Jump to content

உலகப் பார்வை: ஆச்சர்ய செய்தி: பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட தங்க பாறைகள் கண்டுபிடிப்பு


Recommended Posts

ஆச்சர்ய செய்தி: பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட தங்க பாறைகள் கண்டுபிடிப்பு

கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தங்க பாறை

பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட தங்க பாறைகள் கண்டுபிடிப்புபடத்தின் காப்புரிமைRNC MINERALS

பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இரண்டு தங்க பாறைகள் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத் தொழில் வல்லுநர்கள் இவை பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை என்கிறார்கள். பாறையில் வெளி புறத்தில் தங்கம் கொண்ட இந்த இரட்டை பாறைகளில், ஒரு பாறையின் எடை 95 கிலோ மற்றொன்றின் எடை 63 கிலோ.95 கிலோ எடையுள்ள பாறையில் 2400 அவுன்ஸ் அளவுக்கு தங்கம் இருக்கிறது என்கிறது கனடா சுரங்கத் தொழில் நிறுவனமான ஆர்.என்.சி மினரல்ஸ். இதன் மதிப்பு பதினொரு மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

Presentational grey line

பத்தாண்டுகளில் மோசமான புயல்

பத்தாண்டுகளில் மோசமான புயல்படத்தின் காப்புரிமைNOAA

அமெரிக்க கிழக்கு கடல் பகுதியை பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டத்தை அடுத்து அந்த பகுதிகளில் உள்ள மக்களை வேறு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வடக்கு கரோலினா மற்றும் வெர்ஜினியா ஆகிய பகுதிகளுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Presentational grey line

ராணுவ அணிவகுப்பு

ராணுவ அணிவகுப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ராணுவ அணிவகுப்புக்கான பணிகளை ரஷ்யா துரிதப்படுத்தி உள்ளது. பனி போருக்குப் பின் ரஷ்யாவில் நடக்கும் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு இதுவாகும். கிழக்கு சைப்பீரியாவில் நடக்க இருக்கும் இந்த அணிவகுப்பில் 3 லட்சம் படை வீரர்கள் கலந்துக் கொள்கிறார்கள். சீனா 3200 துருப்புகளை அனுப்புகிறது. மங்கோலியாவும் இந்த அணிவகுப்பில் கலந்துக் கொள்ள படைகளை அனுப்புகிறது. நாடோவுக்கும் ரஷ்யாவுக்குமான முரண்கள் வளர்ந்து வரும் இந்த சூழலில் இந்த அணிவகுப்பு நடக்க இருக்கிறது.

Presentational grey line Presentational grey line

ஆப்கன் பெரும் சண்டை

ஆப்கன் பெரும் சண்டைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆப்கானிஸ்தானின் நான்கு மாகாணத்தில் நடந்து வரும் சண்டையில் டஜன் கணக்கான ஆப்கன் பாதுகாப்பு படை வீரர்களும், தாலிபன்களும் மரணமடைந்துள்ளனர். அதிக படைகளை கொண்டு எதிர்கொள்ளாவிட்டால் சர் -இ -புல் மாகாணத்தின் தலைநகர் தாலிபன்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார் ஆப்கன் அதிகாரிகள். அந்த நாட்டின் அமைதியை கொண்டு வருவதற்கான ராஜாங்க பேச்சுவார்த்தை முற்று பெற்றதை அடுத்து தாலிபன்களுக்கும் அரசு தரப்புக்கும் சண்டை மூண்டுள்ளது.

Presentational grey line

அமெரிக்கா அச்சுறுத்தல்

அமெரிக்கா அச்சுறுத்தல்படத்தின் காப்புரிமைREUTERS

அமெரிக்கர்களுக்கு எதிராக விசாரணை நடத்தினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது.ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டவர்களை கொடுமை செய்தது தொடர்பாக அமெரிக்க ராணுவத்தை சேர்ந்தவர்களை விசாரிக்க நீதிமன்றம் யோசனை செய்து வருகிறது.இந்த நீதிமன்றம் "சட்டவிரோதமானது" என்றும் "எங்கள் குடிமக்களை பாதுகாக்க எதுவேண்டுமானலும் செய்வோம்" என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நீதிமன்றத்தில் சேராமல் இருக்கும் டஜன் கணக்கான நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

https://www.bbc.com/tamil/global-45480256

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.