Jump to content

"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட்


Recommended Posts

"இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்" - தமிழ் இயக்குநர் ஜூட்

"நான் தமிழன்... விடுதலை புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்"படத்தின் காப்புரிமைROBERT NICKELSBERG

தான் ஒரு "தேச துரோகி" என்று ஒப்புக்கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம். இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு காரணம் விடுதலை புலிகள் அமைப்புதான் என்று குற்றஞ்சாட்டுகிறார் இவர். இப்படி நினைப்பதற்கு என்ன காரணம் என்பதை பிபிசி செய்தியாளர் நளினி சிவதசனிடம் விளக்குகிறார் ஜூட்.

எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் விவரங்கள் சிலருக்கு வருத்தமளிக்கும் வகையில் இருக்கலாம்.

"இலங்கைப் போர் இறுதி கட்டத்தில் இருக்கும்போது, விடுதலை புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன். என் மக்கள் கொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை, புலிகளுக்கு ஒரு முடிவு வேண்டும் என்று தோன்றியது" என கூறுகிறார் ஜுட் ரத்னம்.

Demons in Paradise திரைப்படத்தின் இயக்குனர் ஜூட் ரத்னம்படத்தின் காப்புரிமைJUDE RATNAM Image captionDemons in Paradise திரைப்படத்தின் இயக்குனர் ஜூட் ரத்னம்

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. இலங்கை அரசாங்கம், விடுதலை புலிகளை தோற்கடித்தது. ஆனால், அதற்கு ஒரு பெரிய விலை கொடுக்கப்பட்டது. 40,000 மக்கள், முக்கியமாக தமிழர்கள் இந்தப் போரின் இறுதியில் உயிரிழந்ததாக ஐ.நா கணக்கிட்டது.

போர் முடிந்து பல ஆண்டுகளான நிலையில், இலங்கை திரைப்பட இயக்குநர்கள் இதனை மறு ஆய்வு செய்கின்றனர்.

ஒரு முக்கிய சித்தரிப்பு

நிர்மலன் நடராஜா மற்றும் ஞானதாஸ் காசிநாதர் உள்ளிட்ட சில தமிழ் இயக்குநர்கள், பொதுமக்களை குறிவைத்து பலரை கொன்று அநீதி இழைத்ததாக இலங்கை அரசாங்கத்தை நுட்பமாக விமர்சித்துள்ளனர்.

ஆனால், தனது 'Demons in Paradise' திரைப்படத்தில் தமிழ் திரைப்பட இயக்குநரான ஜூட் ரத்னம், விடுதலைப்புலிகளை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

'Demons in Paradise'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"வேறு பல படங்கள் உள்ளன… தமிழர்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமே அவை சித்தரிக்கின்றன. இதில் பல சிக்கல் இருக்கிறது."

தற்கொலைப்படை தாக்குதல், சிறுவர்களை ராணுவத்தில் பயன்படுத்துவது என விடுதலைப் புலிகள் பல கொடூரமான சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர். ஆனால், இலங்கையின் உள்ளேயும் வெளியேவும் உள்ள தமிழர்கள், புலிகளை கதாநாயகர்களாக பார்க்கின்றனர்.

சிங்கள கும்பல் நடத்திய வன்முறையில் இருந்து புலிகள் தங்களை பாதுகாப்பார்கள் என பலரும் நினைத்தனர். இந்நிலையில் இலங்கை அரசாங்கம் தமிழுக்கு எதிராக சட்டங்களை இயற்றியதோடு, 1956ஆம் ஆண்டு இலங்கையின் அதிகாரபூர்வமான மொழி சிங்களம்தான் என்றும் அறிவித்தது.

ஆனால், இயக்குநர் ரத்னத்தின் கருத்துபடி, தமிழர்களை பாதுகாக்கிறேன் என்று தன் சொந்த மக்களுக்கே பல கொடுமைகளை புலிகள் செய்ததாக கூறுகிறார்.

தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைக்கு பதிலளிக்கும் வகையில் 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் தேசிய குழுக்கள் பற்றிய பார்வையில் இவரின் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் ஒருவருக்கொருவர் கொலை செய்து கொண்டனர். இறுதியில் விடுதலை புலிகள் வென்றனர். ஒரு சம்பவத்தில் தமிழ் ஈழ விடுதலை அமைப்பான டெலோ அமைப்பின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களையும் அவர்கள் கொன்றதாக கூறப்படுகிறது.

மற்றொரு எதிர் தமிழ் அமைப்பில் சண்டையிட்ட உறவினரை பின் தொடர்கிறார் ரத்னம். அவர் விடுதலைப் புலிகளின் விமர்சகர்கள் சிலரை சந்திக்கிறார்.

ஒரு காட்சியில், விடுதலை புலிகள் செய்த கொடுமை என்று கூறி ஒரு நபர் விவரிக்கிறார்.

"என் தந்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது கட்டிலோடு தூக்கிச் சென்றனர். இரும்புப் பெட்டியால் அவரை கொடுமை செய்தனர். அவர் பின்னால் இரும்புப் பெட்டி வைத்து தேய்த்து, அவரது கண்ணை குண்டூசியால் குத்தினார்கள். இதனை பலருக்கும் அவர்கள் செய்தார்கள்."

பிரிந்த எதிர்வினை

2017ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் Demons in Paradise படம் திரையிடப்பட்டதில் இருந்து பல விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இலங்கையில் சிங்கள மொழி ஊடகங்கள் இத்திரைப்படத்தை புகழ்ந்துள்ளனர். டெய்லி மிரர் நாளிதழ் இப்படத்தை " இலங்கையிலேயே இலங்கை நபரால் எடுக்கப்பட்ட நேர்மையான, தைரியமான மற்றும் முக்கியமான ஒரு திரைப்படம்" என்று விவரித்திருந்தது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் Demons in Paradise படம் திரையிடப்பட்டதுபடத்தின் காப்புரிமைJUDE RATNAM Image captionகேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட Demons in Paradise படம்

பெரும்பாலான விடுதலை புலிகளின் தலைவர்கள் 2009ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர். அதனால் இத்திரைப்படத்திற்கான அவர்களது எதிர்வினை என்ன என்பது மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், பரந்துபட்ட தமிழ் சமூகத்துக்கு இது கோபத்தையே ஏற்படுத்தியுள்ளது.

நார்வே நாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அடையாளத்தில் நிபுணத்துவம் பெற்ற கல்வியாளரான அதிதன் ஜெயபாலன், தமிழ் புலிகள் செய்த குற்றங்களை மறுக்கவில்லை.

எனினும், இலங்கை போர் குறித்து பெரிதும் தெரியாத வெளிநாட்டு மக்களை இந்தப் படம் தவறாக வழிநடத்தும் என்று நினைப்பதாக கூறுகிறார்.

இலங்கை அரசாங்கம் செய்த குற்றங்களை பார்க்கும்போது விடுதலை புலிகள் செய்தது குறைவாகவே கருதப்படுகிறது என்று நம்புகிறார் ஜெயபாலன்.

இத்திரைப்படம் சரியான சூழுலை காண்பிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் எச்சரிக்கை

விடுதலை புலிகள் மீது வேண்டுமென்றே கவனம் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது என்கிறார் இயக்குநர் ரத்னம். வெளிநாடு வாழ் தமிழர்களையும், புலிகளை நல்லவர்கள் என்று கற்பனை செய்து கொண்டிருப்பவர்களையும் எச்சரிப்பதற்கே இந்தப்படம் எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.

தமிழ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"நீங்கள் உங்கள் சொந்த நிலத்தை விட்டு சென்றிருந்தாலும் அதன் நினைவுகள் உங்களிடம்தான் இருக்கும்… ஆனால், உண்மை என்னவென்றால் உங்கள் ஊரில் நிறைய விஷயங்கள் மாறியிருக்கும். போரினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்படத்தை அதிகமாக வரவேற்கலாம்" என்று ஜூட் ரத்னம் தெரிவித்தார்.

ஆனால், இதனை மறுக்கிறார் இலங்கையை அடிப்படையாக கொண்ட மனித உரிமை ஆர்வலர் மதுரி தமிழ்மாறன். கொழும்புவில் Demons in Paradise படத்தை பார்த்த மதுரி, இப்படத்தை தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இயக்குனர் ரத்னம் ஏன் திரையிடவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்.

"இப்படம் தமிழ் மக்களுக்கானது. ஆனால், தமிழ் மக்களுக்கு இது திரையிடப்படவில்லை" என்கிறார் அவர்.

காயங்களை குணமாகி வருகிறதா?

கடந்த தசாப்தத்தில் இலங்கையில் அமைதி திரும்பியது. ஆனால், இலங்கை இன்னும் இனவெறியால் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை இப்படத்திற்கு வரும் எதிர்வினைகளே உதாரணம்.

இத்திரைப்படத்திற்கு வந்த பின்விளைவுகள் எதிர்பார்த்ததுதான் என்று கூறும் ஜூட் ரத்னம், இலங்கையில் தமிழர்கள், சிங்களர்களுக்கு இடையே சமரசம் ஏற்பட தன் படம் உதவும் என்கிறார்.

"தமிழ் சமூகத்தின் மேல் உள்ள களங்கத்தை ஒப்புக்கொண்டால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியும். அதனை மறுத்து, இதில் நாம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறிக் கொண்டே இருந்தால் எப்போதும் அதே இடத்தில்தான் இருப்போம்" என்கிறார் ஜூட்.

https://www.bbc.com/tamil/sri-lanka-45551365

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தரப்பிலும் இப்படியான சிந்தனை உள்ள சில புறநடைகள் உள்ளனவே. காரணம்.. அதுகளுக்கு நெஞ்சில் சிங்கள எஜமான விசுவாசமும்.. தமிழர் மீதான காழ்புணர்வுமே.

பிபிசி தமிழுக்கு இப்ப இது தான் முக்கியமாகச் செய்ய வேண்டிய பணி. ஏனெனில்.. ஈழத்தில் இனப்படுகொலை பங்குதாரர்களை எல்லாம் காக்க வேண்டிய பணியில்.. பிபிசி ஊடகமும் இப்ப பயன்படுத்தப்பட்டாக வேண்டும். அதுக்கு சில தமிழின துரோகிகளை பெரிய இயக்குனர்களாக வர்ணிக்க வேண்டிய அவசியமும் பிபிசி தமிழ் ஹிந்திய ரோ ஆளுகை ஊடகத்துக்கு இப்போ தேவை. ?

சொறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசுகள்.. அதன் உதவி பெற்ற தமிழ் ஒட்டுக்குழுக்கள்.. ஹிந்திய இராணுவம்.. ஹிந்திய இராணுவ உதவி பெற்ற தமிழ் ஒட்டுக்குழுக்கள்.. முஸ்லீம் ஜிகாத்.. மற்றும் ஊர்காவல்படைகும்பல்கள் செய்த.. கொடுமைகளை எல்லாம் தொகுத்துக் காட்டினால்.. புலிகள் மீதான உண்மையான தோற்றம் என்பது புனிதமாகவே தோன்றும்.

அதை செய்ய இவர் போன்ற துரோகிகளுக்கு துணிவிருக்க வாய்ப்பே இல்லை. இது சிங்களத்திடம் பதுங்கி இருந்து கொண்டு செய்யும் ஒரு பக்க காட்சி நாடகம் மட்டுமே ஆகும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே இரவில் புகழ் பணக்காரன் ஆகணும் செல்வாக்கு பெறனும் என்றால் புலியை எதிர்த்து நாலு கவிதை  அல்லது கட்டுரை அல்லது படம் எடுத்தால் காணும் இந்திய சொறிலங்கா இரண்டும் சேர்ந்து கொஞ்ச நாளைக்கு பல்லக்கில் வைத்து ஆட்டும் என்பது வழமையே .

Link to comment
Share on other sites

Quellbild anzeigen

 

தமிழர்கள் நட்புப் பாராட்டினாலும், துரோகிகளானாலும் நன்றி உள்ளவர்கள். நன்றிக்கு உதாரணம் வயிரவரின் வாகனம். ஆனால் அந்த வாகனத்திற்கு தன் இனத்தைப் பிடிக்காது. இதிலிருந்து தமிழ் இயக்குநர் யூட்டை மட்டும் பிரித்துப்பார்க்கவும் முடியாது. 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் போன்று பலர் இருக்கிறார்கள்.

லக்ஷ்மண் கதிர்காமர், நீலன் திருச்செல்வம், ராஜன் ஹூலே, டக்கிளஸ் தேவானந்தா...என்று மிகவும் நீளமான ஒரு பட்டியல் இருக்கிறது.
இவர்கள் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டதினாலோ அல்லது புலிகளால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாலோ, அவர்களை வெறுக்கிறார்கள்.

புலிகள் தமிழ் மக்களைக் கொன்றார்கள் என்பதனால்த்தான் தான் அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்று விரும்பியதாகக் கூறும் இவர், கூடவே மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்றும் கூறுகிறார்.

ஆக, இவருக்கு இருக்கும் பிரச்சினை தமிழினம் சார்ந்தது அல்ல. மாறாக தனிப்பட்ட ரீதியிலானது. அதை இலகுமாவக மறைத்துவிட்டு, தமிழர்களுக்காகப் பேசுவதாகக் கூறுகிறார். அதை நாம் குறைகூறவும் முடியாது.
கொழும்பின் மேற்குத்தட்டு வர்க்கத்தில் பிறந்து வாழும் ஒரு தமிழரால் இதைத்தவிர வேறு எதையுமே செய்யமுடியுமென்றால்த்தான் நாம் வியப்படைய வேண்டும்.

சிங்களவர்களின் புகழ்ச்சிக்காகவும், வெள்ளையில்லாத ஒருவரின் படத்தினைத் திரையிட்டு தாம் இனவாதிகள் அல்ல என்பதை நிரூபிக்கத் துடிக்கும் வெள்ளையின போலி கலைஞர்களின் பாராட்டுதல்களுக்காகவும் இவர் இதனைச் செய்கிறார் என்பது தெளிவு.

முடிந்தால், முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் மீண்டுவந்த தமிழர்களிடம் இந்தப் படத்தைப் போட்டுக் காட்டட்டும், அப்போது தெரியும் இவர் எந்தத் தமிழர்களுக்காகப் பேசுகிறார் என்பது.

Link to comment
Share on other sites

Quote

இப்படத்தை தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இயக்குனர் ரத்னம் ஏன் திரையிடவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்.

இதிலிருந்தே தெரிகிறது இவர் எப்படிப்பட்ட சுயநலவாதி என. யார் யாரையெல்லாம் சந்தோசப்படுத்த முடியுமோ அவ்வளவு பேரையும் இப்படத்தின் மூலம் செய்துள்ளார். சுயநலம் என வரும் போது  சொந்த இனமாவது மண்ணாங்கட்டியாவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

கொழும்பின் மேற்குத்தட்டு வர்க்கத்தில் பிறந்து வாழும் ஒரு தமிழரால் இதைத்தவிர வேறு எதையுமே செய்யமுடியுமென்றால்த்தான் நாம் வியப்படைய வேண்டும்.

நிதர்சனமாக இருக்கும் யாருக்கும் வளையாத,  தமிழ் தேசத்தில், தேசியத்தில் ஊறிய அவரது கட்சி சகாக்களின் நரித்தனத்தை வேட்டையாடி, யதார்த்தமாக  உரிமைக்கு குரல் எழுப்பும் தற்போதைய முதலமைச்சர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கள் இவருக்கு இந்தியாவிற்கு போய் பெரிய டைரக்ட்டர் ஆகனும் என்று ஆசையாக்கும்... புலி ஆதரவாளர்களே புலியை வைத்து பிழைக்கும் போது இவரும் பிழைத்து போகட்டும்...இப்படியானவர்களை வளர விடடால்ஆபத்து 

 

 

 

Link to comment
Share on other sites

10 hours ago, நவீனன் said:

"இலங்கைப் போர் இறுதி கட்டத்தில் இருக்கும்போது, விடுதலை புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன். என் மக்கள் கொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை, புலிகளுக்கு ஒரு முடிவு வேண்டும் என்று தோன்றியது" என கூறுகிறார் ஜுட் ரத்னம்.

தமிழின விரோதிகளின் கைக்கூலிகளில் இன்னுமொருவர் மிலேச்ச போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற ஊளையிட்டு உழைக்கிறார்! 

டி.பி.எஸ். ஜெயராஜ் வரிசையில் இன்னுமொருவர்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் வந்து ஒரு வருடமாகின்றது. மீண்டும் திரையிட இப்படியான பரபரப்பு வசனங்களை எடுத்துவிட்டால்தானே பலரது கவனத்தையும் பெறலாம்.

படத்திற்கு ஸ்பொன்ஸர் செய்தவர்கள் யாராம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தை கடந்த வருடமே நான் பார்த்துவிட்ட்டேன் 
பெரும்பாலும் இந்திய றோவின் முதலீட்டில் 
ஒரு வித்தியாசமான பரப்புரை.

பார்ப்பானின் தமிழ் அழிப்பு அகோரம் என்பது 
எவ்ளவு தலைவிரித்து ஆடுகின்றது என்று சிந்திக்க கூடிய தமிழர்கள் 
மிக மிக அரிது.
சீமானோ .... கோமானோ .... யாரும் தவறு செய்தால்கூட 
அதை அவர்களிடமே அணுகி அதை திருத்தி ஒரு நல் பாதையில் செல்லவேண்டும் 
தமிழன் தலைநிமிர வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்களை விரல் விட்டு எண்ணலாம் 
இழிவு எழுதி பிழைப்பை பார்க்கும் தமிழன்தான் யாழ் களத்திலேயே மிகுதி.
புலிகள் முற்றாக அழிந்து போனாலும் ....
அவர்கள் இன்னமும் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்கிறார்கள் 
தமிழனை மீண்டும் மீண்டும் ஒருவருடன் ஒருவரை மோதவிடுவதில் கவனமாக இருக்கிறார்கள்.

இந்த இன துரோகி முன்வைக்கும் முக்கிய பழிகள் 
மிகவும் வேடிக்கையானது.

1) புலிகள் ஆயுத போரை வெகு விரைவாக முன்னெடுத்துதானாம் சிங்கள இராணுவம் 
பல அட்டுழியங்களை செய்ய காரணமாக இருந்ததாம் ( எஜமான விசுவாசம்) 

இதுக்கு தான் ஆயுத குழுக்களுடன் இணைந்து ஆயுத போர் செய்ய கொழும்பில் இருந்து போனாராம் 
அப்ப ஆயுதம் தூக்கி காக்க சுடாவா போனவர்??

2) மற்ற இயக்கங்கள் புலிகள் மீது மெல்லிய தாக்குதல்களைத்தான் செய்தார்களாம் ஆரம்பத்தில்.
கோபம் கொண்ட புலிகள் எல்லோரையும் துரோகிகள் ஆக்கினார்களாம் .... அது புலிகளின் பிழை?

செல்வியை*****
புலிகள் விட்டு விட்டு கொண்டே வந்தார்கள் .... ஒன்று பெண் என்பதால் ... இரண்டு பல்கலைக்கழக மாணவி 
என்பதால் ....... இதுதான் அவாவுக்கும் சூடு ஏறினது. தான் பல்கலைக்கழக மாணவி என்பதால் தன்னை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்றுதான் ஆடிக்கொண்டு இருந்தவா.

ஏன் கொண்டுபோனார்கள் என்பதை 
முதன் முதலாக ஒரு தமிழ் இன துரோகி வாயிலாக கேட்க முடிகிறது.  

இவர் 1985-86ற்கு பின் யாழில் இருந்திருக்க வாய்ப்பில்லை 
காரணம் அதன் பின் வரும் கதை எல்லாம் திரிப்பும் 
துரோகிகளின் பரப்புரையும்தான். அதன் முந்தைய கதைகளின் 
உண்மை தன்மை பற்றி அறிய எனக்கு அப்போது அறிவு  இருக்கவில்லை.

 

17 hours ago, ragunathan said:

இவரைப் போன்று பலர் இருக்கிறார்கள்.

லக்ஷ்மண் கதிர்காமர், நீலன் திருச்செல்வம், ராஜன் ஹூலே, டக்கிளஸ் தேவானந்தா...என்று மிகவும் நீளமான ஒரு பட்டியல் இருக்கிறது.
இவர்கள் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டதினாலோ அல்லது புலிகளால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாலோ, அவர்களை வெறுக்கிறார்கள்.

புலிகள் தமிழ் மக்களைக் கொன்றார்கள் என்பதனால்த்தான் தான் அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்று விரும்பியதாகக் கூறும் இவர், கூடவே மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்றும் கூறுகிறார்.

ஆக, இவருக்கு இருக்கும் பிரச்சினை தமிழினம் சார்ந்தது அல்ல. மாறாக தனிப்பட்ட ரீதியிலானது. அதை இலகுமாவக மறைத்துவிட்டு, தமிழர்களுக்காகப் பேசுவதாகக் கூறுகிறார். அதை நாம் குறைகூறவும் முடியாது.
கொழும்பின் மேற்குத்தட்டு வர்க்கத்தில் பிறந்து வாழும் ஒரு தமிழரால் இதைத்தவிர வேறு எதையுமே செய்யமுடியுமென்றால்த்தான் நாம் வியப்படைய வேண்டும்.

சிங்களவர்களின் புகழ்ச்சிக்காகவும், வெள்ளையில்லாத ஒருவரின் படத்தினைத் திரையிட்டு தாம் இனவாதிகள் அல்ல என்பதை நிரூபிக்கத் துடிக்கும் வெள்ளையின போலி கலைஞர்களின் பாராட்டுதல்களுக்காகவும் இவர் இதனைச் செய்கிறார் என்பது தெளிவு.

முடிந்தால், முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் மீண்டுவந்த தமிழர்களிடம் இந்தப் படத்தைப் போட்டுக் காட்டட்டும், அப்போது தெரியும் இவர் எந்தத் தமிழர்களுக்காகப் பேசுகிறார் என்பது.

 

சைக்கோவா இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.

இன்று வரைக்கும் நீ எங்கே சென்றாய்? 

Link to comment
Share on other sites

16 hours ago, நவீனன் said:

"இலங்கைப் போர் இறுதி கட்டத்தில் இருக்கும்போது, விடுதலை புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன். என் மக்கள் கொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை, புலிகளுக்கு ஒரு முடிவு வேண்டும் என்று தோன்றியது"

 

சிங்கள பேரினவாத சிந்தனையை விட மோசமான சிந்தனை.  தமிழினப்படுகொலையை சிங்களத்தின் சார்பாக நியாயப்படுத்தவென்றே உருவாக்கப்பட்டவர். பல பத்தாயிரம் மக்கள் இறுதிப்போரில் கொல்லப்பட்டதை பரவாயில்லை என்று சொல்ல இவ்வுலகில் எவனுக்கும் அடிப்படை உரிமை கிடையாது. அவ்வாறு சொல்வது அறமோ மனிதநேயமோ கிடையாது.

16 hours ago, நவீனன் said:

"தமிழ் சமூகத்தின் மேல் உள்ள களங்கத்தை ஒப்புக்கொண்டால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியும். அதனை மறுத்து, இதில் நாம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறிக் கொண்டே இருந்தால் எப்போதும் அதே இடத்தில்தான் இருப்போம்" என்கிறார் ஜூட்.

 

மேலும் அவர் சொல்லவருவது நாம் பாதிக்கப்பட்டவர்கள் (அதவாது இனப்படுகொலைக்கு உட்பட்டவர்கள்கள் , இடப்பெயர்வுக்கு உட்பட்டவர்கள் , காணாமல் ஆக்கப்பட்டவர்கள் , வதைமுகாம்களிலும் சிறைகளிலும் துன்பப் படுகின்றவர்கள், ஊனமாக்கப்பட்டவர்கள்) என்று சொல்லாதீர்கள். என்கின்றார். சுருக்கமாக சிங்கள பேரினவாதத்தின் அனைத்துவிதமான கோரதாண்டவத்தையும் ஏற்றுக்கொண்டு அமைதியாக இருங்கள் என்கின்றார்.

இந்திய ஆழும்வர்கத்தின் குரலாக மாறிவிட்ட பிபிசி தமிழோசை உலகத்தில் தன்னை விட மற்றவன் எல்லாம் மடயன் என்ற வழமையான எண்ணத்துடன் தனது குள்ளநரித்தனத்தைக் காட்டுகின்றது. இனப்படுகொலையை தனது பங்குக்கு நியாயப்படுத்துகின்றது. 

Link to comment
Share on other sites

மருதங்கேணி அவர்களுக்கு "செல்வியை ***** 
புலிகள் விட்டு விட்டு கொண்டே வந்தார்கள் ..."  தயவு செய்து பயங்கர வாத தன்மைகொண்டதும் சட்டரீதியாக தண்டனைகுரிய குற்றமும் அபத்தமானதுமான மேற்படி வார்த்தைகளை திரும்ப பெறுங்கள். விடுதலை போராட்டத்தை நாங்களும் ஆதரித்தோம். ஆனால் தவறுகளை தட்டிக்கேட்டோம். செல்வி தொடர்பாக முதலில் பரீசில் லோறன்ஸ் திலகர் ஊடாகவும் பின்னர் பலதவை வன்னியில் நேரடியாகவும் என் கண்டனத்தை தெரிவித்திருந்தேன். பல்கலைக் கழக மாணவர்களுக்கு எதிராக கிட்டு செய்த விடுதலைக்கு புறம்பான கொலைகளில் செல்வி கொலையும் அடக்கம்.  செல்விக்கு துரோகி முத்திரை கூத்தப்படக்கூடாது என்பதில் அக்கறையாக இருந்தேன்.  இறுதியில் விசாரனையின்போது இறந்துவிட்டதாக தெரிவிக்கபட்டது. செல்வியின் கொலையை புலிகள் இயக்கம்கூட பகிரங்கமாக நியாயப்படுத்தவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

செல்வியை*****


புலிகள் விட்டு விட்டு கொண்டே வந்தார்கள் .... ஒன்று பெண் என்பதால் ... இரண்டு பல்கலைக்கழக மாணவி 
என்பதால் ....... இதுதான் அவாவுக்கும் சூடு ஏறினது. தான் பல்கலைக்கழக மாணவி என்பதால் தன்னை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்றுதான் ஆடிக்கொண்டு இருந்தவா.

செல்வி ஆடாத ஆட்டமில்லை. சமூகச் சீரழிவுவாதிகள் எல்லாம் இப்ப சமூகச் சீர்திருத்தவாதிகளாகச் சித்தரிக்கப்படும் கொடுமை நடக்குது. காரணம்.. கமராவும்.. இணையமும்.. ஊடகமும்.. இப்ப யார் கைக்கும் போகலாம் கையாளப்படலாம் என்பதால். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, poet said:

மருதங்கேணி அவர்களுக்கு "செல்வியை ***** 
புலிகள் விட்டு விட்டு கொண்டே வந்தார்கள் ..."  தயவு செய்து பயங்கர வாத தன்மைகொண்டதும் சட்டரீதியாக தண்டனைகுரிய குற்றமும் அபத்தமானதுமான மேற்படி வார்த்தைகளை திரும்ப பெறுங்கள். விடுதலை போராட்டத்தை நாங்களும் ஆதரித்தோம். ஆனால் தவறுகளை தட்டிக்கேட்டோம். செல்வி தொடர்பாக முதலில் பரீசில் லோறன்ஸ் திலகர் ஊடாகவும் பின்னர் பலதவை வன்னியில் நேரடியாகவும் என் கண்டனத்தை தெரிவித்திருந்தேன். பல்கலைக் கழக மாணவர்களுக்கு எதிராக கிட்டு செய்த விடுதலைக்கு புறம்பான கொலைகளில் செல்வி கொலையும் அடக்கம்.  செல்விக்கு துரோகி முத்திரை கூத்தப்படக்கூடாது என்பதில் அக்கறையாக இருந்தேன்.  இறுதியில் விசாரனையின்போது இறந்துவிட்டதாக தெரிவிக்கபட்டது. செல்வியின் கொலையை புலிகள் இயக்கம்கூட பகிரங்கமாக நியாயப்படுத்தவில்லை. 

நீங்கள் ஏன் செல்விக்குள் கொண்டுவந்து கிட்டரை விடுறீங்கள் ?

செல்விக்கு பலதடவை காண்டீபன் நேரடியாகவே எச்சரிக்கை செய்து வந்திருக்கிறார்.
எப்போவோ கொண்டுபோயிருப்பார்கள் .... முன்பு நடந்த சில கசப்புகளால்தான் 
விட்டுக்கொண்டு வந்தார்கள்.

கண்டனம் யாரும் விடலாம் ....
மக்களுடன் நின்று மக்களுக்காக ஒரு வல்லாதிக்க இராணுவம் சூழ 
கூட்டி கொடுக்கவும் காட்டி கொடுக்கவும் துரோகிகள் வாழ 
நடுவில் நின்று ஒரு பட்டாஸு என்றாலும் விடடவனுக்குத்தான் தெரியும் 
யார் யார் என்ன சொறிந்துகொண்டு இருந்தார்கள் என்று. 

இவருடன் சேர்த்துத்தானே பல்கலைக்கழக மாணவன் மனோகரனையும் புலிகள் கொண்டு 
சென்றார்கள் பின்பு சரியாக ஞாபகம் இல்லை 95-96 என்றுதான் எண்ணுகிறேன் இருவரும் இறந்து விடடார்கள் 
என்று சொன்னார்கள் ....
செல்விக்கு காவடி தூக்கும் எல்லோரும் ஏன் மனோகரன் பற்றி பேசுவதில்லை ?
குட்டை கலங்கிடும் என்று கவலையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இவர் மக்கள் இறந்ததாலும் பரவாயில்லை என கூறியது மிகவும் தவறு. மனசாட்சியுள்ள எவனும் இவ்வாறு கூறமாட்டான். 

அதேபோல் புலிகளும் அதிபர் ஆனந்தராஜாவை சுட்டுக்கொன்றது, அரசாங்கத்தை பலிவாங்குகின்றோம் என  மத்திய வங்கியில் குண்டு வைத்து பல அப்பாவி உயிர்களை பலி எடுத்தது என பல உதாரணங்கள் தரலாம். (இக்குண்டு வெடிப்பில் எனக்கு Audit &  Assurance பாடம் படிப்பித்த ஒர் அப்பாவி சிங்கள ஆசிரியர் கொல்லப்பட்டார்.)

ஆகவே இரு பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஊத்தைக்குள் ஊறித்தான் 88-89 களில் செல்வியும் இருந்தார் 
இப்போ தெளிஞ்ச நீரா அள்ளி தெளிக்க பார்க்கிறார்கள். 

(உங்களுக்கு கவிதை எழுதுவதால் ..வருடன் தனிப்பட நட்போ உறவோ இருந்து இருக்கலாம்.
அதுக்காக நாம் உண்மையை மூட வேண்டிய அவசியம் இல்லை ஐயா. 88-89 களில் போராட்ட களம் 
நீங்கள் நினைக்கும் படியாக இருக்கவில்லை. அநேகமான இரவுகளை குப்பியை கையில் வைத்துக்கொண்டே 
கடந்து இருக்கிறார்கள். எதிரியால் அவர்கள் பட்டது குறைவு ... துரோகிகளால் கண்டது ஆயிரம்) 

Link to comment
Share on other sites

Maruthankerny அவர்களுக்கு, நடந்த தவறுகளை நியாயபடுத்துவதுத எமது விடுதலைக்கு உகந்ததில்லை .கிட்டு தனிப்பட்ட நட்பு வட்டத்தை சேர்ந்தவரின் பிள்ளையை றாக் பண்ணிய திருமலை  மாணவனை சித்திரவதை செய்து கொன்றதில் இருந்துதான் இந்த கொலைகள் ஆரம்பிக்கிறது. மேற்படி கொலைக்கு எதிராக முன்னணியில் நின்று போராடியது செல்விதான்.  நான் இதுபற்றி உடனடியாக பரிசிலும் தொடர்ந்து  வன்னியிலும்  விவாதிதவற்றைத்தான் இங்கு எழுதியிருக்கிறேன். எங்கள் எதிர்ப்பால் புலிகள் செல்வியை இழிவுபடுத்தும்  குற்றசாட்டு எதையும் வைக்கவில்லை. இதற்குமேல் இந்த விவதத்தை தொடராது விட்டுவிடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜிதரனின் கொலையில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது 
அப்போது எனக்கு யாழ்ப்பாணமே தெரியாது.

88-89களில் இவர்களின் கூத்தை நான் பார்த்து இருக்கிறேன் 
புலிகள் மீள்வார்கள் என்று அப்போது யாரும் எண்ணியிருக்கவில்லை 
(உண்மையில் நான் கூட நம்பவில்லை)
அப்போ பல்கலைக்கழ வளாகத்துக்குள் இருந்த புலி சார்பை 
அல்லது ஆதரவை அடியோடு அறுக்க வேண்டும் என்று துடித்தவர்கள் இவர்கள்

இவர்களுக்கும் மேலே தலைப்பில் உள்ள படம் எடுத்தவருக்கும் பெரிதாக 
வித்தியாசம் இல்லை .... இவர்கள் தேவாரம் பாடி கொண்டு சிவன் கோவில் இடித்த கூட்டம்.

இவரை புலிகள் தனியாக கைது  செய்யவில்லையே?
இவரின் வீட்டில் வைத்து இன்னும் சிலருடன்தான் கைது செய்தார்கள் 
அவர்களும் இப்போ இல்லை .... ஏன் யாரும் அவர்கள் பற்றி பேசுகிறீர்கள் இல்லை?

இதோடு விடுவோம் என்று நீங்கள் சொல்லிஇருப்பதால் 
இத்தோடு விட்டு விடலாம்.  
 

1 hour ago, nedukkalapoovan said:

செல்வி ஆடாத ஆட்டமில்லை. சமூகச் சீரழிவுவாதிகள் எல்லாம் இப்ப சமூகச் சீர்திருத்தவாதிகளாகச் சித்தரிக்கப்படும் கொடுமை நடக்குது. காரணம்.. கமராவும்.. இணையமும்.. ஊடகமும்.. இப்ப யார் கைக்கும் போகலாம் கையாளப்படலாம் என்பதால். ?

நாங்கள் ஊர் சுற்ற திரிவத்துக்கு முன்பு 
இவா இரண்டு புத்தகமும் எழுதி எதோ ஒரு நாடகமும் 
செய்தவாவாம் .........
கவிஞர் இப்பவும் அந்த நினைப்பில் இருக்கிறார் என்று எண்ணுகிறேன் 
இந்திய இராணுவ காலம் இவர்களுக்கு தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

நாங்கள் ஊர் சுற்ற திரிவத்துக்கு முன்பு 
இவா இரண்டு புத்தகமும் எழுதி எதோ ஒரு நாடகமும் 
செய்தவாவாம் .........


கவிஞர் இப்பவும் அந்த நினைப்பில் இருக்கிறார் என்று எண்ணுகிறேன் 
இந்திய இராணுவ காலம் இவர்களுக்கு தெரியவில்லை. 

செல்வியை சாதாரண மக்களே.. பொடியள் இவளை எதுக்கு விட்டு வைச்சிருக்காங்கள் என்று கேள்வி கேட்டதை.. நாங்களும் கேட்டிருக்கிறோம். அப்போ சிறுவர்களாக இருந்த போதும் இவை செவிகளைச் சேர்ந்தன. 

1 hour ago, Maruthankerny said:

விஜிதரனின் கொலையில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது 
அப்போது எனக்கு யாழ்ப்பாணமே தெரியாது.

விஜிதரனை கடத்திக் கொண்டு போய் வைத்திருந்தது அவர் விசுவாசித்த ஈபி ஆர் எல் எவ் இன் டக்கிளஸ் கும்பல். (இதனை உறுதிப்படுத்தியது அப்போது யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பயின்று கொண்டிருந்த.. ஈ பி ஆர் எல் எவ் அரசியல் பிரிவு உறுப்பினர் சிறீதரன்). அப்போது டக்கிளஸ் ஈபி ஆர் எல் எவ் இன் ஆயுதப் பிரிவில் இருந்தார். தான் பலஸ்தீன.. லெபனான் பயிற்சி பெற்ற ஆள் என்ற திமிரில் ஆடித்திருந்தார். புலிகளை வேண்டும் என்றே வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தார். இவரே அமெரிக்க அலன் தம்பதிகள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டு... சர்வதேச அரங்கில் எமது விடுதலைப் போராட்டத்தை.. அப்பாவி மக்களுக்கு எதிரான பயங்கரவாதமாக மாற்றிக் காட்டியவர்.

கடைசியில் பழி எல்லாம் புலி மேல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

இங்கு இவர் மக்கள் இறந்ததாலும் பரவாயில்லை என கூறியது மிகவும் தவறு. மனசாட்சியுள்ள எவனும் இவ்வாறு கூறமாட்டான். 

அதேபோல் புலிகளும் அதிபர் ஆனந்தராஜாவை சுட்டுக்கொன்றது, அரசாங்கத்தை பலிவாங்குகின்றோம் என  மத்திய வங்கியில் குண்டு வைத்து பல அப்பாவி உயிர்களை பலி எடுத்தது என பல உதாரணங்கள் தரலாம். (இக்குண்டு வெடிப்பில் எனக்கு Audit &  Assurance பாடம் படிப்பித்த ஒர் அப்பாவி சிங்கள ஆசிரியர் கொல்லப்பட்டார்.)

ஆகவே இரு பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

அதிபர் ஆனந்தராஜா பாடசாலைக்கு அதிபராக இருந்திருக்க வேண்டும். கோட்டை இராணுவ முகாமுக்கு அதிபராக இருந்திருக்கக் கூடாது. மேலும்.. ஆனந்தராஜாவை சுட்டதிலும் பழி புலி மேல். 

கொழும்பில் குண்டுவெடிப்புகள் நடக்க முதல்.. கொழும்பில் தமிழர்கள் தாரில்.. ரயரில் எரிந்தார்களே. அப்போ எல்லாம் அங்குள்ள சிங்கள மக்கள் தமிழர்களை ஏன் காப்பாற்றத் தவறினார்கள்..??! புள்ளடி போட்டு ஏன் இனவாதிகளை மீண்டும் மீண்டும்.. தலைவர்கள் ஆக்கினார்கள்..??! 

ஆக.. போரின் தாக்கம் என்பது வெறுமனவே தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. கிராமங்கள்.. நகரங்கள்.. பாடசாலைகள்.. நூல் நிலையங்கள்.. கோவிகள்.. தேவாலயங்கள்.. சந்தைகள்.. வைத்தியசாலைகள் எல்லாம் வடக்குக் கிழக்கில்  இலக்கு வைக்கப்பட்டு சிங்களப் படைகளால்.. தாக்கப்பட்டு மக்கள் பலியெடுக்கப்பட்ட களத்தில்.. அந்தப் பலிகளை ஏன் சிங்களவர்கள் கண்டிக்கத் தவறினார்கள்..?! அரசை அரச படைகளின் அட்டூழியங்களை நிறுத்தச் சொல்லி ஏன் கோரவில்லை.. வாக்குகளை பாவிக்கவில்லை..??!

உங்கள் சிங்கள் ஆசிரியரும் இதில் அடக்கம் தானே..????!

சக மனிதன் தமிழன் என்பதற்காக அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்த சிங்களவர்களும்.. சிங்கள அரச பயங்கரவாதக் கொடூரர்களின் செயலுக்கு உடந்தையே. இதை ஏன் உங்கள் மனச்சாட்சி கேள்வி கேட்க மறுக்கிறது..???! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருது மற்றும் நெடுக்கு,

எனக்கு செல்வியைப் பற்றித் தெரியாது. ஒருமுறை சரிநிகர் பத்திரிக்கையைப் படிக்கும்போது இவரது மரணம் பற்றி ஒரு ஆக்காத்தைப் படித்ததாக நினைவு. நான் 80 களின் இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறிவிட்டேன். இந்திய ராணுவத்தின் யாழ்ப்பாணம் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை நடைபெற்று சில மாதங்களில் மட்டக்களப்பிற்குச் சென்றுவிட்டேன். அவ்வப்போது தம்பி மூலம் யாழ்ப்பாண நிகழ்வுகள் பற்றி அறிந்துகொள்வேன். ஆனால், யாழ் பல்கைல் கழகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அறிந்திருக்கவில்லை.

உங்களுக்கு நேரம் இருப்பின், செல்வியின் பின்புலம், அவரது செயற்பாடுகள் பற்றி அறியத்தர முடியுமா?

செல்விபற்றி இனி எழுதவேண்டாம் என்கிற கவிஞர் ஜெயபாலன் அவர்களின் வேண்டுகொளையும் பார்த்தேன், சிரமம் என்றால் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான்,

கொழும்பு மத்தியவங்கிக் குண்டுவெடிப்பு சாதாரண சிங்கள மக்களைக் குறிவைத்து நடந்தது என்பதைக் காட்டிலும், அரசாங்கத்தின் பொருளாதாரத்தை இலக்குவைத்தும், அரசாங்கத்தைத் தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்கும் கொழும்பின் நடுத்தர வர்க்க சிங்கள மக்களை குறிவைத்துமே நடைபெற்றது.

என்னதான் காரணம் சொன்னாலும்கூட கொல்லப்பட்டவர்கள் சாதாரண மக்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். புலிகள் பயங்கரவாதிகள் என்பதை உலகிற்கு உரத்துச் சொல்வதற்கு இந்தத் தாக்குதலையும் பேரினவாதம் பாவித்துக்கொண்டதென்பதும் உண்மைதான். சுற்றியிருந்த பொருளாதார மையங்கள், வெளிநாட்டுத் தூதுவராலயங்கள், பன்னாட்டு வங்கிகள் என்று பலவற்றிற்கு நடுவே நடத்தப்பட்ட இத்தாக்குதலால் எமக்குக் கிடைத்த நண்மைகளைவிட பாதிப்புகள் அதிகம் என்பதுதான் எனது எண்ணம்.

இதேபோன்றதொரு தாக்குதல்தான் தெகிவளைப் புகையிரதத் தாக்குதலும். வேலைவிட்டுச் சென்ற பொதுமக்கள் இலக்குவைக்கப்பட்டார்கள். இதையும் சிங்களம் தனது பிராச்சரத்துக்குப் பாவித்துக்கொண்டது.

அதேவேளை வடக்கிலும் கிழக்கிலும் அதே நாட்களில் கொன்றுகுவிக்கப்பட்டுக்கொண்டிருந்த தமிழர்களின் செய்திகள் இந்த தெற்கின் குண்டுவெடிப்புகளின் புகை மூட்டத்திற்குள் மறைக்கப்பட்டுப் போனது வேதனை.

இனவாதம் அரசியலாக்கப்பட்டு, நாட்டின் பெரும்பான்மை இனம் போருக்காக கொம்புசீவப்பட்டிருக்கும்பொழுது, எல்லாமுமே இலக்குகள்தான் என்று சொன்னாலும்கூட, மனம் ஏனோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

தவறிருந்தால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ragunathan said:

மருது மற்றும் நெடுக்கு,

எனக்கு செல்வியைப் பற்றித் தெரியாது. ஒருமுறை சரிநிகர் பத்திரிக்கையைப் படிக்கும்போது இவரது மரணம் பற்றி ஒரு ஆக்காத்தைப் படித்ததாக நினைவு. நான் 80 களின் இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறிவிட்டேன். இந்திய ராணுவத்தின் யாழ்ப்பாணம் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை நடைபெற்று சில மாதங்களில் மட்டக்களப்பிற்குச் சென்றுவிட்டேன். அவ்வப்போது தம்பி மூலம் யாழ்ப்பாண நிகழ்வுகள் பற்றி அறிந்துகொள்வேன். ஆனால், யாழ் பல்கைல் கழகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அறிந்திருக்கவில்லை.

உங்களுக்கு நேரம் இருப்பின், செல்வியின் பின்புலம், அவரது செயற்பாடுகள் பற்றி அறியத்தர முடியுமா?

செல்விபற்றி இனி எழுதவேண்டாம் என்கிற கவிஞர் ஜெயபாலன் அவர்களின் வேண்டுகொளையும் பார்த்தேன், சிரமம் என்றால் தேவையில்லை.

புலிகளின் கொடூரம் பற்றி கதைக்க ஒட்டுக்குழுக்களில்.. சிங்களவர்களில்.. ஹிந்தியர்களில்.. அமெரிக்கர்களில்.. பிரித்தானியர்களில்.. இஸ்ரேலியர்களில்.. ரஷ்சியர்களில்.. பாகிஸ்தானியர்களில்.. முஸ்லீம் மதப் பயங்கரவாதிகளில்.. எவருக்கும் அருகதை இல்லை. ஏனெனில்.. அதனை விடப் பல மடங்கு கொடூரங்களை இவர்கள் மனித குலத்துக்கு எதிராக வேண்டாம்.. தமிழ் மக்களுக்கு எதிராகவே நிகழ்த்தி இருக்கிறார்கள்.

அதனை எல்லாம்.. பதிவு செய்ய வக்கில்லாமல்.. வெள்ளையர்களிடம் அதைக் காட்டி கைதட்டு வாங்க ஏலாது என்ற கோழைத்தனத்தில்... புலிகளை மட்டுமே மையமாக வைத்து சித்திரவதைகளை காண்பிப்பது என்பதும்.. செல்வி போன்ற இனமானத்தைக் காற்றில் பறக்கவிட்டு.. ஆக்கிரமிப்பு அநியாயங்களுக்கு எல்லாம் மறைமுகமாக.. வக்காளத்து வாங்கியவர்களை எல்லாம் இன்று புனிதர்களாகச் சித்தரிப்பது.. சிலாகிக்கப்பட முடியாது தவிர்க்கப்பட ஏலாது.

சிறுவர் போராளிகள் என்று கதறுவோர்.. சிங்கள அரச படைகளால்.. எத்தனை சிறார்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள் என்பதைச் சொல்லி இருக்கிறார்களா. எத்தனை தமிழ் சிறார்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சொல்லி இருக்கிறார்களா..??! செஞ்சோலை.. காந்தரூபன் சிறுவர் இல்லங்கள் பற்றி ஏன் இவர்கள் உலகிற்கு காட்ட மறுக்கிறார்கள்..??!

ஹிந்தியப் படைகள் காலத்தில் தமிழ் தேசிய இராணுவம் என்று பள்ளிக்கூடப் பிள்ளைகளை ரோட்டி வைத்து விரட்டி விரட்டிப் பிடித்து சில வார ஆயுதப் பயிற்சியின் பின் ஹிந்திய இராணுவத்தோடு ரோத்துக்கு விட்டு புலிகளோடு மோதுங்கள் என்று விட்டதை எந்த ஒட்டுக்குழுவன்.. அல்லது சினிமாக்காரன் படமாக்கி வெள்ளையர்களுக்கு காட்டி இருக்கான்..?! இதெல்லாம் இவங்க கண்ணுக்கு சிறுவர் இராணுவமாகத் தெரியவில்லையா...?! இல்ல எஜமான விசுவாசம் அதைக் காட்டுவதை தடுக்குதா..??!

 The Tamil National Army

It has been pointed out that, although the older militant groups recruited volunteers and sent them for training in India,  in due course these recruits came to hate and despise the civilian population. In June 1989, India launched the  formation of the T.N.A. by conscription, forcibly taking in young boys who not only did not want to fight, but also did not believe in the legitimacy of the cause. The stage was thus being set for a major social disaster. It is established from a number of testimonies that training was given by Indian Instructors. To understand this, one must look at the problems of strategy created for India, in the wake of President Premadasa's call on 1 June 1989, that the I.P.K.F. be withdrawn. It  is not in the nature of India's relationship with the E.P.R.L.F. for India to pump in huge resources into a plan conceived by the E.P.R.L.F.. Even after the I.P.K.F. had formally ceased operations on 20 September 1989, Indian troops continued to surround localities and search, looking for escaped conscripts. Publicly however, India denied any links with T.N.A..

The T.N.A., sent into action after a mere few weeks of training, and with little motivation and a feeling of abandonment,  were effectively cannon fodder, even with their ample weaponry. Their actions were motivated by the demands of survival and sometimes by elemental hatreds. Driven to hopeless despair by the designs of powers around them, several of them even showed a touching concern for difficulties faced by others who were better off.

There were also many instances where T.N.A. members acted with pathetic concern for others. An incident at Kopay junction in December illustrates the deep hopelessness felt by many. A young man going on a motor cycle to Vadamaratchi was detained by a group of I.P.K.F. and T.N.A. men at Kopay, for not having a pass. A T.N.A. boy was asked to guard him.The young man told the boy that he had left his pass behind as he had been in a hurry to go and see his sick mother. The boy thought for a while and murmured,"I too have a mother.". The boy then offered the young man his AK47 rifle and told him,"If I let you go,  I will face punishment.Here, take this gun, shoot me, and go. They will then think that you escaped". The young man who could not believe his ears, found that the boy was in earnest. He then talked to the boy and dissuaded him. The young man's release was later secured by another T.N.A. member who told the Indian officer that the young man was his cousin.

http://www.uthr.org/BP/volume2/AppendixI.htm

இந்தக் காரியக் குருடர்கள் தம்மை தாமே புகழ்ந்து கொள்வதற்காக.. மொத்த இனத்தின் மீதான அழிவுகளையும் ஏன் புதைகுழியில் புதைத்து மகா கொடும் அரச பயங்கரவாதிகளை காப்பாற்ற முனைகிறார்கள். இன்னும் இன்னும் எம்மினமும் மனித குலமும் இந்த அவலங்களை சந்திக்கனும் என்றா.

இந்தக் கொடூரர்களின் காரியக் குருட்டுத்தனம்.. சாதாரணமாக கடந்து செல்லப்படக் கூடிய ஒன்றல்ல. இவை சரியாக கண்டிக்கப்பட வேண்டியவை. இவர்களின் ஆக்கங்களுக்கு எதிரான சரியான சான்றுகளுடன் நீதியான ஆக்கங்கள் இதே வெள்ளையர்களை அடைய வேண்டும். இதே வெள்ளையர்கள் இவர்களுக்கு கைதட்டியதற்காக வருந்தி நிற்க வேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.