Jump to content

மெத்தியூஸை விலகுமாறு வேண்டுகோள் : சந்திமாலை தலைவராக்க தீர்மானம்


Recommended Posts

மெத்தியூஸை விலகுமாறு வேண்டுகோள் : சந்திமாலை தலைவராக்க தீர்மானம்

இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

angel.jpg

இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கையை தலைமை தாங்குவதற்காகவே சந்திமல் நியமிக்கப்படவுள்ளார்.

இந்நிலையில் அணித்தலைவராக செயற்பட்டுவரும் அஞ்சலோ மெத்தியூஸை ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/41042

Link to comment
Share on other sites

“ஆசியக்கிண்ணத் தோல்விகளுக்கு நான் பலிக்கடா”- அஞ்சலோ மத்தியூஸ் ஆதங்கம்

 

Dn1A-fOXUAALg5j.jpg

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை, தினேஷ் சந்திமால் வழிநடத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய கிரிக்கெட் குழு இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒருநாள் மற்றும் 20 க்கு 20 அணிகளின் தலைவராக செயற்பட்ட அஞ்சலோ மெத்தியூஸை பதவி விலகுமாறு தெரிவுக்குழு அறிவித்துள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மெத்தியூஸை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான காரணம் கிரிக்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

 

எனினும் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள அஞ்சலோ மத்தியூஸ் ஆசியக்கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் அடைந்ததோல்விகளுக்காக தாம் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்கள் அணிக்கு தொடர்ச்சியாக அனைத்துவிதமான போட்டிகளிலும் தலைமைதாங்கியதை அடுத்து 2017ல் தாமாகவே முன்வந்து அணித்தலைமையை துறந்திருந்தாக சுட்டிக்காட்டியுள்ள மத்தியூஸ் புதிய தலைமைப்பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்ற சந்திக்க ஹத்துருசிங்க கேட்டுக்கொண்டதற்கமைவாகவே தான் மீண்டும் தலைமைப்பொறுப்பை ஏற்றதாக கூறியுள்ளார்.

கடைசியாக இலங்கையில் இடம்பெற்ற தென் ஆபிரிக்காவிற்கு எதிரான தொடரில் இலங்கை அணியின் சார்பில் அதிக ஓட்டங்ளை தாம் பெற்றதாகவும் மத்தியூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசியக்கிண்ணப்போட்டிகளின் மோசமான பெறுபேறுகளுக்கு தேர்வாளர்களும் தலைமைப்பயிற்றுவிப்பாளரும் தன்னைப் பலிக்கடா ஆக்கிவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ள மத்தியூஸ்  தாம் போதிய உடற்தகுதியைக் கொண்டிருக்கவில்லை என தேர்வாளர்கள் கருதும் இடத்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து ஓய்வுபெறவும் தயாராகவுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18 மாதங்களில் இலங்கை அணியின் தலைவர்களாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உபுல் தரங்க, லசித் மாலிங், சாமர கபுகெதர மற்றும் திசர பெரேரா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை அணி பங்கேற்ற 40 ஒருநாள் போட்டிகளில் 30 போட்டிகளில் தோல்வியையே தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dn0d8bwXUAATqFV.jpg

Dn0d8b4XsAA4ILT.jpg

 

 

http://athavannews.com/ஆசியக்கிண்ணத்-தோல்விகள/

Link to comment
Share on other sites

பதவியிலிருந்து விலகுமாறு பணித்தனர் - விலகுகிறேன் ! தகுதியற்றவன் என்றால் ஓய்வை அறிவிக்கவும் தயார் - மெத்தியூஸின் உருக்கமான கடிதம்

 

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் என்னை அணித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்தனர். அதனால் தலைமைப் பதவியில் இருந்து விலகுகிறேன். அவர்கள் என்னை அணியிலிருக்க தகுதியற்றவன் என்றால் ஓய்வை அறிவிக்கவும் தயாராகவுள்ளேன் என இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

angalo.jpg

 

இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைமை பொறுப்பில் இருந்து நேற்று விலகியுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உருக்கமான கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடித்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதம் வருமாறு,

 

கடந்த வௌ்ளிக்கிழமை 21 ஆம் திகதி இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது இலங்கை அணியின் தேர்வு குழுவின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஹத்துரு சிங்க ஆகியோர் என்னை ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததனர். என்னை பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்ததும் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். 

மேலும் , ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி சந்திந்த படுதோல்வியின் முழுப்பொறுப்பும் என் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் தோல்விக்கு தானே பலிக்கடாவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் , அணியின் தோல்விக்கு அணியின் தலைவரே முழுப்பொறுப்பும் என்று தெரிவிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த தோல்வியின் ஒரு பங்காளியே நான் என்றும் , அதன் முழுப்பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது எனவும் அஞ்சலோ குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தெரிவுக்குழு மற்றும் பயிறிசியாளரின் முடிவை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

நான் தலைமைப்பொறுப்பில் இருக்கும் போது இலங்கை அணி பல சவால்களை எதிர்கொண்டு சாதனைகளைப் படைத்தது. அதில் அவுஸ்திரேலிய அணியை 3-0 என வெள்ளையடிப்புச்செய்தது. இதைவிட இங்கிலாந்து அணியை வெற்றிபெற்று சாதனை படைத்தது.

எவ்வாறாயினும் இலங்கை அணிக்கு புதிய தலைமைத்துவம் வேண்டுமென உணரப்பட்டவேளையில் நான் அனைத்து வகை கிரிக்கெட்டிலுமிருந்து கடந்த 2017 ஜூலை மாதம் சுயவிருப்பின் அடிப்படையில் அணித் தலைமையில் இருந்து விலகியிருந்தேன்.

இவ்வாறு நான் விலகிய காலப்பகுதியில் உபுல் தரங்க, திஸர பெரேரா, சாமர கப்புகெதர, லசித் மாலிங்க மற்றும் டினேஸ் சந்திமல் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் மாறிமாறி அணிக்கு தலைமை தாங்கினர்.

இந்நிலையில் அணி தொடர் தோல்விகளை சந்தித்தபேது இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சந்திக்க ஹத்துருசிங்க என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு உலக்கிண்ணம் வரை அணித் தலைமைப்பொறுப்பை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார்.

தலைமைப்பெறுப்பை மீண்டும் எடுப்பதற்கு எனது குடும்பத்தினரும் நண்பர்களும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையிலும் ஹந்துருசிங்க மீதும் அவரது திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கையினால் நான் அந்தப்பொறுப்பை மீண்டும் எடுத்து அணியை பலப்படுத்தி உயர்ந்த நிலைக்கு  இட்டுச்செல்ல இணங்கினேன்.

இந்தப் பிரச்சினையில் இருந்து விலகிவிடுவது எனது நோக்கமல்ல. விளையாட்டு வீரன் என்ற ரீதியில் நான் முழு மனதுடன் எவ்வேளையிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுவேன்.

இதேவேளை, நான் எந்தவேளையிலும் அணிக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. தேர்வுக்குழுவோ தலைமைப் பயிற்சியாளரோ நான் அணிக்கு தகுதியற்றவன் என்று தெரிவிக்கும் பட்சத்தில் நான் ஓய்வுபெறவும் தயாராகவுள்ளேன் என அவரது கடிதத்தில் மெத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://www.virakesari.lk/article/41063

Link to comment
Share on other sites

இங்கிலாந்துக்கெதிரான தொடரில் மத்தியூஸ் இல்லை?
 

image_627a155b96.jpg

இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி தொடர்களுக்கான இலங்கைக் குழாமில் முன்னாள் தலைவரான அஞ்சலோ மத்தியூஸை சேர்த்துக் கொள்ளாமல் விடுவதற்கு தேர்வாளர்கள் தீர்மானித்துள்ளதாக அறியப்படுகிறது.

அந்தவகையில், உடற்றகுதிச் சோதனைக்கு முன்னரே உடற்றகுதி தொடர்பான கரிசனைகள் காரணமாக இங்கிலாந்துக்கெதிரான தொடர்களுக்கான இலங்கைக் குழாமில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டீர்கள் என அஞ்சலோ மத்தியூஸிடம் கூறப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வாளர்களிடமிருந்து உடற்றகுதிச் சோதனையொன்றை மத்தியூஸ் கோரியதாகக் கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டிலிருந்து மத்தியூஸ் அதிக எடையைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதுடன், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு விதமான காயங்களால் தொடர்களை தவறவிட்டபோதும், 2017ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து 22 இனிங்ஸ்களில், 100 பந்துகளுக்கு 76 ஓட்டங்கள் என்ற வகையிலென்றாலும் 59.2 என்ற சராசரியில் 888 ஓட்டங்களை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்றிருந்தார்.

இதேவேளை, ஆசியக் கிண்ணத்தின் இரண்டு போட்டிகளிலும் குறிப்பிடத்தக்கதாக ஓட்டங்களெதனையும் பெறாததோடு, இரண்டு ரன் அவுட்களில் பங்கெடுத்ததால் விமர்சனத்துக்கு மத்தியூஸ் உள்ளாகியிருந்தார்.

எவ்வாறெனினும், இதற்கு முன்னர் இலங்கை இறுதியாகப் பங்கெடுத்த இருதரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரின் ஐந்து போட்டிகளில், 100 பந்துகளுக்கு 83 ஓட்டங்கள் என்றவாறு, 78.33 என்ற சராசரியில் 235 ஓட்டங்களை மத்தியூஸ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இங்கிலாந்துக்கெதிரான-தொடரில்-மத்தியூஸ்-இல்லை/44-222614

Link to comment
Share on other sites

தேவையெனில் நிரூபித்துக் காட்டவும் தயார் 

 

 

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமிலிருந்து அஞ்சலோ மெத்தியூஸ் நீக்கப்பட்டுள்ளார்.

mahiws1.jpg

கடந்த மூன்று நாட்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அஞ்சேலா மெத்தியூஸை தற்போது இங்கிலாந்துடனான தொடரில் நீக்கியுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சிம்பாவே இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இலங்கை அணி படுதோல்வியை சந்திக்க அஞ்சலோ மெத்தியூஸ் முதன்முறையாக பதவியிலிருந்து நீங்கினார்.

அதன்பிறகு மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்ற மெத்தியூஸ், நடைபெற்று வரும் ஆசியக் கிண்ணத் தொடரில் அடைந்த படுதோல்வியின் பின்னர் தேர்வுக்குழு அவரை தலைமைப் பதவியிலிருந்து நீக்கியது.

எனினும் தலைமைப் பதவி பறிபோனால் பரவாயில்லை அணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பிலிருந்த அவருக்கு தேர்வுக்குழு மீண்டும் ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளது.

அதாவது தேர்வுக்குழுத் தலைவரான கிரஹம் லெப்ரோய், மெத்தியூஸின் உடற் தகுதியில்லாத காரணத்தினால் இங்கிலாந்துடனான தொடரிலிருந்து அவரை நீக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது குறித்து தெரிவித்த மெத்தியூஸ், உடற்தகுதி சோதனை நடத்தாமலே நான் உடற்தகுதியை இழந்து விட்டேன் என்று எவ்வாறு கூற முடியும். அவ்வாறு நான் உடற்தகுதியை இழந்து விட்டேன் என்று நீங்கள் கருதினால் நான் அதனை நிரூபித்துக் காட்டவும் தயார் என கிரஹம் லெப்ரோய்க்கு பதிலளித்துள்ளார். 

இதுவரை 106 போட்டிகளுக்கு தலைமைப் பதவி ஏற்று வழிநடத்தியுள்ள மெத்தியூஸ், 49 போட்டிகளில் வெற்றியையும் 51 போட்டிகளில் தோல்வியையும் தழுவிக் கொண்டுள்ளார். அத்துடன் இதில் ஒரு போட்டி வெற்றி, தேல்வியின்றி முடிவடைந்ததுடன், 5 போட்டிகள் மழையால் இரத்து செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/41182

Link to comment
Share on other sites

கலைக்கப்படுகின்றது தெரிவுக்குழு?

 

 

இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக்குழு கலைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினை உடனடியாக கலைத்துவிடுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வாவிற்கு உத்தரவிட்டுள்ளார் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்துடன் விளையாடவுள்ள அணியில் மத்தியுசை  இணைத்துக்கொள்ளுமாறு விளையாட்டமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்கவின் பங்களிப்பு குறித்தும் ஆராய்ந்துள்ள அமைச்சர் ஆசிய கிண்ணப்போட்டிகளில் ஏற்பட்ட தோல்விகளிற்கு பயிற்றுவிப்பாளரே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

lbrooy.jpg

 

http://www.virakesari.lk/article/41177

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.