Jump to content

கொக்­குத்­தொ­டு­வா­யில்- 5 படகுகளுடன் தெற்கு மீனவர்கள் கைது!!


Recommended Posts

கொக்­குத்­தொ­டு­வா­யில்- 5 படகுகளுடன் தெற்கு மீனவர்கள் கைது!!

 
 
received_531236770661626-780x405.jpeg

 

 

முல்­லைத்­தீவு, கொக்­கு­ளா­யில் சட்­ட­வி­ரோ­த­மாக மீன்­பி­டி­யில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் தெற்கு மீன­வர்­கள் 5 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். 5 பட­கு­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

சாலைக்­கும், பேப்­பா­ரைப்­பிட்­டிக்­கும் இடைப்­பட்ட பகு­தி­யில் தெற்கு மீன­வர்­கள் மறைந்­தி­ருந்து தொழில் செய்­கின்­ற­னர் என்று கிடைத்த முறைப்­பாட்­டுக்கு அமைய முல்­லைத்­தீவு மாவட்ட கடற்­றொ­ழில் நீரி­ய­வ­ளத் திணைக்­க­ளத்­தி­ன­ரும், கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளும் எடுத்த முயற்­சி­யில் இவர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கொக்­கு­ளா­யில் வாடி அமைத்­துத் தொழில் செய்­யும் தென்­னி­லங்கை மீன­வர்­க­ளின் இறங்­கு­து­றை­யில் நேற்று அதி­காலை நீரி­யல்­வ­ளத் திணை­கள அதி­கா­ரி­கள் சோத­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது சுருக்கு வலை­கள் மற்­றும் தடை செய்­யப்­பட்ட மீன்­பிடி உப­க­ர­ணங்­க­ளு­டன் 3 பட­கு­கள் அகப்­பட்­டன. அவற்­றில் இருந்த 5 மீன­வர்­க­ளும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

எனி­னும் வேறு பல பட­கு­கள் தப்­பிச் சென்­றுள்­ளன என்று கூறப்­ப­டு­கின்­றது. பின்­னர் நேற்று மாலை­யில் நடத்­தப்­பட்ட சோத­னை­யில் 2 பட­கு­கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

அந்­தப் பகு­தி­யில் அனு­மதி பெறாது மீன்­பி­டித்­தமை, பதிவு செய்­யப்­ப­டாத படகு பயன்­ப­டுத்­தி­யமை, தடை செய்­யப்­பட்ட மீன்­பிடி உப­க­ர­ணங்­கள் வைத்­தி­ருந்­தமை எனப் பல பிரி­வு­க­ளில் அவர்­கள் மீது வழக்­குத் தாக்­கல் செய்ய வேண்­டி­யுள்­ள­தால் நேற்­றுக் குற்­றப்­பத்­தி­ரம் நீதி­மன்­றில் சமர்­பிக்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்ட்­டது.

கைது செய்­யப்­பட்ட மீன­வர்­கள் முல்­லைத்­தீ­வுப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு உட­ன­டி­யாக முதல் அறிக்கை (பி) சமர்ப்­பிக்­கப்­பட்­டது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.
இந்த நட­வ­டிக்­கை­க­ளின்­போது வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ர­னும் சம்­பவ இடத்­துக்­குச் சென்­றி­ருந்­தார்.

https://newuthayan.com/story/08/கொக்­குத்­தொ­டு­வா­யில்-5-படகுகளுடன்-தெற்கு-மீனவர்கள்-கைது.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.