Jump to content

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை – கூட்டு எதிரணி


Recommended Posts

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை – கூட்டு எதிரணி

 

Udayashantha-Gunasekara.jpg

இலங்கையில் இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படுவதை கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை என, கூட்டு எதிரணி குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் மேலும் கூறுகையில் “முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மக்கள் பூர்விகமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் ஜானகபுர, கல்யாணபுர என்ற பிரதேசத்தில் உள்ள 450 சிங்கள குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அம்மாவட்டச் செயலாளர் கூறியுள்ளார்.

இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். யுத்தத்தில் தமிழர்கள் தீங்கிழைக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எமதும் நிலைப்பாடாகும்.

அதேநேரம், தமது பூர்வீக இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களும் அங்கு குடியமர்த்தப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் தமிழ்க் கூட்டமைப்பினர் மற்றும் புலம்பெயர் தமிழர்களும் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள்.

வடக்கில் அபிவிருத்திகள் என்ற பெயரில், தமிழ் பிரிவினைவாதிகளின கோரிக்கைகளை செயற்படுத்தும் வேலைத்திட்டங்களே மேற்கொள்ளப்பட்டுகின்றன.

சிங்கள, தமிழ், முஸ்லிம்மக்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.” என தெரிவித்திருந்தார்.

http://athavannews.com/இனங்களுக்கிடையில்-ஐக்கி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
    • ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
    • அன்புள்ள நண்பரே அழகுப் பெண்களே ........!  😍
    • வணக்கம் வாத்தியார்...........! பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்.......! --- முதல் கனவே முதல் கனவே ---  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.