Jump to content

2020ஆம் ஆண்டுக்குப் பிறகாவது நாட்டின் தலைவிதி மாறாதா?


Recommended Posts

2020ஆம் ஆண்டுக்குப் பிறகாவது நாட்டின் தலைவிதி மாறாதா?

 
 
kotha.jpg

 

 

எதிர்­வ­ரும் 2020ஆம் ஆண்­டி­லு­ம் இந்த நாட்­டின் அர­சி­யல் குழப்­பங்­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­காதுவிட்­டால், நாட்­டின் நிலை சீர்­செய்ய முடி­யா­த­வாறு மிக மோச­மான கட்­டத்தை எட்டி­வி­டும்.

2020ஆம் ஆண்டு அரச தலை­வர் மற்­றும் நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­கள் இடம்­பெ­ற­வுள்­ளன. இவற்­றின் முடி­வு­கள் நாட்­டின் எதிர்­கா­லத்­தையே தீர்­மா­னிக்­கப் போகின்­றன. அது மட்­டு­மல்­லாது அர­சி­யல்­வா­தி­க­ளின் இருப்­பை­யும் தீர்­மா­னிக்­கப் போகின்­றன.

மகிந்த தரப்­பில் அரச தலை­வர் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளரை அறி­விப்­ப­தில் நீண்ட தாம­தம் காணப்­ப­டு­கின்­றது. ஆரம்­பத்­தில் கோத்­த­பாய போட்­டி­யி­டவுள்ளதாகத் தக­வல்­கள் வெளி­யா­கின. அவ­ரும் அதைப் பகி­ரங்­க­மாக உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்­த­போ­தும், மகிந்­தவை ஆத­ரிக்­கின்ற சில­ரி­ட­மி­ருந்து அதற்கு எதிர்ப்­புக் கிளம்­பி­யது. வாசு­தேவ நாண­யக்­கார போன்ற மகிந்­த­வு­டன் மிக நெருங்­கி­ய­வர்­கள்­கூட கோத்­த­பா­யவை அரச தலை­வர் வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்­குத் தமது எதிர்ப்பை வெளி­யிட்­ட­னர்.

இதே­வேளை பெளத்­த­தே­ரர் ஒரு­வர் கோத்­த­பாய ஹிட்­லர் போன்று ஆட்­சி­பு­ரிய வேண்­டு­மென வேண்­டு­கோள் விடுத்­தமை நாட்­டில் பெரும் எதிர்ப்­பு­ணர்­வு­க­ளைத் தோற்­று­வித்­து­விட்­டது. தேர­ரின் இந்த வேண்­டு­கோள் ஹிட்­ல­ரைப் போன்று ஆட்சி செய்­வ­தற்கு கோத்­த­பா­யவே பொருத்­த­மா­ன­வர் என்­ப­தைச் சொல்­லா­மல் சொல்­லி­விட்­டது. இந்­தத் தேரர் ஹிட்­ல­ரைப் பற்­றித் தெரிந்­து­கொண்­டி­ருந்­தால் அவ்­வாறு வேண்­டு­கோள் விடுத்­தி­ருக்க மாட்­டார் என்­பது தெளி­வா­கத் தெரி­கின்­றது.

ஹிட்­லர் போன்று கோத்­த­பாய செயற்­ப­ட­வேண்­டும் என்ற கருத்­தால் எழுந்த சர்ச்சை

அது­மட்­டு­மல்ல சர்­வா­தி­கார ஆட்­சிக்கு இந்த நாட்­டில் என்ன தேவை எழுந்­துள்­ளது என்­ப­தும் தெரி­ய­வில்லை. ஹிட்­லர் செய்த கொடு­மை­க­ளைப் பல ஆண்­டு­கள் கழிந்­து­விட்ட போதி­லும் உல­கம் மறக்­க­வில்லை. ஆனால் பெளத்த தேரர் ஹிட்­லரை மறக்­கா­மல் இருப்­பது விந்­தை­தான். அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த போட்­டி­யிட முடி­யாது என்­ப­தால் வேறு எவ­ரா­வது ஒரு­வர்­தான் போட்­டி­யிட வேண்­டி­யி­ருக்­கும்.

ஐ.தே.கட்­சிக்­குள் ரணி­லின் பிடி தளர்­கி­றதா? என்று எழும் சந்­தே­கம்

மறுபக்­கத்­தில் பார்த்­தால், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அரச தலை­வர் தேர்­த­லில் கள­மி­றங்­கு­வார் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதி­லும், அவர் போட்­டி­யி­டு­வ­தில் கட்­சிக்­குள்­ளேயே எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

இள மட்டத் தலை­வர்­க­ளில் ஒரு­வர் போட்­டி­யிட்­டால் வெற்றி வாய்ப்புப் பிர­கா­ச­மாக இருக்­கும் என்­பது அந்­தக் கட்­சி­யைச் சேர்ந்த பல­ரது கருத்­தா­க­வுள்­ளது. குறிப்­பாக சஜித் பிரே­ம­தாஸ போட்­டி­யி­டு­வ­தைப் பல­ரும் விரும்­பு­வ­தா­கத் தெரி­கின்­றது. இவ­ரது தந்­தை­யார் மறைந்த அரச தலை­வ­ரான ரண­சிங்க பிரே­ம­தாஸ என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஐக்­கிய தேசி­யக்­கட்சிமேல் மட்­டத் தரப்­பி­ன­ரது கட்சி என்ற மாயையை நீக்கிக் கிரா­மப்­புற மக்­க­ளி­டத்­தி­லு­ம் அதைக் கொண்டு சென்­ற­வர் முன்­னாள் அரச தலை­வர் பிரே­ம­தாஸ என்­பதை எவ­ரு­ம் மறந்­து­விட முடி­யாது. ஏழை மக்­க­ளுக்­கான வீட்­டுத் திட்­டங்­களை நிறை­வேற்­று­வ­தில் அவர் முனைப்­பு­டன் செயற்­பட்­டார்.

மிக­வும் பின் தங்­கிய கிரா­மப்­பு­றங்­க­ளில் மாதி­ரிக் கிரா­மங்­களை அமைத்­துக் கொடுத்­தார். சஜித் பிரே­ம­தா­ஸ­வும் தந்­தை­யின் வழி­யில் செயற்­ப­டு­வ­தைக் காண முடி­கி­றது. மகிந்­த­வின் கோட்­டை­யான அம்­பாந்­தோட்டை மாவட்­டத்­தில் ஐக்­கிய தேசி­யக் கட்சி செல்­வாக்­கு­டன் இருப்­ப­தற்கு சஜித் பிரே­ம­தா­ஸ­வின் கடு­மை­யான உழைப்பே கார­ண­மா­கும். இந்த நிலை­யில் அரச தலை­வர் தேர்­த­லில் அவர் போட்­டி­யிட்­டால் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு அனு­கூ­ல­மாக இருக்­கு­மென்­பது பல­ரது கணிப்­பா­கும்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன தரப்பு மகிந்த தரப்­பு­டன் ஒன்­றித்துப் போய்­வி­டுமா?

இதே­வேளை, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும், மகிந்­த­வின் கட்­சி­யும் இணைந்து கொள்­வ­தற்­கான சாத்­தி­யக் கூறு­கள் இருப்பதை மறுத்­து­விட முடி­யாது. அரச தலை­வ­ரின் பக்­கம் பல­வீ­ன­மான நிலை காணப்­ப­டு­வ­தால், அவ­ரு­டன் உள்­ள­வர்­கள் மகிந்­த­வின் பக்­கம் தாவு­வ­தற்கே விரும்­பு­வார்­கள். அர­சி­யல்­வா­தி­கள் எப்­போ­துமே தமது நலன்­க­ளைப் பேணு­வ­தி­லேயே குறி­யாக இருப்­பார்­கள். இத­னால் காற்று வீசு­கின்ற பக்­கம் செல்­வ­தையே அவர்­கள் விரும்­பு­வார்­கள்.

இதே­வேளை மகிந்­த­வின் கால­டி­யில் இருந்து ஒரு காலத்­தில் சேவ­கம் புரிந்த முன்­னாள் பிர­தி­ய­மைச்­ச­ ரான மேர்­வின் சில்வா தெரி­வித்த சில கருத்­துக்­கள் சில­ரின் சுய­ரூ­பத்­தைத் தோலு­ரித்­துத் காட்­டி­விட்­டன. தாம் அரு­கில் இருக்­கும்­போதே ஒரு­வ­ரைச் சுட்­டுக் கொல்­லு­மாறு கோத்­த­பாய உத்­த­ரவு பிறப்­பித்­த­தாக அவர் தெரி­வித்­தமை ராஜ­பக்சாக்­க­ளைத் தெளி­வாக அடை­யா­ளம் காட்­டி­விட்­டது.

சில­வேளை கோத்­த­பாய ஆட்­சிக்கு வந்­தால் என்ன நடக்­கும் என்­ப­தை­யும் அது கோடி­காட்­டி­யுள்­ளது. மேர்­வி­னின் கருத்து ராஜபக்ச தரப்பினரது உண்மை முகத்தை எடுத்­துக் காட்­டி­விட்­டது.

வடக்கு அரசியல்

வடக்கை எடுத்­துக் கொண்­டால், விக்­னேஸ்­வ­ர­னுக்­குப் பாத­க­மான அம்­சங்­களே காணப்­ப­டு­கின்­றன. முன்­னாள் அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரனை அவர் பதவி நீக்­கம் செய்­த­மைக்கு எதி­ராக நீதி­மன்­றம் தடை உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளமை அவ­ரைப் பொறுத்­த­வ­ரை­யில் உருப்­ப­டி­யா­ன­தான இருக்­கப்­போ­வ­தில்லை.

டெனிஸ்­வ­ர­னின் மீள் வருகை நிர்­வாக ரீதி­யில் மட்­டு­மல்­லாது, அர­சி­யல் ரீதி­யி­லு­ம் அவ­ரைப் பாதிக்­கவே செய்­யும். மாகாண சபைத் தேர்­தல் விரை­வில் நடை­பெ­ற­வுள்ள நிலை­யில் இவ்­வா­றா­ன­தொரு நிலை காணப்­ப­டு­கின்­றமை இவ­ரைப் பொறுத்­த­வ­ரை­யில் நல்­ல­தா­கத் தெரி­ய­வில்லை.

தற்­போது நாட்­டில் நில­வு­கின்ற அர­சி­யல் குழப்­பம் நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை மட்­டு­மல்­லாது இன ஒற்­று­மை­யை­யும் வெகு­வா­கப் பாதித்து விட்­டது. இனப் பிரச்­சி­னைக்­கான தீர்­வும் எட்ட முடி­யாத தொலை­வுக்­குச் சென்­று­விட்­டது. 2020ஆம் ஆண்டு இடம்­பெ­றப்­போ­கும் தேர்­தல்­கள் நல்­ல­தொரு முடிவை வழங்­கும்­போ­து­தான் நாட்­டின் குழப்­பங்­க­ளுக்கு ஒரு தீர்வு கிடைக்­கும். இதில் தவறு ஏற்­ப­டு­மா­னால், நாட்­டின் பாதகமான தலை­வி­தியை எவ­ரா­லும் மாற்­றி­விட முடி­யாது.

https://newuthayan.com/story/12/2020ஆம்-ஆண்டுக்குப்-பிறகாவது-நாட்டின்-தலைவிதி-மாறாதா.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.