Jump to content

திலீபன் தூபிக்கு எதிரில் இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு: அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் தூபிக்கு எதிரில் இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு: அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்!

By admin -
42247824_1719013268226537_68185007097265

தியாக தீபம் திலீபனின் நினைவுநாளில் யாழ் மாநகரசபை எல்லைக்குள் களியாட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதிக்க மாட்டோம் என நேற்று யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் கூடி அதிரடி தீர்மானமொன்றை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே, திலீபனின் நினைவுநாளை மாநகரசபையே பொறுப்பேற்று நடத்துமென மாநகர முதல்வர் விடுத்த அறிவிப்பிற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலைமையில், நேற்றைய அமர்வில் திலீபனின் நினைவுநாளில் மாநகரசபை எல்லைக்குள் நிகழ்வுகள் நடத்த அனுமதிப்பில்லையென்ற முடிவை எடுத்தனர்.

அத்துடன், வரும் 26ம் திகதி யாழ் மாநகரசபை மைதானத்தில் மத்திய சுற்றுலா அதிகாரசபை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றை நிறுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு வடக்கு முதலமைச்சர் அமைச்சும் அனுசரணை வழங்குகிறது. தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்விற்கு, மைதானத்தை வழங்குவதில்லையென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நினைவேந்தல்களை எப்படி அனுட்டிப்பதென தெரியாமல், தமிழ் அரசியல்வாதிகள் ஆர்வக்கோளாறில் அவதிப்படுவதன் விளைவே இது. நினைவேந்தல்களை எதனுடன் முடிச்சுப் போடுவது என்பதை தெரியாமல் அரசியல்வாதிகள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

திலீபனின் நினைவுநாள், மாவீரர் வாரம், கரும்புலிகள் வாரம், மாலதி நினைவுநாள், குமரப்பா புலேந்திரன் நினைவுநாள், கிட்டு நினைவுநாள், ஜெயசிக்குறுவில் மரணித்தவர்களின் நினைவுநாள், தமிழ்செல்வன் நினைவுநாள், பால்ராஜ் நினைவுநாள், முள்ளிவாய்க்கால் நினைவுநாள் என ஒவ்வொரு மாதமும் தமிழர்கள் உளப்பூர்வமாக அஞ்சலிக்க நிகழ்வுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நாட்களில் நிர்வாகம் முடங்க வேண்டுமென எதிர்பார்ப்பது ஆரோக்கியமானதல்ல.

தேவையற்ற சில களியாட்டங்களை, நிகழ்வை குழப்பவது போன்ற களியாட்டங்களை தவிர்க்கலாம். ஆனால், உணர்வுபூர்வ அஞ்சலியென்பது, ஊரெல்லாம் “அட்ராசிட்டி“ பண்ணி செய்வதல்ல. அஞ்சலி செய்துவிட்டு வீட்டில் போயிருக்க வேண்டும் என்றும் அர்த்தமல்ல.

தமிழ் சமூகம் மேலும்மேலும் வீழ்ச்சியடைந்து, தனக்குள் தானே முடங்கியிருக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் யாரும் மரணிக்கவில்லை. சந்ததி வாழ வேண்டுமென்றுதான் வீழ்ந்தார்கள். நமது அரசியல்வாதிகளும், கட்சிகளும் நினைவேந்தலில் தமக்குள் போடும் குடுமிப்பிடி சண்டைகள்தான் அசிங்கமானவையே தவிர, அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய நிகழ்வுகள் அல்ல.

இத்தனைக்கும், திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக கடந்த மூன்று நாட்களாக அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் இசைவேள்வி நடைபெற்று வருகிறது. செப்ரெம்பர் 21ம் திகதி ஆரம்பித்த நிகழ்வு செப்ரெம்பர் 24 (நாளை) முடிவடைகிறது. இதில் இந்திய இசைக்கலைஞர்கள்தான் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வையும் எதிர்க்க வேண்டும் என நாம் குறிப்பிடவில்லை. ஆனால், திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக, இந்திய கலைஞர்களை அழைத்து நடத்தப்படும் இசைவேள்விக்காக பொங்காத நமது அரசியல்வாதிகள், உள்ளூர் மக்களிற்கு ஏதாவது விதத்தில் பயன்படும் சுற்றுலாத்துறை நிகழ்வை நிறுத்த வேண்டுமென கூட்டம் போட்டு முடிவெடுத்துள்ளனர்.

இந்திய கலைஞர்களின் நிகழ்ச்சி விசயத்தில் தலையிட்டால் இந்திய தூதரகம் கோபிக்கலாமென கருதியோ என்னவோ, நம்மவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை.

இந்த நிகழ்வு குறித்து யாழ் பல்கலைகழக இசை விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தனின் வீடியோ கருத்து இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் இந்தியர்கள் கலந்து கொள்கிறார்கள். அதில் இலங்கை கலைஞர்களும் கலந்துகொள்வது சிறப்பம்சம் என அரிய முத்துக்களை பகிர்ந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் இசை நிகழ்ச்சியில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். அதாவது திலீபனின் நினைவேந்தலில் கலந்து கொள்பவர்களை விட அதிகமானவர்கள் இங்கு குழுமுகிறார்கள். திலீபனின் நினைவேந்தலை குழப்ப வேண்டுமென்பதற்காகவே திட்டமிடப்பட்ட நிகழ்வை போல இது தென்பட்டும், இதுவரை ஏன் நமது ஆர்வக்கோளாறு அரசியல்வாதிகள் யாரும் வாய் திறக்கவில்லை?42247824_1719013268226537_68185007097265 42253326_1719013358226528_12849324096906 42254644_1719013374893193_59930293457177

42200171_1717945434999987_74563314250887 42221584_1717945275000003_28869229687791 42243660_1717945235000007_24830165519769 42287612_1717945411666656_38764048573509 42333042_1717945391666658_30440028935951

42455075_1853465331416864_1321950694160242455075_1853465331416864_1321950694160203776_n-225x300.jpg

42200171_1717945434999987_7456331425088798720_n-300x232.jpg

42243660_1717945235000007_2483016551976927232_n-300x232.jpghttp://www.pagetamil.com/16992/

http://www.pagetamil.com/16992/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய்த்தான் பிளான் பண்ணி செய்யுறாங்கள்.

ஈழத்தமிழனுக்கு சிங்களம் எதிரியில்லை....கிந்தியன் தான் முழு எதிரி எண்டு நேரடியாக நிறுவுவான்கள் பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக்கேட்டால் தமிழர் வழங்களை 100 வீதமும் சமுதாயத்தின் முன்னோக்கிய வேலைத்திட்டங்களுக்கும் இனத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் பயன்படுத்தப்படவேண்டும் என்று தான் சொல்வேன். நினைவஞ்சலி என்ற போர்வையில் களியாட்ட நிகழ்வுகளை வழங்கி விடுதலைப் போரின் வலிகளையும் மாண்டுபோன மாவீரர்களையும் தமிழர் வாழ்வில் என்றென்றும் மறக்காமல்  சிங்கள  அடக்குமுறையையும்  இனமேலாதிக்கத்தையும் நிலைநிறுத்தி வைப்பதற்கு எதிரிகளின்ரொட்டித்துண்டுகளுக்காக ஏங்கும்  புல்லுருவிகளை விலை கொடுத்து வாங்கி இதுபோன்ற வேலைகளை அவர்கள் மூலம் செய்துகொண்டு தமிழினத்தைச் சீரழிக்கிறான். 
தோல்வியில் பாடம் கற்றபின் நாம் அதை மறக்கவேண்டும் அதிலிருந்து நிமிர்ந்து எழவேண்டும்.
தோற்றதற்காக தேம்பி அழாமல் ஒருநாள் கிடைக்கப்போகும் வெற்றிக்காக வழிசமைப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் போலிஸ் நீதிமன்றத்தில் முறையீடு திலீபன் எழுச்ச்சி சம்பந்தமாக என்னடா எலி அம்மணமாய் ஓடாமல் கிப்ஸ் ஜட்டி போட்டு ஓடுது அப்பவே நினைச்சம் புத்துக்குள் இருந்து ஜெயராஜ் வெளியில் .

9 hours ago, பெருமாள் said:

. திலீபனின் நினைவேந்தலை குழப்ப வேண்டுமென்பதற்காகவே திட்டமிடப்பட்ட நிகழ்வை போல இது தென்பட்டும், இதுவரை ஏன் நமது ஆர்வக்கோளாறு அரசியல்வாதிகள் யாரும் வாய் திறக்கவில்லை

திறந்தால் விசா கிடைக்காது என்ற பயமாக்கும் .?

இதைவிட பெரும் பகிடி போலிஸ் குடுத்த முறையீடுக்கு எதிராக குரைக்க வந்தவர் நம்ம சுமத்திரன் ஐயா ..தீர்ப்பு எப்படி என்று இப்பவே எல்லாருக்கும் தெரியும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

திலீபன் தூபிக்கு எதிரில் இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு: அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்!

By admin -
42247824_1719013268226537_68185007097265

 

கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் அதாவது திலீபனின் நினைவேந்தலில் கலந்து கொள்பவர்களை விட அதிகமானவர்கள் இங்கு குழுமுகிறார்கள். திலீபனின் நினைவேந்தலை குழப்ப வேண்டுமென்பதற்காகவே திட்டமிடப்பட்ட நிகழ்வை போல இது தென்பட்டும், இதுவரை ஏன் நமது ஆர்வக்கோளாறு அரசியல்வாதிகள் யாரும் வாய் திறக்கவில்லை?42247824_1719013268226537_68185007097265 42253326_1719013358226528_12849324096906 42254644_1719013374893193_59930293457177

42200171_1717945434999987_74563314250887 42221584_1717945275000003_28869229687791 42243660_1717945235000007_24830165519769 42287612_1717945411666656_38764048573509 42333042_1717945391666658_30440028935951

42455075_1853465331416864_1321950694160242455075_1853465331416864_1321950694160203776_n-225x300.jpg

42200171_1717945434999987_7456331425088798720_n-300x232.jpg

42243660_1717945235000007_2483016551976927232_n-300x232.jpghttp://www.pagetamil.com/16992/

http://www.pagetamil.com/16992/

 

இதை இந்திய தூதரகம் நடத்தலாம். யார் இந்த அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்? (தலையங்கத்தில்)

"திலீபனின் நினைவேந்தலில் கலந்து கொள்பவர்களை விட அதிகமானவர்கள்" ‍ யாரிந்த அதிகமான மக்கள்? இசையை ரசிக்க வருபவர்களா? 

ஆக இந்த மக்களும் தமிழீள‌ மக்களே, இவர்களில் பலர் மாவீரர் குடும்பத்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு தெரியும் இன்று திலிபனின் நினைவு நாள், நாம் அதற்கு செல்வதா அல்லது இசை வேள்விக்கு செல்வதா என்று,  தெரிவு அவர்களுடையது. 

இது இப்படி இருக்க ஏன் இந்திய அரசையும் / இந்திய தூதரகத்தையும் ஏசிக்கொண்டு இருக்கின்றீகள்.  

திலிபன் தியாகி இல்லை என இந்த மக்கள் தீர்மனித்துள்ளார்கள். ஆகவே இசை வேள்விக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்கள். 
பிறகேன் இந்திய அரசையும் / சம்பந்தனையும் / சிங்கள அரசையும் வீணாக குறைசொல்லவேண்டும்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகிம்சையாவது,திலீபனாவது,ஈழமாவது,மண்ணாங்கட்டி  மக்களை இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க விடுங்கள் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நேற்று இலண்டனில் இசைவெள்ளத்தில் மூழ்கினேன். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் வெளிநாட்டுக் கிளையால் நடாத்தப்பட்ட இசை நிகழ்ச்சி நன்றாகத்தான் இருந்தது.திலீபனின் நினைவு வாரம் என்ற உறுத்தல் எல்லாம் வரவில்லையே. அதுபோலத்தான் யாழ் மக்களும் நல்ல இசையை இரசிப்பார்கள். 

யார் திலீபனின் நினைவைக் கொண்டாடுவது என்று அரசியல் கட்சிகள் அடிபடுவதைவிட இசைவேள்வி நடாத்துவது பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்த போது யாழ் குடாவில் வாழ்ந்தவர்கள் எல்லாம்.. உண்ணாவிரதமா இருந்தார்கள்.

அதுபோகட்டும்.. திலீபன் அண்ணாவின் தூபிக்கு அருகில்.. இசைக்கச்சேரி வைச்சுத்தான் இசையை ரசிக்கனும் என்றில்லையே. இது ஹிந்தியாவின் பொறாமை. 

காந்திக்கு காக்கா பீயால்.. அபிசேகம் செய்ய அனுமதிப்பதே சிறந்தது. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அகிம்சையாவது,திலீபனாவது,ஈழமாவது,மண்ணாங்கட்டி  மக்களை இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க விடுங்கள் 

வட கிழக்கு மக்கள் இசையை இரசிப்பவர்கள் தான். ஆனால் கருநாடக இசையை அல்ல..... கருநாடகம் என்றாலே வானொலியும் உறங்கு நிலைக்கு சென்றுவிடும். :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people sitting

திலீபனின் நினைவு நாளுக்கு ரெத்தம் குடுத்தம் என்றார்கள் அவர்கள் பிறந்தது எல்லாம் 1995க்கு பின்தான் அவர்களுக்கு திலீபனையும் தெரியாது புலியையும் தெரியாது ஆனால் இரத்தம் குடுக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

காந்திக்கு காக்கா பீயால்.. அபிசேகம் செய்ய அனுமதிப்பதே சிறந்தது. ?

Gandhi believed Indian women who were raped lost their value as human beings. He argued that fathers could be justified in killing daughters who had been sexually assaulted for the sake of family and community honour. He moderated his views towards the end of his life. But the damage was done, and the legacy lingers in every present-day Indian press report of a rape victim who commits suicide out of "shame". Gandhi also waged a war against contraceptives, labelling Indian women who used them as whores.

Like all men who wage a doomed war with their own sexual desires, Gandhi's behaviour around females would eventually become very, very odd. He took to sleeping with naked young women, including his own great-niece, in order to "test" his commitment to celibacy. The habit caused shock and outrage among his supporters. God knows how his wife felt.

https://www.theguardian.com/commentisfree/2010/jan/27/mohandas-gandhi-women-india

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/24/2018 at 10:28 AM, colomban said:

 

இதை இந்திய தூதரகம் நடத்தலாம். யார் இந்த அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்? (தலையங்கத்தில்)

"திலீபனின் நினைவேந்தலில் கலந்து கொள்பவர்களை விட அதிகமானவர்கள்" ‍ யாரிந்த அதிகமான மக்கள்? இசையை ரசிக்க வருபவர்களா? 

ஆக இந்த மக்களும் தமிழீள‌ மக்களே, இவர்களில் பலர் மாவீரர் குடும்பத்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு தெரியும் இன்று திலிபனின் நினைவு நாள், நாம் அதற்கு செல்வதா அல்லது இசை வேள்விக்கு செல்வதா என்று,  தெரிவு அவர்களுடையது. 

இது இப்படி இருக்க ஏன் இந்திய அரசையும் / இந்திய தூதரகத்தையும் ஏசிக்கொண்டு இருக்கின்றீகள்.  

திலிபன் தியாகி இல்லை என இந்த மக்கள் தீர்மனித்துள்ளார்கள். ஆகவே இசை வேள்விக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்கள். 
பிறகேன் இந்திய அரசையும் / சம்பந்தனையும் / சிங்கள அரசையும் வீணாக குறைசொல்லவேண்டும்.
 

 

திலீபன் நினைவேந்தலிற்கு தடையில்லை- மாநகரசபையே செய்யுமென்கிறார் சுமந்திரன்!

theleepan.jpg

தியாகி திலீபனின் நினைவிடத்தில் புனரமைப்பது சட்டவிரோதமானதல்ல, பொலிசார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அதை செய்ய முடியாது என யாழ் மாவட்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.

திலீபனின் நினைவிடத்தில் நிழனவேந்தல் செய்ய அனுமதிக்க கூடாது, விடுதலைப்புலிகள் ஒரு பங்கரவாத இயக்கம் என யாழ் பொலிஸ் நிலைய பொலிசார் யாழ் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். கொழும்பிலிருந்து வந்த விசேட உத்தரவின் பெயரிலேயே யாழ் பொலிசார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று மாவட்ட நீதிபதி ச.சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, முன்னிலையாகியிருக்குமாறு யாழ் மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலனிற்கு மன்று உத்தரவிட்டிருந்தது. யாழ் மாநகரசபை ஆணையாளர் சார்பில் , மாநகரசபையின் சட்டத்தரணி ராஜரட்ணம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் முன்னிலையாகினர்.

தமிழ்பக்கம் காலையிலேயே குறிப்பிட்டதை போல, “திலீபனின் நினைவுத்தூபி அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு அரசு அனுமதித்துள்ளது. தூபி அமைக்கும்முகவராகவே மாநகரசபை உள்ளது. எனவே மாநகரசபையை இந்த  விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு இழுக்க முடியாது“ என எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பணம் செய்தார்.

எனினும், தேசிய பாதுகாப்பு, இன முறுகல் என சில காரணங்களை குறிப்பிட்டு பொலிசார் தரப்பில் சமர்ப்பணம் செய்யப்பட்டது. இதேவேளை, க

இதேவேளை, கடந்த பத்து நாட்களாக திலீபன் தூபியில் அஞ்சலி செலுத்தி வரும் தரப்பு என குறிப்பிட்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சமர்ப்பணம் செய்ய சட்டத்தரணி கு.குருபரன் அனுமதி கோரினார். எனினும், அதனை மன்று நிராகரித்தது.

சமர்ப்பணங்களின் பின்னர், மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

2 மணிக்கு நீதிமன்ற அமர்வு ஆரம்பித்ததும், நீதிபதி தீர்ப்பை அறிவித்தார். திலீபனின் நினைவிடத்தை புனரமைப்பது சட்டவிரோதமானதல்ல, பொலிசார் கேட்டுக் கொண்டதன்படி நினைவேந்தலை தடை செய்ய முடியாது, நாளை நினைவேந்தலை நடத்துவதில் எந்ததடையுமில்லையென அறிவித்தார்.

நினைவேந்தலை யாழ் மாநகரசபையே நடத்தும் என வழக்கு விசாரணையின் பின் சுமந்திரன் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.

இதேவேளை, யாழ் மாநகரசபையின் ஒழுங்கமைப்பில் நினைவேந்தலை நடத்துவதற்கான ஏற்படாகவும் இந்த வழக்கு இருக்கலாமென காலையிலேயே தமிழ்பக்கம் குறிப்பிட்டிருந்தது.

http://www.pagetamil.com/16849/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.