Jump to content

நகைக் கள்ளனும் நானும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2018 at 3:17 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

... அவன் எப்படி என் கழுத்தில் இருந்து சங்கிலியை எடுத்தான் என்பது கூட எனக்கு இன்னும்  தெரியவில்லை. அடுத்த நிமிடம் சுய நினைவு வரப்பெற்று கண்ணை விளித்துப் பார்த்தால் அவன் இன்னும் என் முன் நிற்கிறான்...

ஏம்மா.. விலையுயர்ந்த தங்க நகையென்றால், ஆடையால் அதை மறைக்கும் அளவிற்கான உடுப்புகளை அணிந்திருக்கலாமே..?

வீட்டில் சும்மா தூங்கும் நகையையும் அணிந்தோம், பாதுகாப்பாகவும் இருந்தோம் என்ற நிம்மதியாவது இருந்திருக்குமே..?

குறைந்தபட்சம் ஆளரவமற்ற பகுதியில் செல்வதையாவது தவிர்த்திருக்கலம்..!

விடயங்களை  ஏன் 'controversial' ஆக கையாளுகிறீர்களோ தெரியவில்லை ! :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

சுமேயின் கதையைக் கேட்டதும்....இரண்டு சம்பவங்கள் எனக்கு உடனே நினைவுக்கு வந்தன!

அந்தக் காலத்து ரூட்டிங் புகையிரத நிலையத்துக்கு அருகில் ஒரு தமிழ்க்கடை புதிதாகத் திறக்கப்பட்டது! அங்கு ஒரு தமிழ்ப் பெண் காசாளராக வேலை செய்து கொண்டிருந்தார்! அந்தப் பக்கத்தால் வந்த ஒரு கறுவல்....அவரது கழுத்திலிருந்த தாலிக்கொடியை உருவிக்கொண்டு ஓடிவிட்டான்! 

கனடாவில் இப்படிதான் காப்புலி கலட்டிக் கொண்டோடிடான். ஆனால் பெறுமதி தெரியவில்லை. அடுத்தநாள், தாலியோட 2 பெண்டனும் தாலிக்கொடியுமா அட்டகாசமா போட்டுகொண்டு காப்புலி வர... பிறகென்ன.... தமிழ் பொடியள் ஆளை பிடிச்சு சாத்தோ, சாத்து என்று சாத்தி கொடியை மீட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழிப்பறிக்கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களை பொலிஸ் கோணத்தில்  விசாரணைசெய்வதானால் உங்கள் கணவரும் லிஸ்டில் இருக்கிறார். எதற்கும் அவரையும் கூப்பிட்டு "அன்போடு" விசாரித்தால் நல்லது. அண்மையில் நிகழ்ந்த விம்பிள்டன் பிள்ளையார் தேரின்போதும் 4-5 தாலிகள் களவாடப்பட்டதாக டாக்சிக்காரர் சொன்னார். அதுபோக மரணவீட்டு திருமணவீடுகளுக்குச் முழுப்பாரத்துடன் செல்லும் பெண்பளின் ஆபரணங்களை அவ்வப்போது கறுப்பர்கள் சூறையாடுவதாகவும் அறிந்தேன். தாலிக்கொடியாக இருந்தால் கழுத்து போயிரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

சிலோன்லை  இண்டியாவிலை வாழுற மக்கள் மாதிரி  லண்டனிலையும் வாழுறம் எண்டு நாசுக்காய் சொல்லுறீங்க...tw_tounge:

பெண்கள் எங்கும் பெண்கள் தானே. நகை என்பது ஒருவருக்கு அழகைக் கொடுப்பது. காலங்காலமாக அனைவராலும் அணியப்படுவது தானே.

9 hours ago, பெருமாள் said:

இப்படியொரு கருத்துக்குத்தான் ஒராள் வேண்டிகட்டிகொண்டு இருக்கிறா இப்போ நீங்களும் அதே வழியில் எவர் அடுக்கினால் உங்களுக்கு ஏதும் பாதிப்பா ? இரண்டரை என்ன 100 பவுனில் போடுங்க இங்குதான் தனியார் பாதுகாப்பு நிருவனம்கள் முடக்குக்கு முடக்கு இருக்கிறது பந்தாவா நகைகளை போட்டுகொண்டு பாதுகாவலர் புடை சூழ போய் வாருங்க . சும்மா அரசமரத்துக்கு கீல் நின்றுகொண்டு பறைவை எச்சம் போட்டுதாம் என்று வழமை போல் முகாரி பாடதீங்க.

வான் களவு போனதுக்கு போனில் கிரைம்  ரெபரன்ஸ் தரும் இங்குள்ள போலிஸ் .

நான் போட்டது ஒரு இரண்டு பவுண் சங்கிலிதான். நகையை போடக்கூடாது என்று நான் எங்கே சொன்னேன். நின்மதியாகப் போடக்கூட முடியவில்லை என்ற அங்கலாய்ப்புத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

சுமேயின் கதையைக் கேட்டதும்....இரண்டு சம்பவங்கள் எனக்கு உடனே நினைவுக்கு வந்தன!

அந்தக் காலத்து ரூட்டிங் புகையிரத நிலையத்துக்கு அருகில் ஒரு தமிழ்க்கடை புதிதாகத் திறக்கப்பட்டது! அங்கு ஒரு தமிழ்ப் பெண் காசாளராக வேலை செய்து கொண்டிருந்தார்! அந்தப் பக்கத்தால் வந்த ஒரு கறுவல்....அவரது கழுத்திலிருந்த தாலிக்கொடியை உருவிக்கொண்டு ஓடிவிட்டான்! 

ஐயோ....குய்யோ என்று குழறிய மனுசி....போலிசை அழைக்கப் போலிஸ் காரன்...அவவிடம்...அந்தக் கொடியின் பெறுமதி எவ்வளவு இருக்கும் எனக் கேட்கப் பதினைந்து பவுணுக்கு மனுசி விலை சொல்ல.....போலிஸ் காரனால்...அதை நம்பவே முடியவில்லை!

அதைக் களவெடுத்த கறுவலுக்கும் ...அந்தக் கொடியின் உண்மையான பெறுமதி...தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன்!

இன்னொரு சம்பவம்....பாரிஸில்..எனது உறவினரது திருமணத்துக்குப் போயிருந்த போது...நடந்தது!

திருமணம் நடந்த மண்டபத்தில்....ஆண்கள்...பெண்களுக்கு...என கழிப்பறைகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன!

நான் கழிப்பறைக்குப் போன போது....ஒரு ஆண்...பெண்கள் கழிப்பறை வாசலில் காவலுக்கு நிண்டதை...அவதானித்தேன்!

அது வழமைக்கு மாறாக இருக்கவே...எனது உறவினரினரிடம்...விசாரிக்க...அவர் கூறிய பதில் ...கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது!

உள்ளே சென்ற அவரது மனைவியின் ...கழுத்தில் தொங்கிய தாலிக்கொடி...இருபத்தியாறு பவுணாம்!

முன்பு ஒன்பது பவுண்  பதின்மூன்று பவுணில் தான் தாலிக்கொடி போடுவார்கள். அவர்களெல்லாம்கூட பின்னர் பழையது வித்து 25, 30 பவுண்களில் எல்லாம் போட்ட போடுகிற சம்பவங்கள் சாதாரணம். பல வயதுபோன கிழவிகள் கூட விதிவிலக்கல்ல.

4 hours ago, ராசவன்னியன் said:

ஏம்மா.. விலையுயர்ந்த தங்க நகையென்றால், ஆடையால் அதை மறைக்கும் அளவிற்கான உடுப்புகளை அணிந்திருக்கலாமே..?

வீட்டில் சும்மா தூங்கும் நகையையும் அணிந்தோம், பாதுகாப்பாகவும் இருந்தோம் என்ற நிம்மதியாவது இருந்திருக்குமே..?

குறைந்தபட்சம் ஆளரவமற்ற பகுதியில் செல்வதையாவது தவிர்த்திருக்கலம்..!

விடயங்களை  ஏன் 'controversial' ஆக கையாளுகிறீர்களோ தெரியவில்லை ! :rolleyes:

எனது நகை ஒரு இரண்டு பவுண் தான். நான் நின்றதும் பஸ்சும் கார்களும் செல்லும் பிரதான வீதியில். என் கெட்ட நேரம் யாருமே இருக்கவில்லை. 

33 minutes ago, vanangaamudi said:

இந்த வழிப்பறிக்கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களை பொலிஸ் கோணத்தில்  விசாரணைசெய்வதானால் உங்கள் கணவரும் லிஸ்டில் இருக்கிறார். எதற்கும் அவரையும் கூப்பிட்டு "அன்போடு" விசாரித்தால் நல்லது. அண்மையில் நிகழ்ந்த விம்பிள்டன் பிள்ளையார் தேரின்போதும் 4-5 தாலிகள் களவாடப்பட்டதாக டாக்சிக்காரர் சொன்னார். அதுபோக மரணவீட்டு திருமணவீடுகளுக்குச் முழுப்பாரத்துடன் செல்லும் பெண்பளின் ஆபரணங்களை அவ்வப்போது கறுப்பர்கள் சூறையாடுவதாகவும் அறிந்தேன். தாலிக்கொடியாக இருந்தால் கழுத்து போயிரும்.

என் கணவர் எப்படி?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது நகைச்சுவைக்காக அப்படி கூறினேன் எனினும் அதற்கும் சந்தர்ப்பம் இல்லாமல் இல்லை. நீங்கள் புறப்படும்போது உங்கள் கணவர் வீட்டில் இருந்திருக்கிறார் போல் உணரமுடிகிறது. இழந்த பொருளை முதன்மைப்படுத்தி உங்களுக்கு நடந்த சம்பவத்தையும்  உங்கள் ஆதங்கத்தையும் தடாலடியாக உங்கள் பதிவினூடாக வெளிப்படுத்தியிருக்கவேண்டிய நீங்கள் "மேலே சொன்னது போல் நடந்திருக்கும் என்றுதான் எல்லோரும் நினைப்பீர்கள். ஆனால் நடந்ததோ ..... " என்று சொல்லி நிறுத்தி சிறிது சஸ்பென்சை இழையோடவைத்து வாசகரின் பொழுதுபோக்கு அம்சம்போல  நீங்கள் விபரிப்பது சம்பவத்தின் உண்மைத்தன்மையில் வாசகர் வைக்கும் நம்பிக்கையை மிகவும் சரியவைத்துவிட்டது என்றுதான் சொல்லுவேன்.  அதேவேளை திருடர்கள் தொலைவிலேயே முகமூடிசகிதம் தம்மை தயார்படுத்திக்கொண்டு உங்களை நோக்கிவந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு உங்கள் பற்றிய தகவலை முன்கூட்டியே யாரோ தெரிவித்திருக்கிறார்கள். முகமூடியுடன் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது பலரின் அவதானிப்புக்குள்ளாகலாம் என்பதையும் திருடர்கள் அசட்டைசெய்து உங்களை அணுகியிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான்

நீங்கள் இப்பிடித்தான் எழுதுவீர்கள் என்று அனுமானித்தபடியால் கோபம் வரவில்லை. நகை என்பது பெரும்பாலான பெண்களுக்குப் பிடிப்பதுதான். உங்கள் கதையைப் பார்த்தால் நகை போடுபவர்கள் எல்லாம் மற்றவர்கள் நகையைத் திருடிப் போடுவதுபோல் கூறுகிறீர்கள். நான் வேலைசெய்து என்காசில் நகை வாங்கிப் போடுவதில் உங்களுக்கு ஏன் கோபம்.??????

உங்களுக்காவது என்னை விளங்கிச்சே...அது,அது போடுவதற்கு என்று ஒரு இடம் இருக்கு...இதே நீங்கள் உந்த நகையை கோயிலுக்கோ அல்லது தமிழர் கூடும் இடங்களுக்கோ போட்டுட்டுப் போய் களவு போயிருந்தால் அதற்காக நான் வருத்தப்பட்டு இருப்பன்.. நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசு ,ஆனால் வேலைக்கு போகும் போது ஏன் உங்களுக்கு ஏன் தங்க சங்கிலி ?...உது களவு எடுப்பவனுக்குத் தான் வேணும்...உதே இடத்தில் உங்கட பேஸையோ அல்லது போன் மடிக்,கணணியையோ   தொலைத்திருந்தாலும் கவலைப்பட்டு இருப்பன்

உங்களுக்கு நகை போடுவது விருப்பம். அதில நான் குறை சொல்லவில்லை. இடத்திற்கு தக்க படி போட வேண்டும்  என்று தான் சொல்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன பகிடி என்றால் மீண்டும் அந்த மேற்சட்டையை கொண்டு கொடுத்திருக்கிறான் பொலிஸ்க்காரன் பாருங்க அவன வாழ்த்தலாம் :)

53 minutes ago, ரதி said:

உங்களுக்கு நகை போடுவது விருப்பம். அதில நான் குறை சொல்லவில்லை. இடத்திற்கு தக்க படி போட வேண்டும்  என்று தான் சொல்கிறேன் 

அக்கா கழுத்து சங்கு கழுத்து தானே இதில் என்ன சந்தேகம் அந்த இடம் மாலை போடலாம் தானே :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2018 at 2:47 PM, ரதி said:

உண்மையாய் நகை களவு போச்சுதா அல்லது சுமோவின் கற்பனையோ தெரியவில்லை...உண்மையாய் களவு போயிருந்தால் ரதிக்கு மிக்க மகிழ்ச்சசி...உங்களை மாதிரி நகைகளை போட்டுக் கொண்டு படம் காட்டுபவர்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் .

2 hours ago, ரதி said:

உங்களுக்காவது என்னை விளங்கிச்சே...அது,அது போடுவதற்கு என்று ஒரு இடம் இருக்கு...இதே நீங்கள் உந்த நகையை கோயிலுக்கோ அல்லது தமிழர் கூடும் இடங்களுக்கோ போட்டுட்டுப் போய் களவு போயிருந்தால் அதற்காக நான் வருத்தப்பட்டு இருப்பன்.. நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசு ,ஆனால் வேலைக்கு போகும் போது ஏன் உங்களுக்கு ஏன் தங்க சங்கிலி ?...உது களவு எடுப்பவனுக்குத் தான் வேணும்...உதே இடத்தில் உங்கட பேஸையோ அல்லது போன் மடிக்,கணணியையோ   தொலைத்திருந்தாலும் கவலைப்பட்டு இருப்பன்

உங்களுக்கு நகை போடுவது விருப்பம். அதில நான் குறை சொல்லவில்லை. இடத்திற்கு தக்க படி போட வேண்டும்  என்று தான் சொல்கிறேன் 

எப்படித்தான் இப்படி பிரட்டி எழுத மனம் வருகிறதோ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

ஏம்மா.. விலையுயர்ந்த தங்க நகையென்றால், ஆடையால் அதை மறைக்கும் அளவிற்கான உடுப்புகளை அணிந்திருக்கலாமே..?

வீட்டில் சும்மா தூங்கும் நகையையும் அணிந்தோம், பாதுகாப்பாகவும் இருந்தோம் என்ற நிம்மதியாவது இருந்திருக்குமே..?

குறைந்தபட்சம் ஆளரவமற்ற பகுதியில் செல்வதையாவது தவிர்த்திருக்கலம்..!

விடயங்களை  ஏன் 'controversial' ஆக கையாளுகிறீர்களோ தெரியவில்லை ! :rolleyes:

உதைப் போடுடறதே மற்றவைக்கு காட்டத்தேனே.அதில எங்கை மறைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே இது ஒரு சராசரி நிகழ்வோடு ஒன்றிய கதைதான் இந்தக்கதையில் நீங்கள்தொட்ட இன்னொரு இடம் மிகவலுவானது. மனோரீதியானது. ஏன் அதனைக் கருப்பொருளாக எடுத்து இந்தக் கதையை இன்னொரு கோணத்தில் எழுத முடியாது???  திருடர்கள் அண்மித்த அந்தக்கணத்தில் தோன்றிய அச்சம் அந்த உணர்வையும் தொடரக்கூடிய சமூக மொழிகளையும் கோர்த்து இந்தக்கதைக்கு இன்னொரு பக்கத்தை உருவாக்கலாம். அது வித்தியாசமாகவும் இருக்கும்.இந்தக்கதையின் புறக்கோணத்தில் பாதிக்கப்பட்ட அகக்கோணம் வெளிப்படும். முயற்சியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெண்கள் எங்கும் பெண்கள் தானே. நகை என்பது ஒருவருக்கு அழகைக் கொடுப்பது. காலங்காலமாக அனைவராலும் அணியப்படுவது தானே.

நான் போட்டது ஒரு இரண்டு பவுண் சங்கிலிதான். நகையை போடக்கூடாது என்று நான் எங்கே சொன்னேன். நின்மதியாகப் போடக்கூட முடியவில்லை என்ற அங்கலாய்ப்புத்தான்

பொம்புளையள் கட்டாயம் பவுண் சங்கிலி போடோணுமெண்டு யார் சொன்னது? 
பொம்புளையளுக்கு ஏன் அணிகலன் முக்கியம்?  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/13/2018 at 2:30 PM, ரதி said:

உங்களுக்காவது என்னை விளங்கிச்சே...அது,அது போடுவதற்கு என்று ஒரு இடம் இருக்கு...இதே நீங்கள் உந்த நகையை கோயிலுக்கோ அல்லது தமிழர் கூடும் இடங்களுக்கோ போட்டுட்டுப் போய் களவு போயிருந்தால் அதற்காக நான் வருத்தப்பட்டு இருப்பன்.. நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசு ,ஆனால் வேலைக்கு போகும் போது ஏன் உங்களுக்கு ஏன் தங்க சங்கிலி ?...உது களவு எடுப்பவனுக்குத் தான் வேணும்...உதே இடத்தில் உங்கட பேஸையோ அல்லது போன் மடிக்,கணணியையோ   தொலைத்திருந்தாலும் கவலைப்பட்டு இருப்பன்

உங்களுக்கு நகை போடுவது விருப்பம். அதில நான் குறை சொல்லவில்லை. இடத்திற்கு தக்க படி போட வேண்டும்  என்று தான் சொல்கிறேன் 

நான் எப்படி எங்கு நகை போடவேண்டும் என்பது என் விருப்பம். ஏன் கோயிலுக்கு என்றால் நகை போடலாமோ ????அல்லது வேலைக்குப் போகும்போது ஏன் போடக்கூடாது???? நான் என்ன பதக்கம் சங்கியா போட்டுக்கொண்டு போனேன். இரண்டுபவுண் சங்கிலி. சாதாரணமாக ஒரு தங்கநகையும் போடக்கூடாது என்றால் எப்படி????

On 9/13/2018 at 3:25 PM, தனிக்காட்டு ராஜா said:

இதில் என்ன பகிடி என்றால் மீண்டும் அந்த மேற்சட்டையை கொண்டு கொடுத்திருக்கிறான் பொலிஸ்க்காரன் பாருங்க அவன வாழ்த்தலாம் :)

அக்கா கழுத்து சங்கு கழுத்து தானே இதில் என்ன சந்தேகம் அந்த இடம் மாலை போடலாம் தானே :grin:

ஏன்தம்பி எழுதியிருப்பதை ஒழுங்கா வாசிக்கிறேல்லையோ???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/13/2018 at 7:58 PM, சுவைப்பிரியன் said:

உதைப் போடுடறதே மற்றவைக்கு காட்டத்தேனே.அதில எங்கை மறைக்கிறது.

 நகை போடுவது மற்றவைக்குக் காட்ட மட்டும் இல்லை சுவைப்பிரியன் அளவான நகை போட்ட ஒருவரைப் பார்ப்பதுக்குத் நகை போடாத ஒருவரைப் பார்ப்பதுக்கும் வித்தியாசமிருக்கு. இள வயதினர் எதுவும் போடாவிட்டாலும் அழகாய் இருப்பார்கள். எம்வயதினர் பலர் மாதம் ஒருமுறை பேசியல் செய்துகொள்வதும் தாம் மற்றவர்கள் முன் அழகாக இருக்கிறோம் என்று காட்டத்தான். அழகாகவும் சுத்தமாகவும் இருக்கவேண்டும் என்பது எப்படித் தவறாகும். 

On 9/13/2018 at 9:32 PM, வல்வை சகாறா said:

சுமே இது ஒரு சராசரி நிகழ்வோடு ஒன்றிய கதைதான் இந்தக்கதையில் நீங்கள்தொட்ட இன்னொரு இடம் மிகவலுவானது. மனோரீதியானது. ஏன் அதனைக் கருப்பொருளாக எடுத்து இந்தக் கதையை இன்னொரு கோணத்தில் எழுத முடியாது???  திருடர்கள் அண்மித்த அந்தக்கணத்தில் தோன்றிய அச்சம் அந்த உணர்வையும் தொடரக்கூடிய சமூக மொழிகளையும் கோர்த்து இந்தக்கதைக்கு இன்னொரு பக்கத்தை உருவாக்கலாம். அது வித்தியாசமாகவும் இருக்கும்.இந்தக்கதையின் புறக்கோணத்தில் பாதிக்கப்பட்ட அகக்கோணம் வெளிப்படும். முயற்சியுங்கள்

நன்றி சகாரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது லேபர் ஆட்சி எல்லைகளை திறந்து விட்டதில் இருந்து அளவு கணக்கு இல்லாமல் நிகழ்கிறது.

இதுவும் போதைப்பொருள் பாவனையும் பெருகிப் போய் கிடக்கிறது.

பிரித்தானியாவை எனி பழைய பெருமை மிக்க நாடாகக் காண முடியுமோ தெரியவில்லை. அந்தளவுக்கு நாடு குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறும்படம் பார்த்த மாதிரி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

இது லேபர் ஆட்சி எல்லைகளை திறந்து விட்டதில் இருந்து அளவு கணக்கு இல்லாமல் நிகழ்கிறது.

இதுவும் போதைப்பொருள் பாவனையும் பெருகிப் போய் கிடக்கிறது.

பிரித்தானியாவை எனி பழைய பெருமை மிக்க நாடாகக் காண முடியுமோ தெரியவில்லை. அந்தளவுக்கு நாடு குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. 

உண்மைதான். ஆனால் லேபரை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. நான் இரண்டாவது தடவை கள்வன் நிற்கிறான். வந்தால் காட்டுகிறேன் என்று கூறியும் யாரும் வரவே இல்லை. இதற்காக மீண்டும் பொலிஸ் கொமிசனருக்கு ஒரு கடிதம் அனுப்புயுள்ளோம். எனில் தெரிந்தே தானே பொலிஸ் விடுகிறது. வீடுகளில் கூடத் தனியாக இருக்கப் பயப்பிடவேண்டி உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/13/2018 at 10:52 PM, குமாரசாமி said:

பொம்புளையள் கட்டாயம் பவுண் சங்கிலி போடோணுமெண்டு யார் சொன்னது? 
பொம்புளையளுக்கு ஏன் அணிகலன் முக்கியம்?  :grin:

அணிகலன் போடுவது ஒரு அழகைக் கொடுக்கும். அத்தோடு அவசரத்துக்குப் பணமாக்கவும் கூடியது தங்கநகை. வெள்ளி நகை எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளாது ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. அதனாலேயே ஆரம்பநாட்களில் வெள்ளி அணிந்த நான் தங்கத்திற்கு மாறினேன். அத்தோடு வெள்ளி நகைகள் என்போன்ற கறுப்பு ஆட்களுக்குப் பெரிதாகப் பொருந்துவதில்லை. எப்படி தங்கநகை மேற்கத்தைய மக்களுக்குப் பொருந்துவதில்லையோ அதேபோல்வெள்ளி எம்மவர்க்குப் பொருந்துவதில்லைப் போக தங்கம் போல் வெள்ளியில் அதிக தெரிவுகளும் இல்லை. அத்தோடு வெள்ளி நகைகளில் தோடுகள் கொழுவுவது போலும் சுரைகள் இலகுவில் கழன்று விழுவது போன்றும் இருப்பதனால் விலை அதிகம் ஆயினும் தங்கம் அணிய எம்மவர் ஆசை கொள்ளக்காரணம்.

2 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு குறும்படம் பார்த்த மாதிரி இருக்கிறது.

நன்றி வணக்கம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது போலீஸ் களவு கேசுகளுக்கு  வருவது குறைவு, அவர்களின் ஆள் பற்றாக்குறை தான் காரணம்.
லண்டன் தனியாக நடமாடுவதற்கு  பாதுகாப்பான   இடமில்லை.இப்படி பல சம்பவங்கள் கேள்விப் பட்டிருக்கிறேன்,  ஒரு சம்பவத்தில் மயிரிழையில் தப்பியும் இருக்கின்றோம் (Thornton Heath என்ற இடத்தில ). அதே இடத்தில எனது நண்பரின் மனைவி பஸ் ஏற நிண்ட போது காப்புலி சங்கிலியை அறுத்திருக்கின்றான். இப்பொது கடைக்கு செல்லும் போது கூட hand bag எடுத்துச் செல்வதில்லை என்று அறிந்தேன்.
இனிமேல் தாலி கொடி கட்டாமல் , மஞ்சள் கயிறு என்று வந்தால், உயிருக்கும் ஆபத்து இல்லை, மெட்ரோ வங்கிக்கு மாதம் £20 கட்ட தேவையில்லை மொத்தத்தில்   எங்களுக்கும் காசு மிச்சம்.
சுமி நீங்கள் காயங்கள் இல்லாமல் வந்ததே பெரிய விஷயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

அதைத்தான் பிள்ளைகளும் சொன்னார்கள். நேற்றுக் கடைக்குப் போகும்போது நானும் ஒரு பேசில் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போனேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதைத்தான் பிள்ளைகளும் சொன்னார்கள். நேற்றுக் கடைக்குப் போகும்போது நானும் ஒரு பேசில் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போனேன்.

இப்ப எல்லா இடமும் கார்ட்டிலை தானே பே பண்ணீனம்......பிறகு என்ன கோதாரிக்கு பேசும் ........:wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இப்ப எல்லா இடமும் கார்ட்டிலை தானே பே பண்ணீனம்......பிறகு என்ன கோதாரிக்கு பேசும் ........:wink:

எங்கட கடைகளில் காட்டும் ஆபத்துத்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்கட கடைகளில் காட்டும் ஆபத்துத்தான்

கிரடிட் கார்ட்டுக்கு பதிலாய் டம்மி கார்ட் கொண்டு திரியுங்கள்.....ஆபத்து இல்லை......கள்ளர்  ஒரு சதம் கூட உருவி எடுக்கேலாது...tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

கிரடிட் கார்ட்டுக்கு பதிலாய் டம்மி கார்ட் கொண்டு திரியுங்கள்.....ஆபத்து இல்லை......கள்ளர்  ஒரு சதம் கூட உருவி எடுக்கேலாது...tw_blush:

ஆத்திரத்தில்....திரும்பவும்....வந்து.....சாத்தினாலும்....சுமேய்க்கு...சாத்தினாலும் சாத்துவார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புங்கையூரன் said:

ஆத்திரத்தில்....திரும்பவும்....வந்து.....சாத்தினாலும்....சுமேய்க்கு...சாத்தினாலும் சாத்துவார்கள்!

பியர் கள்ளனுக்கு அப்பவே ஐஞ்சை பத்தை கஞ்சத்தனமில்லாமல் குடுத்திருந்தால்  சங்கிலி அறுப்புவரைக்கும் வந்திருக்காதெண்டது என்ரை ஊகம் கண்டியளோ...:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.