Jump to content

பொய்க்கு மேல் பொய் சொல்லும்- விக்னேஸ்வரன்!!


Recommended Posts

பொய்க்கு மேல் பொய் சொல்லும்- விக்னேஸ்வரன்!!

 

 

 
Vickneswaran-Chief-minister-27-L-780x405

 

 

தவ­றி­ழைத்­து­விட்டு அதை மறைக்க மற்­றொரு தவறு என்று அதை­யும் மறைக்க இன்­னொரு தவறு நீளும் தவ­று­க­ளைப் போன்று, வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரும், முன்­னாள் நீதி­ய­ர­ச­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வ­ர­னும் பொய்­யைச் சொல்லி அதி­லி­ருந்து தப்­பிக்க இன்­னொரு பொய் என்று பொய்­களை அள்ளி வீசிக் கொண்­டி­ருக்­கின்­றார். தாம­த­மா­க­வே­னும் உண்மை வெளி­யில் தெரி­யும்போது சொன்ன பொய்­கள் அத்­த­னை­யும் நிர்­மூ­ல­மா­கி­வி­டும். விக்­னேஸ்­வ­ரன் விட­யத்­தி­லும் அது­தான் நடந்­தி­ருக்­கின்­றது.

பளைக் காற்­றாலை
பளை­யில் காற்­றைப் பயன்­ப­டுத்தி மின்­சக்தி உற்­பத்தி செய்­வ­தற்கு இரண்டு நிறு­வ­னங்­கள் முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­தன. ‘ஜூல் பவர்’ மற்­றும் ‘பீற்றா பவர்’ என்­னும் நிறு­வ­னங்­கள் இந்த நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­யி­ருந்­தன. இரண்­டும் ஒரே முக­வ­ரி­யைப் பதி­வா­கக் கொண்ட நிறு­வ­னங்­கள். இலங்கை மின்­சார சபை­யின் கீழ், காற்­றா­லை­யி­லி­ருந்து மின்­சக்தி உற்­பத்தி செய்­யும் நிறு­வ­னங்­கள் இருக்­கத்­தக்­க­தாக மேற்­படி இரண்டு நிறு­வ­னங்­க­ளும் பளை­யில் காற்­றாலை அமைப்­ப­தற்கு மகிந்த தலை­மை­யி­லான அரசு சம்­ம­தம் தெரி­வித்­தி­ருந்­தது. கொழும்பு அர­சுக்கு உட்பட்ட திணைக்­க­ளங்­க­ளி­டம் அந்த நிறு­வ­னங்­கள் சம்­ம­தத்­தைப் பெற்­றி­ருந்­தன. ஆனா­லும் அவர்­க­ளுக்­குப் புதிய சிக்­கல் இறு­திக் கட்­டத்­தில் தோன்­றி­யது. வடக்கு மாகாண சபை உரு­வாக்­கப்­பட்­ட­மை­யால், வடக்கு மாகாணக் காணி அமைச்­ச­ரான முத­ல­மைச்­ச­ரின் அனு­ம­தி­யும் பெறப்­பட வேண்­டிய தேவை எழுந்­தது.

சட்­ட­மு­ர­ணான நட­வ­டிக்கை
அப்­போது அமைச்­ச­ராக இருந்த பொ.ஐங்­க­ர­நே­சன் இந்த விட­யத்­தில் தலை­யிட்­டி­ருந்­தார். முத­ல­மைச்­ச­ருக்கு மிக நெருக்­க­மா­ன­வ­ராகத் தன்­னைக் காட்­டிக் கொண்­டி­ருந்த ஐங்­க­ர­நே­சன், முத­ல­மைச்­ச­ரின் அனு­ம­தியை மிக இல­கு­வாக அந்த நிறு­வ­னங்­க­ளுக்­குப் பெற்­றுக் கொடுத்­தார். இதற்­குப் பதி­லீ­டாக அந்த நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து ஆண்டுக்கு 20 மில்­லி­யன் ரூபா பணத்தைப் பெரு நிறு­வ­னங்­க­ ளுக்­கான சமூ­கப் பொறுப்­பின் கீழ் (சி.எஸ்.ஆர்.) பெற்­றுக் கொள்­வ­தற்கு ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. எங்­கும் பின்­பற்­றப்­ப­டாத நடை­மு­றை­யாக இந்த ஒப்­பந்­தத்­தில் வடக்கு மாகாணப் பேர­வைச் செய­லர் கையெ­ழுத்­திட்­டார். இதன் பின்­னர் ஒப்­பந்­தத்­தின் சட்­ட­வலு தொடர்­பில் கேள்வி எழுந்­த­தைத் தொடர்ந்து முன்­னாள் ஆளு­நர் சந்­தி­ர­சிறி தலை­யிட்டு, ஒப்­பந்­தத்­தின் வாச­கங்­களை மாற்­றா­மல் வடக்கு மாகாண தலை­மைச் செய­லரை கை யெழுத்­தி­டச் செய்து சட்­ட­ரீ­தி­யான புதிய ஒப்­பந்­தத்தை உரு­வாக்­கி­னார்.

கோடிக்­க­ணக்­கான வரு­வாய் இழப்­பீடு
இவை எல்­லாம் 2014ஆம் ஆண்டு நடந்­தேறி முடிந்த விட­யங்­கள். இப்­போது இந்த விட­யம் அரங்­கில் பேசு பொரு­ளா­கக் கார­ணம் என்ன? கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யி­னால் திணைக்­க­ளங்­கள் சார் விட­யங்­கள் கணக்­காய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டும். அதன்­போது இந்த ஒப்­பந்த விட­ய­மும் அவர்­க­ளால் ஆரா­யப்­பட்­டது.
‘ஜூல் பவர்’ மற்­றும் ‘பீற்றா பவர்’ நிறு­வ­னங்­கள், இலங்கை மின்­சார சபைக்கு மின்­சா­ரத்தை விற்­ற­மைக்­காக இரண்டு ஆண்­டு­க­ளில் 293 கோடி ரூபா பணத்­தைப் பெற்­றுள்ளனர்.

ஆனால், வடக்கு மாகாண சபைக்கு 2.5 கோடி ரூபா பணத்தை மாத்­தி­ரமே வழங்­கி­யுள்ளன. வடக்கு மாகாண சபை­யி­னால் 20 ஆண்­டு­க­ளுக்கு மேற்­படி நிறு­வ­னத்­து­டன் எழு­தப்­பட்ட ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யில், 43 கோடி ரூபா­வையே 20 ஆண்­டு­கள் முடி­வில் மாகா­ண­ச­பை­யி­னால் பெற்­றுக் கொள்ள முடி­யும். ஆனால் அந்த நிறு­வ­னங்­கள் இரண்டு ஆண்­டு­க­ளி­லேயே 293கோடி ரூபா­வைப் பெற்­றுக் கொண்­டுள்­ள­ன. இத்­த­கைய பெருந்­தொகை நிதி இழப்­பு­ட­னான ஒப்­பந்­தம் தொடர்­பி­லேயே கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யி­னால் கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருந்­தது. இந்த விட­யம் மாகா­ணப் பொதுக் கணக்­கு­கள் குழு­வி­னால் ஆரா­யப்­பட்டு, வடக்கு மாகா­ண­ச­பை­யில் சமர்­பிக்­கப்­பட்டு விவா­தம் நடந்­தது. இந்த விவா­தத்தை மாகா­ண­ச­பை­ யின் 130ஆவது அமர்­வில் எடுத்­துக் கொள்ள வேண்­டாம் என்­று­கூட முத­ல­மைச்­சர் கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தார்.

யார் பொறுப்பு?
வடக்கு மாகா­ண­ச­பைக்குக் கிடைக்க வேண்­டிய பெருந்­தொ­கைப் பணம் இழக்­கப்­பட்­ட­தற்கு யார் பொறுப்பு? என்­பதே மாகா­ண­ச­பை­யில் எழுப்­பப்­பட்ட முதன்மைக் கேள்வி. அதற்­குப் பதில் சொல்­வ­தற்கு முத­ல­மைச்­சர் சபை­யில் இருக்­க­வில்லை. அவர் திரு­மண நிகழ்­வுக்­குச் சென்­றி­ருந்­தார்.

ஆனால், சில தினங்­க­ளின் பின்­னர் தானே எழு­திய கேள்­விக்கு, தானே பதிலை வழங்கி ஊடக அறிக்கை அனுப்பி வைத்­தி­ருந்­தார். அதில், பளைக் காற்­றாலை திட்­டம் கொழும்பு அர­சின் முத­லீட்­டுச் சபைக்­குச் சொந்­த­மான திட்­டம். வடக்கு மாகா­ண­சபை பத­விக்­கு­வர முன்­னரே உரிய அனு­ம­தி­க­ளைப் பெற்­றுத் திட்­டத்தைச் செயற்­ப­டுத்­தி­னார்­கள். வடக்கு மாகாண சபை­யு­டன் பெரு நிறு­வ­னங்­க­ளுக்­கான சமூ­கப் பொறுப்­பின் கீழ் (சி.எஸ்.ஆர்.) திட்­டத்­தி­லேயே உடன்­பாடு வைத்­துக் கொண்­டது.

சமூ­கப் பயன்­பாட்­டுக்­காக ஒரு நிறு­வ­னம் தனது விருப்­பார்ந்­த­ வாறு கொடுக்க முன்­வ­ரும் தொகையே சி.எஸ்.ஆர். அதை அவர்­கள் தர­லாம் தரா­மல் விட­லாம். அதில் நிதி­யி­ழப்பு எவ்­வாறு ஏற்­ப­டக்கூடும்? இரு­பது மில்­லி­ய­னும் கொடை­யா­ளி­யால் தரப்­ப­டும் தன்­னிச்­சை­யான நிதியே. அந்­தத் தொகை­யைக் அதி­க­ரிக்­க­வேண்­டு­மா­னால் ஒரு வேண்­டு­கோள் விடுக்­க­லாம். அவர்­கள் அதைப் பரி­சீ­லித்­துத் கருத்­தைத் தெரி­யப்­ப­டுத்­த­லாம். இது பேரம் பேச­வேண்­டிய தொகை­யல்ல. இத­னால் நிதி கிடைத்­ததே ஒளிய நிதி­யி­ழப்பு ஏதும் ஏற்­ப­ட­வில்லை’’ என்று முத­ல­மைச்­சர் கூறி­யி­ருந்­தார்.

தவ­று­கள்
மேற்­படி ஒப்­பந்­தம் எழு­தப்­பட்­ட­தில் தவ­றி­ழைக்­கப்­பட்­டது. வடக்கு மாகாண சபை சார்­பில் வடக்கு மாகாண தலை­மைச் செய­லரே கையெ­ழுத்­திட வேண்­டிய ஒப்­பந்­தத்­தில் வடக்கு மாகாணப் பேர­வைச் செய­லர் கையெ­ழுத்­திட்­டி­ருந்­தார். இது முத­லா­வது தவறு. இந்­தத் தவறை மாகா­ண­ச­பை­யில் முத­ல­மைச்­ச­ருக்குச் சுட்­டிக்­காட்­டி­ய­போது தாம் செய்­தது சரி­யென்று வாதிட்­டி­ருந்­தார்.

அந்த ஒப்­பந்­தத்­தின் சட்­ட­வ­லுவே கேள்­விக்கு உள்­ளா­கும் அள­வுக்குத் தவ­றி­ருக்­கின்­றது என்று அப்­போ­தைய ஆளு­நர் தெரி­வித்து அத­னைச் சரி­யாக்­கி­ய­போது எது­வும் பேசா­மல் மௌன­மாக இருந்­தார். தான் செய்­தது சரி­யென்­றால் ஆளு­ந­ரின் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்­புத் தெரி­வித்­தி­ருக்­க­லாமே? அப்­படி எது­வும் செய்­யா­மல் தான் செய்த தவறை முத­ல­மைச்­சர் மறை­மு­க­மாக ஏற்­றுக் கொண்­டி­ருந்­தார்.

இரண்­டா­வது தவறு. மேற்­படி நிறு­வ­னம் வடக்கு மாகாண சபை­யு­டன் ஏற்­ப­டுத்­திக் கொண்ட ஒப்­பந்­தத்­தின் ஊடாக வழங்­கப்­ப­டும் நிதி, மாகாண சபை­யின் வரவு – செல­வில் கணக்குக் காட்­டப்­ப­டா­மல் நேர­டி­யாக அப்­போ­தைய விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னின், அமைச்­சுக்கு வழங்­கப்­பட்­டது.

இந்த நடை­மு­றை­யும் தவறு என்று முத­ல­மைச்­ச­ருக்கு மாகா­ண­சபை அமர்­வில் எடுத்­து­ரைக்­கப்­பட்­டது. ஆனால் வழ­மை­போன்று முத­ல­மைச்­சர் இத­னை­யும் மறு­த­லித்­தார். இறு­தி­யில் கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­திக்குக் கடி­தம் எழு­தப்­பட்ட பின்­னர், அவைத் தலை­வர் தலை­யிட்டு, இதன் தாற்ப­ரி­யத்தை புரிய வைத்து, வடக்கு மாகாண சபை­யின் வரவு – செல­வுத் திட்­டத்­தில் உள்­ளீர்க்­கச் செய்­தார். அந்த நடை­முறை தவறு என்று எதிர்­வா­தம் புரிந்த முத­ல­மைச்­சர் பின்­னர் எப்­படி வரவு – – செல­வுத் திட்­டத்­தில் உள்­ள­டக்க மௌன­மாக இணங்­கி­னார்?

இவை­யெல்­லாம் கடந்த காலங்­க­ளில் நடந்­தே­றி­யவை. இப்­போது, தனது கேள்வி பதில் அறிக்­கை­யில் முத­ல­மைச்­சர் முழுப்­பூ­ச­ணிக்­காயைச் சோற்­றில் மறைத்­தி­ருக்­கின்­றார்.

இந்­தத் திட்­டத்­துக்­கான அனு­மதி எல்­லாம் கொழும்பு அர­சி­ட அந்த நிறு­வ­னம் பெற்­றி­ருந்­தது என்றிருக்கிறார். திட்­டம் முத­லீட்­டுச் சபை­யி­னு­டை­ய­து­தான். அதில் எந்த மாற்­றுக் கருத்­துக்­க­ளும் இல்லை. வடக்கு மாகாண சபை­யி­னால் அந்த நிறு­வ­னத்­து ­டன் பேரம் பேச முடி­யாது என்­றும், அவர்­கள் நன்­கொ­டை­யாக தரும் நிதியை ஏற்­க­வேண்­டி­ய­து­தான் என்­றும் முத­ல­மைச்­சர் கூறி­யி­ருக்­கின்­றார்.

இங்­கே­தான் முத­ல­மைச்­சர் பொய்­யைக் கூறி மாட்­டிக் கொண்­டி­ருக்­கின்­றார். கொழும்­பில் திட்­டத்­துக்­கான அனு­ம­தி­கள் எல்­லா­வற்­றை­யும் பெற்­றுக் கொண்ட நிறு­வ­னம் பின்­னர் என்ன தேவைக்­காக வடக்கு மாகா­ண­ ச­பை­யுடன் ஒப்­பந்­தம் செய்­வ­தற்­குச் சென்­றது? இங்­கே­தான் முத­ல­மைச்­சர் முழுப் பூச­ணிக்­காயைச் சோற்­றில் மறைத்­தி­ருக்­கின்­றார்.

முத­லீட்­டுச் சபை­யின் திட்­ட­மாக இருந்­தாலும் கூட, கொழும்பு அர­சின் அனு­ம­தி­யைப் பெற்­றி­ருந்­தா­லும் மாகா­ணக் காணி ஆணை­யா­ள­ர­தும், மாகாண காணி அமைச்­ச­ரி­ன­தும் அனு­மதி கட்­டா­யம் தேவை. அந்த அனு­ம­திக்­காக மேற்­படி நிறு­வ­னம் வடக்கு மாகா­ண­ச­பைக்கு விண்­ணப்­பித்­தி­ருக்­கின்­றது. வடக்கு மாகாண காணி ஆணை­யா­ள­ராக இருந்த பொ.தயா­னந்தா, 2013ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் 5ஆம் திகதி திட்­டத்­துக்கு காணி வழங்க இணங்­கி­யி­ருக்­கின்­றார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி கையெ­ழுத்­திட்டு அனு­மதி வழங்­கி­யி­ருக்­கின்­றார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் அனு­மதி கட்­டா­யம் தேவைப்­ப­டு­கின்ற சூழ­லில் அந்த நிறு­வ­னத்­தி­ ட­மி­ருந்து, வடக்கு மாகாண சபைக்கு பெருந்­தொகை நிதியை சி.எஸ்.ஆர். திட்­டத்­தின் ஊடா­கக் கோரி­யி­ருக்­க­லாம். அதைச் செய்­ய­வில்லை. இவை­யெல்­லா­வற்­றுக்­கும் மேலாக, வடக்கு மாகாண சபை­யு­டன் செய்து கொள்­ளப்­பட்­டது சி.எஸ்.ஆர். ஒப்­பந்­தம் மாத்­தி­ரமே என்று குறிப்­பிட்­டுள்ள முத­ல­மைச்­சர், தனது அனு­மதி அந்த நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டது என்­பதை மூடி மறைத்து விட்­டார். வழ­மை­போன்று இதற்­கும் அர­சி­யல்­சா­யம் பூசி தப்­பித்­துக் கொள்ள முயற்­சித்­தார். ஆனா­லும் அவர் துர­திஷ்டம், முத­ல­மைச்­சர் வழங்­கிய அனு­ம­திக் கடி­தத்தை அதி­கா­ரி­கள், மாகா­ணப் பொதுக் கணக்­காய்­வுக் குழு முன்­பாகப் பகி­ரங்­கப்­ப­டுத்தி விட்­டார்­கள்.

எங்­க­ளால் எது­வுமே செய்­ய­மு­டி­யாது. கொழும்­பின் எல்லா அனு­ம­தி­யு­டன் வந்­தி­ருக்­கின்­றார்­கள் என்று கூறிய முத­ல­மைச்­சர், காணிக்கு அனு­மதி வழங்­கிய கடி­தத்­த­துக்கு என்ன பதில் கூறப் போகின்­றார்? இந்­தக் கையெ­ழுத்து தனது இல்லை என்று கூறப்­போ­கின்­றாரா? அல்­லது சுய­நி­னை­வு­டன் அந்­தக் கையெ­ழுத்தை வைக்­க­ வில்லை என்று கூறப்­போ­கின்­றாரா?

பொய்­யைச் சொல்லி அதை மறைக்க இன்­னொரு பொய்­யைச் சொல்லி இன்று எல்­லாம் பட்­ட­வர்த்­த­ன­மாக வெளிப்­பட்டு நிற்­கின்ற சூழ­லில் முத­ல­மைச்­சர் தொடர்ந்து ஈடாடுவது சரியா?

https://newuthayan.com/story/19/பொய்க்கு-மேல்-பொய்-சொல்லும்-விக்னேஸ்வரன்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.