Jump to content

ரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு


Recommended Posts

ரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு

ரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ரஷ்யாவின் ராணுவ ஜெட் விமானங்களையும், ஏவுகணைகளையும் வாங்கியது தொடர்பாகசீன ராணுவம் மீது சில தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

யுக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க அரசியலில் அதன் தலையீடு இருந்ததாக கூறப்படுவது ஆகியவை தொடர்பாக ரஷ்யா மீது முன்னதாக அமெரிக்கா சில தடைகள் விதித்திருந்த நிலையில், ரஷ்ய நிறுவனத்துடன் உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் கொள்முதல் செய்த சீனாவின் நடவடிக்கை அமெரிக்காவுடனான உறவில் விதிமீறும் செயல் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

 

 

அண்மையில் 10 ரஷ்ய சுகோய் Su-35 வகை போர் விமானங்களையும், S-400 வகை ஏவுகணைகளையும் சீனா வாங்கியது.

ரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

2014-ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் மீது அமெரிக்கா விதித்து வரும் தடைகளில் சீனா இடம்பெறவில்லை.

ரஷ்யாவின் அரசு ஆயுத ஏற்றுமதியாளருடன் முக்கிய ஒப்பந்தம் மற்றும் பரிமாற்றம் செய்துகொண்ட சீனாவின் கருவிகள் அபிவிருத்தி துறை மற்றும் அதன் தலைவர் லீ ஷாங் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த தடைகளின் முக்கிய குறி ரஷ்யா மீதுதான் என்று ஒரு மூத்த அமெரிக்க நிர்வாகத்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீது முன்னர் தடைவிதித்துள்ள அமெரிக்காபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இது போன்ற நடவடிக்கைகளை மற்ற நாடுகள் மீது எடுப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பதில் என்ன?

அமெரிக்கா விதித்துள்ள தடையால் தங்களின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் விற்பனையில் எந்த பாதிப்பும் இருக்காது என்று மாஸ்கோவில் ஒரு அரசியல்வாதி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான ஃபிரான்ஸ் கிளிண்ட்சேவிச்சை மேற்கோள்காட்டி ரஷ்ய செய்தி முகமையான இண்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், ''முன்னரே திட்டமிடப்பட்ட வகையில் அட்டவணையின்படி இந்த ஒப்பந்தம் தொடர்ந்து செயல்படுத்தப்படுத்தப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவிடம் ராணுவ சாதனங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

''இந்த ராணுவ சாதனத்தை வைத்திருப்பது சீனாவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்'' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஆயுத விற்பனைக்கு ஒரு முக்கிய வெளிநாட்டு சந்தையாக ஆசியா விளங்கி வருகிறது.

கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதியில் ஏறக்குறைய 70 சதவீதம் ஆசியா பங்கு வகிக்கிறது.

https://www.bbc.com/tamil/global-45597126

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.