Jump to content

வடக்கு முதலமைச்சரின் -ஆட்சேபனைகள் நிராகரிப்பு!!


Recommended Posts

வடக்கு முதலமைச்சரின் -ஆட்சேபனைகள் நிராகரிப்பு!!

 

வடக்கு முதலமைச்சர் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதேவேளை முலமைச்சர் தரப்பு சட்டத்தரணிகள் இணக்கப்பாட்டுக்கு வர மறுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

https://newuthayan.com/story/12/வடக்கு-முதலமைச்சரின்-ஆட்சேபனைகள்-நிராகரிப்பு.html

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரன் மீதான வழக்கு ஒத்திவைப்பு!!

 
Vigneshwaran-01-1.jpg
 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று மேன் முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

https://newuthayan.com/story/14/விக்னேஸ்வரன்-மீதான-வழக்கு-ஒத்திவைப்பு.html

Link to comment
Share on other sites

 
 
சி.வி. விக்னேஷ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

சி.வி. விக்னேஷ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

 

Colombo (News 1st) நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக்க டி சில்வா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், வட மாகாண அமைச்சர்களான கே.சிவனேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வட மாகாண அமைச்சராக செயற்பட்ட பா.டெனீஸ்வரனை மீண்டும் அமைச்சர் பதவியில் அமர்த்துமாறு கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமுல்படுத்தாமைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையில் சி.வி.விக்னேஷ்வரன் சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.கனகேஸ்வரன், கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவிற்கு எதிராக தமது கட்சிக்காரர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிப்பதற்கு எவ்வித சட்ட நடைமுறைகளும் இல்லை என கூறிய ஜனாதிபதி சட்டத்தரணி, குறித்த வழக்கு தொடர்பான அடிப்படை எதிர் மனுவையும் சமர்ப்பித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், வட மாகாண அமைச்சர்களான கே.சிவனேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் இன்று மன்றில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.newsfirst.lk/tamil/2018/09/சி-வி-விக்னேஷ்வரன்-உள்ளி-2/

Link to comment
Share on other sites

விக்­னேஸ்வரனுக்கு எதி­ரான வழக்கு ஒக்­ரோ­பர் 16 ஒத்­தி­வைப்பு!!

 
 
cv-wigneswaran-court-780x405.jpg

 

 

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் உட்­பட 3 அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு அடுத்த மாதம் 16 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அவர்­க­ளுக்கு எதி­ராக குற்­றப் பத்­தி­ரிகை நேற்று வாசிக்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­ட­போ­தும், முத­ல­மைச்­ச­ரின் சட்­டத்­த­ர­ணி­யால் எழுப்­பப்­பட்ட ஆட்­சே­பனை மீதான விவா­தம் முடி­வு­றா­மை­யால் அது நடை­பெ­ற­வில்லை.

நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில், நீதி­ய­ர­சர்­க­ளான ஜானக டி சில்வா, குமு­தினி விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோர் முன்­னி­லை­யில் நேற்று எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. பிர­தி­வா­தி­க­ளான வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், வடக்கு அமைச்­சர்­க­ளான திரு­மதி அனந்தி சசி­த­ரன், க.சிவ­நே­சன் ஆகி­யோர் மன்­றில் முன்­னி­லை­யா­கி­னர்.

ஆட்­சே­பனை

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் சட்­டத்­த­ரணி கன­கேஸ்­வ­ரன் மன்­றில் ஆட்­சே­பனை முன்­வைத்­தார். மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் வழங்­கிய இடைக்­கா­லக் கட்­ட­ளைக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அந்த வழக்கு எதிர்­வ­ரும் 28ஆம் திகதி எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. அதற்கு முன்­னர் இந்த வழக்கை எடுத்­துக் கொள்­ளக் கூடாது என்று ஆட்­சே­பனை எழுப்­பி­யுள்­ளார்.

மனு­தா­ரர் டெனீஸ்­வ­ர­னின் சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­னாண்டோ அதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளார்.

நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு இருக்­கும்­போது அதை விசா­ரிக்­க­வேண்­டும். ஏனைய விண்­ணப்­பங்­களை விசா­ர­ணைக்கு எடுக்­கக் கூடாது என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்கு வேறு வழக்­கு­க­ளின் உதா­ர­ணங்­க­ளை­யும் அவர் மன்­றில் முன்­வைத்­துள்­ளார். அவ­ரது முன்­வைப்­புக்­களை ஏற்­றுக் கொண்ட நீதி­ய­ர­சர்­கள் ஆட்­சே­ப­னையை நிரா­க­ரித்­த­னர்.

நியா­யா­திக்­கம் இல்லை

மற்­றொரு ஆட்­சே­ப­ணையை முத­ல­மைச்­ச­ரின் சட்­டத்­த­ரணி கன­கேஸ்­வ­ரன் முன்­வைத்­தார். நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை விசா­ரணை செய்­வ­தற்­கான நியா­யா­திக்­கம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றுக்கு இல்லை என்று அவர் குறிப்­பிட்­டார்.

நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை விசா­ரணை செய்­வ­தற்­கான நடை­முறை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றுக்கு சட்­டத்­தில் எழு­தப்­ப­ட­வில்லை என்­பதை கன­கேஸ்­வ­ரன் தனது வாத­மாக முன்­வைத்­தார்.

நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­கு­களை விசா­ரிப்­ப­தற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றுக்­கும், உயர் நீதி­மன்­றுக்­கும் நடை­முறை எழு­தப்­ப­ட­வில்லை என்­ப­தைச் சுட்­டிக்­காட்டி முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள அவ­ம­திப்பு வழக்கை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் விசா­ரிக்க முடி­யாது என்று வாதிட்­டார்.

கோரிக்கை நிரா­க­ரிப்பு

பிரதி அமைச்­சர் ரஞ்­சன் ராம­நா­யக்­க­வுக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­கில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­தி­ர­னும், அந்த நீதி­மன்­றுக்கு நியா­யா­திக்­கம் இல்லை என்­ப­தைக் குறிப்­பிட்டு வாதிட்­டி­ருந்­தார் என்று கன­கேஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

சட்­டத்­த­ர­ணி­யும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுமந்­தி­ரன், உயர் நீதி­மன்­றில் அவ்­வா­றா­ன­தொரு வாதத்தை முன்­வைத்­தேன். ஆனால் அது உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளால் நிரா­க­ரிக்­கப்­பட்டு விட்­டது என்­பதை மன்­றில் சுட்­டிக்­காட்­டி­னார்.

நீதி­மன்ற வழக்­கம்

இதன்­போது மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­கள், நடை­முறை சட்­டத்­தில் எழு­தப்­ப­டா­விட்­டா­லும், நீதி­மன்­றில் பழக்­கப்­பட்ட நடை­முறை பின்­பற்­றப்­ப­ட­வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்­ள­னர். அத்­து­டன், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம், உயர் நீதி­மன்­றத்­திற்கு கீழே­யுள்ள நீதி­மன்­றங்­க­ளில் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­குத் தாக்­கல் செய்ய முடி­யும்.

ஆனால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம், உயர் நீதி­மன்­றத்­தில் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­குத் தாக்­கல் செய்ய முடி­யாது என்று கூறு­கின்­றீர்­களா? என முத­ல­மைச்­ச­ரின் சட்­டத்­த­ரணி கன­கேஸ்­வ­ர­னி­டம் நீதி­ய­ர­சர்­கள் கேள்வி எழுப்­பி­னர். அதற்கு அவர் ஆம் என்று பதி­ல­ளித்­தார்.

இந்த விவா­தம் நீண்டு சென்­றது. மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் பி.ப. 1.30 மணிக்கு வேறொரு வழக்­குக்கு நேரம் குறிக்­கப்­பட்­ட­தால், கன­னேஸ்­வ­ரன் எழுப்­பிய ஆட்­சே­பனை மீது, மனு­தா­ரர் தரப்­புச் சட்­டத்­த­ர­ணி­கள் வாதங்­களை முன்­வைக்க நேரம் போத­வில்லை. வழக்கை ஒத்­தி­வைக்க நீதி­ய­ர­சர்­கள் தீர்­மா­னித்­த­னர்.

எதிர்­வ­ரும் 25ஆம் திக­திக்கு வழக்கை ஒத்­தி­வைப்­ப­தாக நீதி­ய­ர­சர்­கள் குறிப்­பிட்­ட­போது, பிர­தி­வா­தி­கள் தரப்­புச் சட்­டத்­த­ர­ணி­கள் தமக்கு அன்று நேரம் இல்லை என்று குறிப்­பிட்­ட­னர். இறு­தி­யில் அடுத்த மாதம் 16ஆம் திக­திக்கு வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

https://newuthayan.com/story/09/விக்­னேஸ்வரனுக்கு-எதி­ரான-வழக்கு-ஒக்­ரோ­பர்-16-ஒத்­தி­வைப்பு.html

 

 

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றம் நேரடி விசாரணைகளை செய்ய சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை

Untitled-2-7591551997688a4d0a79efa93fb38d7b98ade541.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் வாதம்; விடயத்தை ஆராய வழக்கு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ் வரனுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு குறித்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரம் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு இல்லை எனவும் நேரடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேன் முறையீட்டு நீதிமன்றம் விசாரணை செய்ய எந்த சட்ட ஏற்பாடுகளும் இல்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் நேற்று மேன் முறை யீட்டு நீதிமன்றில் அடிப்படை ஆட்சேபம் ஒன்றை முன்வைத்து தெரிவித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனின் சட்ட வாதத்தையடுத்து அது குறித்து நீண்ட நேரம் வாதப் பிரதிவாதங்கள் மன்றில் பகிரப்பட்டன. இந் நிலையில் இந்த ஆட்சேபம் மீதான மேலதிக வாதப் பிரதிவாதங்களை முன்வைக்க இந்த வழக் கானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கு மேன் முறையீட்டு நீதிமன்றினால் ஒத்தி வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக பதவி வகித்த பா.டெனீஸ்வரனை பதவி நீக்கிய உத்தரவுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவை அமுல் செய்யாததன் ஊடாக நீதிமன்றை அவமதித்ததாக வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிக்க அவர் நேற்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மன்றில் ஆஜரானார்.

இதன்போதே அவர் சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் முன்வைத்த இரு ஆட்சேபனைகளில் ஒன்று நிராகரிக்கப்பட்டது. அதனையடுத்தே அவரது இரண்டாம் ஆட்சேபனை தொடர்பில் வாதப் பிரதிவாதங்களை முன்வைக்க திகதி குறிக்கப்பட்டது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ் வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு மன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு, பா.டெனீஸ்வரனை வடக்கு மாகாண அமைச்சுப் பதவியில் இருந்து விலக்கியமை குறித்த வழக்கு கள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி களான ஜனக டி சில்வா மற்றும் குமுதினி விக்ரம சிங்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி நீதிமன்றம் கொடுத்த அனுமதியின் படி, நேற்று வட மாகாண முதலமைச்சர் சார்பில் மன்றுக்கு அடிப்படை ஆட்சேபம் முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் முன் வைத்த அந்த ஆட்சேபனையில், வடமாகாண அமைச்சராக செயற்பட்ட பா.டெனீஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக் கினேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அவரை மீண் டும் அமைச்சர் பதவியில் அமர்த்துமாறு கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமுல் படுத்தாமைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவிற்கு எதிராக எனது கட்சிக்காரர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருக்கின்றார்.

அது தொடர்பில் மூன்று தவணை கள் நீதிமன்றினால் பிற்போடப் பட்டுள்ள நிலையில், அவ்வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி விசா ரணை செய்யப்படவுள்ளது. எனவே அவ்வழக்கு விசாரணை செய்யப்படும் வரையில், நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பிலான விடயத்தை விசாரிப்பதை இந்த மன்று ஒத்திவைக்க வேண்டும்.

காரணம், அரசியலமைப்பின் பிரகாரம் பொருட்கோடல்களை வழங்கும் உரிமை உயர் நீதிமன்றுக்கே உள்ளது. எனவே இந்த விவகாரத்தில், அமைச்சரவை குறித்த நியமன அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா முதலமைச்சருக்கு உள்ளதா என்ற பொருட்கோடல் அவசியமாகின்றது. எனவே உயர் நீதிமன்றம் எனது கட்சிக்காரருக்கு சாதகமான தீர்மானமொன்றினை எடுக்குமானால், அந்த தீர்மானத்துக்கு முன்பதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் விசாரிப்பது எனது கட்சிக்காரருக்கு அநீதியாக அமையும். எனவே தான் அந்த விசாரணைகளை ஒத்திவைக்க கோருகின்றேன் என அடிப்படை ஆட்சேபத்தை முன்வைத்தார்.

எனினும் முறைப்பாட்டாளரான டெனீஸ்வ ரன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுரேன் பெர் னாண்டோ, உயர் நீதிமன்றில் இந்த வழக்கை இங்கு முன்கொண்டு செல்ல எந்த தடை உத்தரவுகளும் இல்லாததால் விசாரணைகளை ஆரம்பிக்க வேண் டும் எனக் கோரினார்.

இந் நிலையிலேயே மேன் முறையீட்டு நீதிமன்றம் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனின் முதலா வது அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்தது.

இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், இரண்டாவது அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்தார். அதில் இந்த நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தை முன்கொண்டு செல்ல மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என அவர் கூறினார்.

மேன் முறையீட்டு நீதிமன்றுக்கோ, உயர் நீதிமன்றுக்கோ நேரடியாக ரீட் மனுவூடாக முன்வைக்கப்படும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க எந்த ஏற்பாடுகளும் சட்டத்தில் இல்லை என ஜனாதிபதி சட் டத்தரணி கனக ஈஸ்வரன் வாதிட்டார்.

இதன்போது அந்த விடயம் தொடர் பில் கருத்துப் பரிமாறல்கள் சூடுபிடித் தன. ஒரு கட்டத்தில், நீதிபதிகள் குழாம், அப்படியாயின் இதுவரை மேன் முறை யீட்டு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் வழங்கிய நீதிமன்ற அவமதிப்பு தொடர் பிலான தீர்ப்புக்கள் பிழையானவை என் கின்றீர்களா எனும் தோரணையில் கேள்வி எழுப்பியது.

இதன்போது பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், அது சரியா பிழையா என்பதல்ல வாதம். எனினும் இவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர முடியாது என்ற புதிய சட்ட வாதம் முன்வைக்கப்படும் பட்சத்தில் அது ஆராயப்படல் வேண்டும். மாற்று விடயம் அல்லது புது விடயம் ஒன்று முன் வைக்கப்பட்டால் அது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

இந் நிலையிலேயே இந்த அடிப்படை ஆட்சேபனை மீது மேலதிக வாதங்களை முன்வைக்க திகதி குறித்த மேன் முறையீ ட்டு நீதிமன்றம் அவ் வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத் தது. அத்துடன் பா.டெனீஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவானது எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை நீதிமன்றினால் நீடிக்கப் பட்டது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வட மாகாண அமைச் சர்களான கே.சிவநேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோருக்கு எதிராக இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-19#page-2

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.