Jump to content

உலக நிகழ்வுகள்.....கம்யூனிஸ்ட்டின் கொலையை 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புக்கொண்ட பிரான்ஸ்


Recommended Posts

கம்யூனிஸ்ட்டின் கொலையை 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புக்கொண்ட பிரான்ஸ்

கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

60 ஆடுகளுக்கு பிறகு ஒப்புக்கொண்ட பிரான்ஸ்

France Algeriaபடத்தின் காப்புரிமைAFP Image captionமாரைஸ் ஆதீன்

மாரைஸ் ஆதீன் எனும் கம்யூனிஸ்ட் ஒருவரை, தங்கள் காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த அல்ஜீரியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு சித்திரவதை செய்து கொலை செய்ததாக பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இதை பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

1957இல் கைதானபோது 25 வயதாகியிருந்த ஆதீன், அல்ஜைர்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு கணிதவியலாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.

ஏழு ஆண்டுகள் கடுமையான போருக்குப் பிறகு 1962இல் அல்ஜீரியா பிரான்ஸ் இடமிருந்து விடுதலை பெற்றது.

Presentational grey line

2 பில்லியன் டாலர்கள் நிதியளித்த அமேசான் தலைவர்

அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ்

அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ், வீடு இல்லாதவர்களுக்கு உதவவும், புதிய பள்ளிகளை தொடங்கவும் நிறுவப்பட்ட அவரது தொண்டு நிறுவனத்திற்கு 2 பில்லியன் டாலர்களை வழங்குகிறார்.

உலகின் பணக்கார மனிதரான ஜெஃப், தன் தொண்டு நிறுவனம் டே ஒன் ஃபன்ட் (Day One Fund) என்று அழைக்கப்படும் எனவும் ட்வீட் செய்துள்ளார்.

ஜெஃப் பெசோஸின் மதிப்பு 164 பில்லியன் டாலருக்கு மேல் இருத்தாலும், மனித நேய நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவதில்லை என்று அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.

Presentational grey line

தகராறு செய்யும் டிரம்ப்

போர்டோ ரீக்கோபடத்தின் காப்புரிமைAFP/GETTY

போர்டோ ரீக்கோ தீவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சூறாவளியால் 3000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ ஆய்வுகள் கூறும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதனை மறுத்து வருகிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், "கடந்த ஆண்டு போர்டோ ரீக்கோவை தாக்கிய சூறாவளியால் 3000 பேர் உயிரிழக்கவில்லை. என்னை தவறாக சித்தரிக்கும் நோக்கத்தில் ஜனநாயக கட்சியினர் வேண்டும் என்றே உயிரிழந்தோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி கூறுகின்றனர்" என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சூறாவளியால் பலியானோரின் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

Presentational grey line

அச்சுறுத்தும் சூறாவளி

அச்சுறுத்தும் சூறாவளிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஃபுளோரன்ஸ் சூறாவளியால் அமெரிக்காவின் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்கள் வெளியுறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10 லட்சம் முதல் 30 லட்சம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்சார நிறுவனங்கள் கூறியுள்ளன. ஏற்கனவே பெட்ரோல், டீசலுக்கு அங்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-45517660

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.