Jump to content

பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் பலி…


Recommended Posts

பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் பலி…

 

 

Train-acci1.jpg?resize=710%2C475

வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

 

குறித்த விபத்து சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. புகையிரதம் வரும் வேளை காரில் கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதன் போது காரில் பயணித்தவர்களில் நால்வர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தானர். இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Train-acci3.jpg?resize=720%2C540Train-acci2.jpg?resize=720%2C540

http://globaltamilnews.net/2018/95881/

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்து வாகனம் கோர விபத்து - 4 பெண்கள் பரிதாபமாக பலி

 

 

வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை புகையிரத்துடன் கார் மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் சிறிய கார் ஒன்று, பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோதுண்டே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காரில் பயணித்த 8 பேரில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளனர். இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவன் ஒருவரும் காரின் சாரதியும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே காரில் இருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.

காரில் 8 பேர் பயணித்த நிலையில் சாரதியும், சிறுவன் ஒருவரும் மயிரிழையில் எந்தவிதகாயங்களும் இன்றி தப்பியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிஸார் காரின் சாரதியை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

புகைப்படங்கள் மற்றும் மேலதிக தகவல்கள் - தீஸன் மற்றும் திலீபன்

 

https://www.tamilwin.com/community/01/193519?ref=imp-news

Link to comment
Share on other sites

பன்றிக்கெய்த குள, புகையிரத விபத்தில் பலியானவர்களின் விபரம்…..

பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் நால்வர் பலி…

 

 

மரணமடைந்தவர்களின் விபரம்:

கமலநாதன் சிவரஞ்சனி (30), சுவீடன்.
காண்டீபன் யமுனா ரஞ்சனி (32), நெடுந்தீவு மேற்கு, நெடுந்தீவு.
காண்டீபன் டிசாலினி (13), நெடுந்தீவு மேற்கு, நெடுந்தீவு.
இசை ஞானவதி யோகரத்னம் (56), நெடுந்தீவு மேற்கு, நெடுந்தீவு.

காயமடைந்தவர்கள்:
ஜேம்ஸ் கமலநாதன் (34), சுவீடன்.
கமலநாதன் ஜெசிகா (06), சுவீடன்.

Train-acci1.jpg?resize=710%2C475

http://globaltamilnews.net/2018/95881/

Link to comment
Share on other sites

வடபகுதியை உலுக்கிய கோர விபத்து! நான்கு பெண்கள் பலி- திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா?

 

 

வவுனியா - ஓமந்தையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த 53 வயதான முத்தையரெட்டி கணபதிப்பிள்ளை கைது செய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் கோயில் வீதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் கார் ஒன்று மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டது. குறித்த காரை செலுத்திய சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த சாரதி உட்பட மூன்று பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் யோகரத்தினம் இசைஞானவதி (வயது-52), காண்டீபன் ஜமுனாரஞ்சினி (வயது-32), காண்டீபன் டிசாலினி (வயது-12), சுவீடனின் வசிக்கும் கமலநாதன் சிவரஞ்சனி (வயது-30) ஆகியோரே உயிரிழந்தனர்.

சுவீடனைச் சேர்ந்த சிவரஞ்சியின் கணவர் கமலநாதன் (வயது-35), அவரது மகளான க.ஜெசிக்கா (வயது-7) ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நெடுந்தீவை பிறப்பிடமாக கொண்ட இவர்கள் கடந்த ஜூலை மாதம் சுவீடனில் இருந்து தாயகம் வந்துள்ளனர். கிளிநொச்சியிலுள்ள உறவினர்களை பார்க்கச் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவை நிலமட்டத்திலிருந்து அதிக உயரத்தில் உள்ளது. வேனில் பயணித்தவர்கள் சந்திக்கச் சென்ற உறவுப் பெண், ரயில் கடவையை வேனில் நெருங்கிய சமயத்தில், அதற்கு எதிரே நின்று ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார். எனினும் சாரதி அதனை கவனிக்காமல் வாகனத்தை செலுத்தியுள்ளார்.

எனினும் கணப்பொழுதில் கோர விபத்து ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரயில் அருகில் வருவதை அவதானித்த சாரதி மற்றும் தந்தையும் மகனும் வாகனத்தை விட்டு பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.

இதேவேளை விபத்தின் போது வாகனத்தில் இருந்து பாய்ந்து உயிர் தப்பிய சிறுவன் சாட்சியம் அளித்துள்ளார்.

அதில், ரயில் வருகிறதென எச்சரித்தும் சாரதி மாமா காரை தொடர்ந்தும் செலுத்தியமையினால் விபத்து ஏற்பட்டது. இதன்போது தான் கதவை திறந்து பாய்ந்து தப்பியதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ரயில் தண்டவாளத்தில் ரயிலுக்கு அருகில் எந்தவொரு வாகனமும் பயணிக்கும் போது, வாகனத்தின் இயந்திரம் செயலிழக்கும் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ரயிலிலுள்ள காந்தபுலம், வாகனத்தின் மைக்ரோ பவரை செயலிழக்க செய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்தும் அவ்வாறான முறையிலேயே நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தின் குறுக்காக சென்ற வாகனம் செயலிழந்து அப்படியே நின்றுள்ளது. இதன் காரணமாக கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் சாரதியினால் திட்டமிட்ட வகையில் இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

https://www.tamilwin.com/community/01/193607?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சிங்கள ரயில்கள் தமிழ் தேசத்தில் எடுத்த பலிகளில் இவை எத்தனையாவது..??! இன்னும் சிந்திக்க வக்கற்ற மக்களும்.. ஆட்சியாளர்களும்.. சேவை வழங்குனர்களும்.

மனித உயிர்களுக்கு மதிப்பற்ற தேசமாகி விட்டது சொறீலங்கா. 

Link to comment
Share on other sites

கவனமின்மையாலும், பொறுப்பற்ற செயல்களாலும் ஏற்படும் இழப்புக்கள் தினசரி கூடுகின்றன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சாரதியின் பிழை! சிறுவன் வேண்டாம் என்று சொல்ல சொல்ல இந்த சாரதியே இரயில் கடவையை இவ்வாறு கடக்க முயன்றுள்ளான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.320.160.600.053.800.700.160.90

படத்தை பார்த்தால் கிந்தியாவின்ர டாடா நிறுவனத்தின் ரப்பா நெனோ கார் போல கிடக்கு .. இவ்வகையான கார் கிராஸ் ரெஸ்டில்  ( crash test ) பெய்யில் என்பது குறிப்பிடத்தக்கது.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காரில் எப்படி 7 பேர் பயணம் செய்தார்கள். 

இப்படியான விபத்துக்களுக்கு காரணம் சாரதியின் தவறு.

Link to comment
Share on other sites

இன்றும் பலர் போகும் வேகத்தில் தொடரூந்துக் கடவையின் மீது ஏறுவதற்கு சற்று முன்னர் தான் தடுப்பை பிரயோகிப்பதுடன் நெம்பிணையை (கியரை) மாற்றுகின்றனர். 
 
நான் முன்னர் ஒருதரம் பதிவிட்டது போல, அண்மித்த தொடரூந்தின் பாரிய அதிர்வுககள் தொடரூந்துப் பாதையினூடாக அதன் மீது வரும் வாகனத்தின் சக்கரங்களால் நெம்பிணைப் பெட்டிக்கு கடத்தப்பட்டு அதன் செயற்பாட்டில் குளறுபடியை உண்டாக்குவதன் மூலம் வாகனத்தின் இயக்கத்தை சிலகணங்கள் தடுமாற வைக்கிறது. இதன் போது சாரதிக்கு ஏற்படும் பதட்டமும் சேர்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. 

மேலும் தன்னியக்கப் படலைகளை அமைப்பது மட்டும் தீர்வாகாது. ஏனெனில் படலைகள் மூடப்பட்டுள்ள போதும் சிலர் வளைந்து நெளிந்து தாண்டிச் செல்வதை பரவலாகக் காணலாம். கடந்தவாரம் கூட யாழ் தொடரூந்து நிலையத்துக்கு அண்மையிலுள்ள பருத்தித்துறை வீதியில் கடவைப் படலை மூடப்பட்டுள்ள போதும் சிலர் உந்துருளியில் சர்வ சாதாரணமாக கடந்து சென்றதை அவதானிக்க முடிந்தது.  

Link to comment
Share on other sites

ஆர் என்ன எப்படி சொன்னாலும், இந்த விபத்தின் காரணம் நெடுக்கர் சொல்ற மாதிரி சிங்கள ரயில் தான். இது மட்டும் தமிழ் ரயிலாக இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

ஆர் என்ன எப்படி சொன்னாலும், இந்த விபத்தின் காரணம் நெடுக்கர் சொல்ற மாதிரி சிங்கள ரயில் தான். இது மட்டும் தமிழ் ரயிலாக இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்குமா?

நீங்கள் இப்படியே சொறீலங்காவோடு சேர்ந்து மனித உயிர்களை குறிப்பாக தமிழ் மக்களின் உயிர்களை மலினப்படுத்திக் கொண்டே இருங்கள்.

இந்த சிங்கள ரயில்கள் ஓடத்தொடங்கிய காலத்தில் இருந்து எத்தனையோ விபத்துக்களும் உயிரிழப்புகளும் நடந்தேறிவிட்டன. இன்னும் காத்திரமான நடவடிக்கைகள் இல்லை. மக்கள் நடமாட்ட உள்ள பகுதிகளுக்குள்ளால் ரயில் சேவையை நடத்தும் போது.. ரயில் சேவை நடத்துபவர்கள் தான் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இவைகள் தற்கொலைகள் அல்ல.. மக்கள் மீது பழிபோட. இவைகள் விபத்துக்கள்.. தவிர்க்கப்பட உரிய நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும்.

இப்படி ஒரு சம்பவம் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடந்தால்.. அந்த அரசும்.. போக்குவரத்துத்துறையும்.. இப்படியான விபத்துக்களை தடுப்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது... உயிரிழந்த மக்களுக்கு இழப்பீடும் வழங்கும்.

ஆனால் சொறீலங்காவில்.. அரச சேவை ரயில்களின் உயிரிழப்பில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு.. இதுவரை எந்த இழப்பீடும் இல்லை. விபத்துக்களை தடுக்கும் காத்திரமான நடவடிக்கைகளும் இல்லை. விபத்துக்கள் வெறும் சம்பவங்களாக செய்திகளாக வந்து போய்விடுகின்றன. அவற்றின் சமூகத் தாக்கம் பற்றி அரசுக்கும் அக்கறை இல்லை.. ரயில் சேவை நடத்துபவர்களிடமும் எந்த அக்கறையும்  இல்லை.. உங்களைப் போன்று நக்கல் அடிப்பவர்களிடம் இல்லை. எல்லாம்.. வெறும் எழுத்தளவில்.. பேச்சளவில் தான். செயற்பாட்டில் ஏதுமில்லை. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட இதே போல் ஒரு விபத்து.. நெதர்லாந்தில் நடந்துள்ளது.. 4 பள்ளிப்பிள்ளைகள் இறந்துள்ளனர். இருவர் காயம். இறந்து போன சிறார்களுக்கு அஞ்சலி.

அது இருக்க..

இந்தச் சம்பவம்..... பிபிசியில் செய்தியாக மட்டுமல்ல..

இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை தயாரித்த நிறுவனம்.. ரயில் போக்குவரத்து அதிகாரிகள்.. நாட்டின் பிரதம மந்திரி வரை தங்கள் கருத்துக்களையும் இரங்கல்களையும் பதிவு செய்துள்ளனர்.

ஆனால்.. சொறிலங்காவில்... எல்லாம் மக்கள் பிழை. ஒரு இரங்கல் கூட இல்லை. 

இதில் வேடிக்கை என்னவென்றால்.. வெளிநாடுகளுக்கு வந்து வாழும் எம்மவர்களும் சொறீலங்காவில் இருப்போரின் மனநிலையிலேயே இன்னும் இருப்பது தான். 

Dutch rail crash: Four children killed in electric cart

Four children from a Dutch day-care centre, two of them sisters, have died in a collision involving a train and an electric cart driven by a supervisor.

The level crossing has barriers for cycle paths as well as cars, but the cart carrying the five children is thought to have gone under the barrier on a bike path before it was hit.

The woman driving the cart was heard by one witness shouting that the brakes were not working. Others said 15 cars had been waiting at the level crossing when the cart had gone past without slowing down.

A Stint cart of the type used to transport children in the Netherlands (file pic)

இப்படி ஒரு வண்டி தான் விபத்தில் சிக்கியது.

Level crossing in Oss where the collision happened

விபத்து நடந்த இடம் சரியான குறியீடுகளை கொண்ட பாதுகாப்புக் கடவை. இருந்தும்.. யாரும் அது மக்களின் பிரச்சனை என்று மக்கள் மீது பழிபோட்டு விட்டு சும்மா போகவில்லை.

Mayor Wobine Buijs-Glaudemans told a news conference that everyone was affected by the tragedy, and her thoughts went out to those families caught up in the accident. "There are no words to describe what they're going through," she said.

The OVV was responding to three accidents in 2016 and 2017 in which two people had died and 18 were hurt. Most accidents had happened on manned level crossings, it said, calling for action to prevent people going over the crossings when barriers were down.

The founder of the Renzen company that makes the cart told public broadcaster NOS that the accident was every parent's worst nightmare and he was intending to visit the scene.

Rail officials on Thursday spoke of an "ink-black day" and infrastructure secretary Stientje van Veldhoven said she had a "knot" in her stomach. "From the bottom of my heart, all the best to everyone involved."

Prime Minister Mark Rutte tweeted that he was deeply moved by the "horrific accident".

https://www.bbc.co.uk/news/world-europe-45586492

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/17/2018 at 11:13 AM, நவீனன் said:

பொதுவாக ரயில் தண்டவாளத்தில் ரயிலுக்கு அருகில் எந்தவொரு வாகனமும் பயணிக்கும் போது, வாகனத்தின் இயந்திரம் செயலிழக்கும் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ரயிலிலுள்ள காந்தபுலம், வாகனத்தின் மைக்ரோ பவரை செயலிழக்க செய்வதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்தும் அவ்வாறான முறையிலேயே நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தின் குறுக்காக சென்ற வாகனம் செயலிழந்து அப்படியே நின்றுள்ளது. இதன் காரணமாக கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

எனக்கு இவர்களின் விளக்கம் விளங்கவில்லை யாருக்கும் விளங்குதா ? 

electromagnetic bomb போன்றதா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எனக்கு இவர்களின் விளக்கம் விளங்கவில்லை யாருக்கும் விளங்குதா ? 

electromagnetic bomb போன்றதா ?

எனக்கும் தான். மின்சார வடத்தில் இயங்கும்... ரயில்களில் என்றால்.. இதில் சாத்தியமுள்ளது. ஆனால்.. எரிபொருளில் இயங்கும் ரயில்களில்.. தண்டவாள உராய்வின் விளைவால் அல்லது பிற வழிகளில்..  உருவாகவல்ல.. மின்னோட்டம் என்பது.. இத்தகைய விளைவை விளைவிக்க போதுமானதா என்பது கேள்விக்குறிதான். 

மேலதிக தேடல் தகவல்:

Does a kind of magnetic field from an incoming train really cause a car to stall on the tracks?

You can't find anything on the Internet about it because it's nonsense.

  • No magnetic field, with the possible exception of an electromagnetic pulse from a nuclear blast, would disable a car.
  • Neither trains nor train tracks emit a significant magnetic field.
  • A magnetic field drops off extremely rapidly, based on the square of the distance from the source.

So, given the fact that a train does not emit a significant magnetic field and that a magnetic field drops off rapidly from its source, we can assume the magnetic forces from the train do not exert influence on their environment. Further, we know the car is designed to be impervious to any typically occurring magnetic fields. Therefore, we can safely conclude that this theory was cooked up by somebody with an ignorance of both magnetism and automobiles and should lend it no credence to it whatsoever.

Cars very rarely get stuck on railroad grade crossings. Railroads work extremely hard to make sure that doesn't happen. A more typical reason for a stall is the fact that people slow down to cross the grades, and some poorly tuned engines are more likely to stall when going slow over a bumpy path.

https://www.quora.com/Does-a-kind-of-magnetic-field-from-an-incoming-train-really-cause-a-car-to-stall-on-the-tracks

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் தூரத்தில் வருவதைக் கண்டதும் காரை நிப்பாட்ட சொல்லி காரில் இருந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்...ரயில் வரேக்கு முன் போயிடலாம் என்று காரை ஓட்டியது சாரதியின் பிழை...காரில் இருந்தவர்களே சாடசி


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரில் பிழை சரியைப் பற்றி இங்கு யாரும் விவாதிக்கவில்லை. இவ்வாறான சம்பவங்களை எதிர்காலத்திலாவது தடுக்க சம்பந்தப்பட்ட தரப்புக்கள் என்ன காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கின்றன. அதற்கேற்ற வகையில்.. இப்படியான சம்பவங்களை இட்டு அரசும்.. ரயில் போக்குவரத்து நடத்துபவர்களும்.. கவனம் எடுக்கிறார்களா.. அல்லது கவனத்திலாவது எடுக்கிறார்களா என்பது தான்.

குறிப்பாக ரயில் கடவைகளை உள்ள இடத்தில் வேகத்தை குறைத்து ரயிலை செலுத்தலாம்.

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் தானியங்கு பொறிமுறையில் மறியல்கள் போடலாம்.

பாதுகாப்பற்ற கடவைகளில்.. ரயில் வரும் வேளைகளில்.. வாகனங்கள் வீதியில் தொடர்ந்து உருள முடியாத தடைப் பொறிகளை பாவிக்கலாம். 

இப்படி எத்தனையோ மாற்று வழிகள் இருக்க.. 

எதுக்கும்.. ஓட்டினரில்.. பிழை.. சனத்துக்கு ரயில் புதிசு.. இப்படிச் சொல்லிச் சொல்லியே.. சனத்தை அநியாயமாகச் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்.. விபத்துக்கள் தொடர்பில் உண்மையான கவனம் செலுத்த வேண்டியவர்கள் செய்வதாக இல்லை. அதுதான் இங்கு விவாதிக்கப்படுகிறது. ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

நெடுக்கர் என்ன சொன்னாலும் தமிழர்கள் அவசரகுடுக்கை பாருங்க  எங்க சுழிவு நெளிவு கிடைக்குதோ அதற்குள் புகுந்து ஜம் பண்ணி செல்வது நம்ம ஆட்களின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று 

இரு நாட்களுக்கு முன்பு ஐந்து யானைகளையும் அடித்து கொன்றது ரயில்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆழ்ந்த அனுதாபங்கள் 

நெடுக்கர் என்ன சொன்னாலும் தமிழர்கள் அவசரகுடுக்கை பாருங்க  எங்க சுழிவு நெளிவு கிடைக்குதோ அதற்குள் புகுந்து ஜம் பண்ணி செல்வது நம்ம ஆட்களின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று 

இரு நாட்களுக்கு முன்பு ஐந்து யானைகளையும் அடித்து கொன்றது ரயில்  

யானையில் தாப்பா பிழை. ?

யானைகள் உலாவும் இடங்கள் குறித்த எச்சரிக்கையும் வேகக்கட்டுப்பாடும்.. ரயிலோட்டிகளுக்கு வழங்கப்படாத வரை.. யானைகளில் தாப்பா பிழை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வரும் ஒட்டகங்கள் கவனம் என அறிவிப்பு வைத்திருப்பார்கள்.
விபத்து ஏற்பட்டால் சாரதி முடிந்தார். 

Image result for camel beware

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

யானையில் தாப்பா பிழை. ?

யானைகள் உலாவும் இடங்கள் குறித்த எச்சரிக்கையும் வேகக்கட்டுப்பாடும்.. ரயிலோட்டிகளுக்கு வழங்கப்படாத வரை.. யானைகளில் தாப்பா பிழை. 

இதுக்கும் தமிழ்வின் அறிவுஜீவிகள்  ரெயில் காந்தம் யானைகளின் மூளையை அசையவிடாமல் பண்ணுது எனும் கண்டு பிடிப்பை கண்டுபிடிக்காட்டி இனி எஞ்சியுள்ள யானைகளை யாரும் காப்பாற்ற முடியாது பாருங்கோ ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/18/2018 at 3:32 AM, நிழலி said:

ஆர் என்ன எப்படி சொன்னாலும், இந்த விபத்தின் காரணம் நெடுக்கர் சொல்ற மாதிரி சிங்கள ரயில் தான். இது மட்டும் தமிழ் ரயிலாக இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்குமா?

சட்டம் ஒழுங்குகள் உள்ள ஒரு நாட்டிலிருந்தவரின் கருத்து இதுவாக இருக்க கூடாது.

வீதிகள் புனரமைக்கப்படும்போது 20ம் நூற்றாண்டின் வளர்ச்சி அங்கே தெரிய வேண்டும். ஏனெனில் அரசுக்கு சர்வதேச உதவிகள் தலைக்கு மேல் வந்துவிட்டது.
தாமரைக்கோபுரம் மின்மினி விளக்குகளால் மிளிரும் போது.....

சாதாரண புகையிரத கடவைகளை மின்னியல் முறையில் அமைத்திருக்க வேண்டும்.

விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம் என மார்தட்டுபவர்கள் தமிழர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கும் மார்தட்ட வேண்டும்.
முக்கிய வீதிகளை புனரமைத்தவர்கள்(அதுவும் மகிந்த காலத்திலாம்) குறுக்கு வீதிகளையும் கிராமங்களையும் புனரமைக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

19 hours ago, nedukkalapoovan said:

இதில் வேடிக்கை என்னவென்றால்.. வெளிநாடுகளுக்கு வந்து வாழும் எம்மவர்களும் சொறீலங்காவில் இருப்போரின் மனநிலையிலேயே இன்னும் இருப்பது தான். 

அதான்!
நாட்டை மாத்தினால் மட்டும் போதாது, மனநிலையையும் மாத்தியிருக்கோனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

யானையில் தாப்பா பிழை. ?

யானைகள் உலாவும் இடங்கள் குறித்த எச்சரிக்கையும் வேகக்கட்டுப்பாடும்.. ரயிலோட்டிகளுக்கு வழங்கப்படாத வரை.. யானைகளில் தாப்பா பிழை. 

இலங்கையில் ரயில் செல்லும் இடங்கள் அநேகமானவை காட்டுப்பகுதிகள் யானைகள் எங்கிருந்து வருகின்றது என்று கண்டு பிடிக்க முடியாது ஒன்று பாதையை மாற்ற வேண்டும் அல்லது ரயிலை நிறுத்த வேண்டும் தற்போது யானைகளின் பெருக்கம் அதிகம் எங்க ஊருக்குள்ளே வந்து போகிறது மட்டக்களப்பு  அம்பாறை என்ன செய்வது வன இலாகாவும் வெடி கொழுத்துக்கிறார்கள் அந்த யானைக்கும் அதில் பயம் என்பது துளி கூட இல்லை 

எச்சரிக்கையும் வேககட்டுப்பாடும் இருக்கிறது ஆனால் இதை தொடர்ந்தால் யுத்த காலப்பகுதியில் கொழும்பு செல்ல இரு நாட்கள் எடுக்கும் அது போல் ஆகிடும் நெடுக்ஸ்:)

Link to comment
Share on other sites

சிங்களப் பகுதிகளிலிருந்து இப்படியான ரயில் விபத்துப் பற்றிய செய்திகள் வருவது அரிதாக இருக்கிறதே காரணம் என்ன...??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.