Jump to content

தியாக தீபம் தீலிபனுக்கு இன்று நினைவேந்தல்!!


Recommended Posts

தியாக தீபம் தீலிபனுக்கு இன்று நினைவேந்தல்!!

 
 
41764911_2071221959589082_73641947515678

 

 

அமை­திப் படை­யா­கக் காலடி எடுத்து வைத்து ஆக்­கி­ர­மிப்­புப் படை­யாக மாறி ஈழத் தமி­ழர்­களை வேட்­டை­யாடி, – சூறை­யாடி – அழித்­தொ­ழித்த இந்­திய இரா­ணு­வத்­துக்கு எதி­ராக அகிம்சை வழி­யில் – 12 நாள்­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி வீரச்­சா­வ­டைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வேந்­தல் தாயக மண்­ணி­லும் – புலம் பெயர் தேசத்­தி­லும் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

மக்­கள் மத்­தி­யில் விடு­த­லைத் தீயை விதைத்த திலீ­பன், உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை இதே­போன்­ற­தொரு நாளில் 31ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக – 1987ஆம் ஆண்டு ஆரம்­பித்­தான்.

ஈழத் தமி­ழ­ரின் தாயக தேசம் எங்­கும் நிலை கொண்­டி­ருந்த இந்­திய இரா­ணு­வம் மற்­றும் இலங்கை அர­சுக்கு எதி­ராக 5 அம்­சக் கோரிக்­கையை முன்­வைத்து அகிம்­சைத் தீயை நல்­லூ­ரில் திலீ­பன் பற்ற வைத்­தான்.

12 நாள்­கள் நீரா­கா­ர­மும் இன்றி உணவு ஒறுப்பை முன்­னெ­டுத்த தியாக தீபம் திலீ­பன், 1987ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 26ஆம் திகதி வீரச்­சா­வைத் தழு­விக் கொண்­டான்.
அகிம்­சை­யைப் போதித்த – காந்­திய தேசம் என்று சொல்­லப்­பட்ட இந்­தியா, தியாக தீபம் திலீ­ப­னின் அகிம்­சைப் போராட்­டத்­தின் முன் தோற்­றுப் போனது.

திலீ­ப­னின் சாவை வேடிக்கை பார்த்­தது இந்­தியா. இதுவே பின்­னா­ளில் விடு­த­லைப் புலி­கள் இந்­தி­யாவை ஈழ­மண்­ணி­லி­ருந்து அடித்து – விரட்டி – துரத்­தும் அள­வுக்கு மாற்­றம் கண்­டது.

‘மக்­கள் புரட்சி வெடிக்­கட்­டும்! சுதந்­திர தமி­ழீ­ழம் மல­ரட்­டும்!!’ என்று முழக்­க­மிட்டு தாயக மண்ணை முத்­த­மிட்டு வீர­கா­வி­யம் படைத்த தியாக தீபம் திலீ­ப­னின் நினைவு நாள், தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் ஆளு­கைப் பிர­தே­சங்­க­ளில் மிக உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடந்த காலங்­க­ளில் நினை­வு­கூ­ரப்­பட்­டது.

சிவப்பு – மஞ்­சள் கொடி­க­ளால் தமி­ழர் தாயக மண் அலங்­க­ரிக்­கப்­பட்டு, முக்­கிய சந்­தி­க­ளில் திலீ­ப­னின் உரு­வப்­ப­டம் வைக்­கப்­பட்டு அஞ்­சலி நிகழ்­வு­கள் நடத்­தப்­பட்­டது.

தாயக தேசத்­தில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மௌனிக்­கப்­பட்ட பின்­னர், பகி­ரங்­க­மாக – பொது­வெ­ளி­யில் நினை­வு­நாள் நினை­வு­கூ­ரப்­ப­ட­வில்லை. புலம் பெயர் தேசங்­க­ளில் மாத்­தி­ரம் பேரெ­ழுச்­சி­யு­டன் நினை­வு­கூ­ரப்­பட்டு வந்­தது.

கடந்த 2016ஆம் ஆண்டு, நல்­லூ­ரில் உள்ள தியா­க­தீ­பம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி­யில் – 10ஆண்­டு­க­ளின் பின்­னர் பகி­ரங்­க­மாக நினை­வு­நாள் நிகழ்­வு­கள் முதன் முறை­யாக நடத்­தப்­பட்­டது. கடந்த ஆண்­டும் பொது வெளி­யில் நினைவு கூரல் இடம்­பெற்­றது. இந்த ஆண்­டும் மாபெ­ரும் நினைவு கூரல் நடை­பெ­றும்.

https://newuthayan.com/story/10/தியாக-தீபம்-தீலிபனுக்கு-இன்று-நினைவேந்தல்.html

Link to comment
Share on other sites

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்!

 

IMG_2643-1-720x450.jpg

தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று(சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

நல்லூரில் உள்ள நினைவுத் தூபியிலும், திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நல்லூர் முன் வீதியிலும் நினைவு கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜனநாயகப் போராளிகள் கட்சியால், இன்று காலை 10.10 மணிக்கு தியாக தீபம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இடத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில் நினைவு நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/தியாக-தீபம்-திலீபனின்-நி-2/

Link to comment
Share on other sites

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில்- கட்சிகளுக்கிடையில் கடும் மோதல்!!

 
 
IMG_20180915_101527-780x405.jpg
 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் கட்சிகளுக்குக் கிடையில் மோதல் இடம்பெற்றது.

திலீபனின் நினைவுந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள நினைவிடத்தில் இன்று காலை நடைபெற்றது.

அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் ஜனநாயக பேராளிகள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக் கிடையே கருத்து மோதல் இடம்பெற்றது.

நிகழ்வின் முடிவில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் ஊடகவியலாளர்கள் கருத்துக் கேட்டமையால், கோமடைந்த முன்னனியினர் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு நின்ற   ஜனநாயக போராளிகள் கட்சியினர், முன்னனியினர் மற்றும் அவைத்தலைவர்களுக்கிடையில் கருத்து மோதல் ஏற்பட்டது.

IMG_20180915_101551.jpgIMG_20180915_101515.jpgIMG_20180915_101505.jpgIMG_20180915_101421.jpgIMG_20180915_101419.jpgIMG_20180915_101312.jpgIMG_20180915_101306.jpgIMG_20180915_101303.jpgIMG_20180915_101259.jpgIMG_20180915_101257.jpgIMG_20180915_101207.jpgIMG_20180915_101201.jpgIMG_20180915_101158.jpgIMG_20180915_101154.jpgIMG_20180915_101151.jpgIMG_20180915_101146.jpgIMG_20180915_101128.jpgIMG_20180915_101123.jpgIMG_20180915_101115.jpgIMG_20180915_101108.jpgIMG_20180915_101105.jpgIMG_20180915_101046.jpgIMG_20180915_101044.jpgIMG_20180915_101042.jpgIMG_20180915_101028.jpgIMG_20180915_100939.jpgIMG_20180915_100852.jpgIMG_20180915_100925.jpgIMG_20180915_100929.jpgIMG_20180915_102027.jpgIMG_20180915_101716.jpgIMG_20180915_101750.jpgIMG_20180915_101628.jpgIMG_20180915_102051.jpg

https://newuthayan.com/story/10/திலீபனின்-நினைவேந்தல்-நிகழ்வில்-கட்சிகளுக்கிடையில்-கடும்-மோதல்.html

Link to comment
Share on other sites

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்திலும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG-a0b41d7cbc4fffeb867f27db1d4f69ac-V.j

 

இந்திய அமைதிப் படைகளுக்கு எதிராக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவொறுப்புப் போராட்டம் செய்து வீர காவியமான தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று 15 ஆம் திகதி சனிக் கிழமை காலை யாழ். பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

தியாகி திலீபன் தன் உணவொறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த நேரத்தில் பல்கலைக் கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியது. பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டு, ஈகைச் சுடரேற்றி, மலர் சூடி அஞ்சலித்தனர்.

IMG-0c098657ad433ba3211b40c1d392460b-V.jIMG-3d74a90700c691e6aa82fc3753a78df9-V.jIMG-4adf1c50be6c79f41f8b04310fae27ef-V.jIMG-26b3e967a099c839cbb72e6a33b8efd8-V.j  IMG-a4f93eff25aa2a2ee46cb67129c2f8fc-V.jIMG-c6ff70a78ae6ffd862ca4967a3917e6e-V.jIMG-e3307090a520c37d5d817e3bb7f2f371-V.jIMG-ed211725fe2da2c74d0933eb0cd67a64-V.jIMG-f05210ba026ee085a8722156d73037a4-V.j

http://globaltamilnews.net/2018/95740/

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு திலீபன் நினைவுத் தூபி இடத்தில்

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

20180915_102101.jpg?resize=800%2C450

 

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவொறுப்புப் போராட்டம் செய்து வீர காவியமான தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று 15 ஆம் திகதி சனிக் கிழமை காலை நல்லூரில் தியாகி திலீபன் நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்திலும் இடம்பெற்றது. தியாகி திலீபன் தன் உணவொறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த நேரத்தில் நல்லூரில் தியாகி திலீபன் நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் நிகழ்வு ஆரம்பமாகியது.

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள், ஜனநாயக போராளிகள் கட்சியினர், முன்னாள் போராளிகள், மாவீரர், போராளிகள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டு, மலர் சூடி அஞ்சலி செய்தனர்.

20180915_102059.jpg?resize=768%2C432  20180915_102105.jpg?resize=800%2C45020180915_102209.jpg?resize=800%2C45020180915_102213.jpg?resize=800%2C45020180915_102216.jpg?resize=800%2C450

http://globaltamilnews.net/2018/95732/

Link to comment
Share on other sites

தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி முன் குழப்பம் ஏற்படுத்திய அரசியல்வாதிகள்

 

நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக இன்று இடம்பெற்ற தியாக தீபத்தின் நினைவேந்தல் ஆரம்ப நாள் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் ஏனைய தமிழ் கட்சிகளுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது.

01__12_.jpg

நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அலங்காரத்தை மேற்கொண்ட முன்னணியினர் தமது கட்சியின் தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் சகிதம் நிகழ்வை நடாத்த முனைந்தனர்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் கடந்த ஆண்டுகளைப் போல், இம்முறையும் நினைவேந்தலை நடத்த அழைப்புவிடுத்திருந்தனர். அந்தக் கட்சியினரும் நிகழ்வை நடத்த தயாராகினர். தமிழ் தேசியக் கூட்டமைப்புக உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நினைவேந்தல் நிகழ்வு நிறைவுற்றதாக அறிவித்த நிலையில் அங்கே பிரசன்னமாகியிருந்த வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டனர்.

இதனை அவதானித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் வேண்டுமென்றே பாடலை அதிக சத்தத்துடன் ஒலிக்க விட்டனர். இதனையடுத்து தான் பேச விரும்பவில்லை என அவைத் தலைவர் பதிலளித்தார்.

இதனை அவதானித்த ஜனநாயகப் போராளிகள் அமைப்பைச் சேர்ந்தோர் பாடலின் ஒலியை குறைக்குமாறு கோரியதனால் மேலும் சத்தத்தினை அதிகரித்த நிலையில் “நிகழ்வு முடிந்தால் போகவேண்டியதுதானே பிறகு என்ன அரசியல்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

அதன்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியினருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட முன்னணியின் மாநகர சபை உறுப்பினர், நானும் இயக்கம்தான் என கூறியவாறு தர்க்கத்தில் ஈடுபட்டார். அத்துடன், அவர் போராளிகள் கட்சியைச் சேர்ந்தவரை தாக்க முனைந்தமையால் பதற்றம் நிலவியது.

இருப்பினும் சிறிது நேரத்தில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

http://www.virakesari.lk/article/40478

 

 

 

யாழில் களோபரமாகிய தியாக தீபம் தீலிபனின் நினைவிடம்!!

 
 

தியாக தீபம் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் ஜனநாயகப் பேராளிகள் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட முயற்பட்ட போதே இந்த முறுகல் நிலை ஆரம்பமானதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக ஜந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவுத் தவிர்ப்பு போராட்டம் செய்து வீர காவியமான தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் உள்ள அவரது நினைவுத் தூபிக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டது.

திலீபனின் நினைவுத் தூபியில் அலங்காரத்தை மேற்கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலட செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டோர் சகிதம் நிகழ்வை நடாத்த முனைந்த நிலையில் ஏனைய கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

குறிப்பாக தமிழரசு கட்சியைச் சேர்ந்த வட மாகாண சபை உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் யாழ் மாநகர சபையின் புளொட் உறுப்பினர் ஒருவரும் இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.

அரசியல் கட்சியினர், இளைஞர்கள் என இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றவர்கள் தியாக தீபம் தீலிபனுக்கு மலர் மாலைகளை அணிவித்து நினைவஞ்சலிகளை செலுத்தினர்.

இந்த நிகழ்வுகளின் இறுதியில் அவ்விடத்தில் வைத்து வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட முயற்பட்டதுடன், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஒலிபெருக்கியின் பாடல் சத்தத்தை அதிகரித்ததாக அங்கிருந்த எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விடத்தில் வைத்து அரசியல் பேச வேண்டாம் என அங்கிருந்த இளைஞர்கள் வட மாகாண சபையின் அவைத் தலைவரை நோக்கி கூறி போது, தீலிபனுக்கான நினைவுத் தூபியை தாமே கட்டியதாகவும் தாம் எதுவும் செய்வேன் எனவும் சி.வி.கே சிவஞானம் பதில் அளித்துள்ளார்.

ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்குமாறு ஜனநாயக போராளிகள் கட்சியினர் கோரியதை அடுத்து, நிகழ்வுகள் முடிந்தால் செல்ல வேண்டியது தானே பிறகென்ன அரசியல் என தமிழ் தேசிய முன்னணியினர் முரண்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சி.வி.கே சிவஞானம், ஜனநாயக போராளிகள் கட்சியினர் மற்றும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த யாழ் மாநகர சபையின் புளொட் உறுப்பினர் ஆகியோருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இறுதியில் ஒருவருக்கு ஒருவர் சமரசமாகிய நிலையில், தியாக தீபம் தீலிபனின் நினைவிடத்தில் இருந்து அகன்று சென்றுள்ளனர்.

ஜனநாயக போராளிகள் கட்சியால் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் 10 மணியளவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் அந்த நிகழ்வுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் காலை 9 மணிக்கே ஆரம்பித்திருந்ததாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி, என்றோ ஒருநாள் தமிழ் மக்களுக்கு விடிவுவரும் என்ற நம்பிக்கையுடன் இறுதியில் தனது இன்னுயிரை தியாகம் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுகளில் ஏற்பட்ட இந்த முரண்பாடு குறித்து கவலை வெளியிட்டுள்ள மக்கள், இந்த நிகழ்வுகளை ஒன்றுபட்டு ஏற்பாடு செய்யாமை அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

https://www.ibctamil.com/history/80/106155?ref=imp-news

Link to comment
Share on other sites

கரவெட்டியில் சிறப்பாக இடம்பெற்ற திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு – சுமந்திரன் பங்கேற்பு

 

Thiyagi-thileepan-Karaveddi-4.jpg

தியாகி திலீபனின் நினைவுத் தொடக்க நாள் ஆரம்பமாகியுள்ள நிலையில், வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.

அந்தவகையில், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

கரவெட்டி பிரதேச சபைத் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், மாவீரர் குடும்பங்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை நல்லூரில் தியாகி திலீபனின் நினைவிடத்திலும், யாழ். பல்கலைக் கழகத்திலும் நினைவேந்தல் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Thiyagi-thileepan-Karaveddi-3.jpg

Thiyagi-thileepan-Karaveddi-2.jpg

Thiyagi-thileepan-Karaveddi-1.jpg

http://athavannews.com/கரவெட்டியில்-சிறப்பாக-இட/

Link to comment
Share on other sites

தமிழ் இனத்துக்கு விடிவு வேண்டி – தன்னுயிர் ஈந்த தியாக தீபம் திலீபன்!!

 
 
thileepan.png
 

ஈழத்­த­மி­ழி­னத்­தின் இன­வி­டு­த­லைப் போராட்­டத்­தில் 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்­கம் 26ஆம் திக­தி­வ­ரை­யான நாள்­கள் முக்­கி­யத்­து­வம் மிக்­கவை. விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கத்­தின் மூத்த போராளி திலீ­ப­னால் சாத்­வீக வழி­யில் சாகும்­வரை உண்ணா நோன்பு முன்­னெ­டுக்­கப்­பட்டு 12ஆவது நாள் தமிழ் இனத்­துக்­காக அவர் உயிர்த்­தி­யா­கம் செய்த அந்தத் தியாக வர­லாற்­றுக்­கு­ரிய மகோன்­னத நாள்­க­ளா­கும்.

ஆயு­தப்­போ­ராட்­டத்­தைக் கையி­லெ­டுத்த விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கம், பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மாவீ­ரர்­களை பதி­வில் வைத்­தி­ருந்­தா­லும், சாகும்­வரை உண்­ணா­வி­ர­த­மி­ருந்து தமிழ் இனத்­துக்­காக உயிர்­நீத்த வர­லாறு என்­பது இரா­சையா பார்த்­தீ­பன் என்ற திலீ­ப­னையே சாரும்.

1987ஆம் ஆண்டு செப்­டெம்­பர் மாதம் 15ஆம் திகதி, அதாவது, இற்­றைக்கு 31ஆண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னர், தாம் முன்­வைக்­கும் ஐந்து அம்ச அர­சி­யல் கோரிக்­கை­களை நிறை­வேற்­றி­வைக்க இந்­திய அர­சுக்கு அழுத்­தம் கொடுக்­கும் வகை­யில் நல்­லூர் வடக்கு வீதி­யில் சாகும்­வரை உண்ணா நோன்பு இருப்­ப­தற்­கான முன்­ன­றி­விப்பை இந்­திய அர­சுக்கு வௌிப்­ப­டுத்­தி­விட்டு தியா­கத் தீபம் திலீ­பன் என்ற போராளி காலை வேளை­யில் மேடை­யின் இருக்­கை­யில் அம­ரு­கின்­றான்.

ஆயு­தப்­போ­ரா­ளி­யாகி, பொறுப்­பா­ன­தொரு அர­சி­யற் போரா­ளி­யாகி, இறு­தி­யில் பாரத நாட்­டுக்கு விடு­தலை பெற்­றுக்­கொ­டுத்த மகாத்மா காந்­தி­யின் அகிம்சை வழி­யைப் பின்­பற்றி தமிழ் மக்­க­ளின் நியா­ய­மான ஐந்து அம்­சக் கோரிக்­கை­களை முன்­வைத்து தனது உறு­தி­மிக்க போராட்­டத்தை தொடங்­கு­கின்­றான்.

தமிழ்க் கட­வு­ளாம் கந்­தப் பெரு­மான் குடி­கொண்­டி­ ருக்­கின்ற நல்­லூர் ஆல­யத்­தின் வடக்கு வீதி­யில் திலீ­பன் புன்­ன­கைத்த முகத்­து­டன் இனத்­துக்­கான வெற்றி பெரு­மி­தத்­து­டன் காந்­தீய தேசத்­துக்­கும், அர­சுக்­கும் சவால் விடுத்து உன்­னத இலட்­சி­யப் பய­ணத்தை ஆரம்­பித்து தான் முன்­வைத்த ஐந்து அம்­சக் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­மாறு வேண்­டு­கி­றான்.

1.மீளக் குடி­ய­மர்­தல் என்ற பெய­ரில் வட­க்கு–கி­ழக்­கில் புதி­தா­கத் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­ப­டும் குடி­யேற்­றங்­க­ளைத் தடுத்து நிறுத்த வேண்­டும்.

2.சிறைக் கூடங்­க­ளி­லும் இரா­ணுவ, பொலிஸ் தடுப்பு முகாம்­க­ளி­லும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யற் கைதி­கள் அனை­வ­ரும் விடு­தலை செய்­யப்­பட வேண்­டும்.

3.அவ­சர காலச்­சட்­டம் முழு­மை­யாக நீக்­கப்­பட வேண்­டும்.

4.ஊர்­கா­வல் படை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள ஆயு­தங்­கள் முற்­றா­கக் களை­யப்­ப­டல் வேண்­டும்.

5.வடக்கு கிழக்கு பிர­தே­சங்­க­ளில் புதி­தாக பொலிஸ் நிலை­யங்­க­ளைத் திறப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டும் நட­வ­டிக்­கை­கள் முற்­றாக நிறுத்­தப்­பட வேண்­டும். என்­ப­னவே திலீ­பன் முன்­வைத்த அந்த ஐந்து அம்­சக் கோரிக்­கை­க­ளா­கும்.

அந்­தக் கோரிக்­கை­கள் யாவற்­றை­யும் அகிம்சை வழி­யில் போராடிப் பெற இய­லும் என்ற நம்­பிக்­கையை திலீ­பன் வைத்­தி­ருந்த போதி­லும், இந்­திய அர­சை­யும் நம்­பத் தயா­ரற்ற நிலை­யில் அவ­னது மன­மி­ருந்­தது. தமிழ் மக்­க­ளின் உன்­னத இலட்­சி­யத்தை அடை­வ­தற்கு தியாகி திலீ­பன் அகிம்சை வழி­யில் போரா­டி­ய­போது காந்­தி­யத் தத்­து­வத்தை மூச்­சுக்கு முந்­நூறு தடவை உச்­ச­ரிக்­கின்ற பாரத தேசம், அகிம்­சைப் போராட்­டத்தை அறவே கண்டு கொள்­ள­வே­யில்லை; மதிப்­ப­ளிக்­க­வும் இல்லை.

திலீ­ப­னது அறப்­போ­ராட்­டத்­துக்கு ஆத­ர­வும்
உற்­சா­க­மும் வழங்­கிய தமிழ் மக்­கள்

அதே­வேளை தமிழ் மக்­க­ள் ஒன்­று­தி­ரண்டு தியாகி திலீ­ப­னின் அந்த அறப்­போ­ராட்­டத்­திற்கு தின­மும் உர­மூட்­டிக்­கொண்­டி­ருந்­த­னர். நல்­லூர்க் கந்­த­சு­வாமி கோயில் வடக்கு வீதியை நோக்கி நான்கு திசை­க­ளி­லி­ருந்­தும் சிறு­வர்­கள், மாண­வர்­கள் தொடக்­கம் முதி­ய­வர்­கள் வரை பக­லி­ரவு என்று பாரா­மல் குறித்த உண்ணா நோன்பு இடம்­பெற்ற இடத்­தில் கூடி­யி­ருந்­த­னர்.

அவர்­கள் மட்­டு­மன்றி போரா­ளி­கள், தள­ப­தி­கள், பொறுப்­பா­ளர்­கள் என திலீ­ப­னின் போராட்­டத்­துக்கு ஆத­ரவு நல்­கும் விதத்­தில் இயக்க உறுப்­பி­னர்­க­ளும் இணைந்­தி­ருந்­த­னர். திலீ­ப­னின் அந்த உண்ணா நோன்­புப் போராட்­டத்தை எப்­ப­டி­யா­வது கைவி­டச் செய்து முறி­ய­டித்­து­விட வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யில் அப்­போ­தி­ருந்த இந்­தி­யத் தூது­வ­ரான ஜே.என்.டிக்­ஸிற் மற்­றும் இந்­திய ‘றோ ’ அமைப்­பின் உய­ர­தி­கா­ரி­கள், அமை­திப்­ப­டை­யின் உய­ர­தி­கா­ரி­கள் முழு­மு­யற்­சி­யி­லும் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

இரவு நேரத்­தில் விடு­த­லைப்­பு­லி­க­ளின் தலை­வ­ரான வே.பிர­பா­க­ரன் மேடை­யில் உண்­ணா­நோன்பை முன்­னெ­ டுத்­தி­ருந்த தியாகி திலீ­ப­னோடு அரு­கி­லி­ருந்து உரை­யா­டு­வார். ஒரு வாரத்தை எட்­டிய நிலை­யிலும் இந்­திய அர­சா­னது திலீ­ப­னின் போராட்­டத்­தை­யும், ஐந்து அம்­சக் கோரிக்­கை­க­ளை­யும் உதா­சீ­னம் செய்­து­வந்­தது. இந்­தி­யா­வின் அந்­தச் செய­லா­னது தமிழ் மக்­க­ளுக்கு எரிச்­ச­லை­யேற்­ப­டுத்­தி­ய­து­டன் அவர்­க­ளைச் சினம் கொள்­ள­வும் வைத்­தது.

உண்­ணா­நோன்பு
மேடை­யில் இருந்­த­வாறே
தமிழ்­மக்­க­ளுக்கு
வேண்­டு­கோள் விடுத்த திலீ­பன்
‘‘நான் வாழ்­நாள் முழு­வ­தும் நேசித்த என் அன்­புக்­கு­ரிய மக்­களே…? புரட்­சிக்­குத் தயா­ரா­கி­விட்­டீர்­களா? நான் மீட்க முடி­யாத இடத்­துக்­குச் சென்று கொண்­டி­ருக்­கின்­றேன். நீங்­கள் பெருந்­த­லை­வ­னின் பின்­னால் போரா­டத் தயா­ரா­குங்­கள். எனக்கு விடை தாருங்­கள். வானத்­தில் இருந்து எனது இனத்­தின் விடு­த­லையை நான் பார்ப்­பேன். நான் சாகும்­போது மகிழ்ச்­சி­யு­டன் சாகின்­றேன். மக்­கள் புரட்சி வெடிக்­கட்­டும்’’. என்று அவ­னது ஆத்­மா­வின் குரல் தமி­ழி­னத்­தின் உரி­மைக் குர­லாக வௌிப்­பட்­டது.

நல்­லூர் வீதி­யில் கூடி­யி­ருந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் திலீ­ப­னது உரை­கேட்­டுக் கண்­ணீர் வடித்­த­னர். காந்­தி­தே­சம் எனப் புக­ழப்­ப­டு­கின்ற இந்­தியா, திலீ­ப­னது போராட்­டம் தவ­றா­னது எனத் தப்­புக்­க­ணக்குப் போட்­டது. இந்­தி­யா­வின் தேசத் தந்­தை­யான மகாத்மா காந்­தி­யின் உண்ணா நோன்­புப் போராட்­டம் எந்த வகை­யில் குறைந்­தது என எண்­ணிய இந்­தியா , மகாத்மா காந்தி நீர் அருந்­தித்­தானே நோன்­பி­ருந்­தார். திலீ­பன் நீர்­கூட அருந்­தாது நோன்­பி­ருப்­பது காந்­திய வழியா? எனக்­கூறி அவ­மா­னப்­ப­டுத்­தி­ய­து­டன் ஏள­ன­மும் செய்­தது.

திலீ­பன் உண்ணா நோன்பை உறு­தி­யா­கக் கடைப்­பி­டித்­துக் கொண்­டி­ருந்­த­போது, இந்­தி­யத் தூது­வ­ரான ஜே.என்.டிக்­சிற் அவ்­வி­டத்­துக்­குச் சென்று நிலை­மையை அவதா னித்துவிட்டுச் சென்­றார். அவ­ரி­ட­மி­ருந்து எந்­தத்­த­க­வ­லும் வெளி­வ­ர­வில்லை. இந்­திய தேச­மா­னது திலீ­ப­னது உண்ணா நோன்­புப் போராட்­டத்­தின் இறுதி நாள்­கள் நெருங்­கிக் கொண்­டி­ருக்­கின்ற வேளை­யில், திலீ­ப­னின் அறப்­போ­ராட்­டத்­தைக் கண்­டு­கொள்­ளாது இரக்­கமே இல்­லாது திலீ­பன் சாவடையும் நாள்­களை எண்­ணிக் கொண்­டி­ருந்­தது.

உல­கத்­துக்கே அகிம்­சை­யைப் போதித்­த­தா­கப் பறை­சாற்­றும் இந்­தி­யா­வைப் பின்­பற்றி, அதே அகிம்­சையை ஆயு­த­மாக வைத்து தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­ னை­க­ளைத் தீர்க்­க­மு­டி­ யும் என விடு­த­லைப்­பு­லி­ கள் நம்­பி­னர். அந்த நம்­பிக்­கை­யு­டன் தான் தமி­ழர்­க­ளு­டைய அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்கு, விடு­த­லைப் புலி­க­ளின் தலை­மை­யின் கட்­ட­ளைக்­க­மை­வாக, செயல்­வ­டி­வம் கொடுப்­ப­தற்கு, அகிம்­சைப் போரா­ளி­யாக திலீ­பன் முன்­வந்­த­மை­யா­னது தமிழ் மக்­க­ளின் விடி­ வுக்­கான போராட்­டத்­தில் தனக்­கும் ஒரு­முக்­கிய பங்கு இருக்க வேண்­டும் என்ற நிலைப்­பாட்டை உறு­திப்­ப­டுத்­தி­யது.

தனது வாழ்­வையே தமிழ் இனத்­தின்
விடி­வுக்­காய்  அர்ப்­ப­ணித்த  தியாகி திலீ­பன்
அகிம்­சை­யின் உன்­னத வடி­வ­மா­கத் திக­ழு­கின்ற தியாக தீபம் திலீ­ப­னின் சொந்த ஊர் ஊரெ­ழு­வா­கும். சிறு­வ­ய­தில் தாயா­ரை­யி­ழந்து, சிறு­ப­ரா­யத்­தி­ லி­ருந்து தந்­தை­யின் அர­வ­ணைப்­பில் வளர்ந்­தான். 1963ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 27ஆம் திகதி பிறந்த இரா­சையா பார்த்­தீ­பன், ஆரம்­பக்­கல்­வியை தமது கிரா­மப்­புற பாட­சா­லை­யில் கற்று, பின்­னர் உயர்தரக் கல்வி கற்­ப­தற்­காக யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யில் இணைந்து கொண்­டான்.

கல்­வி­யில் திறமை கொண்ட மாண­வ­னான திலீ­பன் மருத்­து­வ­பீ­டத்­திற்கு தெரி­வா­கிய நிலை­யில், அந்த அரிய வாய்ப்­பைத் தூக்­கி­யெ­றிந்­து­விட்டு விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கத்­தில் இணைந்து கொண்­டான். படிக்­கின்­ற­போதே அர­சி­யல் நட­வ­டிக்­கை­யி­லீ­டு­பட்­டி­ருந்த திலீ­பன், இயக்­கத்­தில் சேர்ந்து கொண்­ட­தும் அர­சி­யல் தொடர்­பான நட­வ­டிக்­கை­க­ளுக்கு அப்­போ­தைய யாழ் மாவட்­டத் தள­ப­தி­யான கிட்­டு­வால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தான்.

திலீ­ப­னின் பேச்­சும், செய­லும் விடு­த­லைக்கு உர­மூட்­டின. துடிப்­பான இளை­ஞ­னாக, போரா­ளி­யாக வலம் வந்­தான். யாழ் மாவட்­டத்­தில் தமிழ் மக்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மா­கி­யி­ருந்த போரா­ளி­யான திலீ­பன், வட­ம­ராட்­சிப் பகு­தி­யில் நடை­பெற்ற இலங்கை இரா­ணு­வத்­து­ட­னான நேரடி மோத­லில் பலத்த காயத்­துக்­குள்­ளாகி வயிற்­றுப் பகு­தி­யி­லுள்ள குடல் சிதைந்­தி­ருந்­தது. சத்­தி­ர­சி­கிச்­சைக்­குப்­பின்­னர் வைத்­தி­யர்­க­ளின் அறி­வு­ரைக்­கி­ணங்க நடக்­கும்­படி ஆலோ­சனை கூறப்­பட்­டி­ருந்­தது. அத­னை­யும் மீறி தனது அர­சி­யல் நட­வ­டிக்­கை­க­ளி­லீ­டு­பட்டு வந்­தான்.

தியா­கம் என்­றால் திலீ­பன், திலீ­பன் என்­றால் தியா­கம் என்று கூறு­கின்ற அள­வுக்கு அவன் மேற்­கொண்ட போராட்­ட­மா­னது, அதி உச்­சத்­தைத் தொட்டு நின்­றது. 12நாள்­க­ளாக உண்ணா நோன்­பி­ருந்து தியா­கத் தீயில் ஆகு­தி­யான திலீ­ப­னின் நாமத்தை இன்­றும் ஒவ்­வொரு தமிழ் மக­னும் உச்­ச­ரிக்­கின்­ற­போது எமது உடம்­பி­லுள்ள நரம்­பு­கள் சிலிர்த்து நிற்­கும்.

1987ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 26ஆம் திகதி சனிக்­கி­ழ­மை­யன்று முற்­ப­கல் 10.48 மணி­ய­ள­வில், தான் உறு­தி­யா­கப் பின்­பற்­றிய கொள்­கை­களை காற்­றிலே பறக்­க­வி­டா­மல், மண்­ணிலே புதை­ய­வி­டா­மல், கண்­ணீ­ரில் கரை­ய­வி­டா­மல் தமிழ் மக்­க­ளி­டம் கொடுத்­து­விட்டு நல்­லூ­ரான் வீதி­யில் இவ்­வு­லக வாழ்க்­கை­யி­லி­ருந்து தியாகி திலீ­பன் விடை­பெற்­றுக் கொண்­டான்.

திலீ­ப­னின் தியா­கத்தை நினை­வு­கூ­ரும் வகை­யில் திலீ­பன் உண்ணா நோன்பை ஆரம்­பித்த செப்­ரெம்­பர் மாதம் 15ஆம் திகதி தொடக்­கம் திலீ­பன் உயிர்த் தியா­கம் செய்த நாள்­வரை திலீ­ப­னது தமிழ்­மக்­க­ளுக்­கான தியா­கத்தை தமி­ழர் தாய­கம் உட்­பட புலம் பெயர்ந்து வாழு­கின்ற தமி­ழர்­க­ளும் ஒன்று சேர்ந்து நினைவு கூர்­கி­றார்­கள்.

திலீ­பன் வகுத்­தது பாதையா…? சின்ன வய­தில் இது தேவையா…? என்ற உணர்ச்­சிக் கவி­ஞன் ஆனந்­த­னின் வரி­கள் காதில் ரீங்­கா­ர­ மிட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இன­வி­டு­த­லைக்­காக ஆயு­தம் ஏந்­தி­ய­வன்; அகிம்சை வழி­யில் தனக்கு நிகர் தானே என்­பதை தமி­ழு­ல­கத்­திற்­கும் இந்­தி­யா­வுக்­கும் பறை­சாற்றி உயி­ரா­யு­தம் ஏந்­தி­ய­வன்; அந்­தப் பார்த்­தீ­பன் இன்­றும் தீராத பசி­யோடு இருக்­கின்­றான். உறு­தி­யின் உறை­வி­டம் தியாக தீபம் திலீ­பனை ஒரு கண­மா­வது நினை­வில் இருத்தி மன­தார நினைவு கூர­வேண்­டி­ய வர­லாற்றுக் கடமை எமது தமிழ்மக்களுக்கு உண்டு.

https://newuthayan.com/story/11/தமிழ்-இனத்துக்கு-விடிவு-வேண்டி-தன்னுயிர்-ஈந்த-தியாக-தீபம்-திலீபன்.html

Link to comment
Share on other sites

பார்போற்ற சரித்திரம் படைத்த பார்த்தீபனின் நினைவேந்தல்..!

0d2d9cd01683688bc91c063ca422a320?s=48&d=

1-1-300x225.jpgஇந்திய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக 12 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் இன்று (15.9.2018) உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.

இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் பாரதப் படைகளுக்கு எதிரான பட்டினிப் போராட்டத்தை 1987ஆம் ஆண்டு நடத்தினார். செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான உண்ணாவிரதப் போராட்டம், 12 நாட்களின் பின்னர் செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி திலீபனின் வீரச்சாவுடன் முடிவுக்கு வந்தது.

2-1-300x169.jpg

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அஹிம்சை வழிப் போராட்ட வழிகள் தோல்வியடைந்த காரணத்தால் ஆயுத வழிப்போராட்டம் ஆரம்பமானது. இந்த ஆயுதப் போராட்ட வழியில் முக்கிய இடம் வகித்தவர்களில் ஒருவரான திலீபன் ஆயுதப் போராட்டத்தை மட்டுமல்ல, அஹிம்சை வழிப் போராட்டத்தையும் நடத்த முடியும் என உலகுக்கு எடுத்துக் காட்டியவர்.

யாழ்ப்பாணத்தில் ஊரெழு எனும் கிராமத்தில் ஆசிரியர் இராசையா தம்பதியினருக்கு நான்காவது கடைக்குட்டி மகனாக 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி பார்த்தீபன் பிறந்தார்.

3-300x225.jpg

யாழ். பல்கலைக்கழத்தில் மருத்துவபீட மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருக்கையில் விடுதலைத் தாகம்கொண்டு, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தலைவராக ஏற்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் திலீபன் என்ற பெயரில் அவர் சேர்ந்தார்.

ஆயுதப் போராட்டம் உச்சநிலையை அடைந்திருந்த நிலையில் சமாதானப் படை என்ற போர்வையில் இந்திய இராணுவம் தமிழ்ப் பகுதிகளில் நுழைந்தது. பின்னர் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து, தமிழர் தாயகப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அத்துமீறல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

4-300x225.jpg

இதனைக் கண்டித்து திலீபன் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

1) பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.

2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3) இடைக்கால அரசு நிறுவப்படும்வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல செயற்பாடுகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

4) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவற்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

ஆகிய கோரிக்கைகளேயே திலீபன் முன்வைத்தார்.

5-300x225.jpg

“கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை தண்ணீரும் அருந்தப்போவதில்லை” என்று அறிவித்த அவர், அந்தக் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாததால் பன்னிரண்டாம் நாள் (26.09.2017) காலை 10.58 மணிக்கு வீரமரணமடைந்தார்.

தமிழின விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு வருடமும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. எனினும், 2009ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வரப்பட்டதாக அரசு அறிவித்த காலத்திலிருந்து கடந்த 2015ஆம் ஆண்டுவரை திலீபனின் நினைவுநாள் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் பகிரங்கமாக நினைவுகூரப்படவில்லை.

இறுதிப் போருக்குப் பின்னர் கடந்த வருடத்திலிருந்து (2016) தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் திலீபனின் நினைவேந்தல் வார நிகழ்வுகள் பகிரங்கமாக நடைபெறுகின்றன.

6-300x225.jpg

திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட நல்லூர் வீதியிலும், திலீபனின் நினைவுத்தூபி அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியிலும் இன்று காலை திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!” என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த ஈழத்தமிழ் மறவன் திலீபனின் நினைவேந்தல் வாரத்தில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

http://www.newsuthanthiran.com/2018/09/15/பார்போற்ற-சரித்திரம்-படை/

Link to comment
Share on other sites

தியாகத்தின்  நேசக்கரம்!!

 
 
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0% Lieutenant Colonel Thileepan

 

 

1987 ஆம் ஆண்டுக் காலப்­ப­குதி தமி­ழர்­க­ளின் வாழ்­வி­ய­லில் பல போராட்ட வரை­ய­றை­க­ளுக்­கான தோற்­று­வாய்­க­ளைத் தந்­தி­ருந்­தது. குறிப்­பாக இந்­தி­யப் படை­கள், அமை­தி­காக்­கும் படை­கள் என்ற போர்­வை­யில் தன்­ன­லன் சார்ந்த திட்­ட­மி­டல்­க­ளின் கோர்­வை­யாக வடக்குக் – கிழக்கு மாகா­ணங்­க­ளில் வந்­தி­றங்­கிய பின்­பும் இராணு­வத்­தின் அட்­டூ­ழி­யங்­கள் ஒரு­பு­றம் தொடர்ந்து கொண்­டே­யி­ருந்­தன.

தமி­ழீழ விடு­த­லைப்புலி­கள் அமைப்பைச் சீண்­டும் வகை­யி­லான  ‘ஈ.என்.டி.எல்.எவ்’ அமைப்­பின் வியூ­கங்­கள் அமைந்­தி­ருந்­தன. புலி­கள் மீதான துப்­பாக்­கிச் சூடு­க­ளாக அவை மாற்­றம் கண்­டி­ருந்­தன.இந்த இடை­வி­ல­கல்­கள் அதி­லி­ருந்து மீண்­ட­தான இலட்­சிய அடைவு நோக்­கம் என்­ப­தன் வழி விடு­த­லைப்­பு­லி­க­ளின் பய­ணப்­பா­தை­கள் செப்­ப­னி­டப்­பட்­டன.

விடு­தலை உணர்வு

இந்தச் சந்­தர்ப்­பத்­தில் விடு­தலை உணர்­வி­லும் உரி­மை­யின் பற்­று­தல்கள் நகர்­வி­லும் உறு­தி­யாக இருந்த முதன்மைப் போரா­ளி­யான  திலீ­ப­னின் சிந்­தனை வெளி­யில் அகிம்­சை­யின் மாற்­று­வழி தென்­பைத் தந்­தது.காந்­தி­யத்­தின் வழி இந்­திய அடக்­கு­மு­றையை எதிர்த்துத் தமி­ழ­ரின் நியா­ய­மான கோரிக்­கை­களை முன்­வைத்து  உணவு ஒறுப்புப் போராட்­டத்­தைத் தொடர அவரை முன்­மொ­ழிந்­தது.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னின் அனு­ம­தி­யோ­டும், நெறிப்­ப­டுத்­த­லோ­டும் அகிம்சை வழிப் போராட்­டம் காத்­தி­ரம் பெறு­கி­றது.1987 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 11 ஆம், 12 ஆம் திக­தி­க­ளில் விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் முக்­கிய போரா­ளி­க­ளுக்­குத் தக­வல் அறி­யத்­த­ரப்­பட்­ட­தோடு, 13ஆம் திகதி அப்­போ­தைய இந்­தி­யத் தூது­வ­ராகப் பணி­பு­ரிந்த டிக்­சித்­துக்கு எழுத்­து­மூ­லம் உணவு ஒறுப்­புப் போராட்­டம் குறித்த தக­வல் பரி­மா­றப்­பட்­டது.

செப்­ரெம்­பர் 15 ஆம் திகதி அதி­காலை  கொக்­கு­வில்– பொற்­பதி வீதி­யில் அமைந்­தி­ருந்த விடு­த­லைப்­பு­லி­க­ளின் முகா­மி­லி ­ருந்து திலீ­பன் அகிம்­சை­யின் திரு­வு­ரு­வ­ மாகப் புறப்­ப­டு­கி­றார். நல்­லூர் கந்­த­னின் பின் வீதி­யில் அமைந்­தி­ருந்த கந்­தன் கருணை இல்­லத்­தைச் சென்­ற­டை­கின்­றார். அங்­கி­ருந்த போரா­ளி­கள், தள­ப­தி­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­ அள­வ­ளா­வி­னான்.  அங்­கி­ருந்து புறப்­பட்டு நல்­லூர் ஆலய வீதி­யில் அமைந்­தி­ருந்த போராட்ட மேடைக்குப்  போரா­ளி­கள் மற்­றும் தள­ப­தி­க­ளின் அழைப்­பா­ணை­யோடு அழைத்­துச் செல்­லப்­ப­டு­கின்­றார்.

ஆசீர்­வா­தம்

இந்தச் சந்­தர்ப்­பத்­திலே தமி­ழீ­ழத்­தின் தாயொ­ருத்தி திலீ­பனை இடை­ம­றித்து நெற்­றி­யில் வீபூ­திப் பூச்­சி­டு­கி­றாள். வீரத்­தி­ல­கம் இட்டு இலட்­சிய வேள்­விக்கு ஆசீர்­வா­த­ம­ளித்து வழி­ய­னுப்பி வைக்­கி­றாள்.மேடை­யில் அமை­தி­யின் மொத்த வடி­வ­மாக அகிம்சை எனும் ஆயு­தம் கொண்டு கொலு­வி­ருத்­தப்­பட்­ட­வன் ஆகா­ரம் எது­வு­மின்றி உயிரை உருக்க ஆரம்­பம் தரு­கி­றான்.

அகிம்­சையை அகி­லத்­துக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­வித்தை காட்­டிய பாரத தேசத்­துக்குச் சரி­நி­கர் சமா­ன­மாக ஆகா­ரத்­தின் ஆதா­ர­மின்­றிய  வில்­வித்­தையை புய­ப­ல­மாக,மனத் ­தி­ட­மாகத் திலீ­பன் எடுத்­தி­யம்­பு­கி­றார்.

அண்­ண­னின் அர­வ­ணைப்பு

போராட்­டத்­தின் முதல் நாள் இரவு 11 மணி­வரை உரை­யா­டிக் கொண்­டி­ருந்த திலீ­ப­னைச் சூழச் சல­ச­லப்பு ஆர­வா­ர­மு­று­கி­றது.தேசி­யத் தலை­வர் மேதகு வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் மேடைக்கு வரு­கின்­றார்.

அவ­ரோடு தள­ப­தி­க­ளான சொர்­ணம், இம்­ரான் போன்­றோ­ரும் வருகை தந்­தி­ருந்­த­னர். திலீ­ப­னுக்கு அரு­கில் இருந்து உரை­யாடி நில­மை­களைத் தெளி­வு­ப­டுத்­து­கின்­றார்.  உரை­யா­டல் முடித்து வெளி­யே­றும் போது தலை­வர் மேடை­யில் உள்ள சக போரா­ளி­களை அழைத்­தார், “திலீ­பன் தண்­ணீர் கூட அருந்­த­வில்லை.அவனை அதி­கம் பேச அனு­ம­தி­க்காதீர்­கள். சோர்­வ­டைந்து விடு­வான்.அவன் மீது கரி­சனை எடுங்­கள்” எனத் தெரி­வித்து விடை பெறு­கின்­றார்.

திலீ­பன் மேற்­கொண்­டுள்ள அகிம்­சைப் போராட்­டம் குறித்து அறிந்­து­கொண்ட மக்­கள்  குடா­நாட்­டின்  பல பகு­தி­க­ளில் இருந்­தும் நல்­லூரை நோக்கிப் படை­யெ­டுக்­கத் தொடங்­கி­னர்.16 ஆம் திகதி மக்­கள் முன்­னி­லை­யில் திலீ­பன் உரை­யாற்­றி­னார். போராட்­டத்­தின் நியா­யத் தன்­மையை ஐய­மின்றி எடுத்­துக்­கூ­றி­னான்.

ஆன்ம உருக்­கம்

இரண்­டாம் நாள் போராட்­டத்­தைத் தொடர்ந்து,அகிம்­சை­யின் ஒளி எங்­கும் வியா­பித்­த­ப­டியே இருந்­தது.பாரத தேச­மும் நில­மை­களை அவ­தா­னித்து நிஜங்­க­ளின் நிழல் விம்­பங்­களைச் சற்றே உண­ரத் தொடங்­கி­யது.நாழி­கை­க­ளும்,நாள்­க­ளும் காலத்­தோடு முட்­டி­மோ­திக் கடந்து ஆர்ப்­ப­ரித்­தன.உரி­மை­யின் தாகத்தை எங்­கும் வியா­ப­கம் செய்­தன.

எங்­கும் சோகத்­தின் ஆர­வா­ரம்.அதன் வழியே விடு­தலை உணர்­வின் தேடல்.தமி­ழின விடி­ய­லுக்­கான இலட்­சிய வேள்வி   எல்­லோர் மனங்­க­ளி­லும் சுடர்­விட ஆரம்­பித்­தது. இந்­தத் தரு­ணங்­க­ளிடை தியா­கப் பய­ணத்­தின் 12ஆம் நாள் புலர்­கி­றது.எந்த மாற்­றங்­க­ளும் தென்­ப­ட­வில்லை.மக்­கள் அனை­வ­ரும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் முகம் பார்த்­துக் கொள்­கின்­ற­னர்.

ஆனால் உரை­யாட மன­தில் திட­மின்றி இருந்­த­னர்.மருத்­து­வரை அழைத்­து­வ­ரத்  தயா­ரா­கின்­ற­னர். யாழ்.போதனா மருத்­து­வ­ம­னை­யில் அப்­போது கட­மை­யில் இருந்த மருத்­து­வர் சிவ­கு­மா­ரன் திலீ­பனை மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்தி நில­மை­களை அறிந்து கொண்டு மக்­க­ளுக்கு அத னைத் தெரி­யப்­ப­டுத்­தி­னார்.

ஞாப­கப் பக்­கங்­கள்

அன்­றைய நாளில் என்ன நடந்­தது என்­பதை மருத்­து­வர் சிவ­கு­மா­ரன் வெளிப்­ப­டுத்­தும் போது,

“போரா­ளி­கள் இரு­வர் மருத்­து­வ­ம­னைக்கு வருகை தந்­த­னர்.திலீ­ப­னின் உடல்­நிலை தொடர்­பில் என்­னி­டம் எடுத்­துக்­கூ­றி­னர்.நோயா­ளர் காவுகை வண்­டி­யில் எல்­லோ­ரு­மாக ஏறிக் கொண்­டோம். நல்­லூரை நோக்கி வேக­மா­கப் பய­ணிக்­கி­றோம். நோயா­ளர் காவு வண்­டி­யா­னது புறப்­பட்டு சில நிமி­டங்­க­ ளில் வீர­மா­காளி அம்­மன் கோவிலை அடை­ கின்­றது.

எங்­கும் மக்­கள் கூட்­டம்.வாக­னத்தைச் செலுத்திச் செல்ல சாரதி முயற்­சிக்­கின்­றார்.முடி­ய­வில்லை.நல்­லூர் ஆலய முன்­றலை நோக்கி நடக்க ஆரம்­பித்­தோம். அது­வும் முடி­யாத காரி­ய­ மா­கவே இருந்­தது.

நீண்ட முயற்­சி­க­ளின் பின்பு மேடையை அடைந்­தோம்.திலீ­ப­னின் நாடித் துடிப்பை அறிய முயன்­ற­போது அவ­னது ஆத்மா அணைந்­து­விட்­டதை  உணர்ந்து கொண்­டேன்.அவ­னு­டைய பாதத்தை தொட்டு வணங்கி அங்கே கூடி­யி­ருந்த மக்­க­ளைப் பார்த்­தும் வணங்­கி­னேன்.

அனை­வ­ரும் நில­மையை புரிந்து கொண்­ட­னர்.அப்­போது எழுந்த மக்­கள் குரல்  இப்­போ­தும் ஞாப­கங்­களை கண்­ணீ­ரிடை கன­தி­யாக்­கு­கி­றது. நேரம் சரி­யாக 10.48 மணி என நினைக்­கி­றேன். மக்­கள் கூட்­டத்­திடை இருந்து எழுந்த அழு குரல்­க­ளை­யும் அவல ஓசை­க­ளை­யும் எவ­ரா­லும் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை.திலீ­ப­னின் உடலை மேடை­யி­லி­ருந்து கீழே இறக்கி வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­வ­தற்­காக வாக­னத்­தில் ஏற்­றி­னோம்.அப்­போது நேரம் நண்­ப­க­லைத் தாண்­டி­யி­ருந்­தது.” – என்­றார்.

மன உறு­தி­யின் தீரம்

‘கந்­தன் கருணை’ யிலி­ருந்­துன் கால் நடந்தபோது

கோயில் வீதியே குளிர்ந்து போனது.

கூட்டி வந்து கொலு­வி­ருத்­தி­னோம்.

சாட்­சி­யாக எல்­லா­வற்­றை­யும் பார்த்­த­படி

வீற்­றி­ருந்­தாள் முத்­து­மாரி.

பன்­னி­ரண்டு நாள்­க­ளாக 

உள்­ளொ­டுங்கி நீ உரு­கி­ய­போது

வெள்ளை மணல் வீதி விம்­மி­யது.

உன்­னெ­திரே நின்று எச்­சில் விழுங்­கி­ய­போது

குற்­ற­வு­ணர்வு எம்­மைக் குத­றி­யது.

வரண்­ட­வு­டன் நாவு அண்­ணத்­தில் ஒட்­டி­ய­போது

திரண்­டி­ருந்த சுற்­றம் தேம்­பி­யது!

இரா­ணு­வச் சீருடை தரித்த திலீ­ப­னின் பூத­வு­டல் தலை­வ­ரின் அஞ்­ச­லிக்­காக எடுத்­துச் செல்­லப்­ப­டு­கின்­றது.அதைத் தொடர்ந்து நல்­லை­யின் வீதி­யில் அவன் தியாக வேள்­வியை ஆரம்­பித்த அதே மேடை­யிலே மக்­கள் அஞ்­ச­லிக்­காக வைக்­கப்­ப­டு­கின்­றது.மக்­கள் சோகத்தை வார்த்­தை­க­ளில் வர்­ணிக்க முடி­ய­ வில்லை.இந்த நிலை­யிலே 2 மணி நேர கால அவ­கா­சம் வழங்­கப்­ப­டும். திலீ­ப­னின் உடல் அடக்­கம் செய்­யப்­பட வேண்­டும் என்ற உத்­த­ரவை இந்­திய இரா­ணு­வம் புலி­க­ளி­டம் தெரி­யப்­ப­டுத்­து­கின்­றது.புலி­கள் மேலும் கோபம் கொள்­கின்­ற­னர். உத்­த­ர­வு­களை செவி­ம­டுக்­க­வு­மில்லை, தமது மன உறு­தியை கைவி­ட­வு­மில்லை.

நில­மை­களை உணர்ந்­து­கொண்ட  இந்­திய இரா­ணு­வம் மாலை வேளை­யிலே ஊர­டங்கு அறி­வித்­தலை வெளி­யி­டு­கின்­றது.எத­னை­யும் பொருட்­ப­டுத்­தாது இலட்­சக்­க­ணக்­கான மக்­கள் நல்­லை­யின் வீதி­யெங்­கும் ஒன்­று­கூ­டு­கின்­ற­னர். மிக அமை­தி­யாக தமது இறுதி வணக்­கத்­தைச் செலுத்­து­கின்­ற­னர்.அங்­கி­ருந்து திலீ­ப­ னின் தியாக உடல் அஞ்­ச­லிக்­காக குடா­நாட்­டின் சகல பகு­தி­க­ளுக்­கும் ஊர்­வ­ல­மாக அலங்­க­ரிக்­கப்­பட்ட ஊர்­தி­யில் எடுத்­துச்  செல்­லப்­பட்­டது.

தீராத தாகம்

மருத்­து­வ­பீட மாண­வ­னாக இருந்து தியா­கச் சாவ­டைந்த இலட்­சிய வேள்­வி­யில் உயர்ந்­த­வ­ரின் இன்­னு­மோர் எண்ண மேலீடு ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கி­றது.அவ­னது புக­ழு­டல்  மருத்­துவ பீட மாண­வர்­க­ளின் கற்­கைக்­காக ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. தமி­ழீ­ழத்­தின் உன்­னத தியாக வர­லாற்றை உல­கெங்­கும் பறை­சாற்­றி­யது.பல பாடங்­களை உல­க­றி­யச் செய்­தது.

https://newuthayan.com/story/14/தியாகத்தின்-நேசக்கரம்.html

Link to comment
Share on other sites

தியாக வரலாற்றின் உன்னத ஒளிர்வு!!

 
 

%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0

 

 

 

மக்­கள் புரட்சி வேண்­டும்
“என் மனம் மகிழ்ச்­சி­யில் மிதக்­கின்­றது. நீங்­கள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கில் இந்­தப் புரட்­சிக்­குத் தயார்ப்பட்­டு­விட்­டதை என் கண்­கள் பார்க்­கின்­றன. நான் திருப்தி அடை­கி­றேன்.நான் நேசித்த தமி­ழீழ மண்­ணில் வாழ்­கின்ற ஒவ்­வோர் மக்­க­ளும் இந்­தப் பெரும் புரட்­சிக்­குத் தயா­ராக வேண்­டும் எனது இறுதி ஆசை இது­தான்.

பெரும்­ப­ணியை உங்­க­ளி­டம் விட்­டுச் செல்­கி­றேன். நான் மிக­வும் நேசித்த என் தோழர்­கள், என் சகோ­த­ரி­கள், எல்­லா­வற்­றி­லும் மேலாக என் அண்­ணன் தேசி­யத் தலை­வன் பிர­பா­க­ரன் உங்­க­ளு­டன் இருக்­கி­றார். நீங்­கள் பரி­பூ­ர­ண­மா­கக் கிளர்ந்­தெ­ழ­வேண்­டும்.

மாபெ­ரும் மக்­கள் புரட்சி வெடிக்­கட்­டும். இந்தப் புரட்சி நாள் என்­னு­யி­ருக்கு மேலாக நேசிக்­கும் என் மக்­க­ளுக்­குக் கிடைக்­கட்­டும். எமது எதிர்­காலச் சந்­ததி வாழ ஒரு நாடு தேவை. அல்­லா­விட்­டால் நாளை எங்­க­ளைப் போலவே எமது எதிர்­காலச் சந்­த­தி­யும் துன்­பப்­ப­டும்.வருத்­தப்­ப­டும்.மக்­கள் புரட்சி வெடிக்­கட்­டும்! சுதந்­தி­ரத் தமி­ழீ­ழம் மல­ரட்­டும்!” என்று தமி­ழின விழிப்­பின் அறை­கூ­வல் மொழிந்து, தன் மக்­க­ளுக்­கா­கத் தன்­னையே அர்ப்­ப­ணித்த தியா­கத்­தின் செம்­மல் மாவீ­ரன் திலீ­ப­னின் ஆத்மா உரி­மை­யின் தாகம் கொண்டு இன்­ன­மும் அசை­வு­று­கி­றது.

மூபத்து ஆண்­டு­கள் கடந்து அவ­னு­டைய நினை­வு­க­ளின் சஞ்­சா­ரத்­தில் வீரத்­தின் தில­க­மாகத் தாய­க­மெங்­கும் வண்­ணம் சூடு­கி­றது.இந்தக்­கா­ல­ம­தில் சிரம் தாழ்த்தி அவன் பாதங்­களை வணங்கி, நெக்­கு­ருகி நினை­வஞ்­சலி செலுத்தி அவ­னது வர­லாற்றை எண்­ணிப் பார்க்க வேண்­டும்.இன்­ன­மும் உன்­னிப்­பாக நாம் வீறு நடை­ப­யில வேண்­டும்.

மாவீ­ரம்

நல்­லூர்க் கந்­த­சு­வாமிக் கோவில் வீதி­யில் தன்­னைத் தானே சிலு­வையில் அறைந்து கொண்­டது ஒரு மாவீ­ரம். சாவு கொண்டு தியா­கத்­தின் வழி தமி­ழி­னத்துக்கு ஊட்­டிய விழிப்­பு­ணர்வு மகத்­தா­னது. அந்த விழிப்­பு­ணர்­வின் தேவையை நாம் இந்த வேளை­யி­லும் இந்­தக் கால­கட்­டத்­தி­லும் கருத்­தில் கொள்­வது அவ­சி­ய­மா­னது.பொருத்­த­மா­னது.

நம்­பிக்கை

மூன்று தசாப்த காலங்­க­ளின் முன்பு இந்­தியா தமி­ழீ­ழத்­த­வ­ரின் தேசி­யப் பிரச்சி­ னை­ யில் நேர­டி­யா­கத் தலை­யிட்டபோது, மக்­கள் நெஞ்­சங்­க­ளில் ஒரு நம்­பிக்­கைக்­கு­ரிய இரட்­ச­க­னா­கவே இந்­தியா தோற்­றம் தந்­தது. “அகிம்சை என்­னும் கோட்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் அல்­லது அகிம்சை என்­னும் தத்­து­வத்­தின் அடிப்­ப­டை­யில் இந்­தியா தனது அர­சி­யல் கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யுள்­ளது” என்ற பிர­மையை இந்­திய ஆட்சிப் பீடங்­கள் தோற்­று­வித்­தி­ருந்­தன.

அகிம்சை என்ற தத்­து­வத்­தின் உயர்­வான கொள்­கை­க­ளும்,நீதி­க­ளும் உண்­மை­யா­கவே பேணப்­ப­டு­கின்­றன என்று இந்­தி­யக் குடி­மக்­கள் மட்­டு­மல்ல தமி­ழீ­ழத்­த­வர்­க­ளும் மன­மார நம்­பி­னார்­கள். அகிம்­சைக் கோட்­பாட்­டின் மூலம் நீதியை வென்­றெ­டுக்­க­லாம், நியா­யத்தை நிலை­நாட்­ட­லாம் என்று எம்­ம­வர்­க­ளும் நம்­பி­யி­ருந்த கால­மாக அது காணப்­பட்­டது.

இலட்­சி­யம் கொண்டு உதித்த பிள்ளை

மஹாத்மா காந்­தி­யின் அகிம்சை வாதத் தத்­து­வத்­தைத் தனது அடிப்­படை அர­சி­யல் கொள்­கை­யாக வரித்­தி­ருப்­ப­தாக இந்­தியா மேலோட்­ட ­மாக முழங்கி வந்­தா­லும் அதில் எந்­த­வித பய­னுறு­தி­யும் இல்லை. உண்­மை­யில், அகிம்­சைத் தத்­து­வத்­துக்கு எதி­ரா­கத்­தான் இந்­திய அரசு செயல்பட்­டது.இப்­போ­தும் செய­லாற்­றிக்­கொண்­டுள்­ளது. இந்த விட­யங்­களைத் தனது உட­லா­லும் உயி­ரா­லும் வலி­யு­றுத்­திக் காட்டி நிரூ­பித்­த­வன்­தான் தியா­கத்­தின் பிள்ளை திலீ­பன்.

நம்­பிக்­கை­யின் பொரு­ளாய் எமது இனத்­தின் விடு­த­லைக்­கான பாதை எந்­தத் திசை நோக்கி எவ்­வாறு இருக்க வேண்­டும் என்­ப­தைக் காட்­டு­வ­தற்கு, தனி­யொரு புலி வீர­னா­கப் புறப்­பட்­டான் திலீ­பன். தனது எதிர்­கா­லத்­தையே பசித் தீ கொண்டு ஈகம் செய்­தான்.

அவன் சொன்ன செய்தி

‘‘தமி­ழி­னம் அடங்­காது போரா­டும்.ஆயு­தம் இல்­லா­விட்­டா­லும் அது போரா­டும். புல்­லை­யும் எடுத்து அது போரா­டும்.அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்­காது. பேரம் பேசாது. விட்­டுக் கொடுக்­காது. ஆயு­தம் இல்­லா­விட்­டா­லும், உணவு இல்­லா­விட்­டா­லும் இந்த இனம் தலை வணங்­காது. அது தொடர்ந்­தும் போரா­டும். தன்­னு­டைய விடு­த­லைக்­காக, நியா­யத்­துக்­காக,நீதிக்­காக அது எந்­தச் சக்­தி­யை­யும் எதிர்த்­துப் போரா­டும்’’.

ஆம்,திலீ­பன் ஆன்ம உறுதி கொண்டு போரா­டி­னான்.சாவைச் சந்­தித்­தான்.விழிப்­பு­ணர்வை எமக்கு ஊட்­டி­னான். எடுத்த காரி­யத்­தில் இறுதி மூச்சு உள்­ள­வரை உறு­தி­யோடு போரா­டு­கின்ற உள­வ­லி­மை­யுள்ள இலட்­சிய உறு­தியை உரிமை மீட்­பின் பயி­ராக விதைத்­தான்.

இரங்­கற் பா
விண்­ணி­ருந்து பார்ப்­பேன் விடு­த­லையை என்ற மகன்
கண்­ணெ­திரே இந்­தக் கட்­டி­லிலே முடி­கின்­றான்
பத்­தோடு ஒன்றா – இவன் பாடை­யிலே போவ­தற்கு!
சொத்­தல்லோ!
எங்­கள் சுக­மல்லோ!
தாலாட்­டுப் பாட்­டில் தமிழ் தந்த தாய்க்­கு­லமே
போராட்ட வீரன் போய்­மு­டி­யப் போகின்­றான்!

என்று புதுவை சிந்­திய வார்த்­தைச் சின்­னங்­கள் கால வெள்­ளம் தனில் அணைந்­தி­டாது ஒளிர்வு தரும்.

https://newuthayan.com/story/10/தியாக-வரலாற்றின்-உன்னத-ஒளிர்வு.html

Link to comment
Share on other sites

தியாகி திலீபனுக்கு -மட்டக்களப்பில் அஞ்சலி!!

 
unnamed-29-780x405.jpg
 

தியாகதீபம் திலீபனின் 31 ஆண்டு நினைவு நாளின் நான்காவது நாளில் இன்று மட்டக்களப்பில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முருக்கன்தீவு கிராமத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், முருக்கன்தீவு கிராமத்தின் மாவீரர் குடும்பத்தின் பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

unnamed-6-5.jpgunnamed-5-6.jpgunnamed-4-7.jpgunnamed-3-8.jpgunnamed-2-11.jpgunnamed-1-10.jpg

https://newuthayan.com/story/14/தியாகி-திலீபனுக்கு-மட்டக்களப்பில்-அஞ்சலி.html

Link to comment
Share on other sites

ஈழம் ஈந்த ஈகம் திலீபன்!!

 
 
thileepan001-720x450-780x405.jpg

 

 

தான் நேசித்த மக்­க­ளுக்­காக, தான் நேசித்த மண்­ணுக்­காக ஒரு­வன் எத்­த­கைய உயர்ந்த உன்­ன­த­மான தியா­கத்­தைச் செய்ய முடி­யுமோ அந்த அற்­பு­த­மான அர்ப்­ப­ணிப்­பைத் திலீ­பன் செய்­தி­ருக்­கி­றார்.

தியாகி லெப்­டி­னன் கேணல் திலீ­பன் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் ஒரு முக்­கிய உறுப்­பி­ன­ராக இருந்­த­வர்.இந்தியப் படை­க­ளுக்­கெ­தி­ராக நீரா­கா­ரம் கூட அருந்­தாது பன்­னி­ரண்டு நாள்­கள் உண்ணா நோன்­பி­ருந்து வீரச்­சா­வ­டைந்­த­வர்.

1987 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 15ஆம் திகதி இந்­திய அமை­திப் படை­யி­ன­ரி­டம் ஐந்து அம்­சக் கோரிக்­கையை முன்­வைத்து உண்­ணா­வி­ர­தத்தை ஆரம்­பித்­தார். 1987ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 26ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 10.48 மணிக்கு லெப்­டி­னன் கேண­லாக, விடுதலைப் புலிகளின் யாழ்.மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ள­ராக, உரிமை விழிப்­பின் சாக­ர­மாகத் திலீ­பன் தியாகச் சாவு எய்­தி­னார்.

ஐந்து அம்­சக் கோரிக்கை
•மீளக்­கு­டி­ய­மர்­தல் என்ற பெய­ரில் வடக்­கி­லும் கிழக்­கி­லும் புதி­தாகத் திட்­ட­மி­டும் குடி­யேற்­றங்­க­ளைத் தடுத்து நிறுத்­த­ வேண்­டும்.
•சிறைக் கூடங்­க­ளி­லும், இரா­ணுவ –பொலிஸ் தடுப்பு முகாம்­க­ளி­லும் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் யாவ­ரும் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்­டும்.
•அவ­ச­ர­கா­லச் சட்­டம் முழு­மை­யாக நீக்­கப்­ப­ட­வேண்­டும்.
•ஊர்­கா­வல் படை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்ட ஆயு­தங்­கள் முற்­றா­கக் களை­யப்­ப­ட­வேண்­டும்.•தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் புதி­தாகப் பொலிஸ் நிலை­யங்­க­ளைத் திறப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டும் நட­வ­டிக்­கை­கள் முற்­றாக நிறுத்­தப்­ப­ட­வேண்­டும்.

போராட்­டத்­தின் குறி­யீடு

தீலீ­ப­னின் தியாக வர­லாறு, தமிழ் மக்­க­ளின் விடு­த­லைப் போராட்­டத்­தின் ஒரு குறி­யீ­டாக விளங்­கு­வ­தோடு, தமி­ழீ­ழத் தேசி­யத் தலை­வ­ரின் இயல்­புக்­கும் ஒரு குறி­யீ­டா­க­த் திகழ்­கி­றது.

தமி­ழீழ விடு­த­லைப் போராட்­டம் மிகப் பெரிய எழுச்சி கொண்­ட­தும், வளர்ச்சி கண்­ட­தும் தேசி­யத் தலை­வர் பிர­பா­க­ர னின் வழி­ந­டத்­த­லின் வழி­யே­தான்.இங்கே தமி­ழீ­ழத் தேசி­யத் தலை­வ­ருக்கு இருக்­கின்ற இயல்பு என்­ன­வென்­றால் அடக்­கு­மு­றை­க­ள் எவ்­வ­ள­வு­தான் பெரி­யவையாக இருந்­தா­லும் விட்­டுக் கொடுப்­ப­தில்லை. எவ்­வ­ள­வு­தான் பெரிய இழப்­புக்­க­ளைச் சந்­தித்­தா­லும், தன்­னு­டைய உயிரே போனா­லும் அடக்­கு­மு­றை­க­ளுக்கு அடி­ப­ணி­வ­தில்லை என்­பது தேசி­யத் தலை­வ­ரின் அடிப்­படை இயல்­பா­கக் காணப்­பட்­டது.

இந்த இயல்­புத் தன்­மை­தான் தமி­ழீ­ழத் தேசி­யத் தலை­வ­ரை­யும் சாகும்­வரை உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை மேற்­கொள்ள முன்­னர் தூண்­டி­யது. 1986 ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் இந்­தி­யா­வில் தமிழ்­நாட்­டி­லி­ருந்த தலை­வர் பிர­பா­க­ர­னின் தொலைத் தொடர்­புச் சாத­னங்­கள் முத­லா­ன­வற்றை இந்­திய அரசு பறி­மு­தல் செய்­தது. இந்த அடக்­கு­ மு­றைக்கு எதி­ரா­கத் தலை­வர் கடும் சினம் கொண்­டார்.
இந்­தி­யா­வில் இருக்­கக்­கூ­டிய ஒரு போராட்ட வடி­வ­மாகச் சாகும் வரை­யி­லான உணவு ஒறுப்­புப் போராட்­டத்தைத் தேசி­யத் தலை­வர் பிர­பா­க­ரன் உடனே ஆரம்­பித்­தார்.

இந்­தச் சாகும் வரை­யி­லான உணவு ஒறுப்பு ஒரு போராட்ட வடி­வ­மா­கத் தமி­ழீழ விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் எமது தேசி­யத் தலை­வ­ரால்­தான் முதன்­மு­த­லில் செய்­யப்­பட்­டது.

தேசி­யத் தலை­வர் முன்னெடுத்த தண்­ணீர்­கூட அருந்­தாத சாகும் வரை­யி­லான உணவு ஒறுப்­புப் போராட்­டமானது எந்­த­வி­த­மான முன்­ன­றி­வித்­த­லும் இன்றி அவரால் உட­னேயே ஆரம்­பிக்கப்பட்டது. இந்­தப் போராட்­டத்தை ஒரு­நாள் கழித்து, பின்­னர் ஆரம்­பிக்­கும்­படி இயக்­கப் போரா­ளி­க­ளும், பிர­மு­கர்­க­ளும் கேட்­டுக்­கொண்­ட­னர்.

‘அந்த ஒரு­நாள் அவ­கா­சத்­தில் தமி­ழக அர­சுக்­கும், தமி­ழக அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும், வெகு­சன ஊட­கங்­க­ளுக்­கும், தமி­ழக மக்­க­ளுக்­கும் உங்­க­ளது சாகும் வரை­யி­லான உண்ணா நோன்பை அறி­வித்து விட­லாம். அதன் பின்­னர் நீங்­கள் உங்­க­ளு­டைய உண்ணா நோன்பை ஆரம்­பிக்­க­லாமே” என்று கூறி­னர்.ஆனா­லும் அவர் மறுத்­து­விட்­டார்.

கற்­பி­தம்

‘‘இல்லை, நீங்­கள் சொல்­வது ஓர் அர­சி­யல் நாட­கம்..! எனக்கு அது தேவை­யில்லை. நான் இந்த நிமி­டம், இந்த விநா­டி­யி­லி ­ருந்து ஒரு சொட்­டுத் தண்­ணீர் கூட அருந்­தா­மல் சாகும் வரை­யி­லான என்­னு­டைய உண்­ணா­வி­ர­தத்தை ஆரம்­பித்­து­விட்­டேன். இந்­திய அரசு என்னிடமிருந்து பறித்­தெ­டுத்த தொலைத்­தொ­டர்­புச் சாத­னங்­கள் முத­லா­ன­வற்றை திருப்­பித் தரும் வரைக்­கும் ஏன்,என்­னு­டைய உயிர் போகும் வரைக்­கும் எனது போராட்­டம் தொடர்ந்து நடை­பெ­றும்” என்று கூறி­னார்.

இந்­தப் போராட்­டத்­தின் சக்­தியை உணர்ந்த இந்­திய அரசு 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்­குள் அடி பணிந்­தது. தான் பறித்­தெ­டுத்த தொலைத் தொடர்­புச் சாத­னங்­கள் முத­லா­ன­வற்­றைத் தலை­வர் தங்­கி­யி­ருந்த வீட்­டி­லேயே கொண்டு வந்து கொடுத்­தது. தலை­வர் தன்­னு­டைய உண்ணா நோன்பை முடித்­தார்.

தன்­னு­டைய உயிரே போனா­லும் அடக்­கு­மு­றைக்­குப் பணி­வ­தில்லை என்­கின்ற தேசி­யத் தலை­வ­ரின் இயல்­பின் வெளிப்­பா­டு­தான் திலீ­ப­னி­ட­மும் உள்ளூரப் படிந்­தி­ருந்­தது. தேசி­யத் தலை­வர் முன்­னின்று வழி­காட்­டிய பாதை­யில் திலீ­பன் பின் தொடர்ந்து போரா­டி­னான். திலீ­ப­னின் இந்த உண்ணா நோன்­புப் போராட்­டம் தமி­ழீ­ழத் தேசி­யத் தலை­வ­ரின் இயல்­பை­யும் சுட்டி நிற்­கின்­றது.

தாகத்­தின் தியா­கம்

இந்த இலட்­சிய உறு­தி­தான், தியாகி திலீ­ப­னி­ட­மும் படி­மம் கொண்­டி­ருந்­தது. தனது தலை­வன் முன்­னோ­டி­யாக நின்று வழி­காட்­டிப் போரா­டி­யதை 1987 ஆம் ஆண்டு நடாத்­தி­னான். ‘ஒரு சொட்­டுத் தண்ணீர் அருந்­தா­மல் நான் எனது உண்ணா நோன்பை ஆரம்­பிக்­கப் போகின்­றேன்” என்று திலீ­பன் அறி­வித்­த­போது தலை­வர் பிர­பா­க­ரன் திலீ­ப­னி­டம் ஒரு வேண்­டு­கோளை முன்­வைத்­தார். ‘‘தண்­ணீ­ரை­யா­வது குடித்­துப் போராட்­டத்­தைத் தொட­ர­லாம்” என்று திலீ­ப­னைக் கேட்­டுக்­கொண்­டார்.

ஆனால் திலீ­பனோ தலை­வ­ரி­டமே பதில் கேள்வி ஒன்­றைக் கேட்­டார். ‘‘அண்ணா…! நீங்­கள் அப்­ப­டிச் செய்­ய­வில்­லையே..? நீங்­க­ளும் ஒரு சொட்­டுத் தண்­ணீர் கூட அருந்­தா­மல்­தானே சாகும்­வரை உணவு ஒறுப்பை மேற்­கொண்­டி­ருந்­தீர்­கள். என்னை மட்­டும் ஏன் தண்­ணீர் அருந்­தச் சொல்­கின்­றீர்­கள்…?”

ஆம்,அத்­த­கை­ய­தொரு தலைமை..! இத்­த­கை­ய­தொரு தியாகி…! தாயக தேசம் கண்­டு­கொண்ட மகத்­து­வம்.உயர்ந்­த­வர்­க­ளி­டம் மட்­டுமே காணக்­கூ­டிய இலட்­சிய உறுதி அது. இவ்­வாறு தமி­ழீ­ழத் தேசி­யத் தலை­வ­ரின் இயல்பின் ஒரு குறி­ யீ­டா­கத்­தான் தியாகி திலீ­பன் விளங்­கி­னார்.

https://newuthayan.com/story/13/ஈழம்-ஈந்த-ஈகம்-திலீபன்.html

Link to comment
Share on other sites

தமிழ் அன்னையின் ஆத்மா ஒளிரும் இலட்சிய ஞானம்!!

 
 
images-10-780x405.jpg
 

ஈழத் தமி­ழ­ரின் வாழ்­வுக்­கா­க­வும், சிங்­கள அர­சின் அடக்கு முறை­க­ளில் இருந்து தமி­ழி­னத்தைக் காக்­கும் நோக்­கு­ட­னும் இந்­திய அர­சி­டம் ஐந்து அம்­சக் கோரிக்­கை­களை முன்­நி­றுத்தி, நீர்கூட அருந்­தாது அகிம்சை முறை­யில் போராடி திலீ­பன் தியா­கச் சாவ­டைந்த நாள்­கள் இவை. ஈழத் தமி­ழர்­க­ளின் மன­தில் இந்­தியா மீதான நம்­பிக்­கை­யின் பற்­று­தல் தளர்ந்த நாள்­கள் இவை.

தாயன்பு பேணல்

சரா­சரி உய­ர­மும், பொது­நி­ற­மும், மிக மெல்­லிய தோற்­ற­மும் கொண்ட இளை­ஞன் தான் இரா­சையா பார்த்­தீ­பன் என்­னும் திலீ­பன். யாழ். மாவட்­டம்,வலி­கா­மம் பிர­தே­சத்­தில் உள்ள ஊரெழு என்­னும் கிரா­மத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட திலீ­பன் இரா­சையா ஆசி­ரி­ய­ரின் கடைசி மக­னாக 1963ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்­தார்.அவ­ருக்கு இரண்டு அண்­ணன்­கள் உடன்­பி­றப்­பாகப் பாசம் தந்­த­னர்.

அவர்­க­ளின் பாசப் பிணைப்­போடு சிறு வயது முதலே அதீத புத்­திக் கூர்­மை­யும், திற­மை­யும் கொண்டு வளர்ந்­தார் பார்த்­தீ­பன்.அண்­ணன்­கள் இரு­வ­ருமே படிப்­ப­றி­வும்,அடக்­க­மும், உயர்ந்த பண்­பி­யல்பு கொண்­ட­வர்­க­ளாகத் திகழ்ந்­த­னர்.திலீபனை வழி­ந­டத்­தி­னர்.தந்­தை­யும் அப்­ப­டியே.அந்த ஊரில் மிக­வும் மதிப்­பும் செல்­வாக்­கும் மிக்க குடும்­ப­மாக ஆசி­ரி­யர் இரா­சை­யா­வி­னு­டைய குடும்­பம் திகழ்ந்­தது என்­றால் மிகை­யில்லை.

சிறு­வ­ய­தி­லேயே திலீ­பன் தாயைப் பறி கொடுத்­த­வர்.தாயன்பு என்­றால் என்­ன­வென்றே தெரி­யா­மல் வளர்ந்த அவருக்கு தந்­தை­யும் அண்­ணன்­கள் இரு­வ­ரும் தாயன்­பின் மகத்­து­வத்தை வெளிக்­காட்­டி­னர்.அதன் ஆத்­மார்த்­த­மான ஒப்­புமை இலக்­க­ணங்­களை அவ­ரி­டத்­தில் ஊட்­டம் செய்து வளர்த்­த­னர். தன் பிள்ளை பிற் காலத்­தில் மண்­ணின் விடு­த­ லைக்­கா­க­வும்,மக்­க­ளின் உரிமை மீட்­புக்­கா­ க­வும் தன்­னையே தியா­கம் செய்­வான் என்­பதை உணர்ந்த தன்­மை­யால் போலும் தந்­தை­யும் தன் மக­னுக்­காகத் தனது இன்ப வாழ்வைத் தியா­கம் செய்து கொண்­டார். என்னே அந்த தியா­கக் குடும்­பத்­தின் பாரம்­ப­ரி­யம்.ஈழத்­தின் தனித்­து­வத் தாற்ப­ரி­யம்.

கல்வி ஒளி காணல்

இயல்­பி­லேயே திலீ­பன் படிப்­பில் ஆர்­வம் உள்­ள­வ­ராக விளங்­கி­னார்.சிறு­வ­ய­துக் கல்­வியை தனது சொந்த ஊரான ஊரெ­ழு­வி­லும் மேற்­ப­டிப்பை யாழ்.இந்­துக் கல்­லூ­ரி­யி­லும் பயின்­றார்.அவ­ரது அறி­வுத் திற­னுக்கு எல்­லையே இல்லை எனும் காலம் ஒன்று ஒரு காலத்­தில் இந்­துக் கல்­லூ­ரி­யில் இருந்­தது என்­பது மறுக்க முடி­யாத உண்மை.வகுப்­பில் எப்­போ­தும் முத­லா­வ­தாக வந்து தனது அறி­வுத் திற­மையை நிரூ­பித்து வந்­தார் அவர்.

எழு­ப­து­க­ளில் சிங்­கள அரசு, தமிழ் மாண­வர்­க­ளின் பட்­டக் கல்­வியை,மருத்­துவ கல்­வியை பாழப்பதற்குக் கொண்­டு­வந்த தரப்­ப­டுத்­தல் என்­னும் திட்­ட­மிட்ட சதி­யால் எண்­ணி­றைந்த தமிழ் மாண­வர்­கள் தமது உயர் கல்­வியை இடை நிறுத்­தி­னர். வெளி­நா­டு­க­ளுக்கு ஓடத் தொடங்­கிய கால­மாக அது அமைந்­தி­ருந்­தது.எண்­ப­து­க­ளின் ஆரம்­பத்­தில் பார்த்தீ­பன் க.பொ.த. உயர்­தர வகுப்­பில் மிகத் திற­மை­யாக சித்தி பெற்று இலங்கை அர­சின் தரப்­ப­டுத்­தல் அள­வை­யும் தாண்டி மருத்­து­வப் படிப்­புக்­குத் தெரி­வா­னார்.யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பட்­டக் கல்­வி­யைத் தொடர்ந்­தார்.

விடு­த­லைப் பய­ணம் போதல்

அந்தக்­கா­லப்­ப­குதி தமிழ் இனத்­துக்கு ஒளி மழுங்­கிய இருள் சூழ்ந்த கால­மாக அமைந்­தி­ருந்­தது. உண்­மை­யில் இனக்­க­ல­வ­ரத்­தின் கோரப்­பி­டி­யில் சிக்கித் தமிழ் இனம் கொஞ்­சம் கொஞ்­ச­மாக அழிந்து கொண்­டி­ருந்த காலம் அது.சிறி­லங்­காப் படை­க­ளின் அட்­டூ­ழி­யம் எல்லை தாண்டி சென்று கொண்­டி­ருந்­தது.

சிறை­யில் குட்­டி­மணி, தங்­கத்­துரை போன்­ற­வர்­கள் சிங்­க­ளக் கொடு­வெ­றி­யர்­க­ளால் ஈவி­ரக்­க­மின்றிக் கொல்­லப்பட்­ட­தும், இலங்கை முழு­வ­தும் பெரிய இனக் கல­வ­ரத்தை திட்­ட­மிட்டு ஏற்­ப­டுத்தித் தமி­ழர்­களை சிங்­க­ள­வர்­கள் கொன்று குவித்­த­ தும்,தமிழ் பெண்­கள் வகை தொகை­யின்றி சிங்­க­ளப் பகு­தி­க­ளில் சிங்­க­ளக் காடை­யர்­க­ளால் பாலி­யல் வதைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தும் இதே காலப்­ப­கு­தி­கள் தான்.

இந்தச் சந்­தர்ப்­பத்­திலே விஸ்­வ ­ரூ­பம் எடுத்துத் தாண்­ட­வம் ஆடிய இனப்­பி­ரச்­ச­னை­யும்,தமி­ழர்­க­ளின் அழி­வும் பார்த்­தீ­ப­னின் மருத்­து­வக் கல்­விக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தன.ஆம்,ஊரெ­ழு­வில் பிறந்த அந்த உரிமை தாகம் சுமந்த விடு­த­லைப் பறவை புலி­க­ளின் கூட்டை நோக்கிப் பறந்­தது.

தியா­கம் கொள்­ளல்

திலீ­பன் என்­னும் பெய­ரில் ஆயுதமேந்தித் தன் இன விடி­ய­லுக்­காகச் சுதந்­திர கீதம் பாட ஆரம்­பித்­தது. இறு­தி­யில் தாகம் கொண்டு தியாக நாத சங்­க­மத்­தை­யும் ஆன்ம உருக்­க­மாக மீட்­டி­யது.1987ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 15ஆம் திகதி ஐந்து அம்­சக் கோரிக்­கையை முன்­வைத்து உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­தார்

திலீ­பன். 1987ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 26ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 10.48 மணிக்கு தியா­கச் சாவ­டைந்­தார். தமி­ழீ­ழத்­த­வர் மனக் கோயில் எங்­கும் ஓய்­வின்றிச் சுடர் விடு­கின்­றார்.விடு­த­லை­யின் பொருள் தனை ஆத்ம பல­மாக இன்­றும் உரை­கின்­றார்.

https://newuthayan.com/story/09/தமிழ்-அன்னையின்-ஆத்மா-ஒளிரும்-இலட்சிய-ஞானம்.html

Link to comment
Share on other sites

திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார் புகழேந்தி!!

 

 

 
5th-Day-Thilepan-memorial-2018-d-780x405
 

தியாகி திலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் இடம்பெற்றது. அதில் ஓவியல் புகழேந்தி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

5th-Day-Thilepan-memorial-2018-n.jpg5th-Day-Thilepan-memorial-2018-m.jpg5th-Day-Thilepan-memorial-2018-l.jpg5th-Day-Thilepan-memorial-2018-k.jpg5th-Day-Thilepan-memorial-2018-j.jpg5th-Day-Thilepan-memorial-2018-i.jpg5th-Day-Thilepan-memorial-2018-h.jpg5th-Day-Thilepan-memorial-2018-g.jpg5th-Day-Thilepan-memorial-2018-f-1.jpg5th-Day-Thilepan-memorial-2018-e.jpg5th-Day-Thilepan-memorial-2018-c.jpg5th-Day-Thilepan-memorial-2018-b.jpg5th-Day-Thilepan-memorial-2018a.jpg

https://newuthayan.com/story/14/திலீபனுக்கு-அஞ்சலி-செலுத்தினார்-புகழேந்தி.html

Link to comment
Share on other sites

ஈழத்தின் அகிம்சைப் பயிர் தரித்த- தியாக நெய்தல் பயணம்!!

 

பசித் தீயின் தகிப்பு விடு­த­லை­யின்றி அகிம்­சை­யின் கரங்­களை இறு­கப் பற்­றி­ய­ப­டியே நீள் பய­ணம் கொண்­டது.ஆறா­வது நாளின் விழிகை அங்­க­லாய்ப்­போடு அந்­த­ரித்­தது.இயற்­கை­யின் இருள் புல­ரும் முன்பே உரி­மை­யின் பருக்கை உண்­ணப் புறப்­பட்ட பிள்­ளை­ய­வன் திலீ­பன் அதி­கா­லைப் பொழு­தி­லேயே தாயக விடு­த­லையை எண்­ணிப் படுக்­கையை விட்டு எழுந்­தி­ருந்­தான். நீரா­கா­ரம் கூட இல்­லாத தியா­கப் பய­ணம் அவ­னி­டத்­தில் அதிக சோர்­வைத் தந்­தி­ருந்­தது.ஆனா­லும் வீர­மும் இலட்­சிய வேள்­வி­யும் வத­னத்­தில் பொதிந்­தி­ருந்­த­து.ஈழப் பயி­ராக செந்­த­ளிப்­பாய் கொழித்­தி­ருந்­தது.

ஆறா­வது நாள்

புனிதப் பய­ணத்­தின் ஐந்­தாம் நாள் இருள் கவி­தல் என்­பது திலீ­ப­னின் தியாக ஒளி­யால் பிர­கா­சித் துக்­கொண்­டி­ருந்­தது. ஆறா­வது நாள் ஆரம்­ப­மும் அவ­னது உருக்­க­மும் ஏதோ ஒன்றைச் சுட்டி நின்­றது.ஆறா­வது நாள் காலை­யி­லி­ருந்து நல்­லூர்க் கந்­த­சாமி கோவி­லில் திலீ­பன் பெய­ரில் நூற்­றுக் கணக்­கான அர்ச்­ச­னை­கள் செய்­யப்­பட்டு அவை பொது­மக்­கள் மூலம் மேடைக்கு வந்­த­வண்­ண­மி­ருந்­தன. பிற்­ப­கல் மூன்று மணி­யி­லி­ருந்து யாழ் .குடா­நாட்­டின் பல பாகங்­க­ளி­லும் இருந்து அதி­க­ள­வான மக்­கள் பேருந்து களில் வந்து நல்­லூர் ஆல­யச் சூழ­லில் ஒன்­று­தி­ரண்­ட­னர்.எங்கு பார்த்­தா­லும் மக்­கள் அலை கரை­பு­ரண்­டது.

தள­பதி கிட்டு அண்­ணா­வின் தாய், திலீ­பனை வாரி அணைத்து உச்சி முகர்ந்­தாள்.அவள் அழுத காட்சி நெஞ்சை உருக்­கின. துரோ­கி­கள் வீசிய வெடி­குண்டு மூலம் தன் மகன் ஒரு காலை இழந்து போனது பற்றி அந்­தத் தாய் கூறிய வார்த்­தை­கள் மகத்­தா­னவை. “ஒரு கால் போனால் என்ன..? இன்­னும் ஒரு கால் இருக்கு. இரண்டு கையி­ருக்கு. அவன் கடைசி வரை­யும் போரா­டு­வான்.” என்ற உத்­வே­கம் இன்­ன­மும் எம் செவி­க­ளில் ஒலித்­துக் கொண்­டி­ருக்­கின்­றன.

அகிம்­சை­யின் விளைவு

ஆம்,முப்­பது வரு­டங்­க­ளாக எமது மூத்த அர­சி­யல் தலை­வர்­கள் தந்தை ‘செல்வா’ தலை­மை­யில் முயன்­றும் முடி­யாத நிலை­யில் தானே தமி­ழி­னத்தை அழி­வி­லி­ருந்து காப்­பாற்ற வேறு வழி­யின்றி ஆயு­தம் ஏந்­தி­னோம் என்று பொருள் உரைத்­தி­ருந்­தது.

உண்­மை­யில் நாம் அகிம்­சைக்கு எதி­ரா­ன­வர்­கள் அல்­லர். ஆனால் எம் எதிரி அகிம்­சை­யைப் பற்றி ஒன்­றுமே தெரி­யா­த­வன். அவ­னுக்கு அது புரி­யா­தது. அவன் தெரிந்து கொண்­ட­தெல்­லாம் கத்­தி­யும், துப்­பாக்­கி­யும்­தான்.ஒரு­வன் கத்­தி­யை­யும், துப்­பாக்­கி­யை­யும் தான் பல­மாக எண்­ணும்­போது அவ­னெ­தி­ரில் நிற்­ப­வ­னால் என்ன செய்ய முடி­யும்.

நீண்ட கசப்­பான அனு­ப­வங்­கள் தான் எமது கரங்­க­ளில் துப்­பாக்­கி­க­ளைத் தந்­தன. 1948 ஆண்டு இலங்கை சுதந்­தி­ரம் அடைந்­த­தா­கக் கூறப்­ப­டும் நாளில் இருந்து, சிங்­கள இன­வா­தி­க­ளால் தமி­ழர்­கள் காலத்­துக்­குக் காலம் அழிக்­கப்­பட்டு வரு­கின்ற கொடு­மை­கள் தீர­வில்லை. இன்­ன­மும் முடிந்­த­பா­டில்லை. எப்­பொ­ழுது முடி­யும்? தங்­கத் தமி­ழர் தம் வாழ்­வில் பொங்­கும் மகிழ்­வும்,பூரிப்­பும் எப்­பொ­ழுது மல­ரும்?

மனி­த­நே­ய­மற்ற காந்தி தேசம்

அண்­ணல் காந்தி அகிம்­சைப் போரிலே வெற்றி கண்­டார் என்­றால், அதற்கு அவர் கையாண்ட அகிம்­சைப் போராட்­டங்­கள் மட்­டும் கார­ண­மல்ல. காந்­தி­யின் போராட்­டத் தளம் இந்­திய மண்­ணிலே அமை­வு­பெற்­றி­ருந்­தது. காந்­தி­யின் போராட்­டத் தளத்­திலே மனி­த­நே­யம் மிக்க ஆங்­கி­லே­யர்­கள் இருந்­தார்­கள்.ஆகவே அகிம்­சை­யைப் புரிந்து கொள்­வ­தற்கு அந்த வெள்­ளைக்­கா­ரர்­க­ளால் முடிந்­தது. ஆனால் எமது மண்­ணில் அப்­ப­டியா?

எத்­தனை சந்­தர்ப்­பங்­க­ளில் எமது தலை­வர்­கள் குண்­டாந்­த­டி­க­ளால் தாக்­கப்­பட்­டி­ருப்­பார்­கள்? எத்­தனை இனக்­க­ல­வ­ரங்­க­ளில் எம் இனத்­த­வர்­க­ளின் தலை­கள் வெட்­டப்­பட்டுத் தார்ப் பீப்­பாக்­க­ளுக்­குள் போடப்­பட்­டி­ருக்­கும்? எத்­தனை பெண்­கள் தம் உயி­ரி­னும் மேலான கற்பை இழந்­தி­ருப்­பர்? அப்­போ­தெல்­லாம் நாம் ஆயு­தங்­க­ளையா தூக்­கி­னோம்? இல்­லையே!

விடு­தலை வேண்­டும்

அகிம்சை! அகிம்சை! அகிம்சை! இந்த வார்த்­தை­கள் தான் எங்­கள் தாரக மந்­தி­ர­மாக இருந்­தன.திலீ­பன் என்ற தாய­கத்­துப் பிள்­ளை ­யவன் தியாக தீப­மாய் சுடர்­கொண்டு பற்­றிய வாச­க­மும் அதுவே. இந்­தக் தாரக மந்­தி­ரத்­தைத் தூக்கி எறிந்து விட்டு எமது கைக­ளிலே ஆயு­தங்­க­ளைத் தந்­த­வர்­கள் யார்? நாமா­கப் பெற்­றுக்­கொள்­ள­வில்­லையே. அவர்­க­ளா­கத்­தான் தந்­தார்­கள். மாறி மாறி ஆட்­சிக்கு வந்த சிங்­கள அர­சு­கள் தான் தந்­தன. தலை­வர் பிர­பா­க­ர­னின் பின்னே ஆயி­ர­மா­யி­ரம் வேங்­கை­கள் அணி­தி­ரண்டு வீர­மாய் வீறு­கொண்டு எழுந்­த­தற்கு கார­ணம் யார்? சிங்­க­ளப் பேரி­ன­வா­தம்­தான்.

https://newuthayan.com/story/09/123007.html

Link to comment
Share on other sites

மக்களுக்காகப் போராடிய – விடுதலைப் போராளி!!

 

இலங்­கை­யின் வடக்­காக ஒரு தேசம் பொலி­வாக இருந்­தது.அது தமிழ்த் தாய் குடி­கொண்­டி­ ருந்த பூர்­வீ­கம்.கலை,கலா­சா­ரம்,பண்­பாட்டு விழுமி­யங்­கள், பொருண்­மி­யத்­தின் மேம்­பா­டு­கள் என அனைத்­தை­யும் அர­வ­ணைத்­துக் கொண்ட அழ­கிய தாய்த் தேசம்.நேசம் கொண்டு ஈழம் என்ற நாமம் கொண்டு தமி­ழர்­கள் போற்றி வணங்­கி­ வ­ரு­கின்ற, எப்­போ­தும் அழித்­திட முடி­யாத இறை வடி­வ­மது.வீரத்­தின் பிறப்­பது.உல­கம் வியந்து பார்த்த சிறப்­பது.

விடு­தலை உணர்வு

இத்­த­கை­ய­தோர் தேசத்­தின் விடு­தலை வேண்­டிய பய­ணத்­தின் தடங்­கள் முப்­பது ஆண்­டு­கள் உரி­மைக்­கான ஆயு­தம் ஏந்­திய அவ­தா­ர­மாக உருப்­பெற்­றது. தமி­ழி­னத்­தின் இனத்­து­வச் சார்­பை­யும் அதன் நிலைத்­திருப் பையும் உல­குக்கு எடுத்­துக் கூறி­யது.இதற்கு முந்­தைய முப்­பது ஆண்­டு­கள் உரி­மைக்­கான அகிம்சை ஆயு­தம் ஏந்­தி­யது.

இந்த ஏந்­தல்­கள் தாக்­க­மு­றா­த­தால் தேங்கித் தட­த­டத்­தன.தரப்­ப­டுத்­த­லோடு உடைப்­பெ­டுத்து, மேற்­சொன்ன அவ­தா­ரங்­க­ளுக்கு அடி­யெ­டுத்­துக் கொடுத்­தது.அகிம்­சைக்­கும் அவ­தா­ரங்­க­ளுக்­கும் இடைப்­பட்ட விகி­தா­ சா­ரங்­க­ளில் மேன்­மை­பெற்­றது தமி­ழி­னத்­தின் அவ­தா­ர­மான,ஆதா­ர­மான வீரங்­கள் தான்.எப்­போ­தும் விலை போகாத அதன் மூலா­தா­ரங்­கள் தாம்.

தியா­கம்

இத­ன­டிப்­ப­டை­யிலே தோற்­றம் பெற்ற அந்­தத் தமி­ழி­னப் பற்­றும், மக்­க­ளுக்­காகப் போரா­டும் ஒரு விடு­த­லைப் போராளி என்ற குறிக்­கோள்­க­ளும் அதி உத்­த­ம­மா­னவை.விடு­தலை வேண்­டு­கின்ற ஓர் இனம் இப்­ப­டித்­தான் இருக்க வேண்­டும் என்­ப­தை எடுத்துக் காட்­டிய தியா­கங்­கள்.உரித்­தா­னதை தர மறுக்­கும்போது சோத­னை­களை தியா­க­மாக்கி சாத­னை­கள் பல­தைச் செய்து காட்­டிய தீரங்­கள்.உரி­மைக்­கான அர்த்­தங்­களை ஓர் அர­சாக்கி தரை, வான், கடல் என எல்­லை­க­ளைக் காவ­லிட்­டுக் கொண்டு நீதி, நிர்­வா­கம், சட்­டம், காவல் என நிமிர்ந்து நடை போட்ட பெரு­மி­தங்­கள் அவை. பொருண்­மி­யங்­களை வளப்­ப­டுத்தி,சமூக விரோ­தங்­க ளைக் கட்­டுப்­ப­டுத்தி, விழு­மி­யங்­களை சீர்ப்­ப ­டுத்தி, கல்­வியை பூர்­வீ­கச் சொத்­தாக்கி, நல் மாணவ சமூ­கத்தை கட்­டிக் காத்துத் தட்­டிக் கொடுத்த இலட்­சி­யங்­கள் அவை.

கடமை

போரும் கல்­வி­யும் இணைந்த ஒரு சமூ­கம் நிலைத்­தி­ருக்க போரா­டு­கி­றது என்­ப­தை­யும் சுதந்­தி­ ரத்­துக்­கான போராட்­ட­மா­கவே தமிழ்ச் சமூ­கம் நகர்­கி­றது என்­ப­தை­யும் எடுத்­தி­யம்­பின. விடு­தலை என்­பது ஒரு தேசி­யக் கடமை. இதில் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் பங்­க­ளிப்பு உண்டு. இதை ஒரு தேசிய இனம் பகிர்ந்து கொள்­ள­வேண்­டும். இந்­தத் தேசி­யச் சுமையைச் சமூ­கத்­தின் அடி­மட்­டத்­தி­லுள்ள ஏழை­கள் மட்­டும் தாங்­கிக்­கொள்ள அனு­மதிப்பது என்­பது நாம் எமது தாய்த் தேசத்­துக்­குப் புரி­கின்ற துரோ­கம் என்­பதை உல­குக்கு எடுத்­துக்­காட்­டி­யவை.

ஆச்­ச­ரி­யக்­குறி

இத்­த­கைய சிறப்­புக்­க­ளோடு இருந்த ஒரு சமூ­கம் அதே பண்­பு­க­ளோடு நிலைத்­தி­ ருக்­கி­றதா என்­றால் பெரி­ய­தொரு ஆச்­ச­ரி­யக் குறி­யும், கேள்­விக் குறி­யும் தற்­போ­தைய சமூக வெளி­யி­டையே தோற்­றம் கொள்­கி­றது.கடந்த பாதை­களைத் திரும்­பிப் பார்க்­கச் செய்­கின்­றது.ஏனெ­னில் கட்­டுக்­கோப்­பான சமூ­கம் திட்­ட­மிட்ட மாற்­றங்­க­ளால் இடை­வி­ல­கத் தொடங்­கி­விட்­டது.விடு­த­லைக்­கான நோக்­கங்­க­ளும் குறிக்­கோள்­க­ளும் மழுங்­க­டிக்­கப்­பட்டு, தட்­டிக்­கேட்க ஆள்­க­ளின்றி ஆட்­டம் காணத் தொடங்­கி­விட்­டது.இதற்­கான அடித்­த­ளங்­கள் 2009 களின் மிகப்­பெ­ரிய மனி­தப் பேர­வ­லத்­தோடு கட்­ட­மைக்­கப்­பட்டு விட்­டன.சிந்­தித்­துச் செய­லாற்­று­வோம்.

தியாக நாதம்
மூ பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­பாய் தியாக வேள்வி புரிந்­த­வ­ரின் நினை­வ­லை­கள் ஞாபகங்­க­ளிடை ஒளி தரு­கின்­றன. ஆங்­கோர் காட்சி விரி­கி­றது.பாருங்­கள்! உமை ஒற்­று­மை­யோடு சிந்­திக்­கப் பணிக்­கின்­றன. “தமி­ழீழத் தாயின் எதிர்­பா­ராத ஆசியைத் திலீ­பன் பெறு­கின்­றார். எதிர்­பா­ராத வித­மாக அந்த நிகழ்ச்சி நடந்­தது.

வய­தான ஒரு அம்மா. தள்­ளாத சிவந்த நிற மேனி. பழுத்த தலை. ஆனால் ஒளி­த­வ­ளும் கண்­க­ளில் கண்­ணீர் மல்க திலீ­பனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்­ச­னைச் சரை­யில் இருந்து நடுங்­கும் விரல்­க­ளால் திரு­நீற்றை எடுத்துத் திலீ­ப­னின் நெற்­றி­யில் பூசு­கி­றார். வீரத்­தி­ல­க­ மி­டு­கி­றார் அந்­தத் தாய். தாயற்ற திலீ­பன் அந்­தத் தாயின் பாச உணர்­வில் மூழ்­கிப்­போ­ னார்.பன்­னி­ரண்டு தினங்­கள் ஊனினை உருக்கி விடு­த­லை­யின் உள்­ளொ­ளியை இலட்­சி­ய­மா­கப் பெருக்­கிக் கொண்­டார்.

https://newuthayan.com/story/11/மக்களுக்காகப்-போராடிய-விடுதலைப்-போராளி.html

Link to comment
Share on other sites

திலீபனின் நினைவிடத்தில் குருதித்தானம்

 

 

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் இன்று குருதித்தானம் வழங்கப்பட்டது.

42269281_1028523087307952_59102283204856

https://newuthayan.com/story/11/திலீபனின்-நினைவிடத்தில்-குருதித்தானம்.html

 

 

 

திலீ­ப­னின் நினை­வேந்­த­லில்- முதன்­மைச் சுடரை மாவீ­ரர் குடும்­பத்­தி­னரே ஏற்­று­வர்!!

 

 

நல்­லூ­ரில் அமைந்­துள்ள தியாகி திலீ­ப­னின் நினை­வுத் தூபி­யில் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஏற்­பாட்­டில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் நினை­வேந்­த­லில் முதன்­மைச் சுடரை மாவீ­ரர் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­களே ஏற்­று­வார்­கள்.

மாவீ­ரர் குடும்­பங்­க­ளுக்கே நினை­வேந்­த­லில் முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­ப­டும். இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை உறுப்­பி­னர்­கள் நேற்­றுத் தீர்­மா­னம் எடுத்­துள்­ள­னர்.

தியாகி திலீ­ப­னின் நினை­வேந்­தல் நிகழ்­வு­களை யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை நடத்­து­வ­தாக அறி­வித்­துள்­ளது. இந்த நிலை­யில், நினை­வேந்­த­லுக்­கான ஏற்­பா­டு­கள் தொடர்­பில் ஆரா­யும் கலந்­து­ரை­யா­டல் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் நேற்று இடம்­பெற்­றது. 24 உறுப்­பி­னர்­கள் பங்­கேற்­ற­னர்.

நல்­லூர் கந்த சுவாமி ஆல­யத்­துக்கு வட கிழக்கு மூலை­யில் – தியாகி திலீ­பன் உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி உயிர்­நீத்த இடத்­தில், காலை 10.48 மணிக்கு அக­வ­ணக்­கம் செலுத்­தப்­ப­டும்.

நல்­லூர் சிவன் ஆல­யத்­தின் பின் புற­மாக – பருத்­தித்­துறை வீதி­யில் தியாக தீபம் திலீ­பன் நினை­வுத் தூபி அமைந்­தி­ருந்த இடத்­தில் அஞ்­சலி நிகழ்வு நடத்­தப்­ப­டும்.

நினை­வேந்­த­லின் போது, பொதுச் சுட­ரேற்­றல், ஈகச் சுட­ரேற்­றல், தியாகி திலீ­ப­னின் திரு உரு­வப்­ப­டத்­துக்கு மலர் மாலை அணி­வித்­தல் போன்­ற­வற்றை மாவீ­ரர் குடும்­பத்­த­வர்­க­ளைக் கொண்டு செய்­வது என்­றும், அதன் பின்­னர் வருகை தரும் அனை­வ­ரும் எது­வித பேதங்­க­ளு­மின்றி அஞ்­சலி செய்­வ­தற்கு ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தெ­ன­வும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

நினை­வேந்­தல் நிகழ்வு இடம்­பெ­றும் இடத்­துக்­குத் தேவை­யான வச­தி­களை ஏற்­ப­டுத்­திக் கொடுப்­ப­தற்­கும், நிகழ்வு இடம்­பெ­றும் நேரத்­தில், காலை 10 மணி முதல் நண்­ப­கல் 12 மணி வரை பருத்­தித்­துறை வீதி­யில் நல்­லூர் சிவன் கோவி­லுக்­குப் பின்­பு­ற­மாக போக்­கு­வ­ரத்­துக்­காக அரு­கில் உள்ள மாற்­றுப் பாதையை பயன்­ப­டுத்­தும் ஒழுங்கை அறி­விப்­ப­தெ­ன­வும் மேயர் தெரி­வித்­துள்­ளார்.

நேற்­றைய கூட்­டத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ், ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த 24 உறுப்­பி­னர்­கள் பங்­கு­பற்­றி­னர்.

https://newuthayan.com/story/11/திலீ­ப­னின்-நினை­வேந்­த­லில்-முதன்­மைச்-சுடரை-மாவீ­ரர்-குடும்­பத்­தி­னரே-ஏற்­று­வர்.html

 

 

 

வல்வெட்டித்துறையில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!!

 

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சந்தியில் தியாகி தீலிபனுக்கு அன்று அஞ்சலி செலுத்தப்பட்டமு.

ஐனநாயக போராளிகள், தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின.

நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், வல்வெட்டிதுறை தவிசாளர் கோ.கருணாணந்தராசா, நகரசபை உறுப்பினர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வைத் தொடர்ந்து குருதித்தானம் வழங்கப்பட்டது.

20180923_102745-750x430.jpg20180923_102507-750x430.jpg20180923_101321-750x430.jpg

https://newuthayan.com/story/11/வல்வெட்டித்துறையில்-தியாகி-திலீபனுக்கு-அஞ்சலி.html

Link to comment
Share on other sites

தியாகி திலீபனுக்கு -புங்குடுதீவில் நினைவேந்தல்!!

 
 

தியாகி திலீபனின் ஒன்பதாவது நாள் நினைவேந்தல் நிகழ்புங்குடுதீவு பெருங்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் முன்னாள் போராளிகள் , தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள், பொது மக்கள், இளைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

20180923_110603-750x430.jpg20180923_105956-750x430.jpg20180923_100711-750x430.jpg

https://newuthayan.com/story/14/தியாகி-திலீபனுக்கு-புங்குடுதீவில்-நினைவேந்தல்.html

Link to comment
Share on other sites

பார்த்தீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கின்றான்!!

 

தியா­க­தீ­பம் திலீ­ப­னின் நினை­வு­ நா­ளைக் கடைப்­பி­டிக்­கின்ற காலப்­ப­கு­தி­யில், மூ பத்து அண்­டு­க­ளுக்கு முன்பு அன்று நல்­லூர் ஆலய முன்­ற­லில் தியாகி திலீ­பன் ஊனினை உருக்கி, உள்­ளொளி பெருக்கி கூறி­யவை வெறும் வார்த்­தை­கள் அல்ல, அவை அருள்­வாக்­கு­கள் என்­பதை நாம் உணர்ந்­து­கொள்ள வேண்­டும்.தற்­போது உணர்ந்­து­கொள்­ளத் தலைப்­ப­டு­கி­றோம். ‘மக்­கள் புரட்சி வெடிக்­கட்­டும்! சுதந்­திர தமி­ழீ­ழம் மல­ரட்­டும்!’ என அன்று தியாகி திலீ­பன் கூறிய வார்த்­தை­கள் இன்று ஈழத்­த­மி­ழி­னத்­துக்கு அவ­சி­ய­மான,சுவாத்­தி­ய­மான ஒன்­றாக மாறி­யி­ருக்­கின்­றது.

துரோ­கம்
அன்று வெளிக்­காட்­டத் தொடங்­கிய காந்­தி­தே­சத்­தின் துரோக நாட­கம் இன்­று­வரை தொடர்­க­தை­யா­கத் தொடர்­கின்­றது.நல்­லி­ணக்­கம் என்ற பெய­ரில் உள்­நு­ழைந்து கொண்­டுள்ள இந்­தியத் தேசி­யத்­தின் அடி­வ­ரு­டி­கள் எம் ­தேசத்­தில் குந்­தி­யி­ருந்து இன்­ன­மும் நிந்­திக்­கின்­ற­னர்.செய்த து ரோ­ கங்­களை மறந்து போலி அர­வ­ணைப்­பால் வஞ்­சிக்­கின்­ற­னர்.

பிராந்­திய நலன் சார்ந்து தங்­கள் காரண காரிய சித்­தியை தமி­ழர் தேசத்­திடைத் தேடி அலங்­க­ரித்து நினை­வி­ருத்­திக் கொள்­கின்­ற­னர்.எம் இன விடு­த­லைப் படி­மங்­களை வேரோடு அகற்றி அழித்­த­வர்­களை பணிந்து காரி­ய­மாற்­று­கின்­ற­னர்.போலிக் காந்­தியவாதி­க­ளாகக் கார­ண­மில்­லாத கார­ணங்­களை நியா­யப்­ப­டுத்­திக் கொள்­கின்­ற­னர்.தனித்­து­வ­மான இனத்­துவ உரி­மை­களை வேண்டி நாம் கண்­டு­கொண்ட வலி­க­ளும் வேத­னை­க­ளும், இழப்­புக்­க­ளும் அவ­லங்­க­ளும் இவர்­க­ளுக்­குத் தெரி­யுமா?

துய­ரங்­களை உண­ராத வல்­ல­ர­சு­கள்
தமி­ழீ­ழம் என்ற கோரிக்­கை­யை­யும் அதற்­கான தமி­ழர்­க­ளின் நியா­ய­மான போராட்­டங்­கள் தொடர்­வ­தை­யும் காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான இந்­திய அரசு எப்­போ­துமே ஆத­ரிக்­க­வில்லை.தற்­போ­துள்ள பா.ஜ.க அர­சும் அதனை ஒத்­தி­சைந்து காரி­ய­மற்ற கூட்­டிசை பாடு­கி­றது.இத்­தகு கசப்­பான உண்­மையை நாம் உணர்ந்­து­கொள்ள வேண்­டும். இது உண்­மை­யென்­ப­தைத்­தான் ஈழத்­த­மி­ழர்­கள் தொடர்­பி­லும், புலம்­பெ­யர் ஈழத் தமி­ழர்­கள் தொடர்­பி­லும் இந்­திய கொண்­டுள்ள கருத்­தா­டல்­க­ளும்,அதன்­பால் அமைந்த செயற்­பா­டு­க­ளும் தெளி­வு­ப­டுத்தி நிற்­கின்­றன.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்­டும்.இந்­தியா ஈழத்­த­வர்­க­ளுக்­காக மனம் மாறும் என நம்­பி­யி­ருத்­தல் பெரும் தவறு. அன்று திலீ­பனை நாம் இழந்து போன­தைப் போல எதிர்­கா­லத்­தில் எம்­மு­டை­ய­தான இலட்­சி­யங்­க­ளை­யும்,தாய் மண்­ணை­யும் இழந்து நிரந்­த­ர­மான அக­தி­க­ளா­கவே வாழ வேண்­டிய இழி­நி­லைக்­குத் தள்­ளப்­ப­டு­வோம். இந்­தி­யா­வின் ஆத­ரவு தமி­ழர்­க­ளுக்­குக் கிடைக்­கும் என்ற நிஜ­மற்ற நிழ­லான சந்­தர்ப்­பங்­கள் கூட தற்­போ­தைக்கு இல்­லை­யென்­பதை உள்­ளார உணர்ந்­து­கொள்ள வேண்­டும். தமி­ழர் தலை­மைத்­து­வங்­கள் உறு­தி­யான நிலைப்­பா­டு­களை தெளி­வான அர­சி­யல் இரா­ஜ­தந்­திர ஞானத்­தி­னின்­றும் எடுத்­தி­ருக்க வேண்­டும். தமி­ழர்­க­ளுக்­காய் ஆத­ர­வ­ளிக்­கக் கூடிய பிற­நா­டு­க­ளின் ஆத­ர­வைத் திரட்­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

அந்­த­வ­கை­யில் பல கால­மாகத் தமி­ழர் விட­யத்­தில் பாரா­மு­க­மாக இருந்­து­வந்த மேற்­கு­லக நாடு­கள் சில­வும் குறிப்­பாக, அமெ­ரிக்கா,கனடா,ஆஸ்­ரே­லியா மற்­றும் ஐரோப்­பிய நாடு­கள் போன்­றவை தமி­ழர்­க­ளுக்குச் சார்­பாக ஆத­ர­வ­ளிக்­கக்­கூ­டிய தன்மை வெளியை குறைந்­த­பட்­ச­மே­னும் கொண்­டுள்­ளன.இந்­தப் பன்­னாட்டு நிலை­மாற்­றங்­களை ஈழத் தமி­ழர்­க­ளுக்குச் சாத­ க­மாக்­கிக் கொள்ளத் தமி­ழர் தலை­மைத்­து­வங்­கள் பணி செய்ய வேண்­டும். இத­னைச் சாத­க­மாக கையா­ளு­வ­தன் மூ­லம், தமி­ழர்­கள் தமது உரி­மை­யின் படி­நி­லை­களை எட்­டிப் பிடிப்­ப­தற்­கான சாத்­தி­யக் கூ­று­கள் எதிர்­கா­லத்­தில் வலுப்­பெ­ற­லாம்.

எதேச்­ச­தி­கா­ரம்
சிங்­கள அர­சோடு கூட்­டுச்­சேர்ந்து நிற்­கும் இந்­தியா,சீனா உள்­ளிட்ட ஒரு­சில நாடு­க­ளைத் தவிர பெரும்­பா­லான பன்­னா­டு­க­ளின் நட­வ­டிக்­கை­கள் இலங்­கை­ய­ர­சுக்கு எதி­ராக இருந்து சாத­க­மாக மாறி வரு­வ­தை­யும்,சாத­க­மாக இருந்து எதி­ராக மாறி­வ­ரு­வ­தை­யும் அவ­தா­னம் கொள்ள முடி­கி­றது. இவ்­வா­றான புறச்­சூழ்­நி­லை­களை தெளி­வு­றக் கையாள வேண்­டும்.

அத்­து­டன் சிங்­கள அர­சின் எதேச்­ச­தி­கா­ரப்­போக்­கும், வல்­ல­ர­சுத் தோர­ணை­யி­லான அறிக்­கை­க­ளும் கூட பன்­னா­டு­க­ளுக்கு இலங்­கை­ய­ர­சின் மீது சினத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.2009 ஆம் ஆண்­டு­க­ளில் இடம்­பெற்ற மனி­தப் பேர­வ­லங்­க­ளுக்­கும்,மனித உரிமை மீறல்­க­ளுக்­கும் அரசு இது­வ­ரை­யாக சரி­யான பொறி­மு­றை­க­ளை­யும் அது சார்ந்த பொறுப்­புக்­கூ­றல் செயன்­மு­றை­க­ளை­யும் மென்­போக்­கா­கக்­கூடச் செய்ய விருப்­பம் கொள்­ள­தி­ருக்­கி­றது.

நல்­லி­ணக்­கத் தோர­ணை­யில் காலத்­தைக் கடத்­தி­வ­ரு­கி­றது.ஆனா­லும் புலம்­பெ­யர் தேசத்­தில் தமி­ழர்­க­ளால் தொட­ரப்­பட்ட போராட்­டங்­கள் பன்­னாட்டு ரீதி­யில் பல விட­யங்­களை சாதித்­தி­ருக்­கின்­றன.அவை மெல்ல மெல்ல சாத­க­மாக மாறி­வ­ரும் பன்­னா­டு­க­ளின் நிலைப்­பா­டு­ க­ளி­லி­ருந்து தெரி­கின்­றது.

பிராந்­திய நலன்
ஈழத்­த­மி­ழர் விட­யத்­தில் உல­கில் செல்­வாக்கு மிக்க நாடு­க­ளான அமெ­ரிக்க ஐரோப்­பிய நாடு­கள் தற்­பொ­ழுது கடைப்­பி­டித்­து­வ­ரும் அணு­கு­மு­றை­கள் சிங்­கள அர­சுக்குப் பெரும் அச்­சத்­தையே கொடுத்­தி­ருக்­கின்­றது. ஆனா­லும் இந்­தி­யா­வும் சீனா­வும் தனக்­குப் பக்­கத்­து­ணை­யாக இருக்­கின்­றது என்ற குருட்­டுத்தனமான நம்­பிக்­கை­யின் பற்­று­த­லோடு சிங்­க­ளம் நிம்­ம­தி­ய­டை­ கின்­றது என்­ப­து­தான் உண்மை.

இலங்­கை­யின் அரு­காய் உள்ள பிராந்­திய வல்­ல­ர­சு­க­ளான இந்­தி­யா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­ யே­யான பனிப்­போர் எப்­போது உச்­ச­நி­லையை அடை­கின்­றதோ, அன்­றைக்கு இலங்கை இவற்­றின் முழு ஆத­ரவை இழக்­கும் சாத்­தி­யக்­கூ­று­கள் உரு­வா­கும். இவை­தான் தனது பக்­க­ப­லம் என்று நினைத்து மிடுக்­கு­டன் ஏனைய உல­க­நா­டு­களை பகைத்­துக்­கொள்­ளும் சிங்­க­ளம் இவற்­றின் ஆத­ர­வை­யும் இழந்­து­போ­கும். அநா­தை­யாய் அந்­த­ரித்­துத் திரி­யும் காலங்­கள் வெகு­தொ­லை­வில் இல்லை.

தமி­ழர் தலை­மைத்­து­வங்­க­ளின் கடமை
ஈழ­வி­டு­த­லைப் போராட்­ட­மா­னது தற்­போது தமிழ்­மக்­க­ளின் கைக­ளி­லேயே கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில், அதை முதன்­மை­யா­கக் கொண்டு நடத்­த­வேண்­டிய பொறுப்­பும் கட­மை­யும் சரி­யான தமி­ழர் தலை­மைத்­து­வங்­க­ளி­ட­மும்,புலம்­பெ­யர் தமிழ் மக்­க­ளி­ட­மும் சார்­ப­டைந்­தி­ருக்­கி­றது. மூன்று தசாப்த கால­மாகப் புலி­கள் தமது ஆயு­த­ரீ­தி­யான போராட்ட வழி­மு­றை­களை முன்­னெ­டுத்த நிலை­யில் ,அவர்­கள் இரா­ணுவ வெற்­றி­க­ளை­விட தமி­ழர்­கள் மத்­தி­யில் விடு­தலை தொடர்­பாக புரட்­சி­க­ர­மான எழுச்­சி­யையே அதிகம் எதிர்­பார்த்­தார்­கள்.

ஆனா­லும் எங்­க­ளின் விடு­த­லைக்­காக போரா­டி­ய­வர்­கள் எங்­க­ளி­டம் எதிர்­பார்த்த ஆகக்­கு­றைந்த எதிர்­பார்ப்­பு­க­ளைக்­கூட நிறை­வேற்ற முடி­யா­த­வர்­க­ளாக நாங்­கள் இருந்­தோம். அன்று திலீ­பன் மக்­க­ளி­டம் வேண்­டிக்­கொண்­ட­தும் அதைத்­தான். ‘மக்­கள் புரட்சி’ என்ற நிலையை அன்றே நாம் அடைந்­தி­ருப்­போ­மா­னால் இன்று நாம் விடு­தலை பெற்றுப் பல வரு­டங்­கள் ஆகி­யி­ருந்­தி­ருக்­கும்.திலீ­பன் கொண்ட பசித் தீயின் ஒளிர்­வும்,அவன் கொண்ட இலட்­சிய உறு­தி­யும் அதையே உரிமை ஒளிர்­வா­கச் சுட்­டி­நின்­றன. அப்­ப­டி­யில்­லா­விட்­டா­லும் ஆகக்­கு­றைந்­தது தமி­ழி­னத்­தின் அழி­வை­யா­வது தடுத்­தி­ருந்­தி­ருக்க முடி­யும்.

தமிழ்­மக்­கள் பெற்­றுக்­கொள்ள
வேண்­டிய விழிப்­பு­ணர்வு
நடந்­த­வை­கள் நடந்து முடிந்­த­த­வை ­யா­கவே இருக்­கட்­டும். இனி­மேல் நடக்­கப்­போ­வ­தைப் பற்றி சிந்­திப்­போம். எமது விடு­த­லை­யென்­பது எம்­மி­லேயே தங்­கி­யுள்­ளது. இவ்­வ­ளவு கால­மாய் அதை புலி­கள் பெற்­றுத்­த­ரு­வார்­கள் என்று சொல்­லிச் சொல்லி அனைத்­துப் பொறுப்­பு­க­ளை­யுமே அவர்­கள் தலை­யில் சுமத்­தி­யி ­ருந்­தோம்.எட்டி நின்று வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருந்­தோம்.அவர்­கள் எதிர்­பார்த்த பக்­க­ப­லத்­தை­யும்,ஒற்­று­மை­யை­யும்,காட்­டிக்­கொ­டுப்­பு­கள் அற்ற ஒன்­று­பட்ட சிந்­த­னை­க­ளின் கூட்­டி­ணை­வை­யும் கொடுக்­கத் தவ­றி­விட்­டோம்.

புலி­களைப் பன்­னா­டு­கள் தடை செய்­த­போது அதற்­கும் எமக்­கும் எந்­த­வித சம்­பந்­த­மும் இல்­லை­யென்ற வகை­யில் அமை­தி­யாக வில­கி­யி­ருந்­தோம். புலி­க­ளை­யும் தமிழ்­மக்­க­ளை­யும் பன்­னா­டு­கள் வேறு­ப­டுத்­திப் பார்த்­த­தற்­கும்,அவர்­க­ளது போராட்­டத்தை பயங்­க­ர­வா­தம் என முத்­திரை குத்­தி­ ய­தற்­கும் நாமே வழி­ய­மைத்­துக் கொடுத்­தோம். அன்று நாங்­கள் புரிந்­து­ விட்ட இந்­தத் தவ­று­க­ளின் ஒட்­டு­மொத்த வெடிப்பே இன்­றைய அத்­தனை அவ­லங்­க­ளுக்­கும் கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றன.

ஒற்­றுமை என்ற புரட்சி வேண்­டும்
எங்­கெல்­லாம் மக்­கள் புரட்சி ஏற்­ப­ட­வேண்­டிய தேவை இருந்­ததோ, அப்­போ­தெல்­லாம் நாம் அமை­தி­யாக இருந்­த­தன் விளைவை, வன்னி அவ­லங்­க­ளாய் அனுப­வித்­தோம். இனி­வ­ரும் காலங்­க­ளி­லும் இப்­ப­டி­யான தவ­று­களை இழைக்­கப் போகின்­றோமா? நாங்­கள் இது­வரை கால­மும் இழைத்த தவ­று­கள் தான் எம்மை இந்த நிலைக்­குக் கொண்டு வந்­தி­ருக்­கி­றது என்ற உண்­மையை உணர்ந்­த­வர்­க­ளாய் இனி­வ­ரும் காலங்­க­ளில் எம் விடு­த­லைக்­காக நாமே போரா­டு­வோம்.

மக்­கள் புரட்சி என்­பது ஒரு இலட்­சி­யத்­துக்­காக ஒட்­டு­மொத்த மக்­க­ளும் ஒன்­றி­ணைந்து ஒவ்­வொ­ரு­வ­ரும் தம்­மா­லான பங்­க­ளிப்பை தவ­றாது செய்­வது என்­பதே. “எமக்கு விடு­தலை வேண்­டும். அதை அடை­யும் வரை நாம் ஓயப்­போ­வ­தில்லை” என்ற புரட்­சி­க­ர­மான எண்­ணத்தை ஒவ்­வொ­ரு­வ­ரும் மன­தில் விதைத்­துக்­கொள்ள வேண்­டும். அதுவே மக்­கள் புரட்­சிக்­கான அடிப்­ப­டைத் தார்ப்­ப­ரி­யம்.உறு­தி­யான அடித்­த­ளம். “மக்­கள் புரட்சி வெடிக்­கட்­டும்” என்று கூறிய திலீ­பன் எனும் தியா­க­சீ­ல­னின் வேண்­டு­தலை சிர­மேற்­கொண்டு தேச விடு­த­லைக்­காக நாம் போராட முயற்­சிப்­போம். ஒற்­றுமை என்ற புரட்­சி­தான் நாளை எமக்­கு­ரித்­தான சுதந்­தி­ரத்­தைப் பெற்­றுத்­த­ரும் என்­பதை உணர்ந்­து­கொள்­வோம்.

https://newuthayan.com/story/09/பார்த்தீபன்-இப்போதும்-பசியோடு-தான்-இருக்கின்றான்.html

Link to comment
Share on other sites

தியாகி திலீபனுக்கு -மட்டக்களப்பில் நினைவேந்தல்!!

 
 

தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு புதுமண்டபத்தடி எண்ணம்பாலப்பூவல் பகுதியில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், தாகசாந்தி வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திலீபனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பிரதேச மக்கள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

D39BF84C-0427-4D37-ABA6-C9D7EFCBA723-7504EDEAC6B-23F5-4D07-9CD4-4DABB31A201D-7504DCAC492-54FD-4A51-9E10-39E72F6FB135-7502E81EC7A-0203-4B20-84F9-EBF042803DA6-750

https://newuthayan.com/story/15/தியாகி-திலீபனுக்கு-மட்டக்களப்பில்-நினைவேந்தல்.html

Link to comment
Share on other sites

அகிம்சையின் முழு வடிவம் திலீபன்!!

 

1987 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் 26 ஆம் திகதி, தமிழ்த் தேசிய விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் பெரும் மாறு­தல்­க­ளுக்கு வழி ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தது.ஆம், அந்த மாற்­றங்­க­ளுக்­கான முயற்­சி­யாண்­மை­யா­கத் திகழ்ந்த இரண்டு பெரும் போரா­ளி­கள் தியா­கச் சாவ­டைந்த தின­மாக அவை முதன்மை பெறு­கின்­றன.

இரு­பெ­ருங் கரங்­கள்
கேணல் சங்­கர், லெப் கேணல் திலீ­பன் ஆகி­யோர் தமி­ழர்­க­ளின் உரிமை மீட்­புக்­கான போராட்­டப் பாதை­க­ளில் ஏற்­ப­டுத்­திய அர­சி­யல்,இரா­ணுவ ரீதி­யான பரி­ணா­மக் கட்­ட­மைப்­பு­கள் விடு­த­லையை முன்­னோக்­கிக் கொண்டு சென்­றன.அவர்­கள் போராட்­டத்தை தாங்­கும் இரண்டு ­ பெ­ரும் கரங்­க­ளாகத் திகழ்ந்­த­னர்.

அந்த வ­கை­யில் ஐந்து கோரிக்­கை­களை இந்­திய வல்­லா­திக்க அர­சி­டம் முன்­வைத்துச் சாகும்­வரை உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை மேற்­கொண்ட திலீ­பன் தியா­கச் செம்­ம­லாய், தற்­கொ­டை­யின் தனித்­து­வ­மாய் மிளர்­கி­றார்.

ஐந்து அம்­சக் கோரிக்கை
•தமிழ் மண்­ணில் இருந்து இலங்கை இரா­ணு­வம் வில­கிக் கொள்ள வேண்­டும்.
•மண­லாற்­றில் முடுக்கி விடப்­பட்­டுள்ள சிங்­க­ளக் குடி­யேற்­றம் தடுத்து நிறுத்­தப்­பட வேண்­டும்.
•வட, கிழக்­கில் இடைக்­கால ஆட்சி அமை­யும்­வரை சகல மீள­மைப்பு வேலை­க­ளும் நிறுத்­தப்­பட வேண்­டும்.
•தமிழ்ப் பிர­தே­சத்­தில் சிங்­க­ள­வர்­க­ளைக் கொண்ட காவல் துறை நிலை­யங்­கள் திறக்­கப்­ப­ டு­தல் நிறுத்­தப்­பட வேண்­டும்.
•அர­சி­யல் கைதி­களை உட­ன­டி­யாக விடு­தலை செய்ய வேண்­டும்.

ஆதிக்­கச் சுய­ந­லம்
பண நோட்­டு­க­ளில் காந்­தியை அமர்த்­தி­யி­ருக்­கும் பாரத தேசம், திலீ­ப­னின் காந்­திய வழிப் போராட்­டத்­தைப் புரிந்து கொள்­ள­வில்லை.இந்­தி­யா­வின் பிராந்­திய ஆதிக்­கச் சுய­ந­லம், திலீ­பன் கொண்ட அகிம்­சைப் போராட்­டத்­தின் உள்­ளார்ந்த ஆத்ம வலி­மையை உணர்ந்­து­கொள்­ளும் பக்­கு­வத்­தைக் கொண்­டி­ருக்­க­வில்லை.அலட்­சி­யம் செய்து தமி­ழர் வேண்­டிய உரி­மை­யின் உண்­மை­யான நியா­ய­பூர்வ உயில் வடி­வங்­களைக் கிழித்­தெ­றிந்­தது.தனது கோர முகத்தை வெளிக்­காட்­டிக்­கொண்­டது.

வர­லாற்­றின் தொடக்­கம்
திலீ­ப­னின் நினைவை நெஞ்­சில் இருத்தித் தாய­கக் கவி­ஞர் புதுவை எழு­திய கவிதை மொழி­வின் நுட்­பங்­கள் உயி­ரோடு உரி­மை­யின் தகிப்பை விடு­த­லை­யு­றச் செய்­கி­ன்றன.

மர­ணம் வாழ்­வின் முடிவு
உனக்கு மர­ணமே வர­லாற்­றின் தொடக்­கம்
நீ ஒரு வர­லாறு
சரித்­தி­ரமே உன் சாவு!

நசுக்­கப்­ப­டும் இனக் குழு­மத்­தி­லி ­ருந்து ஆயு­த­மேந்­தி­ய­படி விடு­த­லைப் பணி­யைத் தொடங்­கிய திலீ­பன், பாரத தேசத்­துக்­குப் புரி­யும் வகை­யில் முன்­னெ­டுத்த அகிம்சை வழி­யான தற்­கொ­டைப் போராட்­டத்தைப் பல­வீ­னத்­தின் வெளிப்­பா­டா­கவே அது கரு­தி­யது.

அதி உன்­னத மானு­டம்
அகிம்­சை­யின் அதி உச்ச,அதி உன்­ன­தப் போராட்ட வடி­வத்தை ஏள­னம் செய்த இந்­தி­யத் தூதர் ஜே.என். டிக்­சித் பின்­னா­ளில் சுருட்­டுக் கதை சொல்லி தமி­ழர்­க­ளின் விடு­த­லைப் போராட்­டத்­தைக் கொச்­சைப்­ப­டுத்­தி­னார் என்­பதை தற்­போது நாம் நினை­வில் கொள்ள வேண்­டும்.

திலீ­பன் தனது சாவைத் தானே நிர்­ண­ யித்­தான்.அதற்கு முன்­பாக, “நான் என் உயி­ரி­லும் மேலாக நேசிக்­கும் மக்­களே..! உங்­க­ளி­டம் ஒரு பெரும் பொறுப்பை விட்­டுச் செல்­கி­றேன். நீங்­கள் அனை­வ­ரும் பரி­பூ­ர­ண­மா­கக் கிளர்ந்­தெழ வேண்­டும்.இங்கு ஒரு மாபெ­ரும் புரட்சி வெடிக்­கட்­டும். அனை­வ­ரும் எழுச்சி அடை­வார்­க­ளா­யின் தமி­ழீ­ழம் உரு­வா­வதை எவ­ரா­லும் தடுக்க இய­லாது. எமது உரி­மை­களை நாமே வென்­றெ­டுக்க வேண்­டும். இதற்கு வேறு யாரு­டைய தய­வை­யும் எதிர்­பார்க்­கக் கூடாது.” என்று அவர் கூறிய செய்தி இக்­கா­ல­கட்­டத்­திற்­கும் சரி­வ­ரப் பொருத்­த­மு­று­வ­தைக் அவ­தா­னிக்­க­லாம்.

இது சாவு வாக்கு மூல­மல்ல. தமி­ழர்­க­ளு­டைய போராட்­டப் பாதையை அழித்­திட அமை­திப் படை கொண்டு இந்­தியா விதித்த தந்­தி­ரோ­பா­யப் பொறி வலையை அறுத்­தெ­றியத் தனது உயி­ரையே அகிம்­சை­யின் ஆயு­த­மாக்­கிய போராட்­டச் சித்­த­னின் மக்­கள் புரட்­சிக்­கான அறை கூவல்.

ஆனா­லும் நவீன உல­கின் அகிம்­சைப் போராட்ட பரி­மா­ணத்­துக்­குச் சாவு மணி அடித்த பெருமை பாரத தேசத்­தையே சாரும்.இது மிகச் சோக­மான விட­யம்.காந்­தி­யின் போத­னை­கள் மட்­டு­மல்ல அவர் வாழ்ந்த குடி­லும் போத­னை­க­ளின்றி இந்­திய நூத­ன­சா­லை­க­ளில் சமா­தி­யாகி விட்­டன. ஆக,எவ­ரு­டைய தய­வை­யும் நாம் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கக் கூடா­தென்­கிற திலீ­ப­னின் கூற்று ஆத்­மார்த்­த­மான தீர்க்க தரி­ச­னம். தமி­ழர்­கள் அதை ஏற்­றுக் கொள்­ள­வும்,இலட்­சி­ய­மாய்ச் சிந்­தனை கொள்­ள­வும் வேண்­டும்.அதுவே சரி­யான நிலைப்­பா­டாக அமை­யும்.விடு­தலை தரும்.

https://newuthayan.com/story/05/அகிம்சையின்-முழு-வடிவம்-திலீபன்.html

Link to comment
Share on other sites

விடுதலையின் உறுதி பார்த்தீபம்!!

 

 

 

அழ­கான மழை­யு­திர்­கா­லம் கார்த்­திகை மாதம்.அழ­கான உவ­மான, உவ­மே­யங்­கள் அற்ற தியா­கக் கோலம் பார்த்­தீ­பன் முகம்.எங்­கும் மஞ்­சள் சிவப்­பாய் அன்­பின் வண்­ணங்­களைச் சூடியபடி காந்­தள் மலர்­க­ளின் ஒத்­திகை.நீள் துயில்­வின் விழிப்­பாய் சுடர்­வி­டும் ஒளி­யின் மிளிர்கை.தென்­ற­லோடு ஆர்ப்­ப­ரிக்­கும் பாக்­க­ளின் இடை­வி­டாத இசை­வின் அளிக்கை.நெஞ்­சங்­கள் பட­ப­டக்க ஆன்­மங்­கள் எழுந்­த­ரு­ளும் கோல­மாய் ஒப்­பில்­லாத கண்­ணீர் மழை­யின் பொழிகை.தேசம் எங்­கு­மாய் உற­வு­க­ளின் கூடுகை.இத்­த­னை­யும் விடு­த­லை­யின் வர­லாற்­றுப் படி­க­ளாய் எம்­மோடு.எம்­மூடு பய­ணப்­ப­டு­கின்­றது.வீர தீரங்­க­ளாய்,பசித் தீயின் சுட­ராய் அழி­வு­களை சுட்­டெ­ரித்த தீயி­ட­லாய் தியாக தீபம் எப்­போ­து­மாய் பொருள் கூறப்­பட்­டுக் கொண்­டே­யி­ருக்­கி­றது.தமிழ்ச் சமூக விடு­த­லை­ யின் இலக்­க­ண­ உச்­ச­மாக.சிந்­த­னை­யின் எச்­ச­மாக உயர்வு பெற்­றி­ருக்­கின்­றது.

தியா­கத்­தின் தரு
இத­னி­டை­யாய்க் காலங்­கள் கரைந்து கொள்­கி­ன்றன.நீண்ட வழித்­த­டங்­க­ளின் போக்­கினை ஞாப­கங்­க­ளின் உள்­ளாய் நிஜத்­தின் வெளி­யாய்த் திரை­யிட்­டுச் செல்­கி­றது.அந்­த­வ­கை­யிலே தமி­ழி­னத்­தின் உரிமை விடி­யல் என்ற உன்­னத இலக்­கின் அடை­த­லுக்­கான உறு­தி­யின் பற்­று­தல் நகர்­வு­கள் என்­றும் மறந்து போகவோ மரித்­துப்­போ­கவோ முடி­யா­தவை.

கலை,கலா­சா­ரம்,ஒழுக்க விழு­ மி­யங்­கள், தனித்­து­வ­மான தமிழ் தாய் மொழி­யின் சிறப்பு,பொருண்­மிய மேம்­பாட்­டின் குறி­காட்­டி­கள்,நீதி செய்­த­லின் காப்­ப­கங்­கள்,காவல் பணி­யின் தீட்­சி­தங்­கள் இவை அத்­த­னை­யை­யும் கடந்­து­ தாய் மண் பற்­ற­று­தி­யின் மைய­மாய் காத்து இரட்­சித்து நின்ற முப்­ப­டை­க­ளின் பரி­மா­ணம்.அதன் முழு உரு­வ­மாய் வானு­யர்ந்து நின்ற கரி­கா­லத் தம்பி என்ற தலை­ம­க­னின் திரு­வு­ரு­வம், அவ­னோடு அசைந்த திலீ­பம் எனும் தியா­கத்­தின் தரு என்­றென்­றும் விழித்­தி­ ரை­ய­கன்று போகா­தவை.எதி­ரி­யின் விழி பிதுங்க தலை­சாய்ந்­தி­டாத செய­லு­ரு­வா­னவை!

செயல்­தி­ற­னற்ற வறட்சி
இந்தச் சந்­தர்ப்­பத்­திலே போர் முடி­ வுற்­ற­தன் பின்­பான ஒன்­பது ஆண்­டு­க­ளின் ஒழி­வி­னுள் அரசு என்று வரை­யறை கொள்­ளப்­ப­டு­கின்ற பொறி­மு­றை­கள் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் தமி­ழர்­க­ளுக்­கான தீர்வை நாட முன்­வ­ர­வில்லை.மூன்று தசாப்­த­கா­லங்­கள் சுமந்­தி­ருந்த மாட்­சிமை பொருந்­திய வேட்கை என்­பது சிறைப்­பட்­டி­ருக்­கின்­றது.இழைக்­கப்­பட்­ட­தான குற்­றங்­க­ளுக்கு நியா­யம் வழங்­கப்­ப­ட­வில்லை.

வெறு­மனே காலத்துக்குக் காலம் ஆட்­சி­யில் அமர்ந்து கொள்­ளு­கின்ற பெரும்­பான்­மை­யி­னம் என்­ப­தான முக­ மாற்­றங்­க­ளின் சுழற்சி என்­பது செய­லூட்­ட­மற்ற வறட்­சி­யாகத் தமிழ் மக்­க­ளோடு தொடர்­பு­று­கி­றது.
இலங்­கைத் திரு­நாட்­டின் வடக்­கா­கவும் கிழக்­கா­கவும் பூர்­வீ­கம் கொண்­டுள்ள ஒரு தனித்­துவ இன­மான தமிழ்­கு­டி­க­ளுக்கு நல் விடி­ய­லின் மொழி­வு­த­ரல் என்­பது வேறு­பட்ட திசை காட்­டி­களை நம்­பி­யி­ருக்­கி­றது.அவை அகிம்சை, ஆயு­தம் என்ற பரி­ணா­மங்­கள் தாண்டித் தற்­போது வாக்­கு­ரி­மை­யின் நடை­ மு­றைத் தொளிப்­பாக ஜன­நா­ய­கப் பண்­பின் வேக­மற்ற தொனிப்­பாக அசைந்­தி­ருக்­கி­றது.அமைந்­தி­ருக்­கி­றது.

இந்த அசை­வு­க­ளுக்கு உற்­சா­க­மான திட்­ட­மி­ட­லும் செயல் முனை­வான கூட்­டி­ணை­வும் தேவைப்­ப­டு­கின்­றது.விறு­வி­றுப்­பான வார்த்­தை­கள் களைந்த சுறு­சு­றுப்­பான இலக்கு நிர்­ண­யப் பாய்ச்­ச­லின் இடை­வி­ல­க­லற்ற பங்­காற்­றல் வேண்­டப்­ப­டு­கி­றது.உரிமை என்ற உயர்வை அடைய வேண்­டு­மெ­னில் நடந்து வந்த பாதை­க­ளின் மீள்­பார்­வை­யும் அவற்­றின் உள்­ளாய் கருத்­துக்­களை எடுத்­தி­யம்­பு­கின்ற பக்­கங்­க­ளின் வாசிப்­பி­னை­யும் மிகைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்!

சிந்­தித்துச் செய­லாற்­றுங்­கள்
ஆக,ஒரு புரட்­சி­யின் வித்­த­க­மான தானைத் தமி­ழ­னின் நாமங்­க­ளும், மீளாத நினை­வும்,அவன் ஆயு­ளின் அதிப்­ப­டுத்­த­லும் உச்­ச­ரிக்­கப்­பட்­டும் ஞாப­கம் கொள்­ளப்­பட்­டும் விட்­டது.ஆயி­ரம் ஆயி­ரம் உயிர் தியா­கங்­க­ளின் ஓவி­யம் மனத் திரை­க­ளிடை வரைந்­து­கொள்­ளப்­பட்ட நிகழ்­வு­க­ளின் தரு­ணங்­க­ளும் அவ­னோடு நகர்ந்­த­விட்­டது.இருந்த போதும் தமி­ழி­னம் எதிர்­கொண்ட,எதிர்­வு­கூ­று­கின்ற துன்­பங்­கள் அழிந்­து­போ­க­வில்லை.

வெற்றி என்ற இலக்குக்கான செயல் உறு­தி­யோடு நகர்­வுற வேண்­டிய கணப்­பொ­ழு­து­களை உச்­ச­ரித்து ஓய்­கி­றது! மூ பத்து ஆண்­டு­க­ளின் தியாக வேட்­கையை, தமி­ழர் எதிர்­கா­லத்­தின் நிலைத்­தி­ருப்பை ஜன­நா­யப் பண்­பின் செயல்­வ­டி­வங்­க­ளி­டம் விடு­த­லை­யின் உறு­தி­யாய் நம்­பிக்­கை­யோடு ஒப்­பு­விக்­கி­றது. சிந்­தித்­த­படி நித்­த­மும் செய­லாற்­றுங்­கள்.
ஆம், இளை­ஞர்­க­ளாக,ஒற்­று­மை­யின் பல­வான்­க­ளாக,இலட்­சி­யத்­தின் போரா­ளி­க­ளாக இனி­யா­வது இந்த நிலை­யி­லி­ருந்து மீள்­வோமா? அதற்­காக ஒரு­ மு­கப்­பட்டுச் சிந்­திப்­போமா? சிந்­திக்க வேண்­டும்!

வாழ்க்­கை­யின் நியதி
அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்­றும் இருந்­தால் போதும் வேறு எது­வும் தேவை­யில்லை. அன்­பு­தான் வாழ்க்­கை­யின் ஒரே நியதி. எல்­லா­வி­த­மான சுய­ந­ல­மும் சாவுதான்.

மற்­ற­வர்­க­ளுக்கு நன்மை செய்­வ­து­தான் வாழ்க்கை. மற்­ற­வர்­க­ளுக்கு நன்மை செய்­யா­மல் இருப்­ப­து­தான் சாவு. என் இளை­ஞர்­களே, அன்­பு­டை­ய­வர்­க­ளைத் தவிர மற்­ற­வர்­கள் வாழ்­ப­வர்­கள் அல்­லர். என் குழந்­தை­களே…! மற்­ற­வர்­க­ளுக்­காக உங்­கள் மனம் உருக வேண்­டும் ஏழை எளி­ய­வர்­கள், பாம­ரர்­கள், ஒடுக்­கப்­பட்­ட­வர்­கள் ஆகி­ய­வர்­க­ளுக்­காக உங்­கள் மனம் உருக வேண்­டும்.

மற்­ற­வர்­க­ளின் நன்­மை­யின் பொருட்டு உங்­கள் இத­யமே நின்று, மூளைக் குழம்பி, உங்­க­ளுக்­குப் பைத்­தி­யம் பிடிக்­கும் என்ற நிலை வரும் வரை­யில் மற்­ற­வர்­க­ளுக்­காக நீங்­கள் மனம் உரு­குங்­கள். பிறகு இறை­வ­னின் திரு­வ­டி­க­ளில் உங்­கள் ஆன்­மா­வைச் சமர்ப்­பி­யுங்­கள். அப்­போது உங்­க­ளுக்கு ஆற்­றல் வரும், உதவி வரும், குறை­யாத ஊக்­கம் வரும்.

சுதந்­தி­ரம் இன்றி வளர்ச்சி இல்லை.
என்­னைச் சுற்­றி­லும் இருள் சூழ்ந்­தி­ ருந்­த­ போ­தும், முயற்சி செய்­யுங்­கள்! பயப்­ப­ டா­தீர்­கள்! பணத்­தால் பய­னில்லை ஒழுக்­கம் ஒன்­று­தான் துளைக்க முடி­யாத சுவர்­க­ளை­ யெல்­லாம் துளைத்து நம்மை முன்­னே­றச் செய்­கி­றது. சுதந்­தி­ரம் இல்­லா­மல் எந்த வளர்ச்­சி­யும் அடைய முடி­யாது.

வளர்ச்­சிக்கு முதல் நிபந்­தனை சுதந்­தி­ரம்.சமு­தா­யத்­தில் கொடு­மை­களை அகற்ற வேண்­டும். சமு­தா­யத்­தில் கொடு­மை­கள் வேண்­டாம். மற்­ற­வர்­க­ளுக்­குச் சுதந்­தி­ரம் அளிக்­கத் தயா­ராக இல்­லா­த­வ­னுக்கு, சுதந்­தி­ரம் பெறு­வ­தற்­குத் தகுதி கிடை­யாது.

நற் சமு­தா­யத்தை உங்­க­ளால் உரு­வாக்க முடி­யுமா? முடி­யும்! முடிய வேண்­டும் என்­ப­து­தான் என் நம்­பிக்கை. நல் வழி­யில் சமு­தா­யத்­தைப் புதுப்­பிப்­ப­தற்கு முயற்சி செய்­யுங்­கள்.

உங்­க­ளி­டம் ஊக்­கம் என்ற நெருப்பு பற்றி எரிய வேண்­டும். பிறகு அதை எல்லா இடங்­க­ளி­லும் பரப்­புங்­கள். வேலை செய்­யுங்­கள்.சுய­ந­லம் இல்­லா­த­வ­னாக இரு.எல்­லை­யற்ற பொறு­மை­யு­டன் இரு. அவ்­வி­தம் நீ செய்­தால் உனக்கு வெற்றி நிச்­ச­யம். மற்­ற­வர்­க­ளின் நன்­மைக்­காக வேலை செய்­வ­து­தான் வாழ்க்­கை­யின் இலட்­சி­யம். போலித்­த­னம் என்­பது இருக்­கக் கூடாது! பொய் கூடாது! போக்­கி­ரித்­த­னம் கூடாது! இதைத்­தான் நான் விரும்­பு­கி­றான்.ஒழுக்­கக்­கேடு என்ற மூச்­சுக்­காற்­று­கூட வீசக் கூடாது; செயல்­மு­றை­யில் குற்­றத்­தின் நிழல்­கூ­டப் படி­யக் கூடாது.

எல்­லா­வற்­றி­லும்
எச்­ச­ரிக்­கை­யாக இருங்­கள்
சல­ன­புத்தி வேண்­டாம், இர­க­சிய வித்தை என்ற அயோக்­கி­யத்­த­னம் வேண்­டாம், இருட்­டில் செய்­யும் சூதுகள் வேண்­டாம். என் வீரக் குழந்­தை­களே! முன்­னே­ றுங்­கள். பணம் இருந்­தா­லும் சரி, இல்­லா­மல் போனா­லும் சரி,உங்­க­ளு­டன் மனி­தர்­கள் இருந்­தா­லும் சரி, இல்­லா­மல் போனா­லும் சரி முன்­னே­றிச் செல்­லுங்­கள் கவ­ன­மாக இருங்­கள்.
உண்­மைக்­குப் புறம்­பான எல்­லா­வற்­றி­லும் எச்­ச­ரிக்­கை­யாக இருங்­கள். உண்­மை­யை­வி­டா­மல் பிடித்­து க்­கொள்­ளுங்­கள்!

https://newuthayan.com/story/09/தியா­கத்­தின்-தரு-திலீபன்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.