Jump to content

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!


Recommended Posts

ஆறுமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம்; ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை!

 

 

ஆறுமாதக் கர்ப்பிணியாக இருந்த என்னுடைய மனைவி மற்றும் தாய் தகப்பன் தங்கச்சி உள்ளிட்ட 13 பேரை இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் மூலம் சுட்டும் வெட்டியும் மிகக் கோரமான முறையில் படுகொலை செய்ததுடன் அவர்களை அரைகுறையாக எரித்து மடு ஒன்றில் போட்டிருந்தனர் அவர்களின் ஆடைகளை வைத்து தான் நாம் எமது உறவினர்களின் சடலங்களை அடையாளம் கண்டோம். என தனது ஆறுமாதக் கர்ப்பிணி மற்றும் தாய் தகப்பன் தங்கச்சி உள்ளிட்ட 13 பேரை பறிகொடுத்த மரியசீலன் தெரிவித்துள்ளார்.

 

மொத்தமாக சவுக்கடிக் கிராமத்தைச் சேர்ந்த 26 பேரும் ஊரணி போன்ற வெளியிடங்களில் இருந்து வந்தவர்களையும் சேர்த்து 33 பேர் அந்த நேரத்தில் படுகொலை செய்யப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சவுக்கடி கடலோர கிராமத்தில் ஒரே தினத்தில் பெண்கள் குழந்தைகள் கர்ப்பிணித்தாய் உட்பட 33 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டதன் 28ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று வவுக்கடி நினைவு இல்லத்தில் நடைபெற்றது.

ஆண்டுகள் பல கடந்தும் இதுவரையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் கூறுகின்றார்கள்.

 

1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி காலை 8.30 மணியளவில் இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் தாக்குதலிலே இவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

கெப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரியாவின் தலைமையில் சீருடை அணிந்த இராணுவத்தினரே அந்த காலப்பகுதியில் இது போன்ற படுகொலைகளில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் உண்டு.

மட்டக்களப்பில் செப்டெம்பர் படுகொலைகள் என்பது 1990 ஆண்டு நடைபெற்ற படுகொலைகளையே சொல்லப்படுகிறது.

1990 ஆண்டு என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களை வெட்டுப்பாட்டி என்ற இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்த முஸ்லீம் ஊர்காவல் படையினருமே இணைந்து தமிழ் மக்களை வகை தொகை இன்றி படுகொலை செய்தமைக்கு இந்த சவுக்கடிப் படுகொலைகளும் சாட்சியாக உள்ளது.

துப்பாக்கியால் சுட்டும் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும் கொலைகளை செய்த பின்னர் இரு குழிகளுக்குள் சடலங்களை போட்டு தீ வைத்து எரித்து தடயங்களை கூட அழித்துவிட்டே அந்தக் குழுவினர் சென்றதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் சிங்களத்திலும் தமிழிலும் பேசிக்கொண்டார்கள். அவ்வேளை நிலவிய சூழ்நிலையில் அவர்களை அருகாமையில் சென்று அடையாளம் காண முடியவில்லை என்கின்றார் மீனவரான ஜி. மரியசீலன்.

சவுக்கடி கிராமம் ஏறாவுர் முஸ்லிம் பிரதேசத்திற்கு அண்மித்த கிராமம் என்பதால் இந்த படுகொலைச் சம்பவத்துடன் முஸ்லிம்களும் தொடர்புபட்டிருப்பதாக தமிழர் தரப்பில் சந்தேகங்கள் உள்ளன.

 

1990ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் தமிழர்களும் முஸ்லிம்களும் இன ரீதியான மோதல்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாகவே இந்தச் சந்தேகம் இருந்தாலும் பொறுப்பானவர்கள் யார்? என்பதை தங்களால் உறுதிபடக் கூற முடியாது எனவும் மரியசீலன் குறிப்பிடுகின்றார்.

28 வருடங்களுக்குப் பின்னரும் நீதி கிடைக்காத படுகொலைகளில் ஒன்றாக இந்த சவுக்கடிப் படுகொலையும் கடந்து செல்கின்றது.

இலங்கை அரசு இந்தப்படுகொலைகள் குறித்து உண்மைகளை கண்டறிவதற்கோ அல்லது இது போன்ற படுகொலைகள் மீள நிகழாமல் இருப்பதற்கோ எந்தவகையான அர்ப்பணிப்பையும் செய்ததாக தெரியவில்லை.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/106414?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.