Jump to content

ஆட்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற சிறிலங்கா இராஜதந்திரி இத்தாலியில் கைது


Recommended Posts

ஆட்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற சிறிலங்கா இராஜதந்திரி இத்தாலியில் கைது

 

 

Arrest-300x199.jpgசட்டவிரோதமாக நான்கு பேரை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர் இத்தாலியின் மிலன், மல்பென்சா விமான நிலைய எல்லை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டோகாவில் இருந்து தனது மனைவி மற்றும் சுமார் 20 வயதுகளை உடைய, இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என நான்கு இளையோருடன், சுமார் 50 வயதுடைய சிறிலங்கா இராஜதந்திரி இத்தாலி வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

தமதும் மற்றும் மனைவியினதும் இராஜதந்திரக் கடவுச்சீட்டுக்களுடன், குறித்த நான்கு பேரினது கடவுச் சீட்டுக்களையும் இத்தாலிய குடிவரவு அதிகாரிகளிடம் கொடுத்த போதே அவர்கள் சந்தேகம் கொண்டு விசாரித்துள்ளனர்.

அப்போது, அவர்களை தமது மகள்மார் என்றும், இளைஞர்களை மருமகன்கள் என்றும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணைகளில், நால்வரினதும் கடவுச்சீட்டுகள் மோசடி செய்யப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறிலங்கா இராஜதந்திரியின் கைப்பையில் இருந்து சிங்களவர்களான நான்கு இளைஞர்களும், கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வந்த கடவுச்சீட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த இராஜதந்திரி தமது உறவினர் அல்ல என்றும், 4000 யூரோ கொடுத்து வெளிநாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இராஜதந்திரியின் உண்மையான பிள்ளைகளின் கடவுச்சீட்டுகளில் திருத்தம் செய்தே இந்த மோசடியை அவர் புரிந்துள்ளார்.

இதையடுத்து சிறிலங்கா இராஜதந்திரி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவியும், நான்கு இளைஞர்களும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/09/15/news/32893

Link to comment
Share on other sites

ஆட்கடத்தல் குற்றச்சாட்டில்  இத்தாலியில் கைதான  இலங்கையர்: வெளிவிவகார அமைச்சு விளக்கம் 

 

 
 

நான்கு இளைஞர்களை இத்தாலி நாட்டிற்குள் கடத்துவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இராஜதந்திர கடவுச்சீட்டுடன் கூடிய இலங்கையர் ஒருவர் மிலானில் அமைந்துள்ள மல்பென்சா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை தொடர்பாக இத்தாலியில் இருந்து வெளிவந்துள்ள ஊடக அறிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, குறித்த தகவலின் உண்மைத் தன்மையை கண்டறிந்து கொள்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உடனடி விசாரணைகளை  நடத்தியதாக வெளிவிவகார அமைச்சு  அறிவித்துள்ளது. 

foring.jpg

இது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மிலானில் அமைந்துள்ள இலங்கை கொன்சியூலேற் நாயகத்தின் அலுவலர்கள் கைதான நபரை சந்தித்து, அவரது அடையாளத்தினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த கைதான நபர் தற்பொழுது வெளிநாட்டிலுள்ள இலங்கையின் எந்தவொரு தூதரகத்திலோ, அல்லது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிலோ பணியாற்றும் நபரொருவரல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அவர் வலிதான இராஜதந்திர கடவுச்சீட்டொன்றை கொண்டிருக்கவில்லை என்பதுடன், இலங்கையில் அரச நிறுவனமொன்றில் பணியாற்றும் தகைமையின் கீழ் அவருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடவுச்சீட்டிலேயே அவர் இத்தாலி நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார். 

மேலும், குறித்த நபர் 2012 - 2015 வரையான காலப்பகுதியில் வெளிநாட்டில் இராஜதந்திர பணியொன்றிற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, அதற்காக இராஜதந்திர கடவுச்சீட்டு ஒன்றினை கொண்டிருந்ததுடன், அவரது ஒப்பந்தத்தின் நிறைவின் பேரில் குறித்த கடவுச்சீட்டு ரத்துச்செய்யப்பட்டிருந்தது.  

http://www.virakesari.lk/article/40666

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்கடத்தலில் தமிழர் ஈடுபட்டால் செய்தவரின் பெயர் ஊர் எல்லாத்தையும் போட்டு நாறடிப்பினம் சிங்களவர் செய்தால் இலங்கையர் எனும் ஒரு பதம் மட்டுமே போடுவினம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.