Jump to content

யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள்!- தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைப்பு


Recommended Posts

யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள்!- தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைப்பு

 

IMG-8934dad5d504d77ba2d3a066e1c0e298-V-720x450.jpg

யாழ். நூலகத்திற்கு தமிழ்நாடு அரசாங்கத்தினால் 50 ஆயிரம் புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

தமிழகத்தின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் பங்குபற்றுதலுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷணனின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள் கையளிக்கப்பட்டதுடன், வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் வாசிக சாலைகளுக்கு புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சினால் நிதி வழங்கப்பட்டும் உள்ளது.

http://athavannews.com/யாழ்-நூலகத்திற்கு-50-ஆயிரம/

Link to comment
Share on other sites

இந்திய உதவியுடன் இலங்கை யாழ்ப்பாணம் நூலகத்திற்கு  50.000 புத்தகங்கள் நன்கொடை

 

இந்தியாவின் தமிழக அரசாங்கத்தால் யாழ் பொது நூலகத்திற்கு ஐம்பதாயிரம் புத்தகங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. 

IMG-0247.JPG

இதனை தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டிடம் கையளித்தார்.

இந் நிகழ்வு யாழ் பொது நூலகத்தில் இன்று காலை நடைபெற்றது. 

IMG-0226.JPG

இந் நிகழ்வில் தமிழ்நாடு கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்  தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன். 

IMG-0219__1_.JPG

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினால்ட் கூரெ, மாநகர முதல்வர்  இமானுவேல் ஆர்னோல்ட் தமிழ்த் தேசிய  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட இலங்கை மற்றும் இந்திய பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

IMG-0215.JPG

அதேவேளை வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கும், சனசமூக நிலையங்கள் என்பன புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சினூடாக நிதியைப் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/40631

Link to comment
Share on other sites

இலங்கை -  இந்தியா இணைந்து பல திட்டங்களை உருவாக்கியுள்ளன ; செங்கோட்டையன்

(எம்.நியூட்டன்)

இலங்கை அரசும் இந்திய அரசும் இணைந்து வடக்கில் பல நல்ல திட்டங்களை உருவாக்கியுள்ளார்கள் இதற்கு தமிழ்நாடும்  உறுதுணையாக இருக்கும் என இந்தியாவின் தமிழக அரசாங்கத்தின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

sengotayan.jpg

இந்தியத் தமிழ் நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 50 ஆயிரம் புத்தகங்களை யாழ். பொது நூலகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நாடு அல்லது அங்குள்ள பகுதி வளம் பெறவேண்டும் என்றால் கல்வி ஒன்றால் மட்டுமே முடியும் என நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் அறிவு வளம் பெறவேண்டும்.

அம்மாவின் வழிகாட்டலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு இங்கு இருக்கின்ற மக்களின் நலன் கருதி தேவையான உதவிகளை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

இதன் அடிப்படையில் தான் யாழ்பொது நூலகத்திற்கு நூல்களை வழங்கியுள்ளோம். இங்கு மட்டும் அல்ல கனடாவில் மலேசியாவில் பல்வேறு நாடுகளில் வாழுகின்ற மக்கள் எங்களுக்கும் சிறப்பான நூல்களைத் தரவேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கிறார்கள். 

அவர்களுக்கும் நூல்களை இந்த அரசாங்கம் வழங்கும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

http://www.virakesari.lk/article/40655

 

 

 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள தமிழ் நாட்டு அமைச்சர்

இந்திய, தமிழ் நாட்டு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ். பொதுநூலகத்திற்காக தமிழ் நாட்டு அரசாங்கத்தினால் 50 ஆயிரம் புத்தகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர், கல்வி அமைச்சர், வட மாகாண முதலமைச்சர், வட மாகாண ஆளுநர் ஆகியோரின் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் யாழிற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது யாழ். பொதுநூலகத்திற்கு வந்த கே.ஏ.செங்கோட்டையன் பொதுநூலக விருந்தினர் ஏட்டில் கையொப்பமிட்ட பின்னர் பொதுநூலக கேட்போர் கூடத்தில் புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

 

இதில், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

https://www.tamilwin.com/politics/01/193710?ref=home-feed

Link to comment
Share on other sites

14 hours ago, நவீனன் said:

IMG-8934dad5d504d77ba2d3a066e1c0e298-V-720x450.jpg

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பலின் தற்காலத்து தலைமைப் பயங்கரவாதியின் படமும் இதில் இடம்பெற்றுள்ளது. 

தமிழ் நாட்டு மக்களின் புத்தக நன்கொடை பாராட்டுக்கு உரியது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி தாத்தா , ரோஜாப்பூ நேரு  மாமா போன்றவர்களின் வரலாறு பதித்த புத்தகங்கள் இனியும் கொடுக்காதீர்கள். சிலோன் தமிழர் படிக்கவேண்டிய அவசியம் இல்லை என்பது கருத்து. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.