Jump to content

உன் உதட்டோரம்……… நான் இதழ் குவிப்பேன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

weed5452452-e1448074042264.jpg

விழி விரித்தாய்

பார்த்ததுமே பரவசத்தில்

உடல் சிலிர்த்தாய்

மோகமானாய் - பெரும் தாகத்தடன்

கட்டுடைத்து என்னங்கம் மேய்ந்தாய்

ஆசையோடு அழுத்தினாய்

தழுவலிலே தளர்வறிந்தாய்

தீண்டியும், நிமிண்டியும் – எனைத்

திரள வைத்தாய்.

உன் விரல்களிடை

என் இதழ் குவித்தாய்

விதவிதமாய் இரசித்து

 உன்னுதடழுத்திக் கவ்வினாய்

உரசலிலே தீ மூட்டி – எனை

உன்மத்தம் கொள்ள வைத்தாய்

என் தகிப்பில் தணல் வைத்தாய்

உறிஞ்சினாய் , உள்ளிழுத்தாய்

மினிக்கி ஆடும் எனை இழுத்து - உன்

சுவாசத்துள் சிறைப்பிடித்தாய்

தெரிந்தும்….. எனைச் சரணடைந்தாய்

கணம் பிரிய மறுத்தபடி

யாசகம் கேட்கிறாய்

அன்பே,

உன் உயிரள்ளிப் போகும்வரை

உன் உதட்டோரம்………

 நான் இதழ் குவிப்பேன்.

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய இளைஞர்களும் இளைஞிகளும் உயிரள்ளிப்போகும்வரை இதழ் குவிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லையாம்.

சிக்கெனப் பிடிப்பது என்ன என்பதை கவிதைக்கு இணைத்த படம் மூலம் அறிந்தேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுள் கைதிகளின் அவலத்தை அனுபவித்தவர்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

இப்போதைய இளைஞர்களும் இளைஞிகளும் உயிரள்ளிப்போகும்வரை இதழ் குவிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லையாம்.

சிக்கெனப் பிடிப்பது என்ன என்பதை கவிதைக்கு இணைத்த படம் மூலம் அறிந்தேன்?

சுத்தம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வல்வை சகாறா said:

weed5452452-e1448074042264.jpg

விழி விரித்தாய்

பார்த்ததுமே பரவசத்தில்

உடல் சிலிர்த்தாய்

மோகமானாய் - பெரும் தாகத்தடன்

மோகமானாய் -  யாழ். களத்தை.... நேசித்து, வல்வை  சகாறா  எழுதிய கவிதை அழகு.
கவிதையை  வாசிப்பவர்களின், மனதை... திசை திருப்ப... போட்ட படம்,   அழகிலும் அழகு.... ?

வல்வை  எப்பவும்... பொடி  வைத்து,  குசும்பாக... எழுதுபவர் என்பதால்....
தலைப்புக்கும், இதற்கும் சம்பந்தம் இருக்காது என்பதாலும்... 
இன்று... வெள்ளிக்கிழமை  என்பதாலும், மிக நிதானித்து வாசிக்கும் போது,
அவர் எம்மை... ஏமாற்ற வந்த விடயதை, கண்டு பிடித்து விட்டான், இந்த  இலையான்  கில்லர். 

அழகிய  கவிதைக்கு...  நன்றி  வல்வை  சகாறா.
உங்கள்   கவிதையின் வரிகளிலேயே...... நானும், யாழ் களத்தை  நேசிக்கின்றேன். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இன்று வெள்ளிக்கிழமை  இலையான் கில்லருக்கு யாழ் மீதான மோகம் எல்லை கடந்திருக்கும் என்று அறியாதவளா? அதனால் இன்று நீங்கள் விடுப்பு எடுத்து விட்டு நாளை வந்து  பாருங்கள். விடுபட்ட விடுப்பு என்ன என்று கண்டு பிடித்துவிடுவீர்கள். நீங்களே சொல்லி விட்டீர்கள் குசும்பு இருக்குமென்று நாளைக்கு வரைக்கும் குசும்பு குலையாமல் இருந்தால் நீங்கள் வந்து உடைத்து விடுங்கள்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வல்வை சகாறா said:

weed5452452-e1448074042264.jpg

விழி விரித்தாய்

பார்த்ததுமே பரவசத்தில்

உடல் சிலிர்த்தாய்

மோகமானாய் - பெரும் தாகத்தடன்

கட்டுடைத்து என்னங்கம் மேய்ந்தாய்

ஆசையோடு அழுத்தினாய்

தழுவலிலே தளர்வறிந்தாய்

தீண்டியும், நிமிண்டியும் – எனைத்

திரள வைத்தாய்.

உன் விரல்களிடை

என் இதழ் குவித்தாய்

விதவிதமாய் இரசித்து

 உன்னுதடழுத்திக் கவ்வினாய்

உரசலிலே தீ மூட்டி – எனை

உன்மத்தம் கொள்ள வைத்தாய்

என் தகிப்பில் தணல் வைத்தாய்

உறிஞ்சினாய் , உள்ளிழுத்தாய்

மினிக்கி ஆடும் எனை இழுத்து - உன்

சுவாசத்துள் சிறைப்பிடித்தாய்

தெரிந்தும்….. எனைச் சரணடைந்தாய்

கணம் பிரிய மறுத்தபடி

யாசகம் கேட்கிறாய்

அன்பே,

உன் உயிரள்ளிப் போகும்வரை

உன் உதட்டோரம்………

 நான் இதழ் குவிப்பேன்.

?

கட்டுடைத்து என்னங்கம் மேய்ந்தாய்
ஆசையோடு அழுத்தினாய்
உறிஞ்சினாய் இ உள்ளிழுத்தாய்
உன்னுதடழுத்திக் கவ்வினாய்

வேர்த்து விறுவிறுக்க வாசித்தேன்... சற்றே ஏமாற்றம் 
ஆனாலும் சகாரா அக்கா அனுபவித்து எழுதி இருப்பீர்களோ..
அருமை...அருமை...
இரட்டை அர்த்த மொழி ஜாலங்களோடு பொருள் நயம் பிறழாமல்  
கவிதை படைத்து இருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரசலில் தீ மூட்டி உன்மத்தம் கொள்ள வைத்தாய்

 தகிப்பில்  தணல் வைத்தாய்

மினுக்கி ஆடும் என்னை இழுத்து

உன் சுவாசத்துள் சிறைவைத்தாய்

உயிர் அள்ளிப்  போகும் வரை   போகும் வரை உன் உதடடோரம் .........

 காலனுக்கு இடட கவி  மடல் அருமை ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகைமூட்டம் ஓவியத்தில் மட்டுமல்ல கவிதையிலும் கூட ........ சூப்பர்........!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/14/2018 at 4:42 PM, Kavallur Kanmani said:

ஆயுள் கைதிகளின் அவலத்தை அனுபவித்தவர்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம்

நன்றி தோழி

வெள்ளைப்புடவைக்காரி என் வேதனைக்குச் சொந்தக்காரி என்று நீங்கள் எழுதிய கவிதைவரிகள் இன்னும் பசுவையாக என் நெஞ்சை விட்டு அகல மறுத்தபடி இருக்க, இன்னும் இறுமாப்புடன் தன்னை நோக்கி என்னையும் எழுத வைத்து அந்த வெள்ளைப்புடவைக்காரி வேடிக்கை பார்க்கிறாள். உன்னைக்காட்டிலும் அவன் மோகிப்பது என்னையே என்று இப்போதெல்லாம் என் துணைவனின் உயிர்ப்பூவோடு சீண்டி விளையாடி எனக்குள் துயரம் விதைக்கும் சக்களத்திபோல் ஆக்கிரமிப்பு செய்யும் கிராதகியை என்னால் என்ன செய்யமுடியும்? தூற்றி எழுதாமல் அவளாக மாறி எழுதுகிறேன் பல கவிதை அதில் இதுவும் ஒன்று.

On 9/14/2018 at 9:34 PM, Sasi_varnam said:

கட்டுடைத்து என்னங்கம் மேய்ந்தாய்
ஆசையோடு அழுத்தினாய்
உறிஞ்சினாய் இ உள்ளிழுத்தாய்
உன்னுதடழுத்திக் கவ்வினாய்

வேர்த்து விறுவிறுக்க வாசித்தேன்... சற்றே ஏமாற்றம் 
ஆனாலும் சகாரா அக்கா அனுபவித்து எழுதி இருப்பீர்களோ..
அருமை...அருமை...
இரட்டை அர்த்த மொழி ஜாலங்களோடு பொருள் நயம் பிறழாமல்  
கவிதை படைத்து இருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்..

 இரு பாலாருக்குமான போதை

படத்தைப்பார்த்து கவிதை தடுமாறும்...

கவிதை வாசித்து படம் தடம்புரளும்.

நன்றி சசி

வேர்த்து விறுவிறுத்து வாசித்து அடச்சா என்று ஏமாற்றம் அடைந்ததை எழுத்தில் பதிந்தமைக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/14/2018 at 10:13 PM, நிலாமதி said:

உரசலில் தீ மூட்டி உன்மத்தம் கொள்ள வைத்தாய்

 தகிப்பில்  தணல் வைத்தாய்

மினுக்கி ஆடும் என்னை இழுத்து

உன் சுவாசத்துள் சிறைவைத்தாய்

உயிர் அள்ளிப்  போகும் வரை   போகும் வரை உன் உதடடோரம் .........

 காலனுக்கு இடட கவி  மடல் அருமை ....

நிலாமதியக்கா காலனுக்கு கவிமடல்இடவில்லை

 மோகம் சொட்டச் சொட்ட எழுதி மூடினேன் பொருள் மறைத்தேன் கவி காலனுக்கு அல்ல கவியே காலன்..?

On 9/19/2018 at 5:02 PM, suvy said:

புகைமூட்டம் ஓவியத்தில் மட்டுமல்ல கவிதையிலும் கூட ........ சூப்பர்........!  tw_blush:

ஓ... சுவியண்ணை நீங்களும் உள்ளிழுத்து உற்சாகம் அடைந்தவரா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.