Sign in to follow this  
நவீனன்

காஞ்சிரங்குடாவிலுள்ள பூர்விக காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Recommended Posts

காஞ்சிரங்குடாவிலுள்ள பூர்விக காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

 

 
 

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட தமது பூர்விக காணியை மீட்டுத் தருமாறு கோரி அப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

kanchiranguda1.jpg

இப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்,

நாங்கள் 1965 இல் இருந்து பூர்வீகமாக இக் காணில் வாழ்ந்து வந்த நிலையில், யுத்தம் காரணமாக இப் பகுதியிலிருந்து வெளியேறினோம். இக் காணிகளில் மீண்டும் குடியேற நாங்கள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அச்சம் காரணமாக குடியேற முடியாது போனது.

kanchiranguda2.jpg

இது தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களிடம் பல முறைபாடுகளை முன்வைத்த போதும் அவை பலனளிக்கவில்லை.

அத்துடன் தற்போது சுமாமர் 30 குடும்பங்களைச் சேர்ந்தோர் காணியில்லாமல் நிர்க்கதி நிலையில் வாழ்ந்து வருவதாகவும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவக்க‍ை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

http://www.virakesari.lk/article/40853

Share this post


Link to post
Share on other sites

அம்பாறை மாவட்டத்திற்கு அரசியல் பலம் இல்லாத போது இது போன்ற போராட்டங்கள் எடுபடாது உறவுகளே tw_cold_sweat:

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அம்பாறை மாவட்டத்திற்கு அரசியல் பலம் இல்லாத போது இது போன்ற போராட்டங்கள் எடுபடாது உறவுகளே tw_cold_sweat:

அரசியல் பலம் எண்டால் யார் அங்கை நிக்கவேணும் எண்டு நினக்கிறீங்க?

Share this post


Link to post
Share on other sites

 

13 hours ago, குமாரசாமி said:

அரசியல் பலம் எண்டால் யார் அங்கை நிக்கவேணும் எண்டு நினக்கிறீங்க?

அறிக்கைகள் விடும் அரசியல் வாதிகள் தான் இதே போல் சமாதான காலப்பகுதியில் இந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் பண்ணிப்போன திருக்கோவில் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் விசேட அதிரடிப்படையினால் அடுத்த நாள் சென்றோம் கஞ்சிகுடியாறுக்கு துயிலும் இல்லம் கட்ட 

அம் மக்களின் நிலையென்பது அந்த நிலங்கள் கைகளில் கிடைக்க வேண்டும் என்பது அம்பாறைக்கு ஒரு எம்பிய வைத்து ஒரு தும்மலும் தும்ம முடியாதுள்ளது அதே போல் முஸ்லீம்கள் ஓர் ஆர்ப்பாட்டம் பண்ணினால் அங்கே அவர்கள் ஓட்டிட்ட அரசியல் வாதியும் அல்லக்கைகளும் குமிகிறான் ஆனால் இங்கே அறிக்கை விட்டவனுகளை கண்டு பிடிப்பது  மிகப்பெரிய கஸ்ரம் 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this