Jump to content

3 மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்ட அறிக்கையைத் தயாரிக்கிறது இந்தியா


Recommended Posts

3 மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்ட அறிக்கையைத் தயாரிக்கிறது இந்தியா

 

AAI-to-develop-Palaly-airport-300x200.jpபலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை, அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகார சபைக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை இந்திய விமான நிலைய அதிகாரசபை  தயாரிக்கும்.

இதுதொடர்பான உடன்படிக்கையில், இந்திய விமான நிலைய அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனில் குப்தாவும், இந்திய வெளிவிவகார அமைச்சின் வங்காள விரிகுடா நாடுகளுக்கான இணைச் செயலர் சஞ்சய் பாண்டாவும் அண்மையில் கையெழுத்திட்டுள்ளனர்.

AAI-to-develop-Palaly-airport.jpg

அனைத்து தொழில்நுட்ப மற்றும் காரணிகளையும் உள்ளடக்கியதாக இந்த விரிவான அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், 3 மாதங்களுக்குள் இந்த அறிக்கையைத் தயாரிக்கும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும், இந்திய விமான நிலைய அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகாரசபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில், விமான நிலைய அபிவிருத்தி மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவம் தொடர்பான தமது ஆற்றலும், நிபுணத்துவமும், உலகளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/09/18/news/32951

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நவீனன் said:

அனைத்து தொழில்நுட்ப மற்றும் காரணிகளையும் உள்ளடக்கியதாக இந்த விரிவான அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், 3 மாதங்களுக்குள் இந்த அறிக்கையைத் தயாரிக்கும் பணி நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும், இந்திய விமான நிலைய அதிகார சபை தெரிவித்துள்ளது. 

தொழில்நுட்ப மற்றும் காரணிகள் ?? தலைக்கவசம் உள்ளடங்கியதா ? எனி வே சதத்தையும் கடந்து செல்ல வாழ்த்துக்கள் ..?

97089979_10.jpg

 

 

Link to comment
Share on other sites

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை இந்தியாவுக்கு கொடுக்கவில்லை - நிமல் சிறிபாலடி சில்வா 

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

இந்தியாவுக்கு பலாலி விமான நிலையத்தை கொடுத்து அபிவிருத்தி செய்யப்போவதில்லை என  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

palai.jpg

இலங்கை விமானப்படையின் உதவியைக்கொண்டே வடக்கின் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்படவுள்ளது. மாறாக இந்தியாவுக்கு  பலாலி விமான நிலையத்தை  கொடுத்து அபிவிருத்தி செய்யப்போவதில்லை.

இவ்விடயம் தொடர்பில் பிரதமரும் நானும் தீர்மானம் எடுத்துவிட்டோம் எனவும் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே பலாலி விமான நிலைய அபிவிருத்தியை இலங்கை விமானப்படைக்கு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வானூர்தி மூலம் ஏற்றிச்செல்ல சட்டமூலம் மற்றும் குடியியல் வான்செலவு சட்ட விவாதத்தின் போது பொது எதிரணி உறுப்பினர் விமல் வீரவன்ச எம்.பி பலாலி விமான நிலைய அபிவிருத்தி செயற்பாடுகளை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது, பலாலியை இந்தியாவுக்கு வழங்கவுள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கூறுகையில், அவ்வாறு எந்த திட்டமும் இல்லை, பொய்யாக காரணிகளை கூறி காலத்தை கடத்த வேண்டாம் எனக் கூறினார். 

http://www.virakesari.lk/article/40661

Link to comment
Share on other sites

பலாலி விமான நிலை­யத்தை இலங்­கையே அபி­வி­ருத்தி செய்யும்

MAIN-01Page1Image0012-af3ad34ad9bf915850ce95ccf605576024050211.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

இந்­தி­யா­வுக்கு வழங்­க­மாட்டோம்; அமைச்சர் நிமல் சபையில் திட்­ட­வட்டம்

இலங்கை விமா­னப்­ப­டையின் உத­வி­யைக்­கொண்டே வடக்கின் பலாலி விமான நிலையம் புன­ர­மைக்­கப்­ப­ட­வுள்­ளது. மாறாக இந்­தி­யா­வுக்கு பலாலி விமான நிலை­யத்தை கொடுத்து அபி­வி­ருத்தி செய்­யப்­போ­வ­தில்லை என பிர­த­மரும்- சுற்­று­லாத்­துறை அமைச்­சரும்- நானும் தீர்­மானம் எடுத்­து­விட்டோம் என போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்வா தெரி­வித்தார்.  

தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டே பலாலி விமான நிலைய அபி­வி­ருத்­தியை இலங்கை விமா­னப்­ப­டைக்கு வழங்­கு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற வானூர்தி மூலம் ஏற்­றிச்­செல்லல் சட்­ட­மூலம் மற்றும் குடி­யியல் வான்­செ­லவு சட்ட விவா­தத்தின் போது பொது எதி­ரணி உறுப்­பினர் விமல் வீர­வன்ச எம்.பி. ""பலாலி விமான நிலைய அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை இந்­தி­யா­வுக்கு வழங்­க­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது, பலா­லியை இந்­தி­யா­வுக்கு வழங்­க­வுள்­ளீர்­களா? என கேள்வி எழுப்­பினார். இதற்கு பதில் தெரி­வித்த அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்வா கூறு­கையில், அவ்­வாறு எந்த திட்­டமும் இல்லை, பொய்­யாக கார­ணி­களை கூறி காலத்தை கடத்த வேண்டாம் எனக் கூறினார்.

மீண்டும் ஒழுங்குப் பிரச்­சினை எழுப்­பிய விமல் வீர­மன்ச எம்.பி :- பலாலி விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு வழங்­க­வில்­லையா? அப்­ப­டி­யாயின் எதிர்­கா­லத்தில் உங்­களின் ஆட்சிக் காலத்­தி­லேயே பலாலி விமான நிலை­யத்தை இந்­தி­யா­விற்கு வழங்­கினால் நீங்கள் அமைச்­சுப்­ப­த­வியை துறப்­பீர்­களா? என்று வின­வினார்.

இதற்கு அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்வா பதி­ல­ளிக்­கையில் - எதிர்­வு­கூ­றலை மட்­டுமே நீங்கள் கூறு­கின்­றீர்கள், உங்­களின் கற்­ப­னையில் தோன்­று­வதை பேச வேண்டாம். ஊட­கங்­களின் முன்­னி­லையில் பொய்­களை கூறி மக்­களை திசை­தி­ருப்பும் குணமே உங்­க­ளிடம் உள்­ளது. அதே எண்­ணத்தில் என்­னி­டமும் பேச வேண்டாம். நான் தெளி­வாக கூறு­கின்றேன், பலாலி விமான நிலை­யத்தை அபி­வி­ருத்தி செய்ய சகல நட­வ­டிக்­கை­க­ளையும் அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. பலாலி விமான நிலை­யத்தை அபி­வி­ருத்தி செய்ய சுற்­று­லாத்­துறை அமைச்சின் நிதி மற்றும் அரச நிதியை ஒதுக்கி நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். ஆனால் இந்­தி­யா­விற்கோ அல்­லது வேறு வெளி­நா­டு­க­ளுக்கோ பலா­லியை வழங்­கப்­போ­வ­தில்லை. இதில் அர­சாங்கம் தெளி­வாக உள்­ளது.

பலா­லியை மட்டும் அல்ல ஹிங்­கு­ரான்­கொட, மட்­டக்­க­ளப்பு, திகன, திரு­கோ­ண­மலை ஆகிய உள்­நாட்டு விமான நிலை­யங்­களை அபி­வி­ருத்தி செய்யும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இதனால் எமது நாட்­டுக்கே நன்­மைகள் ஏற்­படும். மாறாக எந்த நாட்­டையும் பலப்­ப­டுத்­தவோ எந்த நாட்­டிற்கும் வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கவோ நாம் முயற்­சிக்­க­வில்லை. அதேபோல் ரத்­ம­லான விமான நிலையம் உள்­நாட்டு விமான சேவையை முன்­னெ­டுத்து செல்ல மிகவும் முக்­கி­ய­மான நிலை­ய­மாகும். எனினும் கடந்த காலங்­களில் விமா­னப்­படை ஆக்­கி­ர­மிப்பில் பல ஆயிரக் கணக்­கான ஏக்­கர்கள் இருந்த நிலையில் சிவில் விமான நிலை­ய­மாக இதனை முன்­னெ­டுக்க முடி­யாது போய்­விட்­டது. எனினும் இப்­போது நாம் ரத்­ம­லான விமான நிலை­யத்தில் விமா­னப்­ப­டைக்கு தேவை­யான இடங்­களை தவிர்ந்து ஏனைய பகு­தியில் சிவில் விமான சேவை­களை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். குறிப்­பாக தனியார் ஜெட் ரக விமா­னங்­களை தரை­யி­றக்க இலங்­கையில் ஒரு தளம் இல்­லாத நிலைமை உள்­ளது. எனினும் தனியார் ஜெட் வருகை மூல­மாக பாரிய இலாபம் ஈட்ட முடியும். எனவே இப்­போது ரத்­ம­லான விமான நிலை­யத்தில் அதனை செய்ய முடியும். மேலும் பண்­டா­ர­நா­யக்க விமான நிலை­யத்தின் இரண்­டா­வது விமான முனை­யத்தை உரு­வாக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அதற்கு சிறிது காலம் தேவைப்­படும் எனினும் இந்த விமான நிலைய அபி­வி­ருத்­தி­களின் மூல­மாக இலங்­கையின் பாது­காப்பு பல­மா­கவே அமையும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பொது எதி­ர­ணியின் உறுப்­பினர் கனக ஹேரத் கேள்வி எழுப்­பு­கையில் :- பலாலி விமான நிலை­யத்தை இந்­தி­யாவின் தேவைக்­கேற்ப அமைப்­ப­தா­கவும், இந்­திய நிறு­வ­னங்கள் வரு­வ­தா­கவும் ஊட­கங்­களில் அறிந்­து­கொண்டேன், இதனை தெளி­வு­ப­டுத்த முடி­யுமா ? என்று கேட்டார்.

அமைச்சர் நிமல் சிறி­பா­லடி சில்வா பதி­ல­ளிக்­கையில் பலாலி விமான நிலை­யத்தை இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்கு கொடுக்­க­வில்லை, இதன் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை இலங்­கையின் விமா­னப்­ப­டையே முன்­னெ­டுக்­கின்­றது. அதற்­கான தீர்­மா­னத்தை பிர­த­மரும், சுற்­று­லாத்­துறை அமைச்சர் ஜோன் அம­ர­துங்க மற்றும் விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்சராக நானும் தீர்மானித்து அதற்கான ஒப்பந்தக்காரர்களையும் தீர்மானித்துள்ளோம். விமானப்படையின் மூலமாகவே இதனை நாம் செய்து முடிக்கவுள்ளோம். இது தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானமாகும். அதேபோல் பலாலி விமானநிலைய ஓடுபாதை மிகவும் சிறியது, 650 மீட்டர் நீளமே உள்ளது. இதனை பெரிதுபடுத்த வேண்டும். அதேபோல் கட்டிடங்களையும் உருவாக்க வேண்டும். இவை அனைத்தையும் இலங்கை விமானப்படையே செய்கின்றது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-19#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.