Jump to content

"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

கொழும்பில் குண்டுவெடிப்புகள் நடக்க முதல்.. கொழும்பில் தமிழர்கள் தாரில்.. ரயரில் எரிந்தார்களே. அப்போ எல்லாம் அங்குள்ள சிங்கள மக்கள் தமிழர்களை ஏன் காப்பாற்றத் தவறினார்கள்..??! புள்ளடி போட்டு ஏன் இனவாதிகளை மீண்டும் மீண்டும்.. தலைவர்கள் ஆக்கினார்கள்..??! 

 

 

நெடுக்கு ஐயா

83 கலவரத்தில் எத்தனை பேரை சிங்களவர்கள் பாதுகாத்தார்கள் தெரியுமா? என் அனுபவத்தில்  கண்ணால் கண்டது. இன்னும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். நீங்கள் புலிகளின் “Diehard” என்பதால் இவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனபேருக்கு புலி இல்லாததுதான் இப்ப பிரச்சினை 

பயங்கர டெரர் டயர்  அக்டரா இருப்பார் போல ( நக்கி திரிகிறதுக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

 

நெடுக்கு ஐயா

83 கலவரத்தில் எத்தனை பேரை சிங்களவர்கள் பாதுகாத்தார்கள் தெரியுமா? என் அனுபவத்தில்  கண்ணால் கண்டது. இன்னும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். நீங்கள் புலிகளின் “Diehard” என்பதால் இவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.

 

இது ஆழமாக பார்க்க வேண்டிய ஒரு கருத்து 
மத்திய வங்கி கொண்டு வெடிப்பு ஒன்றுதான் பொதுமக்கள் பாதிக்க படலாம் 
என் தெரிந்தும் அப்போதைய கொழுப்பு புலனாய்வு பிரிவு செய்த ஒரே ஒரு தாக்குதல் 
புலிகளின் 35 வருட போராட்ட வரலாற்றில் எனபது நீங்கள் அறிந்து இருக்க கூடியது.
(84-85 காலத்தில் குமுதினி படகு கொலைக்கு பழிவாங்க புலேந்திரன் அம்மான் ஒரு சிங்கள 
கிராமத்தில் புகுந்து பொதுமக்களை பழிக்கு பழிவாங்கினார்கள். அதில் பங்குபற்றிய 22 புலிகளும் 
தலைமையால் தண்டிக்க பட்டு பனிஸ்மனில் இருந்தார்கள். திருமலை தற்காலிக தளபதியாக சஞ்சய் நியமிக்க பட்டார்) 

எவ்ளவோ நாட்கள் வேவுகள் செய்து. பல வேவு புலிகளை பலிகொடுத்து 
 தாக்குதல் காலம் குனியும்போது அதனால் மக்களுக்கு பாதிப்பு வரலாம் என்ற ஒரே காரணத்தால் 
தவிர்க்கப்பட்ட தாக்குதல் எத்தனையோ.

மத்திய வாங்கி தாக்குதல் தவிர்க்க முடியாமல் போனதன் காரணம் 
ஒன்று சிங்கள பொருளாதார இலக்கு .... இரண்டு காலை 7 மணிக்கும் மாலை 6 மணிக்கும் 
இடையில் மட்டுமே சிலிங்கோ வீதி அப்போது பொது பாவனைக்கு இருந்தது வார இறுதியில் கூட 
பாதுக்காப்பு என்று பூட்டியிருந்தது உங்களுக்கும் தெரியும். தாக்குதல் இந்த நேரத்துக்குள் மட்டுமே சாத்தியம்.
தவிர்த்து இருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணமும் 
35 வருட போரில்  வீழ்ந்த ஒரு கறுப்பு புள்ளி. 

பொதுமக்களின் இறப்பை ஒருபோதும் நாம் நியப்படுத்த கூடாது 
என்பதில் எனக்கும் உங்களைப்போல வேறு கருத்து இல்லை. 

தராசின் இரண்டு பக்கமும் பார்த்தால் இலக்கு பொதுமக்கள் இல்லை என்பதும் உங்களுக்கும் தெரியும் 
பொதுமக்கள் இறந்தார்கள் என்ற உண்மையும் மறுக்க முடியாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பார்வை மருது,

பொதுமக்கள் கொலைகள் தடுக்கப்பட்டிருக்கலாம். எமது போராட்டத்தின் நியாயத்தை பலவீனப்படுத்தி, எதிரியின் எம்மீதான ஆக்கிரமிப்பினை வெளியுலகில் நியாயப்படுத்த அவர்களுக்குக் கிடைத்த  ஒரு சந்தர்ப்பம்  என்றுதான் இத்தாக்குதல்களைப் பார்க்கிறேன்.

உங்கள் கருத்திற்கு நன்றி

 

 

Link to comment
Share on other sites

சிலர் ராஜினி திரணகம விஜிதரன்செல்வி என்ற பெயர்களை சொல்லி வாழ்நாழ் முழுவதும் குடம் குடமாக கண்ணீர் விட்டுக்கொண்டே இருப்பார்கள். அது வர்க்க கண்ணீர்.  இவ்வாறு கண்ணீர் விடுபவர்களால் சிங்களம் செய்த பல நூறு படுகொலைகளுக்காக கண்ணீர் விட முடியாது. அது குமுதினி படகுமுதல் கிழாலியில் வெட்டினாலும் சரி கிழக்கில் வந்தாறுமுலை கொக்கட்டிசோலை சத்துருகொண்டான் படுகொலையானாலும் சரி வடக்கில் நவாலி குமுழமுனை படுகொலைகள் என எத்தனை நூறு கொடூரங்களை சிங்களம் செய்தபோதும் அதில் குஞ்சு குருமன் எல்லாம் வதைபட்ட போதும் கூட   வர்க்கக் கண்ணீர் என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்தோடுதான் சுரக்கும்.  

தன்னினத்துக்குள் சாதிய வர்க்கமாக இரைதேடி பழக்கப்பட்ட எம்மினத்துக்கு இந்த வரக்க கண்ணீர் ஆச்சரியமானதில்லை.  மேற்கண்ட கருத்துக்களால் படுகொலையில் ஈடுபடுபட்டவர்களையும் உட்பட்டவர்களையும் நியாயப்படுத்துவது என்று பொருள் கிடையாது ஆனால் மனிதாபிமானத்திலும் அறத்திலும் ஏற்றதாழ்வுள்ள  இந்த வரக்க கண்ணீரில்தான் மையவாதமும் பேரினவாதமும் ஐக்கியமாகின்றது. 

இனி ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு வாய்ப்பு மிக குறைவு  இருந்தாலும் பல காலங்களுக்குப் பிறகு மீள ஒரு ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்குமானால் கடந்த போராட்டத்தில் நடந்ததை விட பத்து மடங்கு அதிகமான கொலைகள் எமக்குள் நடக்கும். சாதி மத வர்க்க பிரதேசவாதப் பிழவுகள் உள்ளதும் பேரினவாதத்தை அண்டிப் பிழைக்கும் எமது சமூகத்தில் இவை தவிர்க்க முடியாமல் நிகழும். 

 

Link to comment
Share on other sites

On 9/19/2018 at 8:57 AM, colomban said:

 

நெடுக்கு ஐயா

83 கலவரத்தில் எத்தனை பேரை சிங்களவர்கள் பாதுகாத்தார்கள் தெரியுமா? என் அனுபவத்தில்  கண்ணால் கண்டது. இன்னும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். நீங்கள் புலிகளின் “Diehard” என்பதால் இவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.

 

அப்படி காப்பாற்றியே இத்தனை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால் எத்தனை கொடிய கொலைகாரர்கள் தெற்கில் வாழ்கிறார்கள் என்பது தெரியும்.

Link to comment
Share on other sites

On ‎9‎/‎20‎/‎2018 at 4:05 AM, சண்டமாருதன் said:

தன்னினத்துக்குள் சாதிய வர்க்கமாக இரைதேடி பழக்கப்பட்ட எம்மினத்துக்கு இந்த வரக்க கண்ணீர் ஆச்சரியமானதில்லை. 

தமிழர்கள் புலம்பெயர்ந்த மேலை நாடுகளில் இந்தச் சாதியம் அவர்களிடம் ஒரு தலைமுறையோடு அழியத்தொடங்கியிருப்பதைக் காணலாம். நிலத்திலும் அந்த நிகழ்வு தொடங்கி இருந்தாலும் அது நிறைவேற பல தலைமுறைகள் செல்லும் எனத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

On 9/19/2018 at 2:46 AM, colomban said:

இங்கு இவர் மக்கள் இறந்ததாலும் பரவாயில்லை என கூறியது மிகவும் தவறு. மனசாட்சியுள்ள எவனும் இவ்வாறு கூறமாட்டான். 

அதேபோல் புலிகளும் அதிபர் ஆனந்தராஜாவை சுட்டுக்கொன்றது, அரசாங்கத்தை பலிவாங்குகின்றோம் என  மத்திய வங்கியில் குண்டு வைத்து பல அப்பாவி உயிர்களை பலி எடுத்தது என பல உதாரணங்கள் தரலாம். (இக்குண்டு வெடிப்பில் எனக்கு Audit &  Assurance பாடம் படிப்பித்த ஒர் அப்பாவி சிங்கள ஆசிரியர் கொல்லப்பட்டார்.)

ஆகவே இரு பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

எனது தந்தைக்கு கொரனவிலும் தாயாருக்கு இன்னுமொரு தெற்கு நகரிலும்  வாள் வெட்டுக்களுடன் குறை உயிரும் குற்றுயிருமாக கப்பலில் யாழ்ப்பாணம்  திரும்பினர். நீஙகள் கொழும்பு தமிழர் என வீரம் பேசுவது எப்படி நியாயம் ஆகும்? உங்களின் அனுதாபங்கள் எத்தகையது??

பல இனப்படுகொலைகளின் சேகரிப்பு அப்பாவி தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்த ஆண்டுகள் பல பல . உங்களுக்கு விளங்காதது எப்படி பல மேற்கு நாட்டவர்களுக்கும் ஏன் சில சிங்கள மக்களுக்கும் விளங்கி உள்ளது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

எனது தந்தைக்கு கொரனவிலும் தாயாருக்கு இன்னுமொரு தெற்கு நகரிலும்  வாள் வெட்டுக்களுடன் குறை உயிரும் குற்றுயிருமாக கப்பலில் யாழ்ப்பாணம்  திரும்பினர். நீஙகள் கொழும்பு தமிழர் என வீரம் பேசுவது எப்படி நியாயம் ஆகும்?

யார் இப்பொழுது வீரம் பேசினார்கள்? எங்கையா வீரம் பேசியுள்ளேன்?

உங்களின் அனுதாபங்கள் எத்தகையது??

சகமனிதன், மனிதத்தன்மையுள்ளவன் எனும் தகமையில் கூறுகின்றேன். என்னப்பா இது அனுதாபம் தெரிவிக்க கூடாதா? 

பல இனப்படுகொலைகளின் சேகரிப்பு அப்பாவி தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்த ஆண்டுகள் பல பல . உங்களுக்கு விளங்காதது எப்படி பல மேற்கு நாட்டவர்களுக்கும் ஏன் சில சிங்கள மக்களுக்கும் விளங்கி உள்ளது??

யாரிந்த "அப்பாவி தமிழ் இளைஞர்கள்"?.இரத்தப்பொட்டு வைத்து இவர்களை உசுப்பேற்றி ஆயுதம் தூக்க வைத்தது உங்கள் தமிழ் தலைவர்களே.  இது சிங்களவனுக்கு, சர்வதேசத்துக்கு எல்லோருக்கும் தெரியும்? சரி ஆயுதம்தான் தூக்கினீங்கள், ஒரு நோக்கத்திற்காக எல்லோரும் ஏன் ஒன்றினையவில்லை? 30 க்கு மேட்பட்ட இயக்கங்கள் எதற்கு?
இப்படியான அப்பாவி இளைஞ்சர்களை போர்குற்றம் வரை
கொண்டு சென்றது யார்? 

(புலிகளும் போர்குற்றம் புரிந்துள்ளார்கள் என சர்வதேசம் கூறுகின்றதே?)

 

இப்படியான கேள்விகள் நான் கேட்டால் சிங்கள கைகூலி? தமிழின விரோதி? என்னையா இது?

நான் மனிதன். எங்கு அனியாயம் நடந்தாலும் தட்டிக்கேட்பேன். மேல மருங்கேணி மிகத்தெளிவாக அருமையாக மனப்பூர்வமாக பதிலளித்துள்ளார். 

நீங்கள் யாழில் ஓர் moderator இருந்துகொண்டு இப்படியான கேள்விகள் கேட்பது ஆச்சரியமாக இருக்கின்றது.

எந்த நாணயத்திற்கும் இருபக்கம் உண்டு. இருபக்கத்தையும் பார்க்க வேண்டும். (Balance view) 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/19/2018 at 12:43 AM, poet said:

மருதங்கேணி அவர்களுக்கு "செல்வியை ***** 
புலிகள் விட்டு விட்டு கொண்டே வந்தார்கள் ..."  தயவு செய்து பயங்கர வாத தன்மைகொண்டதும் சட்டரீதியாக தண்டனைகுரிய குற்றமும் அபத்தமானதுமான மேற்படி வார்த்தைகளை திரும்ப பெறுங்கள். விடுதலை போராட்டத்தை நாங்களும் ஆதரித்தோம். ஆனால் தவறுகளை தட்டிக்கேட்டோம். செல்வி தொடர்பாக முதலில் பரீசில் லோறன்ஸ் திலகர் ஊடாகவும் பின்னர் பலதவை வன்னியில் நேரடியாகவும் என் கண்டனத்தை தெரிவித்திருந்தேன். பல்கலைக் கழக மாணவர்களுக்கு எதிராக கிட்டு செய்த விடுதலைக்கு புறம்பான கொலைகளில் செல்வி கொலையும் அடக்கம்.  செல்விக்கு துரோகி முத்திரை கூத்தப்படக்கூடாது என்பதில் அக்கறையாக இருந்தேன்.  இறுதியில் விசாரனையின்போது இறந்துவிட்டதாக தெரிவிக்கபட்டது. செல்வியின் கொலையை புலிகள் இயக்கம்கூட பகிரங்கமாக நியாயப்படுத்தவில்லை. 

## ஒருமுறை டக்ளஸ் தேவானந்தா வெளிநாட்டிற்கு சென்றிருந்த சமயம், மாதாந்த அவசரகால சட்டநீடிப்பு நேரத்தில் சந்திரிக்கா அரசிற்கு அன்று மிகவும் அவசியமாக இருந்த, 20 ஆயிரம் ஓட்டுக்களால் 9 பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டிருந்த ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்களை வழிநடாத்தும் பொறுப்பு அற்புதனிடம் வந்தது. அம்மாத வாக்கெடுப்பில் அவசரகாலச் சட்டநீடிப்பை எதிர்த்து வாக்களிப்பது என்று அற்புதன் முடிவெடுத்தமையை டக்ளஸிற்கு விசுவாசமான உறுப்பினர்கள் டக்ளஸிற்கு அறிவித்ததையடுத்து டக்ளஸ் அவசரமாக வெளிநாட்டுப் பயணத்தை இடைநிறுத்தி நாடுதிரும்பி அவசரகாலச் சட்ட நீடிப்பு பாராளுமன்றில் நவெற்றிபெறுவதை உறுதிப்படுத்தியிருந்தார்.

புலிகளை விமர்சிப்பதாகத் தொடங்கிய அல்பிரட் துரையப்பா தொடக்கம் காமினிவரையான அற்புதனின் தொடர், போகப்போக உண்மையை உணரவைத்ததால் எதார்த்தத்தை நோக்கி அவரை நகரவைத்தது.

அவ்வாறான ஒரு சூழலில் அற்புதன் எழுதியது ராஜினி திரணகமவைச் சுட்டது ஈபிஆர்ல்வ் இன் மண்டையன் குழுவேயன்றி புலிகள் அல்ல என்பதே."

நண்பன் இனமொன்றின் குரல் அவர்களின் கீழ்வரும் இப்பதிவு அந்நிகழ்வை ஆராய்கின்றது.

###
இன்று ரஜினி திரணகம நினைவு நாள் 
இவரின் நினைவு நாளில் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் EPRLF கும்பலின் எச்சங்கள் தலித் அமைப்பு என்றும் மனித உரிமை குழுக்கள் இலக்கிய குழுக்கள் என பல பெயர்களில் மனித உரிமை பாடம் எடுப்பதும் அவரை புத்தியீவி என கதை எழுதுவதும் தொடர்ந்து நடக்குகிறது. 2009 களுக்கு பின்னால் இவை அதிகரித்து வருகிறது 
உண்மையில் தனிப்பட்ட காரணம் உடபட இரண்டு காரணங்களை முன் வைத்து ரஜினி திரணகம கொல்லப்பட்டார் .
முறிந்த பனை நூல் புலிகளை விமரிசித்து இருந்தாலும் இந்தியா அமைதிப்படை மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கி வடக்கு கிழக்கில் பத்மநாபா தலைமையில் கொலை களவு கடத்தல் பாலியல் வல்லுறவு என வெறியாட்டம் ஆடிய EPRLF ஆயுத கும்பலை பற்றியும் பேசி இருந்தது . இந்தியா ஆமி கொடூரங்கள் இந்த புத்தகங்கள் வழியாக வெளிவருவதை இந்தியா ஆமியின் ஒரு சாரார் விரும்பவில்லை .இந்தியா ஆமியின் சார்பில் கொலை செய்வதற்கான திட்டத்தை இந்தியா ஆமி தளபதிகளில் ஒருவரான கேணல் சசிகுமார் EPRLF அமைப்பின் ரஃபிக் என்பவரோடு சேர்ந்து திட்டமிட்டார் . இந்த திட்டத்தின் படி EPRLF அமைப்பின் கார்த்திக் மற்றும் தாமஸ் ஆகிய இருவரும் இந்த கொலையை செய்தனர் .திட்டத்தின் படி கொலை விழுந்த மறு கணமே புலிகள் மீது குற்றம் சுமத்தி EPRLF அறிக்கை வெளியிட்டது ..அதை மக்கள் மத்தியில் இந்தியா ஆமி ஏற்பாட்டில் EPRLF கொண்டு சென்றது ..புலிகள் இயக்கம் மணலாறு காட்டுக்குள் ஒடுக்கப்பட்ட நிலையில் இதை EPRLF கும்பல் வேகமாக செய்தது .இந்தியா படை வெளியேறிய பின்னர் கொலை செய்த தாமஸ் டக்ளஸ் கும்பலில் செயல்பட்டு வந்தார் .கார்த்திக் சில காலம் சுரேஷ் பிரம்மச்சந்திரனின் உதவியாளராக இயங்கி பின்னர் வெளிநாடு சென்று விட்டார் .பிற்காலத்தில் தாமஸ் திருகோணமலை பகுதியில் தனிப்பட்ட தகராறு ஒன்றில் வெட்டி கொல்லப்பட்டார் 
இந்த கொலை திட்டத்தை செய்லபடுத்திய கேணல் சசிகுமார் என்கிற இந்தியா ஆமி அதிகாரி கொலை நடந்த சில நாளில் மணியம்தோட்ட பகுதியில் வைத்து புலிகளால் கொல்லப்பட்டார் . இந்த கொலையை பகிரங்கமாக அம்பலப்படுத்திய EPRLF கும்பலின் முன்னை நாள் உறுப்பினரும் டக்ளஸ் குழுவை சேர்ந்தவருமான அற்புதனை இலங்கை ராணுவ ஏற்பாட்டில் டக்லஸ் மற்றும் சந்திரகுமார் (கிளிநொச்சி) சுட்டு கொன்றனர் .இந்த கொலையை சந்திரகுமார் நெறிப்படுத்தி இருந்தார். இந்த கொலையை தொடர்ந்து அற்புதனின் மனைவி மற்றும் பிள்ளைகளை டக்ளஸ் கும்பல் கொடூரமாக ஏமாற்றி இலங்கையில் இருந்து விரட்டி விட்டு தினமுரசு பத்திரிகையை அபகரித்தனர் .இதற்க்கு இன்றும் சட்டத்தரணியாக தொழில் புரியும் CV Vivekananthan சாட்சியாக இருக்கிறார்

PS 1: இந்த EPRLF கும்பல் இந்தியா ஆமி காலத்தில் வடக்கில் பிரபல ஆசிரியர் கிருசானந்தன் கிழக்கில் வண பிதா சந்திரா அடிகள் என ஆயிரக்கணக்கான அப்பாவிகளை வேட்டையாடியது .இதனால் தான் இந்தியா ஆமியோடு சேர்ந்து கும்பல் இந்தியா தப்பி ஓடியது. 2009 க்கு பின்னர் மீண்டும் இந்தியா ஆமி அனுசரணையில் வரதராஜ பெருமாள் தரையிறக்க பட்டு இருக்கிறார் .இந்த கும்பலின் எச்சங்கள் இந்தியா புலனாய்வு துறையின் ஏற்பாட்டில் இலக்கிய அமைப்புகள் , தலித் அமைப்புகள் என பல பெயர்களில் மீண்டும் இயக்க முயற்சிக்கப்படுகிறது . கிளிநொச்சியில் புலிகளின் சஞ்சிகை ஒன்றில் வேலை செய்த கருணாகரன் என்கிற ஒரு நபர் இந்த குழுக்களை இலக்கிய கூட்டங்கள் என்கிற பெயரில் ஒருங்கிணைக்கும் முகவராக செய்லபாடுகிறார்

PS 2: புலிகள் பெயரில் இந்தியா புலனாய்வு அமைப்பு கொலைகளை செய்ய தொடங்கியது புலிகள் டெலோ மோதலுக்கு முற்பட்ட காலமாகும் . நாடாளமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் (சித்ததார்த்தன் தந்தை ) ஆலாலசுந்திரம் ஆகியோரை டெலோ புலிகள் பெயரில் கொலை செய்து இருந்தது ..பின்னர் டெலோ அமைப்பு மோதலுக்கு முற்பட்ட காலம் ஒன்றில் புலிகள் இதை அம்பலப்படுத்தி இருந்தனர் .பாராளமன்ற உறுப்பினர் சித்ததார்த்தன் இதற்க்கு இன்றும் சாட்சி

டக்ளஸ் கும்பல் தன்னுடைய கும்பலை சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதத்தை கொலை செய்ததும் இப்படியான ஏற்பாடு தான் ..ஆனால் இந்த கொலை தனிப்பட்ட காரணம் ஒன்றுக்காக நடத்தப்பட்டது
###
குறிப்பு ,பொருளியல் ஆசான் கிருஷ்ணகாந்தன் ஆசிரியரையும் இந்த கும்பலே கொலை செய்தது 
நன்றி 
ஈழபபிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் கொல்லப்பட்டதில் மகிழ்ந்தவரின் படம் யாழிலா?: வலுக்கிறது எதிர்ப்பு!

October 2, 2018
Jude-Ratnam.jpg

விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமா ஒன்றை யாழில் திரையிடுவதற்கு எதிராக பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த ஜூட் ரத்தினம் என்ற நபரால் இயக்கப்பட்ட DemonsIn Paradise என்ற திரைப்படத்தை திரையிடுவதற்கே எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் மக்களின் போராட்டத்தை உலகளவில் கொச்சைப்படுத்துவதையே நோக்கமாக கொண்ட கருத்து வன்முறையை வளர்க்கும் இந்தவகையானவர்களிற்கு இடமளிக்க கூடாதென பரவலான எதிர்ப்பு எழ ஆரம்பித்துள்ளது.

 

யாழில் நடக்கவுள்ள திரைப்படவிழாவில் இந்த திரைப்படத்தையும் காட்சிப்படுத்த ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர். சிங்கள பெண் திரைப்பட இயக்குனர் ஒருவரே, அந்த படத்தை திரையிட வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றார். எனினும், நிகழ்ச்சி ஒழுங்கமைப்புகுழுவில் இருந்தவர்கள் அதற்கு சம்மதிக்காமல், அந்த படத்தை நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றியுள்ளது.

எனினும், தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு தொடர்ந்து எதிராக இயங்கி வரும் பல தனிநபர்கள், இந்த படத்தை திரையிட்டு பேச்சுரிமை காப்பாற்றப்பட வேண்டுமென கோசமெழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்காலில் எப்படியாவது யுத்தம் முடிக்கப்பட்டு விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண்டுமென தான் விரும்பியதாக திரைப்படத்தை இயக்கிய நபர் பகிரங்கமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://www.pagetamil.com/17733/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தவரையில் இத்திரைப்படம் யாழில் திரையிடப்படுவது தடுக்கப்படல் வேண்டும்.

தமிழர்களின் இனக்கொலையில் அகமகிழும் ஒரு பிறவியின் படைப்பை தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

முடிந்தவரையில் இத்திரைப்படம் யாழில் திரையிடப்படுவது தடுக்கப்படல் வேண்டும்.

தமிழர்களின் இனக்கொலையில் அகமகிழும் ஒரு பிறவியின் படைப்பை தமிழர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.

படம் திரையிடப்படவில்லை.

குய்யோ, முறையோ என்று கொழும்பு பத்திரிகைகள் எழுதுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தடுக்கப்பட்ட திரைப்படத்தின் பின்னணியில் இருந்தவர் மஹிந்தவின் ஆலோசகர்!

October 3, 2018
Jude-Ratnam.jpg

யாழில் திரையிடுவதிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள Demons in Paradise என்ற திரைப்படம் குறித்த பல அதிர்ச்சி தகவல்களை தமிழ்பக்கம் திரட்டியுள்ளது.

யாழில் இடம்பெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கனடாவில் வசிக்கும் ஜூட் ரட்ணம் என்ற நபர் இயக்கிய Demons in Paradise திரைப்படத்தை திரையிடுவற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “பொதுமக்கள் கொல்லப்பட்டாலும் சரி, விடுதலைப்புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற மனநிலையில் இருந்தோம்“ என அவர் பிபிசியில் நேர்காணல் வழங்கியிருந்தார்.

Demons in Paradise படம் சில நாடுகளில் ஏற்கனவே திரையிடப்பட்டிருந்தது அப்போதெல்லாம் அது யாரையும் ஈர்க்கவோ, கவனத்தை கோரவோ செய்யவில்லை. இதையடுத்து, பிபிசியில் அப்படியான பரபரப்பு கருத்தை கூறி, திரைப்படத்தை சர்ச்சையானதாக மாற்ற ஜூட் ரட்ணம் முயன்றதாக கூறப்படுகிறது.

ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை சேர்ந்த ஒருவர் புலிகள், இந்திய ராணுவத்தை கடந்து எப்படி தப்பி பாதுகாப்பாக வெளியேறுகிறார் என்பதே திரைப்படம்.

இந்த படம் உருவாக்கப்படுவதில் மனித உரிமைகளிற்கான பல்கலைகழக ஆசிரியர் சங்கம் என்ற தீவிர புலியெதிர்ப்பு கும்பல் பின்னணியில் இருந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்த ராஜன் கூல், படம் திரையிடப்பட வேண்டுமென குத்திமுறிவது கவனிக்கத்தக்கது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு யாழில் நடைபெற்றபோது, அதற்கான முழு ஏற்பாட்டையும் செய்திருந்தவர் மனோரஞ்சன். விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளராக நீண்டகாலம் அறியப்பட்ட இவர், முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆலோசகராகவும் செயற்பட்டவர்.

 

http://www.pagetamil.com/17746/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தை இயக்கிய ரட்ணம் என்பவர் மலையகத் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்தவர். கனடாவில் வசித்து வருபவர்.

இவருக்கும் மனோரஞ்சன் என்பவருக்குமிடையே தொடர்பிருக்கிறது.

மனோரஞ்சன் என்பவரது பெயர் சந்திரிக்கா காலத்தில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட பெயர். மனிதவுரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பினரோடு தொடர்புடையவர் என்று பேசப்பட்டது. இறுதியாக லேக் ஹவுஸ் தமிழ்ப் பத்திரிக்கையொன்றின் ஆசிரியராகவோ அல்லது, பத்தி எழுத்தாளராகவோ இருந்திருக்கிறார்.

ஆக, மகிந்தவினால் யாழ் பல்கலைக் கழகத்துக்குள் மீண்டும் கொண்டுவரப்பட்ட ராஜன் கூழ், மனோரஞ்சன் மற்றும் இன்னும் கொழும்பு மேல்த்தட்டிவர்க்க "டமிலர்கள்", ஜனநாயக வேடமிட்டு வலம் வரும் சிங்கள இனவாதிகளின் அனுசரணையுடந்தான் இப்படம் இயக்கப்பட்டு இப்போது யாழ்ப்பாணத்திலும் திரையிடப்பட எத்தனிக்கிறது.

Link to comment
Share on other sites

On 9/24/2018 at 1:28 AM, colomban said:

 

Quote

 

 

 

யார் இப்பொழுது வீரம் பேசினார்கள்? எங்கையா வீரம் பேசியுள்ளேன்?

 

நான்  எனது குடும்பம் சிங்கள காடையர்களால் சின்னா பின்னாமாக்கப்பட்டது என கூறுகிறேன். நீங்களோ சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காக்கப்பட்டார்கள் என்கிறீர்கள்.எப்படி இனவாத முஸ்லிம்களால் இனவாத கருத்தை கக்கும் தளத்தில் இருந்து உங்களால் கருத்துக்களை இணைக்க முடியும் என சொல்ல முடியுமா??

Quote

 

உங்களின் அனுதாபங்கள் எத்தகையது??

சகமனிதன், மனிதத்தன்மையுள்ளவன் எனும் தகமையில் கூறுகின்றேன். என்னப்பா இது அனுதாபம் தெரிவிக்க கூடாதா? 

 

எப்படி இனவாத முஸ்லிம்களின் தளத்தில் இருந்து கருத்தை இணைத்து  அனுதாபம் தேட முனைந்தீர்கள் அதுவும் ஒரு கொழும்பு தமிழராக நீங்கள் வித்தியாசமாக எல்லாவற்றையும் அணுகுபவராக உள்ள போதும்.???

 

Quote

 

யாரிந்த "அப்பாவி தமிழ் இளைஞர்கள்"?.இரத்தப்பொட்டு வைத்து இவர்களை உசுப்பேற்றி ஆயுதம் தூக்க வைத்தது உங்கள் தமிழ் தலைவர்களே.  இது சிங்களவனுக்கு, சர்வதேசத்துக்கு எல்லோருக்கும் தெரியும்? சரி ஆயுதம்தான் தூக்கினீங்கள், ஒரு நோக்கத்திற்காக எல்லோரும் ஏன் ஒன்றினையவில்லை? 30 க்கு மேட்பட்ட இயக்கங்கள் எதற்கு?
இப்படியான அப்பாவி இளைஞ்சர்களை போர்குற்றம் வரை
கொண்டு சென்றது யார்? 

(புலிகளும் போர்குற்றம் புரிந்துள்ளார்கள் என சர்வதேசம் கூறுகின்றதே?)

 

இரத்தபொட்டு வைத்தது கொழும்பு தமிழர்களுக்கு சும்மா நகைச்சுவையாக (எனது பார்வையில் நீங்கள் தமிழர் அல்ல அல்ல) இருக்கலாம். 400 க்கும்  360 எடுத்தும் பல்கலைகளகம் போகமுடியாதது எத்தகைய வாதம் என வெளிநாடுகளுக்கு வந்த போது தான் தெரிந்தது .
ஒரு உதைப்பந்தாட்ட குழு வென்றால் ஒருவரை ஒருவர் பாராட்டுவர். தோற்றால் ஒருவரை ஒருவர் விரல் நீட்டுவர். உலக நியதி.  
பலஸ்தீனத்திலும் பல இயக்கங்கள் உருவாகி இருந்தன. பில்லியன் முஸ்லிம்களினால் ஆனாப்பட்ட வெள்ளைகளின் காலடி தூசை ஏன் தொட முடியவில்லை என தேடுங்கள்??

Quote

புலிகளும் போர்குற்றம் புரிந்துள்ளார்கள் என சர்வதேசம் கூறுகின்றதே?)

அப்படியா சொல்லவே இல்லை. சில புலிகளே எஞ்சி உள்ளனர். ஏன் பத்து வருடங்களாக பயந்த சிங்கள பூச்சாண்டிகள் அஞ்ச வேண்டும்?  யாரும் தெற்கில் மனிதர்களாக சிந்திக்க மாட்டார்களா??  இல்லை அறிவு மத்திமமா?? 

சிரியாவில் அமெரிக்கா போட்ட குண்டுகள் போர்க்குற்றமா இல்லையா என கூறுங்கள்??

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.