Jump to content

இத­ய­சுத்­தி­யு­ட­னான நட­வ­டிக்­கையே அர­சியல் தீர்­வுக்கு வழி­வ­குக்கும்


Recommended Posts

இத­ய­சுத்­தி­யு­ட­னான நட­வ­டிக்­கையே அர­சியல் தீர்­வுக்கு வழி­வ­குக்கும்

 

அர­சியல் தீர்வின் அவ­சியம் குறித்து தமிழ் தரப்­பி­னரால் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­ற­போ­திலும் இன்­னமும் உறு­தி­யான தீர்வைக் காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றதன் பின்னர் புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்­கு­வதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனாலும் இந்த முயற்சி விட­யத்­திலும் தொடர்ச்­சி­யான இழு­பறி நிலை காணப்­பட்டு வரு­கின்­றது.

2016ஆம் ஆண்டு இறு­திக்குள் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்தார். நல்­லாட்சி அர­சாங்கம் அர­சி­யல்­ தீர்­வுக்­கான உறு­தி­யான நட­வ­டிக்­கை­யினை எடுக்கும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே அவர் இத்­த­கைய கருத்­தினை தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வைக்­காணும் நட­வ­டிக்­கைகள் தற்­போது மந்­த­க­தியில் இடம்­பெற்று வரு­வ­தனால் சர்­வ­தேச பிர­தி­நி­தி­களை சந்­திக்­கும்­போது அர­சி­யல்­தீர்வின் அவ­சியம் குறித்தும் அதன் கால­தா­மதம் தொடர்­பிலும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தொடர்ச்­சி­யாக எடுத்­து­ரைத்து வரு­கின்றார்.

ஐக்­கி­ய­நா­டு­களின் இலங்­கைக்­கான புதிய வதி­வி­டப்­ பி­ர­தி­நி­தி­யான ஹனா சிங்­க­ருக்கும் எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்­கு­மி­டையில் கடந்த சனிக்­கி­ழமை விசேட சந்­திப்பு இடம்­பெற்­றி­ருந்­தது. இந்த சந்­திப்­பின்­போது கருத்­து­ரைத்த எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் அர­சி­யல்­தீர்வின் மூலம் ஒரு ­நி­லை­யான சமா­தா­னத்­தினை ஏற்­ப­டுத்தத் தவறும் பட்­சத்தில் இந்­த­ நாட்­டுக்கு எதிர்­காலம் இல்லை. ஐ.நா. பிரே­ர­ணையை முழு­மை­யாக நிறை­வேற்­ற­வேண்­டிய கட்­டா­யப்­பொ­றுப்பு அர­சாங்­கத்­திற்கு உள்­ளது என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

கடந்­த­ கா­லங்­களில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் மீண்டும் இந்­த­நாட்டில் இடம்­பெற அனு­ம­திக்க முடி­யாது. அதனை உறு­தி­செய்­வ­தற்­காக ஒரு புதிய அர­சி­யல்­யாப்பு அவ­சி­ய­மாகும். அதி­கா­ரப்­ப­கிர்­வு­தொ­டர்பில் தமிழ் மக்­களின் கோரிக்­கை­யா­னது நியா­ய­மா­னது மட்­டு­மன்றி அது சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கும் உட்­பட்­ட­தாகும். தமிழ் மக்கள் கடந்­த­ கால தேர்­தல்­களில் ஒரு­மித்த பிரிக்­கப்­பட முடி­யாத இலங்­கைத்­தீ­விற்குள் அர­சி­யல்­தீர்­வொன்றை அடை­வ­தற்கு தமது அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளார்கள். மக்­களின் இந்த ஜன­நா­யகத் தீர்ப்­பினை மதிக்­க­வேண்­டிய கடப்­பாடு அர­சாங்­கத்­திற்கு உள்­ளது என்று இந்த சந்­திப்பில் சம்­பந்தன் எடுத்­து­ரைத்­துள்ளார்.

இத­னை­விட புதிய அர­சியல் யாப்பு தொடர்பில் இந்த அர­சாங்கம் பத­வி­யேற்­ற­பின்னர் முன்­னெ­டுக்­கப்­பட்ட கரு­மங்கள் ஒரு ­சா­த­க­மான முடி­வினை எட்­ட­வேண்டும். அர­சியல் தீர்­வின்­மூலம் ஒரு­நி­லை­யான சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தத் தவ­றும்­பட்­சத்தில் இந்த நாட்­டுக்கு எதிர்­காலம் இல்லை. முன்­னைய அர­சாங்­கத்­துடன் ஒப்­பி­டு­கையில் இந்த அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு மற்றும் நட­வ­டிக்­கை­களில் மாற்­ற­முள்­ளது. எனினும் மக்கள் எதிர்­பார்த்த அளவில் கரு­மங்கள் இடம்­பெ­ற­வில்லை. காணாமல் ஆக்­கப்­பட்டோர், அர­சியல் கைதிகள், இரா­ணுவ வச­முள்ள மக்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள் விடு­விப்பு போன்ற விட­யங்­களில் திருப்­தி­க­ர­மான முன்­னேற்­றங்கள் இல்லை என்றும் சம்­பந்தன் ஐ.நா. வதி­வி­டப்­பி­ர­தி­நி­தி­யிடம் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வு­காணும் முயற்­சியில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மை­யா­னது பெரும்­விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொண்டு செயற்­பட்டு வந்­தது. அர­சி­யல்­யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவில் கூட்­ட­மைப்பின் சார்பில் அங்கம் வகிக்கும் அதன் தலைவர் இரா. சம்­பந்­தனும் பேச்­சா­ளர் எம்.ஏ. சுமந்­தி­ரனும் அர­சியல் தீர்வு தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். பெரும்­பான்மை சிங்­கள மக்­களும் ஏற்­றுக்­கொள்­ளும்­வ­கையில் தீர்­வினை காண­வேண்டும் என்­பதால் தமிழ் மக்­களின் முக்­கிய கோரிக்­கை­க­ளான வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்­பிலோ அல்­லது சமஷ்டி குறித்தோ வழி­ ந­டத்தல் குழுவில் வலி­யு­றுத்­தாமல் ஓர­ள­விற்கு விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளுடன் இவர்கள் செயற்­பட்­டி­ருந்­தனர்.

இவ்­வாறு அர­சி­யல்­தீர்வைக் கண்­டு­வி­ட­வேண்டும் என்ற விட­யத்தில் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைமை விட்­டுக்­கொ­டுப்­புடன் செயற்­பட்டு வந்­துள்ள போதிலும் அர­சியல் தீர்­வுக்­கான முயற்சி என்­பது இன்­னமும் இழுத்­த­டிக்­கப்­பட்ட ஒரு­வி­ட­ய­மாக மாறி­யி­ருப்­ப­த­னா­லேயே எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் வெறுப்­ப­டைந்த நிலையில் சர்­வ­தேச சமூ­கத்தின் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் இத்­த­கைய கருத்­துக்­களை தெரி­விக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

இலங்­கைக்கு விஜயம் செய்த ஐ.நா.வின் பிர­தி­நி­தி­க­ளையும் அமெ­ரிக்க காங்­கிரஸ் பிர­தி­நி­தி­க­ளையும் ஐரோப்­பிய ஒன்­றிய தூதுக்­கு­ழு­வி­ன­ரையும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் சந்­தித்து பேசி­ய­போது அர­சி­யல்­தீர்வு விட­யத்தில் காட்­டப்­படும் கால­தா­மதம் தொடர்பில் எடுத்து விளக்­கி­ய­துடன் இதற்­கான அழுத்­தங்­களை கொடுக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இதன் ஒரு கட்­ட­மா­கவே தற்­போது இலங்­கைக்­கான ஐ.நா.வின் புதிய வதி­வி­டப்­பி­ர­தி­நி­தியை சந்­தித்­த­போதும் அர­சி­யல்­தீர்வின் அவ­சியம் குறித்து அவர் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார். உண்­மை­யி­லேயே நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­வுடன் அர­சியல் தீர்வைக் காணும் நட­வ­டிக்­கையில் இத­ய­சுத்­தி­யுடன் ஈடு­பட்­டி­ருந்தால் தற்­போது அந்­தப்­ப­ணியை பூர்த்தி செய்­தி­ருக்க முடியும். ஆனாலும் கால­தா­ம­தத்தின் மத்­தியில் பாரா­ளு­மன்­றத்தை அர­சி­யல்­யாப்பு சபை­யாக மாற்றி வழி­ந­டத்தல் குழு­வினை அமைத்து கடந்த இரண்டு வரு­டங்­களில் அர­சி­யல்­தீர்வு குறித்தும் ஆரா­யப்­பட்­ட­துடன் இடைக்­கால அறிக்­கையும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்கை தொடர்பில் தற்­போது நிபு­ணர்கள் குழு ஆராய்ந்­துள்­ளது. இந்த நிபுணர் குழுவின் அறிக்கை வழி­ந­டத்தல் குழு­விற்கு தற்­போது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இந்த அறிக்­கை­யினை அர­சியல் யாப்பு சபையில் சமர்ப்­பிப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. கால­தா­ம­தத்தின் மத்­தி­யிலும் புதிய அர­சி­யல் ­யாப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்கை தொடர்பில் நிபு­ணர்­குழு ஆராய்ந்து அதன் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டா­கவே உள்­ளது. இந்த அறிக்கை மீது விவாதம் நடை­பெற்று அர­சி­யல்­யாப்­புக்­கான இறுதி நகல்­வ­ரைபும் விரைவில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் துரி­தப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் கருத்து தெரி­வித்த அர­சாங்­கத்தின் சபை முதல்வர் லக் ஸ்மன் கிரி­யெல்ல புதிய அர­சியல் அமைப்பு குறித்து நகல்­வ­ரைபை வெகு­வி­ரைவில் அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்கும். இந்த நகல் ­வ­ரைபு குறித்து இரண்டு நாட்கள் விவா­தமும் நடத்­தப்­படும். புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் குறித்து பொது எதி­ரணி முரண்­பட்­டாலும் அதனை மேற்­கொள்ள அர­சாங்கம் தயா­ரா­கவே உள்­ளது என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

சபை­ மு­தல்வர் லக்ஸ்மன் கிரி­யெல்ல தெரி­வித்­த­தைப்­போன்று அர­சி­யல்­தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­யல்­யாப்­புக்­கான இறுதி நகல் ­வ­ரைபு விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும். ஆனால் அதற்­கேற்ற சூழ்­நிலை தற்­போது உள்­ளதா என்ற சந்­தேகம் மறு­பு­றத்தில் எழுந்­தி­ருக்­கின்­றது. புதிய அர­சி­யல்­யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்­பி­யி­ருந்­தது. பொது எதி­ரணி உட்­பட பல தரப்­பி­னரும் கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­தி­ருந்­தனர். இடைக்­கால அறிக்­கையில் உள்ள விட­யங்கள் நாட்டை பிள­வு­ப­டுத்­தப் ­போ­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தி­ருந்­தன. தென்­ப­கு­தியில் இன­வாத சக்­திகள் இடைக்­கால அறிக்­கை­யா­னது நாட்டை பிள­வு­ப­டுத்­தப் ­போவ­தாக குற்றம்சாட்டிய அதேவேளை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தமக்கு அதிகாரங்கள் போதவில்லை என்று எண்ணும் நிலைமை உருவாகியிருக்கின்றது.

எனவே இந்த இரு தரப்புக்களுக்கிடையிலான சந்தேகங்களையும் போக்கும் வகையிலேயே அரசியல்தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்புக்கான இறுதி நகல் அமையவேண்டியுள்ளது. ஆனால் அதற்கான சாத்தியங்கள் விரைவில் ஏற்படுத்தவேண்டுமானால் விட்டுக்கொடுப்புக்கள் என்பது அவசியமாகின்றது. இருதரப்பிலும் விட்டுக்கொடுப்புக்கள் மேற்கொள்ளாவிடின் புதிய அரசியல்யாப்புக்கான சட்டவரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதோ அல்லது அதனை நிறைவேற்றிக்கொள்வதோ சாத்தியமற்ற விடயமாகவே மாறிவிடும்.

தற்போதைய நிலையில் அரசாங்கமும் தென்பகுதி அரசியல் கட்சிகளும் வடக்கு, கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகளும் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு இதயசுத்தியுடன் செயற்பட்டால் மட்டுமே தீர்வு என்பது சாத்தியமாகும். இல்லையேல் அது வெறும் கானல்நீராகவே மாறும் என்பதை சகலரும் புரிந்து கொள்வது நல்லது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-11#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
    • கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.