Jump to content

கடனை மீளச் செலுத்த முடியாத தமிழ் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்: வெளிவந்தது புதிய குற்றச்சாட்டு!!


Recommended Posts

கடனை மீளச் செலுத்த முடியாத தமிழ் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்: வெளிவந்தது புதிய குற்றச்சாட்டு!!

 

 
 

கடன்சுமையால் சிக்கித் தவிக்கும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நுண் நிதிக் கடன்களை வழங்கிவரும் வங்கிகளின் பணியாளர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி ஹுவான் பெப்லோ கடும் கவலை வெளியிட்டார்.

தற்கொலைகளுக்கும் வழி வகுத்துள்ள நுண்நிதிக் கடன்களை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கைச் சேர்ந்த பெண்கள் உட்பட பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில்இ சில கடன்களை இரத்துச் செயவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.

எனினும் சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளால் நுண் நிதிக் கடன் பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் முகம்கொடுத்துவரும் நெருக்கடிகளுக்கு முழமையான தீர்வு கிடைக்கவில்லை என்று ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி பெப்லோ சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவிற்கு ஒன்பது நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த, வெளிநாட்டு கடன்களால் மனித உரிமைகளுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஹுவான் பெப்லோ பொஹோஸ்லவ்ஸ்கி, தனது பயணத்தின் இறுதி நாளான இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

அந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வங்கிககள் உட்பட நிதி நிறுவனங்களுக்கு பாரிய இலாபத்தை ஈட்டித்தரும், குறிப்பாக 220 வீத வட்டி வரை அறவிடப்படும் நுண் நிதிக் கடன்களை மீள செலுத்த முடியாத வட பகுதி பெண்கள், தமது உடம்மை விற்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஹுவான் பெப்லோ பொஹோஸ்லவ்ஸ்கி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனால் நுண் நிதிக் கடன்களை வழங்கும் போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நுண்நிதிக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை கட்டுப்பட வைக்கும் வகையில் கடுமையான சட்டங்களை சிறிலங்கா அரசு இயற்றி நடைமுறைப்படுத்தும் வரை, பாதிக்கப்பட்டுள்ளவர்களை கடன் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கடன்களை மீள செலுத்துவதை நிறுத்தி வைக்க சிறிலங்கா அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா வின் சிறப்புப் பிரதிநிதி அறிவுறுத்தியுள்ளார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/crime/80/106000?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

கடனை மீளச் செலுத்த முடியாத தமிழ் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்

5 hours ago, நவீனன் said:

வங்கிககள் உட்பட நிதி நிறுவனங்களுக்கு பாரிய இலாபத்தை ஈட்டித்தரும், குறிப்பாக 220 வீத வட்டி வரை அறவிடப்படும் நுண் நிதிக் கடன்களை மீள செலுத்த முடியாத வட பகுதி பெண்கள், தமது உடம்மை விற்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஹுவான் பெப்லோ பொஹோஸ்லவ்ஸ்கி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

 

கடன் சம்பந்தமாக மாலை நேரங்களில் சம்பந்தப்பட்டவரிடம் கையொப்பம் வாங்குவதற்காக அதிசிரத்தையுடன் செல்லும் அதிகாரிகளின் தொழில் பக்தி சொல்லி வேலையில்லை....:cool:

Link to comment
Share on other sites

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல் போரால் பாதிக்கப்பட்ட மக்களை என்னும் எவ்வளவுதான் கொடுமைப்படுத்துவார்களோ  !! 

Link to comment
Share on other sites

பாலியல் இலஞ்சம் கோரும் அதி­கா­ரிகள் :

city-01-R2GMGPage1Image0003-8a922e67a3be6c28f08ddc55548270bd4ade9586.jpg

 

(ரொபட் அன்­டனி)

சிறு­நீ­ர­கங்­களும் இலக்கு; நுண் ­நிதி கடன் விவ­காரம் தொடர்பில் ஐ.நா.விசேட நிபுணர் கடும் விசனம்

உரிய சட்­டத்தை நிறை­வேற்­றும்­வரை  மக்­களின் தவணை  கொடுப்­ப­னவை  இடை­நி­றுத்­துங்கள்  

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மற்றும் வறு­மை­யான பெண்கள் நுண்­ நிதி கடன் வழங்கும் நிறு­வ­னங்­களால் இலக்கு வைக்­கப்­ப­டு­கின்­றனர். கடன்  

சேக­ரிப்­பா­ளர்கள் தினமும் வீடு­க­ளுக்கு கடன் சேக­ரிப்­ப­தற்­காக சென்று பல மணித்­தி­யா­லங்கள்  

 

வீடு­க­ளி­ லேயே அமர்ந்­தி­ருக்­கின்­றனர். இதன்  போது பாலியல் ரீதி­யான சலு­கையை கடன்­சே­க­ரிப்­பா­ளர்கள் பெண்­களி டம் கோரு­வ­தாக   எனக்கு அறி­யக்­கி­டைத்­தது.  

இது­பா­ரிய துஷ்­பி­ர­யோ­க­மாகும். சில பெண்கள் கடன் மீள்­செ­லுத்­து­வ­தற்­காக சிறு­நீ­ர­கங்­களை விற்­பனை செய்­வ­தற்கும் நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­கின்­றனர் என்று இலங்­கைக்கு விஜ­யத்தை மேற்­கொண்ட கடன்கள் மற்றும் மனித உரிமை தொடர்­பான ஐ.நா.வின் விசேட நிபுணர் ஜுவான் பப்லோ பொஹோஸ்­லவ்ஸ்கி தெரி­வித்தார்.

எனவே இந்த நிறு­வ­னங்கள் தொடர்­பாக ஒரு வட்­டி­வீத உச்­ச­வ­ரம்பை உரு­வாக்­கு­மாறும் வலு­வான, கண்­டிப்­பான சட்ட ஒழுங்கு விதி­களை நிறை­வேற்றி அதனை அமுல்­ப­டுத்­து­மாறும் நான் அர­சாங்­கத்­திடம் வலிந்து கோரிக்கை விடுக்­கின்றேன். இந்த சட்டம் நிறை­வேற்­றப்­ப­டும்­வரை மக்­களின் தவணை கொடுப்­ப­ன­வு­களை நிறுத்­தி­வைப்­ப­தற்­கான ஒரு காலப்­பி­ரிவை பிர­க­டனம் செய்­யு­மாறு அர­சாங்­கத்தை கோரு­கின்றேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்கம் விசேட நீதி­மன்­றங்­களை அமைத்­துள்­ள­மையை வர­வேற்­கின்றோம். இந்த நீதி­மன்­றங்­களின் உறுப்­பி­னர்கள் சுயா­தீ­ன­மாக இயங்­கு­வ­தற்கு இட­ம­ளிக்­க­வேண்டும். அர­சியல் அழுத்­தங்­களோ, தலை­யீ­டு­களோ இருக்­கக்­கூ­டாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்­கைக்­கான எட்­டு­நாட்கள் விஜ­யத்தை நேற்­றை­ய­தினம் முடித்­துக்­கொண்ட ஐ.நா. விசேட நிபுணர் கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே இந்த விட­யங்­களை சுட்­டிக்­காட்­டினார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்;

இலங்­கையில் யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் புதிய பொரு­ளா­தார சந்­தர்ப்­பங்­க­ளுக்கு வழி ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­தன. சமா­தா­னத்­தையும் ஜன­நா­ய­கத்­தையும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு இவை முக்­கி­ய­மாக அமைந்­தன. வெளி­நாட்­டுத்­துறை மற்றும் நிதித்­து­றையை பலப்­ப­டுத்­து­வதன் மூலம் பொரு­ளா­தா­ரத்தை ஸ்திர­நி­லைக்கு கொண்­டு­வ­ரு­வதன் மூலம் சர்­வ­தேச நாணய நிதியம் பரிந்­துரை செய்­துள்­ளது. கடந்த காலங்­களில் இலங்­கையில் கடன்கள் அதி­க­ரிக்க தொடங்­கின. வெளி­நாட்­டுக்­க­டன்கள் இரண்டு மடங்­கா­கின.

2017ஆம் ஆண்டு வரை­யா­கும்­போது இலங்கை 28.7 பில்­லியன் டொலர் கடனைக் கொண்­டி­ருந்­தது. இது மொத்த தேசிய உற்­பத்­தியில் 77.4 வீத­மாக அமைந்­தி­ருந்­தது. எனினும் வெளி­நாட்டு நேரடி முத­லீ­டு­களும் ஏற்­று­ம­தியும் அதி­க­ரிக்­க­வில்லை. பொரு­ளா­தார வளர்ச்­சியும் உய­ர­வில்லை. 2010 இலி­ருந்து 2015 ஆம் ஆண்டு வரை வருடம் பொரு­ளா­தார வளர்ச்­சி­வீதம் 8.5 வீத­மாக காணப்­பட்­டது. ஆனால் 2013 இலி­ருந்து 2014 காலப்­ப­கு­தியில் 4.5 வீத­மாக குறை­வ­டைந்­தது. இதன்­மூலம் கடந்த காலங்­களில் பெறப்­பட்ட கடன்­களின் செல்­லு­படி தன்மை மோச­மா­கி­யுள்­ளதை காண­மு­டி­கின்­றது.

அது­மட்­டு­மன்றி வெள்ளம், வரட்சி, போன்ற இயற்கை அனர்த்­தங்­களும் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை பாதித்­தன. அர­சாங்கம் 2020 ஆம் ஆண்டின் பட்ஜட் பற்­றாக்­கு­றையை 3.5 வீத­மாக குறைக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. பேரண்ட பொரு­ளா­தா­ரத்தை முகா­மைப்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. பேரண்ட பொரு­ளா­தார ஸ்திர­நி­லையை கடைப்­பி­டிப்­பது முக்­கி­ய­மாகும். எனினும் இந்த செயற்­பா­டுகள் சர்­வ­தேச தரத்தில் அமைந்த மனித உரிமை மதிப்­பீ­டு­களை தடுக்­கக்­கூ­டாது. அர­சாங்­கமோ, சர்­வ­தேச நாணய நிதி­யமோ பொரு­ளா­தார மறு­சீ­ர­மைப்­புக்­கான செயற்­பா­டு­களை உரிய முறையில் முன்­னெ­டுக்­க­வில்லை. சர்­வ­தேச நாணய நிதியம் இலங்­கைக்கு மூன்று வருட திட்­டத்தின் கீழ் 1.5 மில்­லியன் டொலர் கடனை வழங்­கி­யது. இந்தத் திட்­டத்தின் கீழ் சில மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதில் சில பேரண்ட பொரு­ளா­தார இலக்­குகள் அடை­யப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக பண­வீக்க நிலை­மை­களை குறிப்­பி­டலாம். எனினும் சில இடை வெளிகள் இன்னும் நீடிக்­கின்­றன.

சிறிய அள­வி­லான முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு தொழில்­நுட்ப உத­விகள் சந்தை சந்­தர்ப்­பங்கள் நிதி மற்றும் வள உத­விகள் வழங்­கப்­ப­ட­வேண்டும். இதற்கு கிரா­மிய பொரு­ளா­தா­ரத்தில் முத­லீ­டுகள் இடம்­பெ­ற­வேண்டும். இலங்­கையின் மனித அபி­வி­ருத்தி சுட்­டி­யா­னது இன்று 0.766 வீத­மாக இருக்­கி­றது. 188 நாடு­களில் இலங்கை 73 ஆவது இடத்தில் உள்­ளது. இலங்­கையின் சனத்­தொ­கையில் 40 வீத­மான மக்கள் மாதாந்த வரு­மானம் இன்றி வாழ்­கின்­றனர்.

தற்­போ­தைய நிலை­மையில் நகர கிரா­மிய மற்றும் தோட்ட சனத்­தொ­கை­களில் பாரிய இடை­வெ­ளிகள் காணப்­ப­டு­கின்­றன. கிராம புறத்தில் வறுமை அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றது. தொழி­லாளர் சனத்­தொ­கையில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் தனியார் துறையில் பணி­பு­ரி­கின்­றனர். இதில் 20 வீத­மான மக்­களே ஓய்­வூ­தியம் பெறு­கின்­றனர். எனினும் தனியார் துறையில் பணி­பு­ரிவோர் சமூ­கப்­பா­து­காப்­பிற்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இலங்கை அர­சாங்கம் வரிக்­கட்­ட­மைப்பில் கவனம் செலுத்­தி­யி­ருக்­கி­றது. 2017ஆம் ஆண்டு உள்­நாட்டு வரி­சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இது வரி­சே­க­ரிப்பை இல­கு­ப­டுத்­து­கி­றது. வரிக்­கட்­ட­மைப்பை விரி­வு­ப­டுத்­து­கி­றது.

வரு­மானம் மற்றும் சொத்­து­வரி சரி­யான முறையில் இடம்­பெ­ற­வேண்டும். இது நாட்டின் பொரு­ளா­தார மற்றும் சமூக இடை­வெ­ளி­களை குறைக்­க­வேண்டும். வற்­வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றமை தொடர்பில் கவனம் செலுத்­தினேன். 2017 ஆம் ஆண்டில் வற் வரி சேக­ரிப்பு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. தற்­போ­தைய நிலை­மையில் இலங்­கையின் வரவு செல­வுத்­திட்­டத்தை எடுத்­துப்­பார்த்தால் கடன் மீள­ளிப்பே பாரிய பிரச்­சி­னை­யாக காணப்­ப­டு­கின்­றது. எனவே அர­சாங்­கமும் சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்­களும் இந்த கடன்­தொ­டர்பில் சில வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வேண்டும்.

அதா­வது கடன்­களை மீள செலுத்­த­வேண்டும் என்­ப­தற்­காக சமூக நலன்­புரி செல­வுகள் குறைக்­கப்­ப­டக்­கூ­டாது. இந்த விட­யத்தில் மூன்று விட­யங்­களை கையா­ளலாம். வரி மறு­சீ­ர­மைப்பில் முன்­னேற்றம் காணுதல், சமூக நலன்­பு­ரி­களை விரி­வு­ப­டுத்தி அடிப்­படை சம்­ப­ளத்தை அதி­க­ரித்தல், பொரு­ளா­தார வளர்ச்­சி­வீ­தத்தை அதி­க­ரித்தல், அது­மட்­டு­மன்றி கடன் வழங்­கு­ந­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி காலத்தை அதி­க­ரித்­துக்­கொள்­ளுதல், உள்­ளிட்­ட­வை­களை முன்­னெ­டுக்­கலாம்.

ஊழல்­களை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். குறிப்­பாக அர­சாங்கம் விசேட நீதி­மன்­றங்­களை அமைத்­துள்­ளமை வர­வேற்­கின்றோம். இந்த நீதி­மன்­றங்­களின் உறுப்­பி­னர்கள் சுயா­தீ­ன­மாக இயங்­கு­வ­தற்கு இட­ம­ளிக்­க­வேண்டும். அர­சியல் அழுத்­தங்­களோ, தலை­யீ­டு­களோ இருக்­கக்­கூ­டாது. 2009 ஆம் ஆண்டின் பின்னர் இலங்­கையில் பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதி­வேக வீதிகள், அம்­பாந்­தோட்டை துறை­முகம் மற்றும் விமா­ன­நி­லையம் என்­பன முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இன்­று­வரை உலக வங்கி ஆசிய அபி­வி­ருத்தி வங்கி, ஜப்பான், இந்­தியா, சீனா, ஆகி­யன 19.3 பில்­லியன் டொலர் கடன்­களை வழங்­கி­யுள்­ளன. அர­சி­ய­ல­மைப்பில் கொண்­டு­வ­ரப்­பட்ட 19 ஆவது திருத்த சட்­டத்தை வர­வேற்­கின்றோம். அத்­துடன் தகவல் அறியும் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­மை­யையும் வர­வேற்­கின்றோம். இலங்­கைக்கு கடன் வழங்கும் நிறு­வ­னங்­களை கொழும்பில் சந்­தித்துப் பேச்சு நடத்­தினேன். அவர்கள் சில விட­யங்­களை என்­னிடம் எடுத்­துக்­கூ­றினர். கடன்­களை வழங்­கும்­போது அந்த வேலைத்­திட்­டங்கள் மற்றும் அதன் மனித உரி­மைகள் சார்­பாக மதிப்­பீ­டு­களை செய்­யு­மாறு கூறு­கின்றேன்.

நுண்­நி­திக்­க­டன்கள் நீண்ட வர­லாற்றை இலங்­கையில் கொண்­டுள்­ளன. இந்த முறை­மை­யா­னது மக்­களை வறு­மை­யி­லி­ருந்து மீட்டு வாழ்­வா­தா­ரத்தை பலப்­ப­டுத்த உத­வி­யது. எனினும் தற்­போது இதன் ஆழ­மான தன்மை மற்றும் கடன்­கொ­டுப்­ப­வர்­களின் துஷ்­பி­ர­யோகம் என்­பன தொடர்பில் நான் சில விட­யங்­களை அறிந்­து­கொண்டேன் உட­ன­டி­யாக இது­தொ­டர்பில் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அர­சாங்­கத்தை கோரு­கின்றேன்.

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மற்றும் வறு­மை­யான பெண்கள் இந்த நுண்­நிதி நிறு­வ­னங்­களால் இலக்கு வைக்­கப்­ப­டு­வ­தாக அறி­கின்றேன். இந்த நுண்­நி­திக்­க­டன்கள் வரு­டாந்த ரீதியில் 220 வீத வட்­டியை கொண்­டி­ருக்­கின்­றன. இந்த விட­யத்தில் பெண்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். எனவே பெண்­க­ளுக்கு எதி­ரான அனைத்­து­வி­த­மான அநீ­தி­க­ளுக்கும் எதி­ரான சர்­வ­தேச சாச­னத்தை உரி­ய­மு­றையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு அர­சாங்­கத்தை கோரு­கிறோம். இது பொரு­ளா­தார ரீதியில் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளுக்கு நிவா­ரணம் அளிப்­ப­தாக அமையும். காரணம் இந்த நுண்­கடன் வழங்­கு­நர்கள் எவ்­வி­த­மான வழி­மு­றை­க­ளையும் கடைப்­பி­டிப்­ப­தில்லை . அதி­க­மான பெண்கள் இந்த கடன்­பொ­றிக்குள் சிக்­கிக்­கொண்­டி­ருப்­பதை நான் அவ­தா­னித்தேன். தங்கள் தோள்மேல் பாரிய பிரச்­சி­னை­களை தாங்­கிக்­கொண்­டி­ருக்கம் வறு­மை­யான பெண்­களை இலக்­கு­வைத்து இந்த நுண்­நி­தி­கடன் நிறு­வ­னங்கள் இலா­ப­ம­டை­வதை காண­மு­டி­கின்­றது. இது­பெண்கள் மீது பாரிய சுமையை சுமத்­தி­யுள்­ளது. சில­பெண்கள் தனது வர்த்­த­கத்தை முன்­னெ­டுக்க இந்தக் கடன்­களைப் பெறு­கின்­றனர். ஆனால் அதி­க­மானோர் அந்தத் திட்­டங்­களில் வெற்­றி­யீட்­டு­வ­தில்லை. சில பெண்கள் தமது அடிப்­படை விட­யங்­களை நிறை­வேற்­றிக்­கொள்ள இந்த கடன்­களை மீள்­செ­லுத்­து­வ­தற்­காக நுண்­நிதி கடன்­களைப் பெறு­கின்­றனர். ஒரே பெண் மூன்று அல்­லது நான்கு கடன்­வ­ழங்­கு­நர்­க­ளிடம் ஒரு­நே­ரத்தில் கடன் பெற்­றுள்­ள­தையும் காண்­கின்றோம். கடன் சேக­ரிப்­பா­ளர்கள் தினமும் இவ்­வாறு வீடு­க­ளுக்கு கடன் சேக­ரிப்­ப­தற்­காக செல்­கின்­றனர். அவர்கள் பல மணித்­தி­யா­லங்கள் வீடு­க­ளி­லேயே அமர்ந்­தி­ருக்­கின்­றனர். இந்த சேக­ரிப்­பா­ளர்­க­ளினால் சில சம­யங்­களில் பெண்கள் வன்­மு­றைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். பாலியல் ரீதி­யான சலு­கையை கடன்­சே­க­ரிப்­பா­ளர்கள் பெண்­க­ளிடம் கோரு­வ­தாக எனக்கு அறி­யக்­கி­டைத்­தது.

சில பெண்கள் கடன் மீள்­செ­லுத்­து­வ­தற்­காக சிறு­நீ­ர­கங்­களை விற்­பனை செய்­வ­தற்கும் நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­வ­தாக அறி­யக்­கி­டைத்­தது. சிலர் கிரா­மங்­க­ளையே விட்டு சென்­று­விட்­ட­தா­கவும் சிலர் தற்­கொலை செய்­து­கொண்­டுள்­ள­தா­கவும் அறி­யக்­கி­டைத்­தது. மத்­திய வங்­கி­யா­னது மக்­க­ளி­ட­மி­ருந்து சேமிப்­புக்­களை பெறும் நிதி நிறு­வ­னங்­களை நிறு­வ­கிக்­கி­றது. எனினும் ஒழுங்கு விதி­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டாத நுண்­நி­திக்­க­டன்­வ­ழங்­கு­நர்கள் இந்த விட­யத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் சில பிர­தே­சங்­களில் 1 இலட்­சத்­துக்கு குறை­வாக கடன்­பெற்று நிலு­வை­யாக இருக்­கின்ற மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் எடுத்த தீர்­மா­னத்தை வர­வேற்­கின்றேன். எவ்­வா­றெ­னினும் அதிகமான பெண்கள் இதில் நன்மை அடைவதாக தெரியவில்லை. அதுமட்டுமன்றி நுண்நிதிக்கடன் வழங்குதல், கடன் சேகரிப்பு போன்ற முறைமைகள் இன்னும் கட்டுப்படுத்தப்படாமலேயே உள்ளன. இதுதொடர்பில் அக்கறை செலுத்தப்படவேண்டும். இல்லாவிடின் பாரிய நெருக்கடிகள் ஏற்படலாம். மக்களின் மீள்வழங்கும் நிலையை மதிப்பிடாமல் கடன் வழங்கப்பட்டுள்ளன.

எனவே இந்த நிறுவனங்கள் தொடர்பாக ஒருவட்டிவீத உச்சவரம்பை உருவாக்குமாறு வலுவான, கண்டிப்பான சட்ட ஒழுங்கு விதிகளை நிறைவேற்றி அதனை அமுல்படுத்துமாறும் நான் அரசாங்கத்திடம் வலிந்து கோரிக்கை விடுக்கின்றேன். நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் மனித உரிமை தரநியமங்களுடன் செயற்படுவதற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படவேண்டும். இந்த சட்டம் நிறைவேற்றப்படும்வரை மக்களின் தவணைக்கட்டங்கள் செலுத்துவதை நிறுத்திவைப்பதற்கான ஒரு காலப்பிரிவை பிரகடனம் செய்யுமாறு அரசாங்கத்தை கோருகின்றேன். இந்த கடன் வழங்கும் நிறுவனங்களினால் பலவீனமாக இருக்கும் மக்கள் சுரண்டப்படுவதையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் தேவைகள் இருக்கலாம். இவை தொடர்பில் ஆராய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். குறிப்பாக அரசாங்க வங்கிகள் தமது சலுகைக் கடன்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-12#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.