Jump to content

சர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்


Recommended Posts

சர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்

 

 
 

இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகள் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதாக கடந்தவாரம் அம்பலப்படுத்தியிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று, நான் அவ்வாறு கூறவில்லை எனவும் ஊடகவியலாளர்களே தவறாக பிரசுரித்து விட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

sp.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேர்ணல் ரமேஷ் சரணடைந்தார். அவரை கொன்றுவிட்டனர் என்று கடந்தவாரம் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

இராணுவத்தினரை யுத்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுக்கவுள்ளார்.

இவ்வாறான நிலையில் எஸ்.பி. திஸாநாயக்கவின் மேற்படி கருத்து தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

போர்க் குற்றங்களை உறுதிப்படுத்திய எஸ்.பி. திஸாநாயக்கவின் கூற்றுக்கள் தொடர்பில் விசாரணையொன்றுக்கு உட்படுத்தப்போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க எச்சரித்திருந்தார்.

இந்நிலையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் செப்டெம்பர் 20 ஆம் திகதியான வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று மீண்டும் தெரிவித்திருக்கின்றார்.

”கடந்த 20 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நான் வெளியிட்ட கருத்தை சில ஊடகங்கள் சரியாகவெளியிட்டிருந்தன.

 இருந்த போதிலும் சில ஊடகங்கள் பிழையாக வெளியிட்டிருந்தன. கேர்ணல் ரமேஷ் சரணடைந்தது குறித்த விடயம்தான் அது. நான் மிகவும் தெளிவாக கூறியது என்னவென்றால் ரமேஷ், கருணாவிடமிருந்து விலகி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்ததை அடுத்து விடுதலைப் புலிகளின் தலைவர் அவரை சிறைவைத்தார். ஏனென்றால் ரமேஷ் மீதான நம்பிக்கை இல்லாமையே அதற்குக் காரணம்.

யுத்தத்தில் தோல்வியடைந்துவரும் நேரத்தில்தான் ரமேஷ் விடுதலை செய்யப்பட்டார். அப்போதுதான் ரமேஷ் என்னை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு தாம் சரணடையப்போவதைத் தெரிவித்தார். 

அப்போது விடுதலைப் புலிகளில் சிலர் சரணடைய வருவோர் மீது தாக்குதல் நடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.

 உண்மையிலேயே ரமேஷ் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் படையினரால் படுகொலை செய்யப்பட்டாரா அல்லது விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டாரா என்பதை என்னால் நூற்றுக்கு நூறுவீதம் உறுதியாகக் கூறமுடியாது. 

எனினும் கடந்த காலங்களில் அவர் படையினரால் படுகொலை செய்யப்பட்டதாக பேசப்பட்டது. 

மீண்டும் ஒன்றைக் கூறுகிறேன். ரமேஷ் படையினரிடம் சரணடைந்த பின்னர் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார் என்று நான் கூறவில்லை. அப்படிஎன்னால் கூறமுடியாது. அதுகுறித்து எனக்குத் தெரியாது. 

அவர் சரணடைய வந்தார். சரணடைய வந்தவர்களில் 90 வீதமானவர்களை படுகொலை செய்தது விடுதலைப் புலிகளே என்றே கூறினேன். 

தாய்மார்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த ரமேசும் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டாரா அல்லது படையினரால் படுகொலைசெய்யப்பட்டாரா என்பது எனக்குத் தெரியாது என்றே கூறினேன். 

மாறாக ரமேஷ் ஸ்ரீலங்காபாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார், சரணடைந்த பின்னர் இராணுவத்தினரால் அவர் படுகொலைசெய்யப்பட்டார் என்று ஒருபோதும் நான் கூறவில்லை.

ரமேஷ் சரணடைய வந்தார். இன்னும் 10 நியமிடங்களில் சரணடையப்போவதாக எனக்கு தொலைபேசி ஊடாகக் கூறினார் என்றுதான் தெரிவித்திருந்தேன். 

அப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் ரமேஷ் மீது கடும் கோபமாகவே இருந்தார். சரணடைவதாக கூறிய ரமேஷை யார் படுகொலை செய்தது என்று தெரியாது. ரமேஷை படையினர்தான் கொன்றார்கள் என்று நான் கூறவேயில்லை. 

எனினும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் அப்படிப்பட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தேன்” என்றார்.

எவ்வாறாயினும் கேர்ணல் ரமேஷ் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் அவர் இராணுவ காவலரனொறில் இருப்பது போன்ற காட்சிகளும், பின்னர்அவர் கொலைசெய்யப்பட்டு கிடப்பது போன்ற காட்சிகளும் அடங்கிய காணொளியொன்றை பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.

ஆனால் இராணுவத்திடம் சரணடைந்த கேர்ணல் ரமேஷை சிறிலங்கா இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளால் எவ்வாறு கொலைசெய்யப்பட்டார் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெளிவுபடுத்த தவறிவிட்டார்.

”சரணடையும்படி நான் அவரிடம்கூறினேன். பெப்ரவரி 22 ஆம் திகதி ரணில் - பிரபாகரன் ஒப்பந்தத்தின் பின்னர் ரமேஷ் எங்களுடன் இணைந்துசெயற்பட்டார். நான் அப்போது மட்டக்களப்பிற்குச் சென்றபோது இடையே பொலிஸார் அனைவரையும் நீங்கும்படி கூறினார்கள். பின்னர் எனது வாகனத்தில் முன்னைய ஆசனத்தில் ரமேஷ்தான் அமர்ந்தார். மட்டக்களப்பிலுள்ள அனைத்து விவசாய பண்ணைகளுக்கும் அவர் எங்களை அழைத்துச் சென்றிருந்தார். அப்போது நான் விவசாய அமைச்சராக கடமையாற்றியதினால் அவற்றை அபிவிருத்தி செய்வதற்காக அவர்களுக்கு பெருந்திரளான நிதியை வழங்கியிருந்தோம். 

அது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியாக இருந்ததோடு அப்போது நான் விவசாய மற்றும் கால்நடை அமைச்சராக இருந்தேன். அந்தப் பண்ணைகளை அபிவிருத்தி செய்வதற்கு பெரும் தொகையான நிதியை வழங்கியிருந்தோம். 

இறுதியாக மட்டக்களப்பிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்கு ரமேஷ் என்னை அழைத்துச்சென்றார்.

அந்தப் படைத் தலைமையகத்தை அலரி மாளிகையைப் போலவே செய்திருந்தார்கள். எனினும் அந்தக் கட்டிடத் தொகுதியை முழுமையாக தீயிட்டுக் கொளுத்திய பின்னரே கருணா இந்தப் பக்கமாகத் தாவினார். 

அங்கு கருணாதான் இருந்தார். ரமே{டன் அங்கு சென்று மதியபோசன உணவை அங்குதான் எடுத்திருந்தோம். அதன் பின்னர் அவர் எமது பொலிஸாரிடம் என்னை அழைத்துச் சென்று ஒப்படைத்திருந்தார். 

அந்தக் காலத்தில் இருந்து அவரை எனக்குத் தெரியும். அவர் என்னுடன் உரையாடுவார். அவர் கொழும்பிற்கும் வந்திருந்தார். 

ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ் -சிங்கள சித்திரை புத்தாண்டில் எனது இல்லத்திற்கு அவர் வந்து கொண்டாடியிருந்தார். அவருடன் சகோதரத்துவம், நட்புறவை ஏற்படுத்துவதே எமது நோக்கமாக இருந்தது. அவர் சரணடைவதாக என்னிடம் தெரிவித்திருந்தார். அதனால் விடுதலைப் புலிகளே சரணடைந்த மக்களை அதிகமாக படுகொலை செய்தார்கள்” என்றார் அவர்.

http://www.virakesari.lk/article/40894

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.