Jump to content

ஆரையம்பதியில் ஆலயத்தை அகற்றும் முயற்சி?- விக்கிரகங்கள் உடைப்பு!


Recommended Posts

ஆரையம்பதியில் ஆலயத்தை அகற்றும் முயற்சி?- விக்கிரகங்கள் உடைப்பு!

 

IMG_0031-720x450.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

ஆரையம்பதி இரண்டாம் வட்டாரத்தின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள நரசிங்கர் ஆலயத்தில் உள்ள விக்கிரகங்களே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வழிபாட்டிற்காக சென்றவர்களே இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். எனவே, நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு இந்த விக்கிரகங்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்ச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பொலிஸாருடன் கலந்துரையாடியதுடன், சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மண்முனைப்பற்று பிரதேசசபை தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம், மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோரும் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

குறித்த ஆலயம் மீது கடந்த காலங்களில் பல்வேறு தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆலயத்தினை அப்பகுதியில் இருந்து அகற்றுவதற்கு ஒரு தரப்பினர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

IMG_0015.jpgIMG_0060.jpg

http://athavannews.com/ஆரையம்பதியில்-ஆலயத்தை-அக/

Link to comment
Share on other sites

இந்து கோவிலுக்குள் மாட்டை வெட்டிக்கொண்டுவந்து போட்டார்கள்- மட்டக்களப்பில் சம்பவம்!!

 

 

மட்டக்களப்பு ஆரையம்பதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு இந்த விக்கரகங்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் இன்று அதிகாலை ஆலயத்திற்கு வழிபாடுகளுக்கு சென்றவர்களே இதனைக்கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதன்போது ஆலயத்திற்கு முன்பாகவிருந்த விக்கரகங்கள், திரௌபதையம்மன்,ஆஞ்சநேயர் ஆலய விக்கிரகங்களும் பரிபாலன தெய்வ சூழங்களும் உடைக்கப்பட்;டுள்ளதுடன் மட அறையும் உடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலய மூலஸ்தான கதவுகளும் உடைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயம் அமைக்கப்படுவதற்கு முன்னர் இருந்தே தொல்லைகள் தரப்பட்டு வருவதாகவும், பல தடவைகள் இந்த ஆலயம் உடைக்கப்பட்டும், எரியூட்டப்பட்டும் இருந்ததாகவும் தெரிவிக்கும் கிராமத்தவர்கள், ஒரு தடவை இந்த ஆலயத்தின் நடுவே மாடொன்றை வெட்டிக்கொண்டுவந்த போட்டுவிட்டுச் சென்றதாகவும் கூறுகின்றார்கள்.

காத்தான்குடி என்ற முஸ்லிம் கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தை அகற்றும் நோக்கோடும், காத்தான்குடியைச் சேர்ந்த சிலரே இந்தக் காரியங்களைச் செய்து வருவதாகக் குற்றம் சுமத்துகின்றார்கள் ஆரயம்பதி வாழ் மக்கள்.

 

 

https://www.ibctamil.com/crime/80/106413?ref=ibctamil-recommendation

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.