Jump to content

முப்படைகளின் பிரதானியை காப்பாற்றும் சிறிசேனவின் முயற்சியை அமைச்சரவை நிராகரித்தது


Recommended Posts

முப்படைகளின் பிரதானியை காப்பாற்றும் சிறிசேனவின் முயற்சியை அமைச்சரவை நிராகரித்தது

 

 
 

முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரட்ண கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியைஇலங்கை அமைச்சரவை நிராகரித்துள்ளது.

எகனமி நெக்ஸ்ட் இந்த தகவலை வெளியிட்டுள்ளது

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

முப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன கைதுசெய்யப்படுவதை தடுப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அமைச்சரவையின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதிக்கு இந்த விடயத்தில் ஆதரவு கிடைக்காததை தொடர்ந்து பிரதமர் நாடு திரும்பியவுடன் இந்த விவகாரம் குறித்து மீண்டும் ஆராய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் வியட்நாமிலிருந்து நாடு திரும்பும் வரை இந்த விடயம் குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிடவேண்டாம் என அமைச்சர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஆள்கடத்தல்கள் படுகொலைகள் தொடர்பான விடயங்கள் குறித்து இடம்பெறும் விசாரணைகளி;ற்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டாம் என சிறிசேன  சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளிற்கு தெரிவித்துள்ளார் என ஊடகங்களி;ல் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மறுப்பு எதுவும் அரச தரப்பிலிருந்து வெளியாகவில்லை.

raveendraaa_wij.jpg

இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் முப்படைகளின் பிரதானிக்கு எதிரான ஆதாரங்களை சேகரித்துள்ளமை குறித்தும் அவரை கைதுசெய்வதற்கான நீதிமன்ற  உத்தரவினை பெற்றுள்ளமை குறி;த்தும் ஜனாதிபதி சீற்றமடைந்துள்ளார்.

கொழும்பில் தமிழ் இனைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத் மறைந்திருப்பதற்கு உதவினார் என முப்படைகளின் பிரதானி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/40378

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளேனில தந்த கசுக்கொட்டை சரியில்லை எண்டு பம்மாத்து விட்டுக் கொண்டு, கொமாண்டர் கைதாகாமல் இருக்க,ஆளை கெக்சிக்கோவிக்கு அனுப்பீட்டு, வரேக்கே கைதாகாமல் இருக்க அலுவல் பார்க்கிறார்.

உவர் ஆள் நசுகள் கள்ளர். ஊரில சொல்லுற மாதிரி வெள்ள வேட்டிக் கள்ளர்.

Link to comment
Share on other sites

இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவதைக் கண்டித்த சிறிலங்கா அதிபர்

 

maithripala-sirisena-300x200.jpgநீதிமன்ற நடவடிக்கையை எடுக்காமல், உயர்மட்ட இராணுவ அதிகாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று நண்பகல் நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் சிறிலங்கா காவல்துறை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்தே, சிறிலங்கா அதிபர் இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியிருந்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இதுபோன்று துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், சிறிலங்கா அதிபர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

எந்தவொரு இராணுவ அதிகாரிக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால், அவரை கைது செய்து நீண்டகாலம் தடுத்து வைப்பதற்குப் பதிலாக, சட்ட நடவடிக்கையை காவல்துறையினர் துரிதப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

இராணுவத்தினரை கைது செய்த பின்னர் விசாரரணக்கு நீண்டகாலம் இழுத்தடிப்பது, அரசியல் விவகாரமாக மாறும் என்றும் சிறிலங்கா அதிபர் எச்சரித்துள்ளார்.

குறைந்தபட்ச விளக்கமறியல் காலத்தை சிறிலங்கா காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன், சிறிலங்கா இராணுவத் தளபதி தொடர்பாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் செய்த விமர்சனங்கள் குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபரால் விமர்சிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2018/09/14/news/32879

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இதுபோன்று துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், சிறிலங்கா அதிபர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். 

எவ்வித விசாரணை இன்றி சிறையில் தமிழர் இருக்கலாமா ?

1 hour ago, நவீனன் said:

இராணுவத்தினரை கைது செய்த பின்னர் விசாரரணக்கு நீண்டகாலம் இழுத்தடிப்பது, அரசியல் விவகாரமாக மாறும் என்றும் சிறிலங்கா அதிபர் எச்சரித்துள்ளார். 

கீழே இருந்து மேலே போகும் ரெமோட்டோ சட்னி .. அரசியல் தீர்வு தொடர்பான நீண்ட கால இழுத்தடிப்பே ராணுவ நடவடிக்கை தமிழர் தெரிவாக இருந்ததது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.