Jump to content

போலீசையும், நீதிமன்றத்தையும் மிக கேவலமாக பேசிய ஹெச்.ராஜா - வைரல் காணொளி.!


Recommended Posts

போலீசையும், நீதிமன்றத்தையும் மிக கேவலமாக பேசிய ஹெச்.ராஜா - வைரல் காணொளி.!

 

 
Image

பாஜக தேசிய செயலாளரான ஹெச்.ராஜா அவ்வப்போது பகீர் கருத்துக்கள் பலவற்றை தெரிவித்துவிட்டு அது சர்ச்சையான பின்பு குறிப்பிட்ட கருத்தினை நான் தெரிவிக்கவில்லை என பின்வாங்குவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர்.

ஆனால், போலீஸ் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. அது மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அழைக்கப்பட்டிருந்தார்.

மேடை அமைக்க அனுமதி மறுத்ததால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, காவல்துறையிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்யும் காணொளி காட்சிகள் நேற்று வெளியாகின. அதில், காவல்துறையும், நீதிமன்றத்தையும் மிக தரைகுறைவாக விமர்சித்திருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பகீர் விளக்கம் அளித்துள்ளார் ராஜா. குறிப்பிட்ட காணொளி காட்சியில் பேசியது நான் இல்லை எனவும், நான் பேசியவற்றை வேறு எவரோ எடிட் செய்துவிட்டார்கள் எனவும் விளக்கமளித்துள்ளார் ராஜா.

சாமானியர்கள் எவரேனும் நீதிமன்றங்களை விமர்சித்தால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை பாய்ச்சும் நீதிமன்றங்கள் இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

 

 

https://www.ibctamil.com/india/80/106190?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

யாரோ எடிட் செஞ்சிருக்காங்க! : எச்.ராஜா தடாலடி


 

 

hraja-speech-after-issue-on-highcourt-speech

 

நான் பேசியதை யாரோ எடிட் செய்திருக்கிறார்கள் என்று பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா விளக்கம் அளித்திருக்கிறார்.

சமூகவலைத்தளத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பேசும் வீடியோ பதிவொன்று வைரலாக பரவி வருகிறது. அதில் “பயங்கரவாதிகளுக்கு ஜெயிலுக்குள் 19 கலர் டிவி, வெட்கமில்லையா உங்களுக்கு காக்கிசட்டை அணிவதற்கு. வெட்கமாயில்லை. ஒட்டுமொத்த காவல்துறையுமே  தமிழ்நாட்டில் ஊழல்மயமாகிவிட்டது” என்று காவல்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் எச்.ராஜா.

அப்போது ஒரு காவல்துறை அதிகாரி, “இது ஹைகோர்ட் உத்தரவு சார்” என்றவுடன், எச்.ராஜா தகாத வார்த்தைகளால் ஹைகோர்ட்டை சாடியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

எச்.ராஜா பேச்சுக்கு பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சர்ச்சைத் தொடர்பாக எச்.ராஜா கூறியிருப்பதாவது:

நான் பேசியது முழுவதுமே ஹைகோர்ட்டுக்கு ஆதரவாகத்தான். அவர்கள் அதை எடிட் செய்து இணைத்திருக்கிறார்கள். நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்றுதான் உண்ணாவிரதம், போராட்டம் என நடத்திக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தால் மட்டுமே விநாயகர் சதுர்த்தியை நடத்த முடிந்திருக்கிறது. என்னுடைய பேச்சை கட் பண்ணி எடிட் பண்ணுவது நிறைய முறை நடந்துவிட்டது. 

இவ்வாறு எச்.ராஜா தெரிவித்திருக்கிறார்.

https://www.kamadenu.in/news/politics/6074-hraja-speech-after-issue-on-highcourt-speech.html

Link to comment
Share on other sites

எச்.ராஜா கண்ணியமில்லாதவர், ஆபத்தான பொய்யர்: சித்தார்த் காட்டம்


 

 

siddharth-tweet-about-hraja-speech

 

எச்.ராஜா கண்ணியமில்லாதவர், ஆபத்தான பொய்யர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சித்தார்த் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

சமூகவலைத்தளத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பேசும் வீடியோ பதிவு, வைரலாக பரவி வருகிறது. அதில் “பயங்கரவாதிகளுக்கு ஜெயிலுக்குள் 19 கலர் டிவி, வெட்கமில்லையா உங்களுக்கு. காக்கிசட்டை அணிவதற்கு. வெட்கமாயில்லை. ஒட்டுமொத்த காவல்துறையுமே  தமிழ்நாட்டில் ஊழல்மயமாகிவிட்டது.  உங்களுக்கு லஞ்சம் தேவை என்றால் என்னிடம் கேளுங்கள். நான் தருகிறேன். எல்லாருமே லஞ்சப் பேர்வழிகள்” என்று காவல்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் எச்.ராஜா.

அப்போது ஒரு காவல்துறை அதிகாரி, “இது ஹைகோர்ட் உத்தரவு சார்” என்றவுடன், எச்.ராஜா தகாத வார்த்தைகளால் ஹைகோர்ட்டை சாடியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

எச்.ராஜாவின் பேச்சை நடிகர் சித்தார்த் கடுமையாகச் சாடியிருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சித்தார்த் கூறியிருப்பதாவது:

போராட்டம் செய்தவர்களைச் சுட்டுக் கொன்ற தமிழ்நாடு போலீஸ், உயர்நீதிமன்றம், போலீஸ், சிறுபான்மையினர் முக்கியமாக இந்துமதம் என அனைத்தையும் எச்.ராஜா இழிவாக பேசிக் கொண்டிருப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இது அவர்களது சார்பு நிலையைக் காட்டுகிறது. இந்த இந்துத்துவ தீவிரவாதி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். 

எச்.ராஜா இந்துவாக இருப்பதற்குத் தகுதியில்லாதவர். அவர் ஒரு கண்ணியமில்லாதவர், ஆபத்தான பொய்யர்.  தமிழிசை அவர்களே, உங்கள் குடும்பத்தின் அரசியல் பராம்பரியத்தை இதுபோன்ற மோசமான மனிதரின் பக்கத்தில் நின்றுகொண்டு அவமதிக்கிறீர்கள். தயவு செய்து இந்த தவறை சரி செய்யுங்கள். அவர் பேசும் வார்த்தைகளைக் கேட்டீர்களா? . 

இவ்வாறு சித்தார்த் தெரிவித்திருக்கிறார்.

https://www.kamadenu.in/news/politics/6073-siddharth-tweet-about-hraja-speech.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner

Link to comment
Share on other sites

திருமயம் காவல் நிலையத்தில் ஹெச். ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல தடை விதித்த காவல்துறையினருடன் பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் ஹெச். ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஹெச்.ராஜா

 

 

 

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு மெய்யபுரம் மகாமுத்து மாரியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று மதியம் 2 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை பா.ஜ.க வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார். இதையடுத்து மெய்யபுரம் வீதிகளில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாகச் செல்ல பொதுமக்கள் முயன்றனர். ஆனால் விநாயகர் சிலை ஊர்வலம் ஊருக்குள் செல்லக்கூடாது என போலீசார் இரும்பு தடுப்புகள் போட்டுத் தடுத்து நிறுத்தினர். இதற்கு ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாகக் கூறி போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஹெச். ராஜா போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவல்துறையினர் அனைவரும் இந்துக்களுக்கு எதிரானவர்களாகவே இருப்பதாகக் கடுமையாக சாடினார். நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக அதிகாரி ஒருவர் எடுத்துக் கூறிய போது அவரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்த ராஜா, ஒவ்வொரு இந்து வீடு வழியாகவும் செல்வோம், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று சவால் விடுத்தார். அதனையடுத்து போலீசாரை கண்டித்து, மதுரை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி செல்வராஜ், வருவாய் அதிகாரி கோகிலா மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் விநாயகர் ஊர்வலம் ஊருக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர்.

இதையடுத்து விநாயகர் சிலை மெய்யபுரத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, மெய்யபுரத்தில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹெச்.ராஜா போலிஸாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் ஹெச்.ராஜா போலீசாரிடம் உயர்நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறையையும் மிக மோசமாகப் பேசியிருக்கிறார். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதனையடுத்து ஹெச்.ராஜா, அந்த வீடியோவில் தனது பேச்சு எடுத்து எடிட் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹெச். ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் காவல் நிலையத்தில் சட்டத்தை மதிக்காது பேசுதல், இரு தரப்பினரிடையே மோதல் உண்டாக்கும் நோக்கில் செயல்படுதல், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர் மனோகரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹெச்.ராஜா மீது உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/137076-fir-filed-against-h-raja-in-tirumayam-police-station.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

போலீசையும், நீதிமன்றத்தையும் மிக கேவலமாக பேசிய ஹெச்.ராஜா - வைரல் காணொளி.!

...

 

 

 

 பேஷ் பேஷ்..! நன்னா வருவேள்..!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

 

 பேஷ் பேஷ்..! நன்னா வருவேள்..!!  :)

நல்லதொரு ஆட்சிமாற்றம் தமிழ்நாட்டிற்கு வேண்டுமென்றால் அது யார் தலமையில் இருந்தால் நல்லாயிருக்குமென்று நினைக்கின்றீர்கள்?:grin:

நல்லதொரு ஆட்சிமாற்றம் தமிழ்நாட்டிற்கு வேண்டுமென்றால் அது யார் தலைமையில் இருந்தால் நல்லாயிருக்குமென்று நினைக்கின்றீர்கள்?:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நல்லதொரு ஆட்சிமாற்றம் தமிழ்நாட்டிற்கு வேண்டுமென்றால் அது யார் தலமையில் இருந்தால் நல்லாயிருக்குமென்று நினைக்கின்றீர்கள்?:grin:

நல்லதொரு ஆட்சிமாற்றம் தமிழ்நாட்டிற்கு வேண்டுமென்றால் அது யார் தலைமையில் இருந்தால் நல்லாயிருக்குமென்று நினைக்கின்றீர்கள்?:cool:

உண்மையை சொல்லப்போனால் தமிழன் நலன் சார்ந்து தொலைநோக்கு பார்வையுடன், விலைபோகாத தலைமைத்துவம் கொண்ட தலைமை என்று போற்றக் கூடியவர்கள் கண்ணுக்கெட்டிய தூரம் யாருமே இல்லை என்பதுதான் யதார்த்தம்!

ஒவ்வொரு தலைவர்களிடமும் இந்தக் கூட்டுப்பண்புகள் இல்லாமல் ஏதாவது ஒன்று அல்லது சில பண்புகள் மிஸ்ஸிங்.

ஆனால் நீங்கள் தவறவிட்டது மாதிரி, எதிர்காலத்தில் தமிழ்நாடும் இருக்காது என நம்புகிறேன்..

யார் கண்டா..? குவார்டர், புரியாணிக்கு விலைபோகும் தமிழக மக்களின் மனம் மாறினால் நல்ல தலைமை கிட்டும் நாள் வரலாம்!

Link to comment
Share on other sites

சீமானை தட்டிக் கேட்க முடியல எச்.ராஜா மீது மட்டும் எஃப்.ஐ.ஆரா?- சு.சுவாமி காட்டம்


 

 

su-swamy-supports-h-raja

 

 

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருப்பதற்கு சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இந்துக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் எச்.ராஜாவை நாம் பாராட்டுகிறோம். அவர் மீது போலீஸார் எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்திருப்பது கேலிக்கூத்தானது.

ஆனால், தீவிரவாதி பிரபாகரன் படத்தை தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் வைக்க முடிகிறது. சீமான் எவ்வளவு கீழ்த்தரமாக வேண்டுமானாலும் எந்தக் குப்பையை வேண்டுமானாலும் போலீஸ் நடவடிக்கை இல்லாமல் பேச முடிகிறது!"
எனப் பதிவிட்டுள்ளார்.

8 பிரிவுகளில் வழக்கு:

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா சென்னை உயர் நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவியது.

இந்நிலையில், திருமயம் போலீஸார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது என 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

 

https://www.kamadenu.in/news/politics/6093-su-swamy-supports-h-raja.html?utm_source=tamilhindu&utm_medium=TTH_home_slider_content&utm_campaign=TTH_home_slider_content

Link to comment
Share on other sites

``ஹெச்.ராஜா பேச்சு பத்தி உங்க கருத்து என்ன சார்?'' விசுவின் பதில்

 

`யாகாவாராயினும் நா காக்க'... இது என் தமிழ் ஆசிரியர் சொன்னது. `உணர்ச்சி வசப்படுதல் உடல் நலத்துக்குக் கேடு'... இது என் மருத்துவர் சொன்னது. `உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்'... இது என் பாட்டி சொன்னது. `எங்கள் சிங்கம் வலையில சிக்கிக்கிச்சு'. இது மெஜாரிட்டி இந்துக்கள் தற்போது ஆழ் மனதில் வருத்தப்படுவது.

``ஹெச்.ராஜா பேச்சு பத்தி உங்க கருத்து என்ன சார்?'' விசுவின் பதில்
 

நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வது தொடர்பாக ஹெச்.ராஜாவுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஹெச்.ராஜா காவலர்களை தரக்குறைவாகப் பேசியதுடன் உயர்நீதிமன்றத்தையும் அவமதிக்கக்கூடிய வகையில் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. மக்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தார்கள். அதைத் தொடர்ந்து சில அரசியல் தலைவர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்கள். பின்னர், ஹெச்.ராஜா அந்தக் காணொலிக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் "காவல், நீதித்துறைகளை மிரட்டும் தொனியில் வெளிவந்துள்ள வீடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல; யாரோ வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள். நான் நீதிமன்றத்தை மதிப்பவன்" என்று கூறினார்.

இந்தச் சூழலில் இயக்குநரும் மற்றும் நடிகருமான விசு என்ன சொல்கிறார் எனத் தெரிந்துகொள்ள வேண்டுமெனத் தோன்றியது. விசுவின் எதிர்வினை என்னவென்று தெரிந்துகொள்வதற்குக் காரணம் இந்து மதத்தை மீட்டெடுக்கக் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் என்றும், நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு ஆண்மகனைப் பார்க்கிறேன் என்றும் ஹெச்.ராஜா குறித்து ஓரிரு வாரங்களுக்கு முன்பு ஒரு பொதுமேடையில் விசு பேசியிருந்தார். இதனையொட்டி ஹெச்.ராஜாவின் சமீபத்திய பேச்சுக்குறித்து விசு என்ன சொல்கிறார் எனக் கேட்டேன். 

விசு

 

 

"திரு ஹெச்.ராஜா அவர்களது எல்லாப் பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் என்னால் பதிலளிக்க இயலாது. ஆனாலும் இந்தக் காணொலி குறித்து சில விஷயங்கள் சொல்கிறேன். M G R அவர்களுக்காக எழுதப்பட்ட பாடலை சற்று `உல்டா' செய்கிறேன். `கடமை வரும்போது துணிவு வர வேண்டும், பணிவும் வர வேண்டும் தோழா' நண்பர் ராஜா அவர்களே... வெறும் இரண்டு வார்த்தைகளில் காத தூரம் தள்ளி நின்று விட்டீரே.. முகத்தைக்கூட பார்க்க முடியாமல் திரும்பி நின்ற அந்தக் காவல் அதிகாரி, அதே இரண்டு வார்த்தைகளில் `அண்ணாச்சி அண்ணாச்சி' என்று கூறியே என்னை அள்ளி ஜோபிக்குள் போட்டுக்கொண்டு விட்டாரே. விதி வலியது . Everything is pre-written, nothing can be re-written. `யாகாவாராயினும் நா காக்க'.. இது என் தமிழ் ஆசிரியர் சொன்னது. `உணர்ச்சி வசப்படுதல் உடல் நலத்துக்குக் கேடு'. இது என் மருத்துவர் சொன்னது. `உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்' .. இது என் பாட்டி சொன்னது . `எங்கள் சிங்கம் வலையில சிக்கிக்கிச்சு' இது மெஜாரிட்டி இந்துக்கள் தற்போது ஆழ் மனதில் வருத்தப்படுவது. 

 

 

மேலே குறிப்பிட்ட சிங்கம் என்கிற உவமை ஹெச். ராஜாவைத்தான் குறிக்கிறதா? 

`இந்து கோயில்கள் மீட்பு' பற்றிய புள்ளி விவரங்கள் தந்ததில் அவரை நான் கர்ஜித்த சிங்கமாகப் பார்த்தேன். அதுவும், இப்போது இந்த நீதிமன்றம் பற்றிய இரண்டு வார்த்தைகளில் நீர்த்துப் போக வாய்ப்புண்டு. அவர் மீது நான் வைத்த வலுவான நம்பிக்கை மேலும் நீர்த்துப்போகுமா என்று எனக்குத் தெரியாது. அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி மேல உட்கார்ந்துட்டு ஒருத்தி எழுதிகிட்டு இருக்காளே, அவள் என்ன எழுதப்போகிறான்னு யார் சார் கணிக்க முடியும்? புதுக்கோட்டை மாவட்டத்துல, திருமையத்துக்குப் பக்கத்துல திரு.ஹெச். ராஜா அவர்களின் வேகத்துக்கு ஒரு ப்ரேக் போடணும்னு அவள் நினைச்சா. அந்த ப்ரேக்தான், நடந்த இந்தச் சம்பவம். ஆனா அந்த ப்ரேக்குக்கு BRAKE தான் ஸ்பெல்லிங்கா அல்லது BREAK தான் ஸ்பெல்லிங்கான்னு எனக்குத் தெரியல. ரெண்டுக்கும் வெவ்வேறு அர்த்தம் இருக்கு. இந்த ப்ரேக்கக் கொடுத்த அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகிக்குதான் இது தெரியும். அது என்னென்னனு புரிஞ்சிக்கக்கூடிய சக்தியை அவள் எனக்குக் கொடுக்கலை. 

ஹெச் ராஜா

இது என்னுடைய குரலே இல்லை. யாரோ சதி செய்திருக்கிறார்கள் என இந்தக் காணொலிக்கு ஹெச்.ராஜா மறுப்பு தெரிவித்திருக்கிறாரே?

திரைப்பட உலகத்தை 1981லிருந்து அண்டிப்பிழைப்பவன் என்ற முறையிலும், `டப்பிங்' கலைகளை நுணுக்கமாக அறிந்தவன் என்ற முறையிலும், திரைக்கதையின் route ஐயே டப்பிங்கில் மாற்றிப் பேச வைத்த இயக்குநர் என்ற முறையிலும், டப்பிங் வசனங்களை மிகவும் பொருத்தமாக எழுதக்கூடிய டப்பிங் எழுத்தாளர்களை உள்ளடக்கிய எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 8 /10 வருடங்கள் தலைவனாக இருந்தவன் என்ற முறையிலும் சொல்கிறேன் ராஜா அவர்கள் சொன்னது யோசித்துப்பார்க்க வேண்டிய விஷயம்தான். அந்தக் காணொலியில் கேட்டது டப்பிங் குரலாகவும் இருக்கலாம்.''

https://www.vikatan.com/news/politics/137172-visu-talks-about-h-raja-controversy.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

திரைப்பட உலகத்தை 1981லிருந்து அண்டிப்பிழைப்பவன் என்ற முறையிலும், `டப்பிங்' கலைகளை நுணுக்கமாக அறிந்தவன் என்ற முறையிலும், திரைக்கதையின் route ஐயே டப்பிங்கில் மாற்றிப் பேச வைத்த இயக்குநர் என்ற முறையிலும், டப்பிங் வசனங்களை மிகவும் பொருத்தமாக எழுதக்கூடிய டப்பிங் எழுத்தாளர்களை உள்ளடக்கிய எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 8 /10 வருடங்கள் தலைவனாக இருந்தவன் என்ற முறையிலும் சொல்கிறேன் ராஜா அவர்கள் சொன்னது யோசித்துப்பார்க்க வேண்டிய விஷயம்தான். அந்தக் காணொலியில் கேட்டது டப்பிங் குரலாகவும் இருக்கலாம்.'' 

சினிமா , அ(கு)ற ட்டை அரங்கத்தை போல நிஜ வாழ்வியலை நினைத்து போட்டார் போல கிடக்கு ?..

Link to comment
Share on other sites

நீதித்துறையை களங்கப்படுத்துவதை அனுமதிப்பது பாசிஸத்தையும், நக்சலிசத்தையும் வளர்க்கும்: எச்.ராஜா மீதான ’சுவோ மோட்டோ’வழக்கு குறித்து உயர் நீதிமன்றம்

 

 
download%206

நீதிபதி சி.டி.செல்வம், எச்.ராஜா- கோப்புப் ப்டம்

ஜனநாயகத்தின் தூணான நீதித்துறையை களங்கப்படுத்த எடுக்கும் ஒரு முயற்சியை அனுமதிப்பது என்பது பாஸிசத்தையும், நக்ஸலிசத்தையும் வளர்ப்பதாகவே அமையும். ஆகவே எச்.ராஜா மீது தானாக முன் வந்து வழக்குப்பதிவு என உயர் நீதிமன்றம் விளக்கியுள்ளது.

நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அக்டோபர் 22-ம் தேதிக்குள் கட்டாயம் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நீதிமன்றம் குறித்த ஹெச்.ராஜாவின் கருத்து குறித்து தானாக முன்வந்து நீதிமன்ற நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமென நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் அமர்வில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். ஆனால் அதற்கு மறுத்த நீதிபதிகள், அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் விசாரிக்கப்படும் என தெரிவித்துவிட்டனர்.

ஆனால் வழக்கறிஞர்கள் முறையீடு இல்லாமல் தானாக முன்வந்து நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி உயர் நீதிமன்றம் பற்றிய கருத்து குறித்து அக்டோபர் 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

தானாக முன்வந்து வழக்கை எடுத்தது குறித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அவர்களது உத்தரவில் கூறியிருப்பதாவது:

"பத்திரிகை செய்தி அடிப்படையில் வழக்குகளை தானாக முன்வந்து எடுக்கக்கூடாது என்றும், சக நீதிபதிகள் அவமானப்படுத்தப்பட்டாலும் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளே எடுக்கட்டும் என சில நீதிபதிகள் மறுத்துவிடுவார்கள் அல்லது காத்திருப்பார்கள்.

ராஜாவின் வீடியோ உலகம் முழுக்க பரவியது என்றாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்தது என்பதால் மதுரை கிளையில் பார்த்துக் கொள்ளட்டும் என சிலர் நினைக்கக்கூடும். காவல்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளதால், அந்த விசாரணை நல்ல முறையில் முடியும் என காத்திருப்பவர்களும் இருப்பார்கள்.

ஆனால் அரசும், காவல்துறையும் போகிற போக்கில் மறப்போம், மன்னிப்போம் என விஷயத்தை மறந்து விடுவார்கள். நீதி பரிபாலனம் செய்வதில் நீதிபதிகள் தான் அச்சாணி என்பதை உணர்ந்து, நீதித்துறையின் கண்ணியத்தை காப்பது நீதிபதிகளின் தலையாய கடமை. எனவே உச்ச, உயர், கீழமை நீதிமன்ற மாண்பை காக்க வேண்டியதும் கடமை.

ஜனநாயகத்தின் தூணான நீதித்துறையை களங்கப்படுத்த எடுக்கும் ஒரு முயற்சியை அனுமதிப்பது என்பது பாஸிசத்தையும், நக்ஸலிசத்தையும் வளர்ப்பதாகவே அமையும். அதனால் திருமயம் பகுதியில் ஹெச்.ராஜா பேசிய நீதிமன்றம் குறித்த பேச்சு தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை எடுக்கிறோம்.

அக்டோபர் 22-ம் தேதிக்கு முன்னர் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.

இவ்வாறு சி.டி.செல்வம் அமர்வு உத்தரவில் தெரிவித்துள்ளது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24969725.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா!

 

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நேற்று இரவு நடந்தது. இதில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ஹெச்.ராஜா

நீதிமன்றத்தை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்ததாகவும், காவல்துறையினரை கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று ஹெச்.ராஜாவுக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பை வழங்கினார்கள். மாலை 6.30 மணிக்கு வேடசந்தூர் வந்த ஹெச்.ராஜா ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மேடையில் அமர்ந்திருந்தார். 

 

 

தொடர்ந்து பேசிய, ஹெச். ராஜா தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் அனைத்தும் தீய சக்திகள் தூண்டுதலால் தான் நடக்கிறது. சீமான், திருமுருகன் காந்தி இவர்கள் மூலமாக தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க அந்நிய சக்திகள் ஊடுவியிருக்கின்றன. தமிழகத்தில் நடக்கும் அத்தனை கலவரங்களுக்கும் பின்னணியில் நான்கு இயக்கங்கள் இருக்கின்றன. 99 நாள்கள் அமைதியாக நடந்த தூத்துக்குடி போராட்டத்தில் நூறாவது நாள், எப்படி கலவரம் வெடித்தது. இதன் பின்னணியில் அமெரிக்க சதி இருக்கிறது.

 

 

ஹெச்.ராஜா கலந்துகொண்ட கூட்டம்ஜெயலலிதா ஆட்சியில்  திருவண்ணாமலையில் கோயில்கள் இருந்த இடத்தில் தற்போது கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து விட்டு மீண்டும் கோயில் கட்ட உத்தரவிட்டார். ஆனால், இதுவரை கட்டவில்லை. தமிழ்நாட்டில் மோஸ்ட் பவர்புல்லாக ஜெயலலிதா இருந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், ஜெயலலிதாவின் உத்தரவுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதான். 5 சதவிகித கோயில்கள் இருந்த இடத்தில் கட்டடங்கள்தான் உள்ளது. செயல்படாத ஆலயங்களில் சிலைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. 2,100-க்கும் மேற்பட்ட சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, லண்டன் போன்ற வெளிநாடுகளில் உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் பல்வேறு நாடுகளின் மியூசியகத்தில் விற்பனைக்கு வைத்துள்ளனர். அந்தச் சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய். இந்தநிலை தமிழக அரசு அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், எந்தக் கோயிலின் சிலை என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. கோயில் நிலங்கள் மற்றும் கோயில் வருமானத்தை முறையாகப் பயன்படுத்தினால் இந்து சமுதாயத்தினுடைய குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை முழுமையாக இலவசமாக செய்ய முடியும்'' என்றார். 

காவல்துறையை பற்றிய எந்த விமர்சனத்தையும் இந்தக் கூட்டத்தில் ஹெச்.ராஜா முன்வைக்கவில்லை. அதே நேரத்தில், `எங்கே தலைமறைவு’ என்ற தலைப்பில் வேடசந்தூர் கூட்டத்தில் ஹெச். ராஜா கலந்துக்கொண்டதை பி.ஜே.பியினர் சமூக வலைதளங்களில் பரப்பினர். 

https://www.vikatan.com/news/tamilnadu/137230-hraja-participated-in-hindu-munnai-rally-near-dindigul.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.