Jump to content

தியாக தீபம் தீலிபனுக்கு இன்று நினைவேந்தல்!!


Recommended Posts

புலனாய்வுத் துறை கெடுபிடிக்கு மத்தியிலும் ஈகைச்சுடரேற்றி நினைவேந்தல்!

 

 

அம்பாறை மாவட்டத்தில் புலனாய்வுத்துறையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் திருக்கோவிலில் தியாகி திலீபனின் 31வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந் நினைவேந்தல் அனுஷ்டிப்பானது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் திருக்கோவில்-03ல் அமைந்துள்ள அத்தியடிப்பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

பின்னர் ஆலயத்தில் இருந்து திலீபனின் உருவப்படத்தினை தாங்கியவாறு அருகாமையில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க அலுவலகம் வரை சென்று அங்கு திலீபனின் உருவப்படத்திற்கு தீபச் சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இந்நினைவேந்தல் தொடர்பாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கையில்,

இந்நினைவேந்தல் எற்பாடுகள் புலனாய்வுத் துறையினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்ததாகவும், திருக்கோவில் சகலகலை அம்மன் ஆலயத்தில் இந் நினைவேந்தல் ஏற்பாடுகளை மேற்கொள்ள முதலில் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

மேலும், அச்சமயம் அங்கு புலனாய்வுத் துறையினர் சென்று பூசகரை பூஜை செய்ய வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால் ஏற்பாட்டாளர் சங்கத்தலைவியையும், பூசகரையும் கைது செய்யப்போவதாகவும் அச்சுறுத்தப்பட்டதாக சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

https://www.ibctamil.com/events/80/106648

Link to comment
Share on other sites

அகிம்சையின் ஒரே வடிவம்- திலீபன்!!

 

தமி­ழீழ விடு­த­லைப் போராட்ட வர­லாறு மகத்­தா­னது.உரிமை வேண்­டிய இலட்­சி­யத்­தின் அணை­யாத நெருப்­பா­னது.வீர­மும்,விவேக மும்,வழி­ந­டத்­த­லும்,தியாக ஆன்­மங்­க­ளின் ஆயு­தம் கொண்டு நீள நடந்த பய­ண­மது. விடு­தலை..! விடு­தலை…! எனத் தாய­கத்­தின் அழகு பேண மன இறுக்­க­மும் கண்­ணீர் சிந்­திய பற்­று­று­தி­யின் தாற்ப­ரி­ய­மும் ஒன்று கூடிய தீராத தாகம் அது.தாய்மை கொண்ட தமி­ழன் வர­லாற்­றுப் பெறு­மா­னம் சூடிய சுடர் விளக்­கான பொறு­மை­யின் கன­தி­யா­னது.முடி­வி­லி­யா­னது.

உரி­மைப் பய­ணம்
அந்­த­வ­கை­யிலே அகிம்­சைப் போராட்ட வடி­வ­மான உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முதன் முத­லில் ஆன்ம உருக்­க­மாய் உரு­வ­கித்த தியாகி திலீ­ப­னின் போராட்­டம் சுடர் கொண்டு மூன்று தசாப்த காலங்­கள் கடந்­து­விட்­டன.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் அப்­போ­தைய யாழ். மாவட்ட அர­சி­யல் து­றைப் பொறுப்­பா­ள­ராக இருந்த இரா­சையா பார்த்­தீ­பன் என்­னும் இயற்­பெ­ய­ரு­டைய திலீ­பன், 1987 ஆம் ஆண்டு நல்­லூர் வீதி­யில் தொடர்ச்­சி­யாக 12 நாள்­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை மேற்­கொண்­டார்.குறிப்­பாகத் தமி­ழீழ தேச­மெங்­கும் இந்­திய இரா­ணு­வம் அமை­திப்­படை என்­னும் பெய­ரில் நிலை கொண்­டி­ருந்த காலத்­தி­லேயே இந்­தத் தியா­கப் போராட்­டம் நிகழ்ந்­தது.

முன்­ன­தாகத் தமிழ் மக்­கள் தமக்­கு­ரித்­தான தாய­கப் பிர­தே­சத்­தில் சுய கௌர­வத்­தோடு வாழ்­வ­தற்­கான உரிமை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தப்­ப­டும் என்று வழங்­கிய உறு­தி­மொ­ழி­க­ளின் அடி­நா­தம் பற்றி புலி­கள் தம்­வ­சம் இருந்த பெரு­ம­ளவு ஆயு­தங்­களைக் கைய­ளித்­த­னர்.இருந்­தும் இதற்­குப் பின்­பான காலப்­ப­கு­தி­யில் இலங்கை அரசு திரு­கோ­ண­ம­லை­யில் மிக வேக­மான சிங்­க­ளக் குடி­ யேற்­றங்­களை நிறு­விக்­கொண்­டது.

இந்­தச் செயல்­நி­லை­க­ளுக்­குச் சமாந்­த­ர­மாக இதே காலப்­ப­கு­தி­யில் ‘ஈ.என்.டி.எல்.எவ்’ என்ற அமைப்பை உரு­வாக்கி புலி­க­ளின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளை­யும் சுட்­டுக் கொன்­றது. புலி­களை மாற்­றுச் சிந்­த­னை­யின் பால் பய­ணிக்­கச் செய்ய உந்­து­தல்­களை ஏற்­ப­டுத்­தி­யது.இதன் விளை­வாக புலி­கள் யாரை நம்பி ஆயு­தங்­களை ஒப்­ப­டைத்­த­னரோ அவர்­க­ளி­டமே நீதி கேட்க விளைந்­த­னர்.

தியா­கம் உருப்­பெ­றல்
1987 ஆம் ஆண்டு திலீ­பன் தங்­கி­யி­ருந்த கொக்­கு­வில்–பொற்­பதி வீதி­யில் அமைந்­தி­ருந்த இல்­லத்­தில் ஓர் இரவு புலி­க­ளின் உறுப்­பி­னர்­க­ளுக்கு அவ­ச­ரக் கூட்­டம் ஒன்று நடத்­தப்­பட்­டது.

அந்­தக் கூட்­டத்­தில் புலி­க­ளின் மூத்த உறுப்­பி­னர்­க­ளான றூட் சிறி, ரமேஸ் மாஸ்­ரர், ராஜன், நவீன், மாறன், பிர­சாத் உள்­ளிட்ட பலர் அப்­போ­தைய நில­மை­கள் தொடர்­பில் கூடி ஆராய்ந்­த­னர். இருப்­பி­னும் உறு­தி­யான முடி­வு­கள் எவை­யும் அந்­தக் கூட்­டத்­தில் எட்­டப்­ப­ட­வில்லை. அதி­கா­லைப் பொழு­தில் திலீ­பன் போராளி ராஜனை (தவ்­வல்) அழைத்­துக்­கொண்டு மூத்த எழுத்­தா­ள­ரும் தமிழ் உணர்­வா­ள­ரு­மான மு.திரு­நா­ வுக்­க­ர­சு­வி­டம் சென்­றார். அங்கு சென்று தனது சிந்­த­னையை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டார்.அந்­தச் சிந்­தனை செயல்­வ­டி­வம் பெறு­வ­தற்­கான ஆலோ­ச­னை­க­ளைப் பெற்­றுக்­கொண்­டார்.

இந்த உரை­யா­டல் பொழு­தில் திலீ­ப­னி­டம் ஒரு­வி­ட­யத்தைத் திரு­நா­வுக்­க­ரசு விழித்­துக்­கொண்­டார்.முக்­கி­ய­மாகத் திலீ­பன் மேற்­கொள்­ளத் தீர்­மா­னித்த உணவு ஒறுப்­பப் போராட்­டம் தொடர்­பில் இந்­தியா சாத­க­மான பதிலை வழங்­குமா? என்­பது சந்­தே­கம் என்­பதைத் தெளி­வு­றுத்­தி­னார்.குறிப்­பாக ‘டிக்­சிற்’ (இலங்­கைக்­கான இந்­தி­யா­வின் அப்­போ­தைய தூது­வர்) இந்த போராட்ட முயற்­சி­யைக் கண்டு கொள்­ள­மாட்­டார். தேவை­யற்று உயிரை மாய்த்­துக்­கொள்ள வேண்­டிய சந்­தர்ப்­பங்­களே ஏற்­ப­டும் என்ற விட­யங்­க­ளைத் தெரி­வித்­தி­ருந்­தார். ஆனா­லும் திலீ­பன் மனம் தள­ர­வில்லை.

தியா­கம் நிலை­பெ­றல்
உந்­து­ரு­ளி­யில் அங்­கி­ருந்து ராஜ­னை­யும் அழைத்­துக் கொண்டு புறப்­பட்ட திலீ­பன் முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் கந்­தர்­ம­டம் சென்­றார். கந்­தர்­ம­டம் பேபி ஸ்ரூடி ­யோ­வுக்கு அரு­கா­மை­யில் உள்ள வீதி­யில் அமைந்­துள்ள மன்­ம­தன் வீட்­டுக்­குச் சென்­றார். அங்கு இரண்டு மணி­ நே­ரங்கள் பேச்­சுக்­கள் இடம்­பெற்­றன.

அந்த வீட்­டின் அறை­யில் பேச்­சுக்­கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்து சந்­தர்ப்­பத்­தில் அங்­கி­ருந்த ஒரு தட்­டச்சு இயந்­தி­ரம் சட­ச­டக்­கின்­றது.அதை இயக்கி கொண்­டி­ருந்­த­வர் தேவர்.இந்­தச் சட­ச­டப்பு அகிம்சை எனும் போராட்­டத்­தின் புதிய பரி­ணா­மத்தை வெளிக்­காட்­டும் கட்­டி­யங்­கூ­ற­லாக அமைந்­தி­ருந்­தது.இரு மணி­நே­ரச் சந்­திப்­பின் நிறை­வில் வெளியே வந்த திலீ­பன் ராஜனை அழைத்து ஊந்துரு ளியில் அமர்ந்­து­கொள்­ளும் கணங்­கள் புன்­ன­கைத்­தன.வீரத்தை தியா­க­மாக விதைத்­தன.உணவு ஒறுப்­புப் போராட்­டத்­துக்­குத் தலை­வர் அனு­மதி வழங்­கி­விட்­டார் என்ற மொழி­வா­டைச் சந்­தங்­கள் திலீ­ப­னின் முக­பா­வ­னை­யில் உரி­மை­யைச் செந்­த­ளித்­தன.

இவ்­வா­று­தான் திலீ­ப­ னின் உணவு ஒறுப்­புப் போராட்­டம் கருக்­கட்­டி­யது. இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்று ஓரிரு தினங்­க­ளின் பின்­னர் திலீ­பன் நல்­லூர் வீதி­யில் உரி­மைப் பசி கொண்டு ஆகா­ரம் ஏது­மின்றி ஆன்­மம் உருகத் தியா­கம் புகுந்­தான்.

இறு­திக் கணங்­க­ளில் திலீ­பன்
என்­னால் பேச முடி­ய­வில்லை. ஆயி­னும் என் மனம் மகிழ்ச்­சி­யில் மிதக்­கின்­றது.நீங்­கள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கில் இந்­தப் புரட்­சிக்­குத் தயார்­பட்­டு­விட்­டதை என் கண்­கள் பார்க்­கின்­றன.நான் திருப்தி அடை­கி­றேன்.இன்று பேச முடி­யாத நிலை இருக்­கு­மென நினைத்­தேன்.ஆனால் நீங்­கள் தந்த உற்­சா­கம்­தான் என்னை இப்­போ­தும் வாழ­வைத்­துக் கொண்­டுள்­ளது.நான் நேசித்த தமி­ழீழ மண்­ணில் வாழ்­கின்ற ஒவ்­வொரு மக்­க­ளும் இந்­தப் பெரும் புரட்­சிக்­குத் தயா­ராக வேண்­டும்.நான் நேற்­றும் கூறி­விட்­டேன் எனது இறுதி ஆசை இது­தான்.

எமது எதிர்­கால சந்­ததி வாழ ஒரு நாடு தேவை. அல்­லா­விட்­டால் நாளை எங்­க­ளைப் போல்­தான் எமது எதிர்­கால சந்­த­தி­யும் துன்­பப்­ப­டும். வருத்­தப்­ப­டும்.எனது மூளை இப்­போது எத­னை­யும் நன்­றாக கிர­கிக்­க­வில்லை என்­பது எனக்கு விளங்­கு­கி­றது. இதில் பிழை­கள் இருக்­க­லாம்.இதை நீங்­கள் பொறுத்­துக்­கொள்­ளுங்­கள்.

நான் மீட்­கப்­பட முடி­யாத நிலைக்­குச் சென்­று­விட்­டதை உணர்­கி­றேன்.ஆனால் இலட்­சி­யம் என்ற பெரும்­ப­ணியை உங்­க­ளி­டம் விட்­டுச் செல்­கி­றேன்.நான் மிக­வும் நேசித்த என் தோழர்­கள்,என் சகோ­த­ரி­கள் எல்­லா­வற்­றி­லும் மேலாக என் தலை­வர் பிர­பா­க­ரன் உங்­க­ளு­டன் இருக்­கி­றார். நீங்­கள் பரி­பூ­ர­ண­மா­கக் கிளர்ந்­தெ­ழ­வேண்­டும். மாபெ­ரும் மக்­கள் புரட்சி வெடிக்­கட்­டும்! இந்தப் புரட்சி நாள் என்­னு­யி­ருக்கு மேலாக நேசிக்­கும் என் மக்­க­ளுக்­குக் கிடைக்­கட்­டும்!

https://newuthayan.com/story/09/அகிம்சையின்-ஒரே-வடிவம்-திலீபன்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
    • ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.