Jump to content

மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்க மாட்டோம் - ஜனாதிபதி


Recommended Posts

மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்க மாட்டோம் - ஜனாதிபதி

 

 
 

மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்காது வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி‍ உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்தார்.

my6.jpg

my3.jpg

திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “சிறிசர பிவிசும” அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக நிறைவு செய்யப்பட்ட பல திட்டங்கள் இன்று மக்களிடம் கையளித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு  கூறினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

my5.jpg

my1.jpg

1947 முதல் ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்களும் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டுமே வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளை பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, அம்மக்களின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசியல் பின்புலத்தை அமைக்கவில்லை.

வடக்கு, கிழக்கு இனப் பிரச்சினைக்கு பல விடயங்கள் அடிப்படையாக இருந்தபோதிலும் தகுந்த அரசியல் தலைமை அப் பிரதேசங்களில் பிரதிபலிக்காதது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஒரு மாகாணத்தை, அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு அம்மாகாணத்தில் குறைந்தபட்சம் ஓரு அமைச்சரவை அமைச்சுப் பதவியாவது வழங்கப்பட வேண்டும் அப்போதே நாட்டை பிளவுபடுத்தாத அதிகாரப் பகிர்வு எனப்படும் எண்ணக்கரு யதார்த்தமாகம்.

மன்னர்களின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வாவிகளை மையமாகக் கொண்ட நீர்ப்பாசன கலாசாரத்தினால் விவசாய அபிவிருத்தியின் ஊடாக கிராமிய பொருளாதாரம் சுபீட்சம் பெற்றிருந்ததுடன், தற்போதைய அரசாங்கமும் குளங்களின் புனரமைப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார். 

“சிரிசர பிவிசும” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கோமரங்கடவல பக்மீகம குளத்தை மக்களிடம் கையளித்தல், நீண்டகாலமாக இருந்துவரும் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதலுக்கு தீர்வை வழங்கும் வகையில் கோமரங்கடவல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 30 கிலோமீற்றர் நீளமான யானை வேலியை திறந்து வைக்கும் நிகழ்வுகளும் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. 

my4.jpg

“சிரிசர பிவிசும” செயற்திட்டத்தின் கீழ் குளங்களை புனரமைத்தல், யானை வேலிகளை நிர்மாணித்தல், வீதி புனரமைப்பு ஆகியவை இடம்பெறுகின்றன. இவ்வேலைத்திட்டங்கள் இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்புடன் இடம்பெறுகின்றது. 

“சிரிசர பிவிசும” வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலகத்தால் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நிதியினால் திருகோணமலை மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. அச் செயற்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற பக்மீகம குளத்தின் புனரமைப்பிற்காக 11 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. நினைவுப் பலகையை திறந்து வைத்து புனரமைக்கப்பட்ட குளத்தை மக்களிடம் ஜனாதிபதி கையளித்தார்.

my7.jpg

my2.jpg

தொடர்ந்து இடம்பெற்ற வைபவத்தில் கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு 30 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களை ஜனாதிபதி அவர்கள் வைத்திய நிபுணர் டீ.ஜீ.எம்.கொஸ்தாவிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/40863

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு இனப்பிரச்சனையா..??! இனப்பிரச்சனையையே புலிகளின் பிரச்சனை என்றாக்கிட்டாங்களே..??! 

இனப்பிரச்சனை என்பது புலிகளுக்கு முந்தி இருந்தே இருக்குதுன்னு எடுத்துச் சொல்லுங்கப்பா. அது இன்னும் இருக்குது.. தொடருது. அதுக்குத்தான் தீர்வு கேட்டு புலிகளும் போராடினார்கள்.. இப்போ தமிழ் மக்களும் சமத்துவமான உரிமை கொண்டமையும்.. அரசியல் தீர்வுன்னு கோரிக்கொண்டிருக்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

மீண்டுமொரு இனப் பிரச்சினைக்கு இடமளிக்க மாட்டோம் - ஜனாதிபதி

அப்ப இப்ப என்ன பிரச்சனை சிறிலங்காவிலை இருக்குதப்பா????? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.