Jump to content

புலிகளின் போராட்டத்தை விடவும் பெரியதொரு போராட்டத்தை நடத்த யாரும் தயாரா?


Recommended Posts

புலிகளின் போராட்டத்தை விடவும் பெரியதொரு போராட்டத்தை நடத்த யாரும் தயாரா?

04PRO16092018Page1Image0003-a6cb53e02103b1ca302b8350b62ca2c9e42584eb.jpg

 

கர­வெட்டி பிர­தேச சபை பொது மண்­ட­பத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற தியாக தீபம் திலீ­பனின் 31ஆவது ஆண்­டு நினைவுநிகழ்வில் சுமந்­திரன் எம்.பி.   ஆற்­றிய உரை

தியாக தீபம் திலீ­பனின் 31 ஆவது நினைவு தினம் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. எமது இன விடு­தலைப் பய­ணத்தில் பல வித­மான தியா­கங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. அதில் அதிக தியாகம் செய்­த­வர்­களில் திலீபன் முக்­கி­ய­மா­னவர். அகிம்சை வழியில் எமது கட்சி பல ஆண்­டுகள் போரா­டி­யது. இடையில் ஆயுதப் போராட்டம் நடை­பெற்­றது. அப் போராட்­டத்தில் பலர் தமது உயிர்­களை அர்ப்­ப­ணித்­தனர். பலர் பல்­வேறு தியா­கங்­களைப் புரிந்­தனர். ஆயுதப் போராட்டத்தின் போது அகிம்சை வழியில் போரா­டிய திலீபன் உயிரை மாய்த்துக் கொண்டார். இத் தியா­கத்தின் மூலம் அவர் உயர்ந்த இடத்தைப் பெற்­றுள்ளார். பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தியா­கங்­களில் திலீ­பனின் தியாகம் பெரிதும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. அவ­ரது தியாகம் பெரிதும் போற்­றப்­ப­டு­கின்­றது.

எங்கள் இனத்தின் விடு­தலை சுய­கௌ­ர­வத்­தோடும் சுய­நிர்­ண­யத்­தோடும் சுயாட்சி அதி­கா­ரத்­தோடு எமது மண்ணில் எமது தலை­வி­தியை நாங்­களே நிர்­ண­யிக்கும் வாழ்­வி­யலையப் பெறு­வதே எமது போராட்­டத்­தின் குறிக்­கோ­ளாக இருந்­தது. இதற்கு சாத்­தி­ய­மான சட்­டங்கள் இருந்­ததை நாம் கருதி வந்­துள்ளோம்.

இலங்கை தீவில் எமக்கு உரிமை கிடை­யாது என நாங்கள் தனி நாடு கோரினோம். ஆனால் 1988 ஆம் ஆண்டு இலங்­கையில் ஆட்சி அதி­காரம் பல­வந்­த­மான முறையில் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­மையால் இலங்­கைக்குள் சுய உரிமை அடைய வழி­வ­கை­களைத் தேடுவோம் என முடிவு எடுத்தோம். 1988 ஆம் ஆண்டு அர­சியல் மாற்றம் நாங்கள் விரும்­பா­விட்­டாலும் அது நடந்­தது. இருந்­த­போதும் அதற்குள் இருந்­து­கொண்டு எமது இலக்­கினை அடைய நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டோம்.

1983 ஆம் ஆண்டு பிரி­வி­னைக்கு எதி­ராக 6 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்­பட்­டது. இதனை எங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்கள் சத்­தியப் பிர­மாணம் செய்ய மாட்டோம் என்று கூறி பத­வி­களை இழந்­தார்கள். மாகாண சபை முறைமை வந்­த­போது உள்­நாட்டு சுய­நிர்­ணய உரி­மையை அதன் மூலம் பெறலாம் என்று நாம் அனை­வரும் ஒரு கட்­சி­யாக இணைந்தோம். எமது பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்றம் சென்­றார்கள். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பும், அகில இலங்கை தமிழ்க் காங்­கிரஸ் கட்சி உறுப்­பி­னர்­களும் 6ஆவது திருத்தச் சட்­டத்தை ஏற்று சத்­தியப் பிரமாணம் செய்து கொண்­டார்கள். காங்­கிரஸ் உறுப்­பி­னர்­களும் தனிநாடு கோர­மாட்டோம் என சத்­தியப் பிரமாணம் செய்­தனர். இதனை 2001, 2002 ஆம் ஆண்­டு­களில் புலி­களின் தலைவர் பிர­பாகரன் ஒரு நாட்­டுக்குள் தீர்வு என்­பதை அச்­ச­ம­யத்தில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந் தார். குறித்த ஆண்­டு­களில் புலி­களின் தலைவர் பிர­பாகரன் தனது உரையில் உள்­ளக சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் தீர்வு வரு­மானால் அதனைப் பரீ­சீ­லிக்க தயா­ராக இருப்­ப­தாகத் தெரி­வித்தார்.

2002 ஆம் ஆண்டு ஒரு இணக்­கப்­பாடு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. ஒவ்­வொரு கால­கட்­டத்தில் ஒரு குறித்த நிலப்­ப­ரப்பில் நாங்கள் எங்­க­ளது தலை­வி­தியை நாங்­களே நிர்­ண­யிப்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. சர்­வ­­­­­தேச ரீதியில் நாங்கள் சுய­நிர்­ணய உரி­மை­யைக் கொண்­டுள்ளோம் என்­பதை சர்­வ­தேசம் இணங்­கி­யது. ஆனால் தீர்வு எட்­ட­வில்லை. 2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரி ­மாதம் இந் நாட்­டுக்­கு எதிரும் புதி­ரு­மாக இருந்த இரண்டு பிர­தான அர­சியல் கட்­சிகள் ஒன்று சேர்ந்து அர­சியல் அபி­லா­ஷை­களை உரு­வாக்க வேண்டும் என இணங்­கி­ன. இவற்­றுடன் நாங்­களும் உடன்பட்டோம். தமிழ் மக்­களின் வாக்­குகள் தான் இதனை ஏற்­ப­டுத்­தி­ன. பொதுத் தேர்­த­லிலும் இது­வரை காலமும் ஏற்­ப­டாத இரு பிர­தான கட்­சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி நடத்­தின. இந்த தேசிய அர­சா­னது ஒன்று சேர்ந்த காரணம் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்டும் என்ற ஒன்­றுதான். அதை எதிர்க்­கட்சி வரி­சையில் இருந்து நாமும் ஆத­ரவு கொடுத்தோம். இதை நிறை­வேற்ற அர­சியல் அமைப்புச் சட்டம், மக்கள் கருத்­த­றியும் குழு என்­பன அமைக்­கப்பட்டு பார­ளு­மன்­றத்தில் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டன. 2016 ஜன­வரி 9 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆற்­றிய உரையில் அதனைக் குறிப்­பிட்­டி­ருந்தார். அதனை அவ­ருக்கு நாங்கள் ஞாப­கப்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக இருக்­கிறோம்.

வடக்கில் ஒற்­றை­யாட்சி என்றால் தமிழ் மக்கள் பயப்­ப­டு­கி­றார்கள். தெற்கில் சமஷ்டி என்றால் சிங்­கள மக்கள் பயப்­ப­டு­கி­றார்கள். ஒரு அரசியல் சட்டம் என்­பதும் மக்கள் பயப்­ப­டாமல் இருக்க வேண்டும். ஒரு இனத்­திற்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பதோ, ஒரு சம­யத்­திற்கு முக்­கியம் கொடுப்­பதோ ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதன்­படி புதிய அர­சி­ய­ல­மைப்பு மும்­மு­ர­மாக ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த காலத்தில் இடைக்­கால அறிக்கை வரும் போது சுதந்­திரக் கட்சி பின்­ன­டித்து 10, 11 மாதங்கள் பிற்­போடப்­பட்­டது. கடந்த வருடம் செப்­டெம்பரில்தான் இடைக்­கால அறிக்கை முன்­வைக்கப்­பட்­டன. 2016 ஜன­வரி 9 ஆம் திகதி ஜனா­தி­பதி ஆற்­றிய உரைக்கு அமைய பல மாற்­றங்கள் செய்­யப்­பட்­டது. அதைத் தொடர்ந்து உள்­ளூ­ராட்சி தேர்­தலில் அர­சுக்கு ஏற்­பட்ட பின்­ன­டை­வினால் 6 மாதத்­துக்குப் பின் பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டது. இது இந்த ஆட்­சியில் நிறை­வே­றுமா என்ற சந்­தேகம் பல­ரிடம் உண்டு. முற்று முழு­தாக நாங்கள் அர­சியல் உரி­மை­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாது அர­சியல் நகல் முன் வைக்­கப்­பட்­டது. இவை கட்­டாயம் நிறை­வேற்­றப்­பட்­டது.

2000 ஆம் ஆண்டு சந்­தி­ரிகா அரசு புதிய அர­சியல் வரைபு ஒன்றை கொண்­டு­வந்­தது. சிறப்­பான அந்த அர­சியல் நகல் வரைபு பாரா­ளு­மன்­றத்தில் வெற்றி பெற முடி­யாமல் போனது. இப்­படிப் பல வழி­களில் கைக்கு எட்­டி­யது வாய்க்கு எட்­டாமல் அல்­லது வாய்ப்பு கிட்ட வந்து தவ­றி­விட்­டது. இது போன்ற நிலை ஏற்­பட்­டது. நகல் வரைபு வர முன்னர் அது வெற்றி பெறுமா என்ற எண்ணம் மக்­க­ளிடம் வந்­துள்­ளது. இதை எப்­படி நம்­பு­வீர்கள் என்று கேட்­கின்­றீர்கள். நம்­பிக்­கை­யில்லாமல் ஒன்றும் செய்ய முடி­யாது. மாண­வர்கள் பரீட்­சையில் வெற்­றி­பெ­றுவோம் என்று நம்­பிக்­கையில் பரீட்சை எழு­தினால் தான் வெற்­றி­ பெ­ற­மு­டியும். அதே­போல விளை­யாட்­டு வீரர்­களும் வெற­்றி­பெ­றுவோம் என்ற நம்­பிக்­கையில் போட்­டி­யிட்­டால்தான் வெற்­றி­பெ­றலாம்.

இந்த முறை இம் முயற்சி முறிந்து பய­ன­ளிக்­கா­விட்டால் பாரிய விளை­வு­களை எதிர்­நோக்க வேண்டி வரும் என அர­சுக்கு எடுத்துச் சொல்­லி­யுள்ளோம்.

இன்று எமக்கு எதி­ராக பிர­சாரம் செய்­கின்­ற­வர்கள் கூட இது வெற்­றி­ய­ளிக்­காது எனப் பிரச்­சாரம் செய்­கி­றார்கள். நாங்கள் எங்­க­ளுக்கு எதி­ராகப் பிர­சாரம் செய்­ப­வர்­களைக் கேட்­டுக்­கொள்­வது என்ன வென்றால் உங்­களின் மாற்று வழி என்ன அதனை வெளிப்­ப­­டுத்­துங்கள். வெறு­மனே பத்­தி­ரி­கை­களில் அறிக்கை விடு­வதன் மூலமோ உணர்ச்­சி­வசமாக மக்­களை தூண்டும் வகையில் செயற்­ப­டு­வதன் மூலமோ எத­னையும் செய்­ய­மு­டி­யாது. அகிம்சை வழியில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் வழியில் செல்லப் போகி­றீர்­களா அதனை விட வேறு என்ன செய்­யப்­போ­கி­றீர்கள் அல்­லது புலி­களால் நடத்­தப்­பட்ட ஆயுதப் போராட்­டத்தை விட பெரிய போராட்டம் ஒன்றை ஆரம்­பிக்கத் தயாரா. உலக சரித்­தி­ரத்­திலே எவரும் தொட முடி­யாத, சிக­ரத்தை தொட்ட கலாட்­படை, கடற்­படை, விமா­னப்­படை, எல்­லாவற்­றையும் வைத்துப் போரா­டிய புலி­களின் போராட்­டத்­தை­விட நீங்கள் போராடப் போகி­றீர்­களா. அதை மக்­க­ளிடம் சொல்­லவும். அப்­ப­டி­யானால் உங்­க­ளிடம் உள்ள மாற்­றுவழி என்ன? மாற்று வழி­களைப் பிரே­ரிக்­காது நாங்கள் செய்யும் முயற்­சி­களை ஏளனம் செய்யும் உங்­க­ளது காரணம் என்ன. இந்த நாட்­டுக்குள் எங்­க­ளது தீர்­வினை பெற்றுக் கொள்ள அரசு இணங்க வேண்டும். நாங்கள் ஒன்றும் நியா­ய­மற்­றதைக் கோர­வில்லை. உல­கத்தில் வாழ்­கின்ற மக்கள் பெறு­கின்ற உரி­மை­களைத் தான் நாங்­களும் கோரு­கின்றோம். இதை அவர்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். திரும்ப திரும்ப குண்டுச் சட்­டிக்குள் குதிரை ஓட்­டு­ப­வர்கள் போல ஒன்றும் தெரி­யாமல் இருக்­கக்­கூடாது. மாறாக அவர்­க­ளது சந்­தேகம் வலுக்­கக்­கூடிய வகையில் செயற்­ப­டு­கி­றார்கள்.

மாறாக நாங்­களும் செயற்­பட்டால் எங்கள் இலக்கை அடை­வது கஷ்டம். நாங்கள் எவரி­டமும் பொய் சொல்ல வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. எங்கள் உரித்து உரித்­துதான். நாங்கள் சொல்­கின்ற தோரணை சொல்­கின்ற வடிவம் எல்லாம் முக்­கி­ய­மா­னவை. மற்­றத்­த­ரப்பு சம­ரசம் செய்­யும்­போது அவ­ருக்கு மதிப்­ப­ளித்து சந்­தேகம் ஏற்­ப­டாது செயற்­ப­ட­வேண்டும். பேச்­சுக்­கான இந்த அணு­கு­மு­றை­களைக் கையா­ளும்­போது உடனே அவர் விலை­போய்­விட்டார் என சொல்­கி­றார்கள். எல்லா ஆயு­தங்­களும் இருந்தும் கூட பெற­மு­டி­யா­ததை ஒரு ஆயு­தமும் இல்­லாமல் அவர்­க­ளுடன் முட்டி மோதிப் பெற­மு­டி­யுமா? என்ன மாற்று முறை­களை அணு­கு­மு­றை­களை சொல்ல வேண்டும்.

இப்­போது சர்­வ­தே­சத்­தின் முழு ஆத­ரவும் எமக்கு உள்­ளது. ஆயுதப் போராட்ட காலத்தில் புலி­களை 33 நாடுகள் தடை செய்­தி­ருந்­தன. இன்­றைக்கு அந்த நாடுகள் எமக்கு ஆத­ர­வாக இருக்­கின்­றன. அவர்­களின் மனதில் பொறுப்­பற்­ற­வர்கள் என்ற எண்ணம் இந் நாடு­க­ளுக்கு வரக்­கூ­டாது. எங்­க­ளது தரப்பில் 5 வரு­ட­மாக பத­வியை தக்க வைத்­தி­ருப்­ப­வர்கள் ஒன்­றுமே செய்­ய­வில்லை என்­பது சர்­வ­தே­சத்தின் எண்ணம். உங்­களின் அவர் ஏன் இப்­படி செய்­கி­றார்கள் என்று எம்மை அவர்கள் கேட்­கி­றார்கள். வரு­கின்­ற­தையும் திருப்பி அனுப்புகிறார்கள் செய்யக் கூடியதையும் செய்வதில்லை என்று. வெறுமனே வெட்டிப் பேச்சைப் பேசிக்கொண்டு எதையுமே செய்யாமல் இருக்கிறார் என்பது சர்வதேசத்தின் எண்ணமாகும். இன்று எம்மிடம் பலத்தை உதறக்கூடாது. அதற்காக எந்த விட்டுக்கொடுப்பும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

சாதாரண இலக்கை அடைய சமூகத்தில் பின்பற்ற வேண்டிய முறைகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் பின்பற்ற வேண்டும். இந் நாட்டில் பெரும்பான்மை இனத்தின் எதிர்ப்பை சம்பாதித்து எமது இலக்கை நிறைவேற்ற முடியாது. ஆனால் சமரசமாக பேசி இலக்கை அடைய முடியும். அந்த பக்குவம் எங்கள் மக்கள் மனதில் இருக்க வேண்டும். இது எமது மக்களிடம் இருக்கிறது. அதை இல்லாமல் செய்யும் பிரசாரத்தை அனுமதிக்க முடியாது. அந்தப் பொறுப்பற்ற பிரசாரத்தை மக்களிடம் முறியடிக்க வேண்டியது இளைஞர்களின் கைளிலேயே இருக்கிறது என்றார்.

– வடமராட்சி நிருபர் –

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-17#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.