Jump to content

இந்­திய –இலங்கை அரசுகளைத் தமி­ழர்­கள் இனி­யும் நம்­ப­லாமா?


Recommended Posts

இந்­திய –இலங்கை அரசுகளைத் தமி­ழர்­கள் இனி­யும் நம்­ப­லாமா?

 

 

 
Capture-68-780x405.jpg
 

இலங்­கை­யில் மீண்­டும் போர் ஏற்­ப­டு­வ­தற்கு இந்­தியா அனு­ம­திக்­க­மாட்­டா­தெ­ன­வும், தாம் எப்­போ­தும் தமி­ழர்­க­ளுக்கே ஆத­ர­வாக இருக்­கப் போவ­தா­க­வும் இந்­தியத் தலைமை அமைச்­சர் நரேந்­தி­ர­மோடி, கூட்ட­மைப்­பின் தலை­வ­ரி­டம் உறு­தி­ய­ளித்­த­தா­கச் ­­செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. இத்­த­கைய உறு­தி­மொ­ழி­கள் இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்குப் புதி­தா­ன­வை­யல்ல. இந்­தி­யத் தலை­வர்­கள் வாக்­கு­று­தி­களை வழங்­கு­வ­தும் பின்­னர் அவற்றை மறந்து விடு­வ­தும் வழக்­க­மாகி விட்­டது. தமி­ழர்­களை அவர்­கள் குறை­வாக மதிப்­பி­டு­வ­தையே இது எடுத்­துக் காட்­டு­கின்­றது.

அக்­க­றை­கொள்­வ­தா­கக்
காட்­டிக்­கொள்­கி­றது இந்தியா

இந்­தியா, தமி­ழர்­க­ளின் அர­சி­யல் தீர்வு தொடர்­பான விட­யத்­தில் அக்­கறை காட்­டு­வ­தா­கக் காட்­டிக்­கொள்­கின்­றது. இதே இந்­தியா மனம் வைத்­துச் செயற்­பட்­டி­யி­ருந்­தால் அர­சி­யல் தீர்வு எப்­போதோ கிடைத்­தி­ருக்­கும். தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­தம் ஏந்­த­வேண்­டிய தேவை­யும் எழுந்­தி­ருக்­காது. தமிழ்­மக்­கள் இவ்­வ­ளவு அவ­லங்­களை­ எதிர்­கொண்­டி­ருக்­க­வும் மாட்­டார்­கள்.

தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் இந்­தி­யா­வு­டன் நெருங்­கிய உற­வைக் கொண்­டி­ருந்­தார்­கள். தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு இந்­திய எந்­த­வ­கை­யி­லா­வது தீர்­வைப் பெற்­றுத் தரு­மெ­ன­வும் நம்­பி­னார்­கள். இந்­தி­யா­வின் கப­டத்­த­னத்தை விடு­த­லைப் புலி­கள் நன்கு தெரிந்­து­கொண்­ட­தால் இந்தியாவை நம்­பு­வ­தற்கு அவர்­கள் தயா­ராக இருக்­க­வில்லை. இந்­தி­ய–­­இ­லங்கை ஒப்­பந்­தத்தை அவர்­கள் முற்­றாக நிரா­க­ரித்­த­மைக்கு இதுவே கார­ண­மா­கும். ஆனால் அன்­றி­ருந்த தமிழ்த் தலை­வர்­கள் இ்ந்த ஒப்­பந்­தத்தை முழு அள­வில் ஆத­ர­ரித்­தார்­கள். இதன்­மூ­ல­மா­கத் தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு கிடைக்­கு­மெ­ன­வும் நம்­பி­னார்­கள்.

இந்­தி­யத் தலை­யீட்டை
புலி­கள் விரும்­ப­வில்லை

இந்­தி­யப் படை­க­ளின் இலங்கை வரு­கை­யைப் புலி­கள் ஆரம்­பத்­தி­லேயே விரும்ப­ வில்லை. இந்­தியா நய­வஞ்­ச­க­மான முறை­யில் செயற்­ப­டு­வ­தாக அவர்­கள் கூறி­யது பின்­னா­ளில் நிதர்­ச­ன­மாகி ­விட்­டது. ஆனால் தமிழ்த் தலை­வர்­கள் புலி­க­ளின் வாதத்தை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. புலி­க­ளின் முக்­கிய தள­ப­தி­க­ளின் உயி­ரி­ழப்­புக்­க­ளுக்­குப் பின்­னால் இந்­திய அரசு செயற்­பட்­டமை புலி­க­ளுக்கு ஆத்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தால் இந்­தி­யப் படை­க­ளுக்­கும், புலி­க­ளுக்­கு­மி­டையே போர் மூண்­டது. இதில் ஏரா ­ள­மான தமிழ்­மக்­கள் இந்­தி­யப் படை­க­ளால் கொல்­லப்­பட்­ட­னர். பெண்­கள் பாலி­யல் துன்­பு­றுத்­தல்­க­ ளுக்கு ஆளாக்­கப்­பட்­ட­னர். ஆனால் அப்­போ­து­கூட தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் இந்­தி­யாவை நம்­பி­னர்.

இந்­தி­யப் படை­க­ளின் வரு­கை­யின் பின்­ன­ணி­யில் இந்­தி­யா­வின் அப்­போ­தைய தலைமை அமைச்­ச­ரா­க­வி­ருந்த ராஜிவ்­காந்தி செயற்­பட்­ட­தால் புலி­கள் அவர்­மீது தீராத வெறுப்­பைக் கொண்­டி­ருந்­த­னர். இறு­தி­யில் 1991ஆம் ஆண்டு ராஜிவ்­காந்தி கொலை செய்­யப்­பட்­டார். இந்­தக் கொலை­யின் பின்­ன­ணி­யில் பலர் இருந்­த­தா­கக் கூறப்­பட்­ட­போ­தி­லும், முழுப்­ப­ழி­யும் புலி­க­ளின் தலை­மீதே வீழ்ந்­தது.

இறு­திப் போரில்
இந்­தி­யா­வின் பங்கு

இலங்கையில் (இறு­திப் போர் இடம்­பெற்­ற­போது) மறைந்த தலைமை அமைச்சரான ராஜிவ்­காந்­தி­யின் துணை­வி­யா­ர் சோனியாகாந்தி தலை­மை­யி­லான காங்­கி­ரஸ் கட்­சி­யின் ஆட்சி இந்­தி­யா­வில் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது. இந்­திய அரசு இலங்­கைக்­குத் தேவை­யான சகல உத­வி­க­ளை­யும் வழங்­கி­யது. இறு­திப் போரில் இலங்கை வெற்றி பெற்­ற­தற்கு இந்­தி­யாவே முக்­கிய கார­ணி­யாக விளங்­கி­யது.

இத­னால் போரில் கொல்­லப்­பட்ட, காயமடைந்த, காணா­ம­லாக்­கப்­பட்ட தமிழ்மக்க­ளின் விட­யத்­தி­லி­ருந்து இந்­தியா வில­கி­நிற்க முடி­யாது. ஆனால், இந்­தியா இதி­லி­ருந்து சாது­ரி­ய­மா­கத் தப்­பித்துக்கொண்டது. பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­கள் தொடர்­பாக அக்­கறை எதை­யும் அது காட்­டிக்­கொள்­ள­வில்லை. இந்­தியா அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் சுஷ்மா சுவ­ராஜ், தலைமை அமைச்­சர் நரேந்­தி­ர­மோடி ஆகி­யோர் இங்கு வருகை தந்தபோது தமி­ழர்­க­ளுக்கு உதவு­வதா­கக் கூறிச் சென்­ற­னர். ஆனால் எது­வுமே நடக்­க­வில்லை. இப்­போது நரேந்­தி­ர­மோடி கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரி­டம் முன்பு கூறி­ய­தையே திரும்­ப­வும் கூறி­யுள்­ளார்.

சீனாவை விரட்­டு­வ­து­தான் இந்­தி­யா­வின் நோக்­கம்

இலங்­கை­யில் சீனா­வின் ஆதிக்­கத்தை முறி­ய­டிப்ப­ தில்­தான் இந்­தியா தனது முழுக் கவ­னத்­தை­யும் செலுத்தி வரு­கின்­றது. இதற்­காக இலங்­கை­யைக் கையில் போட்­டுக்­கொள்­வ­தில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. இத­னால் இலங்­கை­யின் வெறுப்­பைச் சம்­பா­திப்­ப­தற்கு அந்த நாடு விரும்­ப­மாட்­டாது.

இந்த நிலை­யில் தமி­ழர்­க­ளின் அர­சி­யல் தீர்வு தொடர்­பாக இந்­தியா , இலங்­கைக்கு நெருக்­கடி கொடுக்­கு­மென எவ்­வாறு எதிர்­பார்க்க முடி­யும்? இத­னால் மோடி வழங்­கிய வாக்­கு­றுதி நிறை­ வேறு­மென எதிர்­பார்க்­க­மு­டி­யாது.

தமிழ்த் தலை­வர்­கள் இந்­தி­யாவை இனி­யும் நம்­பிக்
கொண்­டி­ருப்­ப­தில் பய­னில்லை

இதே­வேளை நல்­லாட்சி அர­சின் பொய்­வே­டம் மெல்ல மெல்­லக் கலைந்து வரு­கின்­றது. அரச தலை­வ­ரின் சமீ­ப­கால நட­வ­டிக்­கை­கள் இதைத் தெளி­வாக எடுத்­துக் காட்­டு­கின்­றன. இறுதிப்போரின்போது குற்றமிழைத்த படை­யி­ன­ரைக் காப்­பாற்­று­வ­தி­லேயே அவர் கண்­ணும் கருத்­து­மா­கச் செயற்­ப­டு­கின்­றார்.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­க­ளுக்கு நீதி கிடைக்­குமா? என்ற சந்­தே­க­மும் எழுந்து நிற்­கின்­றது. எல்­லா­வற்­றுக்­கும் மேலா­கத் தமி­ழர்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்­வும் இனப் பிரச்­சி­னைக்­கான தீர்­வும், தொைல­வில்­கூ­டத் தெரி­வ­தா­க இல்லை. இந்­தி­யத் தலைமை அமைச்­சர், மகிந்­த­ராஜபக்சவுக்கு வழங்­கிய முக்­கி­யத்­து­வம் தொடர்­பாக அரசு கவ­லைப்­ப­டா­மல் இருக்க முடி­யாது.

இத­னால் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­ப­டுமா? என்­பது சந்­தே­க­மா­க­வே­யுள்­ளது. ஆகவே தமி­ழர்­க­ளும் தமிழ்த் தலை­வர்­க­ளும் இந்­தி­யா­வை­யும் இலங்கை அர­சை­யும் நம்­பிக் கொண்­டி­ருப்­ப­தால் பய­னொன்­றும் கிடைக்­கப்­போ­வ­தில்லை என்பதே உண்மையானது.

https://newuthayan.com/story/09/இந்­திய-இலங்கை-அரசுகளைத்-தமி­ழர்­கள்-இனி­யும்-நம்­ப­லாமா.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன சொல்ல வருகிறீர்கள்....ஜேர்மனியில் சட்டம் தான் ஆட்சி செய்கிறது   குற்றம் செய்தால் சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு  எனக்கு தெரிந்த பலர் அனுபவித்து உள்ளார்கள்  வேறு கடவுச்சீட்டு பாவித்து  பயணம் செய்ய முற்பட்டபோது கையும் மெய்யுமாக. பிடிபட்டுள்ளார்கள்....இங்கே கூடாதா வாழ்க்கை என்ற பலரும் ஊரிலுள்ள உறவினர்கள் நண்பர்கள்.     ....அழைத்து விட்டுள்ளார்கள் .. .ஏன்?? எதற்காக?? இப்போது கூட  இங்கே வருவதற்கு நிறைய பேர் முயற்சிகள் செய்கிறார்கள்   கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து    ஆரம்பத்தில் குமாரசாமி அண்ணை  சொன்ன விடயங்களை நானும் அனுபவித்து உள்ளேன்  .. உதாரணமாக பக்கத்து சிற்றிக்கு  போவதற்கு தடை  ....அந்த நேரத்தில் பல தமிழர்கள்  பல சிற்றிகளில். வெவ்வேறு பெயர்களில் பதிந்து பணம் எடுத்துள்ளார்கள். மட்டுமல்ல  பிரான்ஸ் பெல்சியம,. ... ....போன்ற பல நாடுகளில் கூட பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள்  இவையெல்லாம் உறுதியாக கண்டு பிடிக்கப்பட்டது  அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது  ..  குறிப்பு,   ...இலங்கை கடவுச்சீட்டுகளில் ...எல்லா நாடுகளுக்குமான. இலங்கை பாஸ்போர்ட் இல்    ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகம்.  ......இலங்கைக்கு மட்டுமே திரும்பி போகலாம்” என்று அடித்து கொடுக்கிறது    கொழும்பு விமான நிலையத்தில் திரும்ப வரும் போது  பல மணிநேரம் மறித்து  பணம் பறிக்கிறார்கள்  .....முதலாவது உங்கள் நாட்டை திருத்த முயற்சிகள் செய்யுங்கள் 
    • Bhakshak (தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார்கள்) என்று ஒரு திரைப்படம் சமீபத்தில் இணையத்தில் பார்த்தேன்.அனாதை இல்லத்தில் சிறுமிகளை எப்படித் துன்புறுத்துகிறார்கள் என்பதை விளக்குகிறார்கள். முடிந்தால் பாருங்கள்
    • மயிலம்மா என்று கதையைத் தொடங்கி அஞ்சலையை கலியாணம் கட்டி…, அதுசரி சுவியர் உங்கள் உண்மையான பெயர் வாமன் இல்லையே?
    • 40,000/= பொதி வண்டி தள்ளுபவர்களுக்கு கூலி ஒரு சூட்கேசிற்கு எத்தனை ரூபாக்கள் என்று அவர்களது ஜக்கெட்டில் போட்டிருக்கும் (தற்போது 250/= என நினைக்கிறேன்) டிப்ஸ் கோடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் முறையிடுவேன் என்று கூறி தப்பிக்க வேண்டியது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.