Jump to content

சீன மொழியால் தமி­ழுக்கு ஆபத்தா?


Recommended Posts

சீன மொழியால் தமி­ழுக்கு ஆபத்தா?

SAMAKALAM150918-PG04-R1Page1Image0002-4ceae067da2c982545228dafd8bafaf357ab5a3c.jpg

 

என்.கண்ணன்

 

இலங்­கையில் சீனாவின் பொரு­ளா­தார, முத­லீட்டு ஆதிக்கம் பற்றி வெளி­நா­டு­களில் அதி­க­மாகப் பேசப்­பட்டு வரும் நிலையில், அதனைத் தவிர்ந்த வேறு விட­யங்­க­ளிலும் சீனாவின் தலை­யீ­டுகள் குறித்த கரி­ச­னைகள் உள்­நாட்டில் ஏற்­படத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

ஒரு காலத்தில் சீனா தனது விலை­ம­திப்புக் குறைந்த உற்­பத்திப் பொருட்­களால், உலகின் பெரும்­பா­லான நாடு­களின் சந்­தை­களை நிரப்­பி­யது. இப்­போது, முத­லீ­டுகள் மற்றும் தனது தொழிற்­ப­டையின் மூலம், வெளி­நா­டு­களை நிரப்பத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

அவ்­வா­றா­ன­தொரு நிலையைச் சந்­தித்­தி­ருக்கும் நாடு தான் இலங்­கையும். இலங்­கையில் அதி­க­ரித்து வரும் சீனர்­களின் செல்­வாக்கு, பல்­வேறு தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. மொழி, கலா­சார, சமூக விட­யங்­க­ளிலும் இதன் தாக்கம் எதி­ரொ­லிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

கடந்த 6ஆம் திகதி நாட்டின் பல்­வேறு பொலிஸ் நிலை­யங்­களில் இருந்து தெரிவு செய்­யப்­பட்ட பொலிஸ் அதி­கா­ரி­களின் குழு­வொன்று பீஜிங்­கிற்குப் புறப்­பட்டுச் சென்­றது.

சீன மொழி­யான மாண்­டரின் மொழியைக் கற்­ப­தற்­கா­கவே, பொலிஸ் அதி­கா­ரிகள் பீஜிங்­கிற்கு அனுப்­பப்­பட்­டுள்­ளனர். இதற்கு முன்னர் ஆங்­கிலம் கற்­பிப்­ப­தற்­கா­கவே, வெளி­நாட்­டுக்கு பொலிஸ் அதி­கா­ரிகள் அனுப்­பப்­பட்­டனர். இப்­போது முதல் முறை­யாக, மாண்­டரின் மொழியை கற்க சீனா­வுக்கு அனுப்­பப்­பட்­டி­ருக்­கி­றது பொலிஸ் அதி­கா­ரிகள் குழு.

ஏனென்றால், இலங்­கையில் சீனர்­களின் பிர­சன்னம் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. இங்கு நடக்கும் குற்­றச்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­டைய சீனர்­களைக் கையா­ளு­வ­தற்கும், அவர்கள் சார்ந்த பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும் சீன மொழியைத் தெரிந்­தி­ருக்க வேண்­டிய கட்­டாயம் பொலி­ஸா­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இங்கு தொழி­லா­ளர்­க­ளா­கவோ, சுற்­றுலாப் பய­ணி­க­ளா­கவோ வந்து குவியும் சீனர்­களில் ஒரு பகு­தி­யினர் சட்­ட­வி­ரோத தொழில்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். எனவே, இவர்­களைக் கையா­ளு­வ­தற்கு சீன மொழியை பொலிஸார் தெரிந்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

இலங்­கையில் சீனாவின் முத­லீட்டில் மேற்­கொள்­ளப்­படும் அபி­வி­ருத்தி மற்றும் உட்­கட்­ட­மைப்புத் திட்­டங்­களில், பணி­யாற்­று­வ­தற்கு ஆயி­ரக்­க­ணக்­கான சீனர்கள் இலங்­கைக்கு வந்­தி­ருக்­கி­றார்கள்.

சுமார் 6000 சீனர்கள் அரசின் அனு­மதி பெற்று இங்கு பணி­யாற்­று­வ­தாக ஒரு புள்­ளி­வி­பரம் அண்­மையில் வெளி­யா­னது. ஆனால், சட்­ட­வி­ரோ­த­மாக தங்­கி­யி­ருக்கும் சீனர்­களின் எண்­ணிக்கை தெரி­யாது என்­பதால், இதனை முழு­மை­யான தரவு எனக் கொள்ள முடி­யாது.

கொழும்பு நகரில் தங்­கா­லிக இடங்­களில் தங்­கி­யி­ருக்கும் சீன தொழி­லா­ளர்­களை, வேலைத் தளங்­க­ளுக்கு ஏற்றி இறக்­கு­வ­தற்கு குறிப்­பிட்ட நேரத்­துக்கு அந்­தந்த நிறு­வ­னங்­களால் தனிப்­பட்ட பஸ் சேவை­களும் கூட நடத்­தப்­ப­டு­கின்­றன.

சீன தொழி­லா­ளர்­களின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது. இதனால், உள்­நாட்டு தொழி­லா­ளர்­க­ளுக்­கான தொழில் வாய்ப்­புகள் பறிபோய்க் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­தி­யா­வுடன் எட்கா உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்டால், இந்­தி­யாவில் இருந்து, தொழி­லா­ளர்கள் இங்கு படை­யெ­டுப்­பார்கள் என்று எதிர்ப்புத் தெரி­விக்கும், அர­சி­யல்­வா­தி­களோ, தொழிற்­சங்­கங்­களோ, சீனத் தொழி­லா­ளரின் படை­யெ­டுப்பின் தாக்கம் பற்றி கவ­லைப்­பட்­ட­தில்லை.

சீனாவின் முத­லீட்­டி­லான திட்­டங்கள் அதி­க­ரிக்க அதி­க­ரிக்க, இங்கு சீனத் தொழி­லா­ளர்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்து வரு­கி­றது. குறிப்­பாக, கொழும்புத் துறை­முக நகரம், அம்­பாந்­தோட்டை துறை­முக கைத்­தொழில் வலயம் என்­பன முறைப்­படி செயற்­படத் தொடங்­கினால், இங்கு சீனர்­களின் நட­மாட்டம் இன்னும் பன்­ம­டங்கு அதி­க­ரிக்கும்.

அது­போ­லவே, இலங்­கைக்கு வரும் சீன சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்­கையும் சடு­தி­யாக அதி­க­ரித்­தி­ருக்­கி­றது, இந்த ஆண்டின் முதல் 8 மாதங்­களில், சுமார் 1.5 மில்­லியன் வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் இலங்கை வந்­தி­ருக்­கின்­றனர். அவர்­களில் சுமார் இரண்டு இலட்சம் பேர் சீனர்­க­ளாவர்.

சுற்­றுலா வீசாவில் வரும் சீனர்­களில் குறிப்­பிட்­ட­ள­வானோர், குறித்த காலத்­துக்குள் நாடு திரும்­பு­வ­தில்லை. அவ்­வா­றா­ன­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­தவும், பொலி­ஸா­ருக்கு மாண்­டரின் மொழி அறிவு தேவைப்­ப­டு­கி­றது.

சீனர்கள் மற்றும் ஜப்­பா­னி­யர்கள், பொது­வா­கவே ஆங்­கி­லத்தை அறிந்­தி­ருப்­ப­தில்லை. ஆங்­கி­லத்தில் பெரும்­பாலும் சுத்த சூனி­ய­மா­கவே இருப்­பார்கள். அதனால் தான், அவர்­களின் தாய்­மொ­ழியைக் கற்­ப­தற்­காக அந்த நாட்­டுக்கே செல்ல வேண்­டிய நிலை இலங்கைப் பொலி­ஸா­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இதில் சோக­மான விடயம் என்­ன­வென்றால், இலங்­கையில் உள்ள பெரும்­பா­லான பொலிஸ் நிலை­யங்­களில், குறைந்­த­பட்சம், தமிழ்­மொழி தெரிந்த ஒரு பொலிஸார் கூட இல்­லாத நிலைமை இன்­னமும் தொடர்­கி­றது. இப்­போது தான், தமிழ்­மொழி தெரிந்த குறைந்­தது ஒரு பொலி­ஸா­ரை­யா­வது நிய­மிக்கும் செயற்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் பிர­தா­ன­மாக பேசப்­படும் இரண்­டா­வது மொழி தமிழ். ஆனாலும், தமிழ் மொழியை உரி­ய­வாறு பயன்­ப­டுத்­து­வ­தற்­கான ஒழுங்­குகள் இன்­னமும் இல்லை. பொலிஸ் உள்­ளிட்ட துறை­களில் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்­கப்­ப­டு­வ­தில்லை.

ஆனால், சீன மொழியைக் கற்றுக் கொள்­வ­தற்கு பீஜிங்­கிற்குச் சென்­றி­ருக்­கி­றது பொலிஸ் அதி­கா­ரிகள் குழு.

இலங்­கையில், தமிழை விட சீன மொழிக்கு முக்­கி­யத்­துவம் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றதா என்ற கேள்வி இதனால் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இந்த விட­யத்தில் மாத்­தி­ர­மன்றி இன்னும் பல விட­யங்­க­ளி­னாலும் கூட, இந்த சந்­தேகம் ஏற்­ப­டு­கி­றது.

அண்­மையில் வெளி­நாடு ஒன்றில் இருந்து பால் பொருட்­களை இறக்­கு­மதி செய்து விற்கும் நிறு­வனம் தனது வெண்ணெய்ப் பொதி ஒன்றில், ஆங்­கிலம், சிங்­களம், சீன மொழி ஆகி­ய­வற்றை மாத்­திரம் அச்­சிட்டு விற்­ப­னைக்கு விட்­டி­ருந்­தது.

இது­வ­ரையில் தமிழ், ஆங்­கிலம், சிங்­கள மொழி­களில் தான் பொது­வாக, எல்லா நிறு­வ­னங்­களும் தமது உற்­பத்­தி­களை சந்­தைப்­ப­டுத்­தின. குறித்த நிறு­வ­னமும் அவ்­வாறு தான் தனது உற்­பத்­தி­களை சந்­தைப்­ப­டுத்­தி­யது.

திடீ­ரென தமிழ்­மொ­ழியை நீக்கி விட்டு, சீன மொழியை உள்­ள­டக்­கி­யி­ருக்­கி­றார்கள். அந்த விவ­காரம் குறித்து பலரும் சமூக ஊட­கங்­களில் உணர்ச்சி வசப்­பட்டு விவா­தித்­தனர். தமிழ் மொழியை அச்­சிடும் வரை குறித்த உற்­பத்­தியை புறக்­க­ணிக்க வேண்டும் என்றும் சிலர் ஆலோ­ச­னை­களை முன்­வைத்­தனர்.

அதற்கு அந்த நிறு­வனம், ஏதோ சப்பை நியா­யத்தை கூறி நழு­வி­யி­ருக்­கி­றது. தமது உற்­பத்தி கிழக்கு, தெற்கு ஆசி­யா­வுக்கு என்றே தயா­ரிக்­கப்­பட்டு பொதி­யி­டப்­ப­டு­வ­தா­கவும், எனவே குறித்த பிராந்­தி­யத்தில் பேசப்­படும் மொழி­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­வ­தா­கவும் நியா­யப்­ப­டுத்­தி­யது அந்த நிறு­வனம்.

இது­வரை தமிழ் மொழிக்கு முக்­கி­யத்­துவம் இருந்­தது. இப்­போது சீன மொழி அந்த இடத்தைப் பிடித்­தி­ருக்­கி­றது அது தான் உண்மை.

இலங்­கையில் சீனர்­களின் பிர­சன்னம் அதி­க­ரித்­தி­ருப்­பதால் தான் பொதி­களில் சீன மொழி அச்­சி­டப்­பட்­டது என்­பதே உண்மை நிலை. தமி­ழர்­களை விட சீனர்கள் இங்கு அதி­க­மில்லை. ஆனாலும் தமிழ் மொழியை இல­கு­வாக தூக்கி வீசி விட்டு சீன மொழி திணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இதே நிலை வேறு பல உற்­பத்திப் பொருட்­க­ளிலும் வரத் தொடங்கி விட்­டது. இப்­போது சீன மொழியில் அச்­சி­டப்­பட்ட பொதிகள் பல விற்­ப­னைக்கு வரு­கின்­றன.

     

 

இனிமேல் பஸ்­களில் சீன மொழியில் இடங்­களின் பெயர்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­படும் நிலையும் வரலாம்.

இது ஒரு வகையில் சீனாவின் கலா­சார மற்றும் மொழி ரீதி­யான படை­யெ­டுப்பு. முத­லீ­டு­க­ளினால் நாடு­களின் பொரு­ளா­தா­ரத்தை வசப்­ப­டுத்தும் சீனா தனது தொழிற்­ப­டையைக் கொண்டு, கலா­சார, மொழி ஆக்­கி­ர­மிப்பு ஒன்­றையும் முன்­னெ­டுக்­கி­றது.

இலங்­கையில் சீன மொழியின் ஆதிக்கம் அதி­க­ரிக்கும் போது, பாதிக்­கப்­ப­டு­வது தமிழ் மொழி தான். அதற்கு உதா­ர­ண­மான இரண்டு சம்­ப­வங்கள் ஏற்­க­னவே சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

பிற மொழி­களின் அறிவு இன்­றைய உலகில் முக்­கி­ய­மா­னது. சீன மொழி என்­றில்லை எல்லா மொழி­க­ளையும் அறிந்­தி­ருப்­பதில் தவ­றில்லை. ஆனால், அதுவே இன்­னொரு மொழியை, இனத்தை, நாட்டை, கலா­சா­ரத்தை, பண்­பாட்டை உடைத்து நொருக்­கு­வ­தற்கு காரணியாகி விடக் கூடாது.

இலங்கையில் சீனர்களின் தலையீடு பற்றி இப்போது தான் மெல்ல மெல்ல ஊடகங்களில் செய்திகள் வரத் தொடங்கியிருக்கின்றன. மக்கள் மத்தியில் குறிப்பாக, சீனத் தொழிலாளர்கள் அதிகம் தங்கியுள்ள, அவர்கள் பணியாற்றும் இடங்களை அண்டிய பகுதியில் உள்ள மக்கள் தான் இதுபற்றி அதிகம் பேசுகிறார்கள்.

ஏனென்றால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தான் சீனர்களால் பறிக்கப்படுகிறது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலையும், ஊதியமும் அவர்களால் பங்கிடப்படுகிறது.

ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கு இது அதிகம் தெரிவதில்லை. ஆனால் இந்த நிலை நீடிக்கப் போவதில்லை.

சீனா நாடெங்கும் உட்கட்டமைப்புத் திட்டங்களின் மீது ஆர்வம் காட்டும் நிலையில் எல்லாப் பகுதிகளிலுமே சீனர்களையும் அவர்களால் ஏற்படக் கூடிய மொழி, கலாசார, சமூக பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் நிலை வரத் தான் போகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-16#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.