானே உலகம் கூறும்.

சார்! :104_point_left:

தமிழர்  விடுதலைக்கூட்டணியை  இலங்கை தமிழ்மக்கள்    எல்லோரும் ஒருங்கிணைந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சார்! :104_point_left:

தமிழர்  விடுதலைக்கூட்டணியை  இலங்கை தமிழ்மக்கள்    எல்லோரும் ஒருங்கிணைந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அவருக்கு அதெல்லாம் புதுசு நினைவுக்கு வராது ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.